Saturday, June 6, 2020

லக்ன யோகர்கள்

பொதுவாக ஜாதகத்தில் லக்ன யோகர்கள் சுய சாரம் பெறுவது மிகவும் சிறப்பு. அப்படி அவர்கள் சுய சாரத்தில் இருந்தால் ஜாதகர் நிச்சயம் வளர்ச்சி பெறுவார். எந்த ஒரு கீழ்நிலையில் ஜாதகர் இருந்தாலும் ஜாதகர் நிச்சயம் வாழ்வில் வளர்ச்சி காண்பார்.

Friday, May 29, 2020

திருமண யோகத்திற்கு

1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.தே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19. பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20. இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8. ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!

சூரியன் சனி கிரக சேர்க்கை

சூரியன் + சனி கிரக சேர்க்கை, பார்வை அல்லது பரிவர்த்தனை பலன்கள்.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்..... எனவே இச்சேர்க்கை இருக்கும் ஜாதகருக்கும்.... அப்பாவுக்கும் உறவுநிலை.... அவ்வளவு சிறப்பாக இருக்காது.
அப்பாவாக இருந்தால்... மகனிடம்...
ஐந்து வயது வரை அப்பாவா இருக்கணும்.. 10 வயது வரை நண்பனா இருக்கணும்...
15 வயசுக்கு மேல வழிகாட்டியாகத்தான் இருக்கணும்.
எப்பவும்.... தன்னுடைய அதிகாரத்தை... மகன் மீது செலுத்தவே... கூடாது.
அப்படி செலுத்தும் போது..... எடுபடாமல் போய்... அப்பாவுக்கு அது சங்கடமாக திரும்ப வரும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பின்படி அப்பாவும் மகனும் ஒரே வீட்டுல இருக்கிறப்ப.... ஜாதகருக்கு தொழில் அல்லது வேலை பாதிப்பையும்..... அப்பாவுக்கு உடல் பாதிப்பையும் ஏற்படுத்தி விடும்.
ஒரு நல்ல விஷயம் என்ன?? அப்படின்னா.... இந்த அமைப்பு ஜாதகருக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தித் தரும்.
இந்த கிரக சேர்க்கையானது... ஜாதகருக்கு அரசு வேலைக்கான வாய்ப்பையும் அல்லது செய்கின்ற தொழிலுக்கு அரசாங்கத்தோட.... உதவியையும் பெற்று கொடுக்கும்
தொழிலில் பதவி யோகத்தையும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த கிரக சேர்க்கையானது.... ஜாதகரை பரம்பரை அல்லது பாரம்பரிய தொழில் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும். அதில் சிறப்பு அடையலாம்.
மேலும் சனியோட பார்வையில் இருக்கும் சூரியன்அமைப்பினால்....
அப்பாவுக்கு மகனால் அதிக தொல்லைகளை ஏற்படுத்தி... வெறுத்துப் போய்.... படிக்கிற வயசுல ஹாஸ்டல்ல சேர்த்து விடும் சூழ்நிலை ஏற்படுத்தி விட்டுடும்.
வேலை செய்யும் வயதில் மகன் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போய் தங்கி வேலைய பாருடா.... என சொல்லும் அளவுக்கு நிலைமை போகும்.
தந்தை மகன் உறவை கடுமையாக பாதிக்கும் இருவரும் பிரிந்து இருப்பது நல்லது
