Showing posts with label 8ம் இடம். Show all posts
Showing posts with label 8ம் இடம். Show all posts

Wednesday, July 24, 2019

6ம் இடம் மற்றும் 8ம் இடம் ஒரு வித்தியாசமான பார்வை

6 - ஆம் இடம். ருண ரோக சத்ரு ஸ்தானம் (கடன், நோய், எதிரி) ஏன்?
ஆறாமிட அதிபதி மற்றும் ஆறாம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் தசை அல்லது புத்தியில் கடன், நோய் அல்லது எதிரி தொந்தரவுகள் உண்டு.
முன்ஜென்ம கர்ம வினைகளைப் பொருத்தே, இந்த ஜென்ம பிறப்பு நல்லதாகவோ அல்லது பாதகமாகவோ அமையும்.
6 - ஆம் இடத்தைத் தெரிந்து கொள்ளும் முன் 8 - ஆம் இடத்தைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 8 எட்டாம் இடம் என்பது மனைவி, பங்குதாரர்கள் மற்றும் எதிராளி (புதிதாக அறிமுகமாகுபவர்கள்), பொதுஜனத் தொடர்பு. இவர்களின் கையிருப்பு பணம் மற்றும் அசையும் சொத்துக்களை குறிப்பது. பொதுவாக ஒருவர் நமக்கு பணம் தருகிறார் அல்லது கடன் தருகிறார் என்றால் அது 8 ஆம் இடம்(அவருக்கு இரண்டாமிடம்). நம் கைக்கு பணம் வந்து சேருவது 2 ஆம் இடம்.
சரி 6-ஆம் இடத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
நமக்கு பணம் கொடுத்தவர் 7 ஆம் இடம். அவருக்கு விரயம் 6 ஆம் இடம்.
ஒருவரின் விரயமே (6 ஆம் இடம்) நமக்கு கடன் ஆகிறது.
சரி, ஒருவருக்கு 6 ல் அதிக கிரகம் இருந்து அதன் தசை மற்றும் புக்தி நடந்தால், அவர் பூர்வ ஜென்ம கடனை அடைக்க பிறந்து இருக்கிறார் எனலாம். ஏனென்றால் ஆறாமிடம் பூர்வ புண்ணியத்துக்கு இரண்டாமிடம். (முற்பிறவி கையிருப்பு பணம், கொடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் அல்லது ஏமாற்றி இருக்கலாம்).
எனவே ஜாதகர் 6 ல் உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடக்கும் போது கடன் படுவார். சொத்து பத்துக்கள் அதிகம் இருந்து கடன் பட வாய்ப்பு இல்லை என்றால், எவரிடமாவது கொடுத்து (கோர்ட் கேஸ் என்று பணத்தைக் கொடுத்து இழத்தல், சீட்டுப்போட்டு ஏமாறுதல், மனைவி,எதிராளி, பங்குதாரர்கள் இவர்களிடம் ஏமாறுவது, லஞ்சம் கொடுத்து ஏமாறுவது, உதவி செய்து ஏமாறுவது, உறவினர்களிடம் கொடுத்து ஏமாறுவது இது போன்ற பல).
சரி, கடனும் படவில்லை. பணத்தை இழந்து எதிரியையும் சம்பாதிக்கவில்லை, ஜாதகர் உஷாராக இருக்கிறார் என்றால், கடைசி ஆயுதம் நோய்தான். நோய் வர ஜாதகர் கடன் பட்டே ஆகவேண்டும். அல்லது நோயின் கடுமையை(உடல் உறுப்புகளை இழத்தல், நோயுடனே வாழ்வது) ஜாதகர் அனுபவித்தே ஆக வேண்டும். இவ்வாறு ஜாதகர் கடன்பட்டு பணத்தை இழந்தே ஆகவேண்டும்.
ஏனென்றால் 8 ஆம் இடத்திற்கு லாபஸ்தானம் 6 ஆம் இடம். ஏழாம் இடத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (எதிராளிக்கு) பணம் போய்ச் சேர வேண்டும்.
இப்பொழுது புரிந்திருக்கும். எட்டாம் இடத்திற்கு ஏன் லாபஸ்தானம் ஆறாம் இடம் என்று. அதனால் கடன் வாங்கியவர்கள், அடுத்தவரை ஏமாற்றியவர்கள், நம்மை மதித்து பணம் கொடுத்தவர்களுக்கு, அந்தந்த ஜென்மத்திலேயே கடனை திருப்பி சரியாக செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி இந்த பிறப்பில் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் அதிக கிரகம் இருந்து தசை புத்தி நடக்கும்போது ஜாதகர் கடன்பட்டு பூர்வஜென்ம கடனை Balance செய்வார். 