சூரியன் சனியும்... அதாவது சூரியன் உச்சம் ஆகும் இடத்துல சனி நீசம் ஆகும் இந்த சூழ்நிலையில்.... சேர்க்கை பிறப்பு ஜாதகத்தில் அமையும்போது....
அப்பா... மகன் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை வரும். தொழிலில்...... அப்பாவுக்கு கீழ அடுத்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலை தான் இருக்கும். அப்பாவை மீறி மகனால் எதுவும் செய்ய முடியாது.
அடுத்து சூரியன் நீசம் ஆகும் வீட்டில் சனி உச்சமாக இருக்கிறது இந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்கும் போது.... மகன் சொல்றத கேட்கக் கூடிய அப்பாவா.... இருக்கிற மாதிரியான சூழ்நிலை வரும்.
இங்கு மகனின் ஆதிக்கம் அதிகமாகி அப்பாவை விரட்டும் அல்லது அடிமை போல் நடத்தும் சூழ்நிலை கூட வரும்.... ஏன்... அப்பாவை அடிக்கும் சூழ்நிலை கூட வரும்.
இதுல இந்த அமைப்பு அப்பாவோட ஜாதகத்துல இருந்தா.... மகனோடு உறவு ஆகாது...
மகனுக்கு இருந்தால் தொழில் வாய்ப்பு அதிகமா இருக்கும்.... இது தான் சூட்சுமம்.
என்னுடைய கணிப்பின் படி அப்பாவும் மகனும் பிரிந்து இருப்பதே நல்லது.
ஏன்னா!!!!!!.... அப்பா சிறப்பாக இருந்தால் மகன் சிறப்பா இருக்கமாட்டார்.
மகன் சிறப்பாக இருந்தால்.... அப்பா இருக்க மாட்டார்
மேலும்....
சூரியன் உயிரணு உற்பத்தியை குறிக்கக்கூடிய கிரகம்...
சனி உயிரணுவை தடை செய்யக்கூடிய கிரகம்...
அதாவது.... உயிர் உற்பத்தி காரக கிரகம் சூரியன்.... உயிர் அழிவுக்கு காரக கிரகம் சனி
இதனால் இரண்டு கிரகங்கள் சேர்க்கை ஜாதகருக்கு உயிரணு உற்பத்தி..... பாதிக்கப்படும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது மணமகன் அல்லது மணமகள் இருவருக்குமே கிரக சேர்க்கை இருக்குமானால் சேர்க்காமல் தவிர்த்து விடுவது...... மிக, மிக நல்லது.
இது குழந்தை பாக்கியத்தை மிக கடுமையாக பாதிக்கப்பட்டு... எனக்கு தெரிந்த.... ஒரு ஜாதக அமைப்பில்.....
கணவன் மனைவி பத்து வருடமாக குழந்தை இல்லாமல் அடுத்து வந்த இரண்டு வருடத்தில் அதாவது 12 வருடம் கழித்துதான்... குழந்தை பாக்கியம் கிடைத்தது.
முக்கிய குறிப்பாக பெண்ணுக்கு சூரியன் சனி சேர்க்கை இருக்கும் போது......
ஜாதகியும் அப்பாவும்.... ஒருவருக்கொருவர் பாசத்துடனும்...
மிகப் பிரியமாக நடந்து கொள்வார்.
அப்பாவா...? கணவனா...? எனக் கேட்டால் அப்பாவே முக்கிய்ம்... என கூறுவார்.
இப்படி பெண் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில்..... வீட்டோட மாப்பிள்ளையாக அமைத்துக் கொள்வது நல்லது.
திருமணப் பொருத்தம் பார்க்கும் இப்படி அமைப்பு இருக்கும் பட்சத்தில்..... ஒரு ஜோதிடனாக நான் இதைச்.... சொல்லியே விடுவேன்.
மேலும் முக்கியமாக.... இக்கிரக சேர்க்கை உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சனி ராகு கிரக சேர்க்கை

சனி + ராகு கிரக சேர்க்கை 
ஒருவருக்கு ஜாதகத்தில் இது வேண்டாத..... கூடாத....... கிரக சேர்க்கைகளில் முக்கியமான ஒன்று.
இது கர்ம தோஷம் இருப்பதை சுட்டிக் காட்டும்.
ஜாதகர் எதை செய்தாலும் தவறாகவே முடியும்.
கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்....
வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தும்......
ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்....
பூர்வீகத்தை விட்டு வெளியேற்றும்....
பூர்வீக ஊரில்.... பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது...
குலதெய்வம் அனுகிரகம் இருக்காது...
சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்தும்.... கஷ்டப்பட்டு உழைத்தும்... குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்....
சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இக்கிரக சேர்க்கை இருக்கும்.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.
இன்னொருவரிடம் வேலை செய்வதே நல்லது.....
கண்டிப்பாக... பூர்வீக இடத்தில் இருக்கக்கூடாது... பூர்வீக சொத்து இல்லாமல் இருப்பது நல்லது.
எவ்வளவுதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும்,, தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத... தகுதிக்கு குறைவான இடத்தில்.... குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும் இக்சேர்க்கை உள்ளவர்களின் நடவடிக்கைகள், யாருக்கும் பிடிக்காது....
யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.
விதி வயப்பட்டு செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை.
நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிப்பதிக்காமலும்.... வருமானம் இல்லாமலும் இருப்பர்.
திடீர் வீழ்ச்சியையும் கொடுக்கும்......
ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட.... சொல்லிக்கொள்ளும்படி வேலை இல்லாமலும்.... சூதாட்டம்.... திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்க சூழ்நிலை கூட ஏற்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை விபத்து மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும்....
ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தும்... தொழில் அமைந்தும்... தன்னுடைய ஒழுக்கக் குறைவினால்... சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
பூர்வீக சொத்தையும் சேர்த்து அழிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் முக்கியமாக...... அறியாமல் தவறு செய்து ஏமாறுபவர்களுக்கு கூட இக்கிரக சேர்க்கை இருக்கும்.
இவர்களுக்கு கர்மாவே... தோசமாக இருப்பதால், திடீர் திடீர் என அசுபகாரியங்கள் நடக்கும்.
முக்கியமாக....
இது ""விதி"" கிரகம் என்பதால்.......
நடப்பது..... நடந்தே தீரும்.... ஜாதகர் விரும்பினாலும்......................... விரும்பாவிட்டாலும்......
இச்சேர்க்கை உள்ள ஜாதகர்.... வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்றால்.... மட்டுமே...
தீமை குறைந்து... ஓரளவு நிம்மதியாகவும்.. சிறப்பாகவும்.... வாழலாம்.
இது முழுக்க முழுக்க அந்நிய மதம்....
அந்நிய மொழி.... அந்நிய நாடு...
அந்நிய மனிதர்களாலே லாபம் அடையக் கூடிய கிரகச்சேர்க்கை....
மொத்தத்தில் இது கர்ம வினை பயன்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சூரியன் ராகு கிரக சேர்க்கை