Monday, July 22, 2019

விபரீத ராஜ‌யோகம்

துஷ்ட ஸ்தானம் என்பது 3, 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது விபரீத ராஜ‌யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

Wednesday, May 22, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 4 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகத்தில்....
   ராகு 1ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும்
      ஜாதகர் எளிதில் எரிச்சலடைபவராகவும், பொருமை இல்லாதவராகவும், எதிலும் திருப்தி இல்லாதவராகவும், கூட்டணி மற்றும் கூட்டுதொழில் குழப்பம் மற்றும் ஏமாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும்.
      ராகு 1ம் இடத்தில், ஜாதகரின் திருமண பந்தத்தில் பிடித்தம் இல்லாதவராகவும், மனைவி மேல் பிரியம் இல்லாதவராக இருப்பார்.
      கேது 7ம் இடத்தில், மனைவி ஜாதகருடன் வேற்றுமையும், ஜாதகரை உதாசீனம் செய்பவளாக இருப்பாள்.
   ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும்
      ராகு 2ம் இடத்தில், ஜாதகரின் பேச்சு தேள் கொட்டுவது போல் கொட்டுவார், அதே நேரம் விஷகடி அல்லது விஷம் உட்கொள்ளுதல் நிலை ஏற்படலாம்.
      கேது 8ம் இடத்தில், நோய் குணமடைவதில் தாமதம், அறுவை சீகிச்சை, சிறிது மனநலம் பதிப்பு ஏற்படலாம்.
 ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும்
      ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
      ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
      கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக‌ நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக‌) மட்டுமே நாடுவர்.
                                                                                                        ..............தொடரும்

Wednesday, September 26, 2012

ஜாதகங்களில் யோகம் அமைய‌ வேண்டிய நிலைகள் ஜோதிடக்குறிப்பு


1. யோகர்கள் லக்கினத்திற்கு 6, 8, 12ல் அமையக்கூடாது.
2. யோகர்கள் ஆறு பலம்(ஷட் பலம்) பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.
3. யோகர்கள் நின்ற ராசினாதன் 6, 8, 12ல் இருக்க‌க்கூடாது.
4. யோகர்கள் நீசமாகி நிற்கக்கூடாது.
5. யோகர்கள் அஷ்டமாதிபதி சாரம் பெற்று நிற்கக்கூடாது.
6. யோகர்களுடன் ராகு, கேது நிற்கக்கூடாது.
7. யோகர்களுடன் துர்ஸ்தானாதிபதிகள் நிற்கக்கூடாது.
8. யோகர்களின் தசா இளவயதில் வராமல், மத்திம வயதில் 25க்கு மேல் வரவேண்டும்.
9. ஒரு கோள் இன்னொரு கோளுடன் சேர்ந்து யோகம் உருவாகிறபோது, அவர்களுடைய சொந்த வீடுகளில் இருந்தால் யோக பலன் அபரீதமாக இருக்கும்.
10. யோகருடன் லக்கினத்திற்கு மற்றொரு யோகர் கூடிநின்றாலும், அல்லது கேந்திர கோணாதிபதி கூடிநின்றாலும் பலன் அதன் திசா புத்திகளில் பிரமாதமாக இருக்கும்.
11. யோகனாதன் நின்று பார்கின்ற இடங்களும் பலம் பெறும், அந்த யோகர் செவ்வாய் சனியே ஆனாலும் பலன் நன்றாக இருக்கும்.
12. யோகனதர்களை சுபகிரகங்கள் பார்த்தால் பலன் நன்றாக இருக்கும்.
13. லக்கினாதிபதி நல்ல முறையில், 6, 8, 12ல் அமராமல், யோகங்களில் ஒன்றிரண்டு இருந்தால் ஜாதகரின் முன்னேற்றம் நன்றாகவே இருக்கும்.
14. பரிவர்த்தனை யோகத்தில், பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும்.
15. லக்கினாதிபதி மற்ற வீட்டதிபர்களுடன் பரிவர்த்தனை பெற்றால்(6, 8, 12 வீட்டதிபர்களைத் தவிர) அது மகாசுப பரிவர்த்தனை யோகமாகும்.
16. லக்கினாதிபதி 3ம் வீட்டதிபனுடன் பரிவர்த்தனை பெறுவது களயோகம் என்று ஜோதிடம் பெருமை படகூறுகிறது.
17. லக்கினாதிபதி 6, 8, 12ம் அதிபர்களுடன் பரிவர்த்தனை ஆவது அசுபபரிவர்த்தனை யோகம் என்று பெயர். இதன் பலன் ஒன்றை இழந்து மற்றொன்றை பெருவது ஆகும். உதாரணமாக, இதனால் சமயத்தில் சோகம், அவமரியாதை, அவப்பெயர், நன்மதிப்பு கெடலாம். திடீரென பொருள் ஈட்டுபவராகவும், பதவிசுகத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம்.