சூரியன் ராகு கிரக சேர்க்கை பலன் 
(குரு பார்வையும்... குருவுடன் இருந்தாலும்.. பலன் மாறும்)
என்னடா இவன்.. கெட்ட விஷயங்களா.... சொல்கிறாரே.... என நண்பர்கள் யாரும் நினைக்கவேண்டாம். இந்தமாதிரி கஷ்டமான சூழ்நிலை இருக்கிறவங்கதான்... ஜோதிடராகிய எங்கள தேடி வருகிறார்கள்.
அவர்களுக்கு அன்பான வார்த்தைகளையும்... ஜோதிட ஆலோசனைகளையும்... அதன் மூலம் பரிகார தெய்வ வழிபாடுகளையும் சொல்லி அனுப்புகிறோம். இப்படிப்பட்ட அனுபவங்கள் தான் எம்முடைய எழுத்துக்களாக வந்துள்ளது... அந்த அனுபவங்களையே முகநூல் வாட்ஸ் அப் நண்பர்களுக்கு பகிர்கின்றேன்....
இது.... பொதுமக்கள் விழிப்புணர்வுக்காகவும்... நாம்... எமது ஜோதிட மாணவர்களுக்காகவும் எழுதும் கட்டுரை பதிவு இது.
தந்தை வழி முன்னோர்கள் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்.... வாழ்ந்திருக்கக் கூடும்.
ஜாதகரின் அப்பா சட்டத்திற்கு புறம்பானவராகவும், சூதாட்டங்களில் ஈடுபடுபவராகவும், பொய்யராகவும், வியாதி உடையவராகவும், மனைவியை பிரிந்து வாழ்பவராகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவராகவும் இருப்பார்.
பொதுவா சொல்லப் போனால் அப்பா ஒழுக்கம் இல்லாதவராகவும் இருப்பார்.
ஜாதகரின் அப்பாவுக்கு கோச்சார கிரகங்களின் சூழ்நிலையை பொருத்து எதிர்பாராத கண்டங்கள் தரும், அப்பாவுக்கும் மகனுக்கும் உறவுநிலை சிறப்பாக இருக்காது.
ஜாதகர் பிறந்த காலத்தில் ஜாதகரின் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்.
ஜாதகர்... நிர்வாகத்திறமை இல்லாதவராக இருப்பார். அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் தொல்லைகளை அனுபவிப்பார்.
அரசியல் ஈடுபாடு இவர்களுக்கு பயனைத் தராது.
ஜாதகருக்கு அரசு மற்றும் அரசியல் ரீதியான தொல்லைகள் ஏற்படும். அரசியலில் பதவி கிடைக்காது அல்லது பதவியை தவறாக பயன்படுத்துவார். அப்படி பயன்படுத்தும் போது..... ஒரு நாளேனும்.... அரசு தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கண் பார்வை கோளாறு... உயிரனு குறைபாடு.... எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்பு உண்டு...
இந்த கிரக சேர்க்கை அமைப்பு சீரான வருமானத்தை தடை செய்யும்.
இவர்களுக்கு கடன் கிடைக்காது அல்லது கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் போலீஸ் ஸ்டேஷன் படியேறும் சூழ்நிலை கூட வரும்
இந்த கிரக சேர்க்கை பரம்பரை தோஷம் உள்ளதை சுட்டிக்காட்டும். இந்த தோஷம் அவர்கள் பரம்பரையில் யாராவது ஒருவருக்கு திருமண வாழ்வு பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும்.
எமக்கு தெரிந்து மேஷத்தில் இந்த அமைப்பு உள்ளவர்களின்.... தந்தை அரசு உத்தியோகத்தில் இருந்தும்... சூதாட்டத்தில் ஈடுபடுவராக இருக்கிறார். அதனால் சொத்துக்களை இழந்து விடுகிறார்.... ஜாதகரும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரியைப் போல் நடந்து கொள்கிறார்கள்... நடந்து கொள்வார்கள்.
மேலும் துலாமில் இருக்கும் போது இந்த சேர்க்கை அமைப்பு உள்ள ஜாதகரின் தந்தையார்... கூலி வேலை செய்கிறார் அவர் இரண்டு திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது மேலும் அப்பா செய்த குற்றத்திற்காக... ஜாதகராகிய மகன் தண்டனை அனுபவிக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.... இது ஒருவகையான பித்ரு தோஷம்.... என எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இவரது தந்தை தன் இனத்தாருடனோ அல்லது தன் சமுதாயத்தினரிடனோ... ஒத்துப் போய் வாழும் சூழ்நிலை இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சூரியன் கேது கிரக சேர்க்கை