Friday, October 28, 2011

துர்யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் 10ம் இடத்ததிபன் 6ம் இடம்,8ம் இடம் மற்றும் 12ம் இடத்தில் அமைந்தால் துர்யோகம் எனப்படும்.
1) வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த கடுமையான உழைப்பு தேவைப்படும். ஏனென்றால் ஒருவருக்கு 10ம் இடத்ததிபதி பலம் பெற வேண்டும் இல்லாவிட்டால் உழைப்புக்கு தகுந்த ஊதியமும், சரியான திறமைக்கேற்ற வேலையோ தொழிலோ அமையாது.
2) மற்றவர்களின் பார்வையில் மதிப்பு குறைந்தவராகவே காணப்படுவார். மேலே சொன்னபடி 10ம் அதிபதியின் மறைவால், அவர் எந்த சிறந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்.
3) மிகுந்த சுயநல வாதியாகவும், மற்றவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்பவர்களாகவும் இருப்பர்.
4) இவாறான இவர்களின் குணநலன்க‌ளால் இவர்களின் வாழ்கைக்கே இவர்கள் மிகவும் போராட வேண்டியதிருக்கும்.
5) பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால் இவர்களுக்கு நன்மை.
6) வேறு எந்த யோகமும் இவர்களின் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், நல்ல கிரகங்கள் வலுக்காதிருந்தால், வேறு நன்மையான அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், இவர்கள் கூலித்தொழிலாளியாக வாழ வேண்டியதிருக்கும்.
7) அவ்வாறு பிரகிரகங்களின் உதவியால் நல்ல நிலையில் ஜாதகர் இருந்தாலும் இவர் நிலைக்கு மற்றவர்களுக்கு(இவர் நிலையில் உள்ள) கிடைப்பதைக் காட்டிலும் சமுதய மதிப்பு என்பது இவர்களுக்கு மிகக்குறைந்ததாகவே இருக்கும்.
      இதில் 12ம் இடம் மிகவும் குறைவான பலன்களை வழங்கக்கூடிய இடமாகும். சில இடங்களில் இவர்களுக்கு மதிப்பு கிடைக்கும்.

Monday, October 24, 2011

வியாதியுள்ள கணவன்/மனைவி ஜோதிடக்குறிப்பு


      7ம் அதிபதி 6ம் அதிபதி அல்லது 8ம் அதிபதியுடன் இணைந்து ஜாதகத்தில் ஏதொ ஒரு இடத்தில் அமைந்து சுபர் பார்வை அல்லது சேர்க்கை இல்லாவிடில் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.
      7ம் அதிபதி 6ம் அதிபதியுடனோ அல்லது 8ம் அதிபதியுடனோ பரிவர்த்தனை பெற்றால் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.

Sunday, July 24, 2011

குரு சனி தொழில் சூட்சுமம் ஜோதிடக்குறிப்பு


      லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது.
      சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.

Friday, July 22, 2011

கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு


      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு, நோய்  போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வாலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும். கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.
      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்ப்படும்

Wednesday, July 20, 2011

பர்வத யோகம் ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் பர்வதயோகத்திற்க்கான அமைப்புகள் பின் வருமாறு....
1) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் எந்த கிரகமும் அமராமல் இருக்க வேண்டும்.
                              அல்லது
2) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது அமரவேண்டும்.
                              அல்லது
3) லக்கினாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று அமைய வேண்டும்.
      இந்த அமைப்பு பெற்றவர்கள் நல்ல வசதியான வாழ்க்கையும், எதிரிகள் இல்லாத்வர்களாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்காகவாவது பிரபலமானவர்களாகவும் இருப்பர். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து இந்த பர்வத யோகம் இன்னும் பலப்படும்.