சூரியன் கேது கிரக சேர்க்கை 
ஜாதகரின் தந்தை ஆன்மிகத்தில் அல்லது ஏதேனும் இயக்கத்தில் தன்னை இணைத்து ஈடுபடுத்திக்கொண்டால்... சிறப்பாக இருப்பார்
ஆன்மீகவாதி எனில் அவருக்கு ஞானத்தையும் பக்தியையும் தரும் ஆன்மீக வாழ்வில் மேலும் முன்னேறிச் செல்வார். முக்தி அடைவதே லட்சியம் என சொல்பவரும் உண்டு.
அப்படி இல்லையேல் ஜாதகரின் தந்தை இல்வாழ்வில் ஈடுபடும் போது விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தந்தைக்கும் மகனுக்கும் (ஜாதகருக்கு) சிறப்பாக இருக்காது.. தந்தைக்கு சட்ட சிக்கல்கள் வரும்.. அல்லது இருக்கும்.. கடனாளியாக நோயாளியாகவோ இருப்பார். ஜாதகரின் குடும்பத்திற்கு பயன் படமாட்டார்.. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் படி ஆகும்.
பத்து வருடங்களுக்கு மேல் ஜாதகர் உடன் பேசாமல் இருக்கும் தந்தையையும்... நான் அறிவேன். இதற்கும் அவர் அரசியலிலும் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். இப்படி அசுப பலன்களையே தரும்
ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர் எனில் எளிதில் ஞானம் கிடைக்கும்.
கண் மற்றும் எலும்பில் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஏதேனும் ஒரு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது... தியானம் நன்றாக வரும் ஏனெனில் சூரியன் ஆன்மாவையும் கேது ஞானத்தையும் குறிப்பதால் ஜாதகர் தியானப் பயிற்சி செய்தால் மிகவும் மேலான நிலையை அடைவார்....
இந்த கிரக சேர்க்கை ஜாதகர் அல்லது அப்பாவை அரசியலில் ஈடுபடத் தூண்டும்...
மேலும் முக்கியமாக.... இக்கிரக சேர்க்கை உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சனி கேது கிரக சேர்க்கை

சனி + கேது கிரக சேர்க்கை
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள்...
ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிக.... மிக மிக நல்லது.
இவர்களது குடும்ப வாழ்க்கையை...... ஆன்மீகம் சார்ந்து அமைத்துக் கொள்வதும் நன்று..
அப்படி அமைத்துக் கொண்டால் பெரிய அளவில்... பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்மீகம் சார்ந்து.. அது சம்பந்தப்பட்ட தொழில் செய்வது... மிக மிக நல்லது.
அப்படி இல்லை எனில்... காலமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையோடு வாழும் சூழ்நிலை இருக்கும். தீராத பிரச்சினை ஒன்று கூடவே இருக்கும். அது கடன், நோய், வழக்கு மற்றும் அதன் தசா புக்தி அந்தர நாட்களில் அறுவை சிகிச்சை... எனத்தரும்.
இந்த கிரக சேர்க்கையானது... ஜாதகரை பெரிய அளவுக்கு உயர்த்தி திடீரென வீழ்ச்சியை கொடுத்து.....
வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவோ, நோயாளியாகவோ அல்லது வழக்குகளை சந்திப்பவராகவோ அல்லது வழக்குக்காக போராடிக் கொண்டிருப்பவர்களாகவோ... செய்துவிடும்...
மீண்டும் சொல்கிறேன்.... இவர்கள் இல்லறத்தோடு கூடிய ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
இவர்களுக்கு நோய் வந்தால் நிச்சயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். வாழ்க்கையில் அடுத்து அடுத்து ஏற்பட்ட தோல்விகளால்.... இறுதிக்காலத்தில் இவர்களாகவே ஆன்மீக வாழ்க்கைக்கு சென்றுவிடுவர்.
குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாக ஆககூடிய இந்த சேர்க்கை உள்ள ஜாதகர்கள் பின்னாளில் ஏற்படும்..... தன்னுடைய தவறான முடிவுகளால்... தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கடன் அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடனாளியாகவே வாழும் சூழ்நிலை ஏற்படும்
இச்சேர்க்கை வாழ்வின் ஒரு பகுதியில் மிகவும் சிறப்பாக கோடி கோடியாக சம்பாதிக்கும் திறமையை கொடுத்து.... பேராசையால் சினிமாவில் முதலீடு செய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு..... அனைத்து கஷ்டத்துக்கு ஆளானவர்களும் உண்டு.
மேலும் ஒவ்வொரு முறை தொழில் முன்னுக்கு வரும் போதெல்லாம்..... குடும்ப உறவுகளால் ஏற்படும் திடீர் இழப்புகள் மற்றும் பழைய, புதிய காதல் விவகாரங்களால் தொழிலில் கடுமையான வீழ்ச்சியை சந்திப்பவர்களும் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...