Saturday, July 16, 2011

அதியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற‌ சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7 மற்றும் 8ல் அமைந்தால் அந்த அமைப்பிற்கு அதியோகம் என்று பெயர்.
      அதியோக அமைப்பு பெற்றவர்கள் மிகவும் அமைதியான அன்பானவர்களாகவும், வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றவர்களாகவும் இருப்பர். மேலும் எதிரிகள் இல்லாத நிலையும், ஆரோக்கியமான நல்ல நீண்ட‌ ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு ஊருக்கோ, கிரம்மத்துக்கோ நகரத்துக்கோ தலைவராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் அமைச்சராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் மூன்று கிரகங்களோ அல்லது அதற்க்கு மேலோ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு நாட்டுகே தலைவராக இருப்பர்.
     

     

Sunday, July 10, 2011

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

முதல் பாவம்:
      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

Monday, July 4, 2011

விபரீத ராஜயோகம்


      துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லக்கூடிய 3,6,8,12ம் அதிபதிகள், அந்த 3,6,8,12ம் இடங்களில்(துர்ஸ்தானாதிபதிகள் துர்ஸ்தானங்களில்) இடம் மாறி அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகமாகும்.
      அதாவது உதாரணத்திற்க்கு 3ம் அதிபதி 8ல், 6ம் அதிஅப்தி 12ல், 12ம் அதிபதி 3ல், 8ம் அதிபதி 3ல் இவ்வாறு அமர்வது விபரீதராஜயோகமாகும். இதில் அனைத்து அதிபதிகளும் இடம் மாறி இருக்க வேண்டும் என்பதல்லாமல் இருவரோ மூவரோ இடம் மாறியிருந்தால் கூட போதும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட மொழிக்கேற்ப்ப ராஜயோக பலன்களைத்தருவர்.
      இதன் பலன் என்னெவெனில் எதிர்பாராமல் வரும் நல்ல பலன்கள், உழைப்பிற்க்கு அதிகமான ஊதியம், திடீர் வரவுகள், திடீர் சொத்துகள், திடீர் சம்பத்து என கூறிக்கொண்டே போகலாம்.

Sunday, July 3, 2011

சிறந்த தன யோகங்கள்


கீழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும்.

1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும்.

2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன யோகம் ஏற்படும்.

3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டு (10 )அதிபதி இடம் பெற்றால், தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல‌ தன யோக அமைப்பு.

4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் .

5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம்.  (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும் )

6. லாப ஸ்தானத்தில் (11 ம் வீட்டில்) ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம் ஏற்படுத்தும்.

7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம்.

9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Wednesday, June 22, 2011

போராட்ட வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

      லக்கினாதிபதி 6,8,12ல் மறைய சுக தர்ம கர்மாதிபதிகள் பகை நீசம் மறைவு ஸ்தானங்களில் கெட்டு நின்றால் ஜாதகருடைய வாழ்க்கை பெரும் போராட்டமாகிவிடும்

Tuesday, June 21, 2011

இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்குரியவர்களுக்கு 6,8,12க்கு உரியவர்கள் பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்கு உரியவர்கள் மறைந்து விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும் நிலை தான் உருவாகும்.

தொழிலில் நஷ்டம் ஜோதிடக்குறிப்பு

லாபதிபதி 8ல் மறைந்தால் சுயதொழில் உதவாது. அடிமைத்தொழில் செய்யும் இடத்திலும் பிரச்சனைகள் வரும். பொறுமை காக்க வேண்டும், நல்ல வேலை அமைந்துவிட்டால் அதனை நல்ல முறையில் உழைத்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை தொழிலில் முதலீடு செய்வதை விட நீண்டகால் வங்கி டெபாசிட்டுகள் அல்லது நிலபுலன்களில் முதலீடு செய்வது நல்லது.

Monday, June 20, 2011

பிரபல ராஜயோகம்

லக்கினாதிபதி லாபம் ஏற வேண்டும், 9,10க்குடையவர்களை 8,11க்குடையவர்கள் பார்க்கவோ, இனையவோ கூடாது. இந்நிலை ஜாதகத்தில் இருந்தால் பிரபல ராஜயோகம்