Showing posts with label மிதுன லக்கினம். Show all posts
Showing posts with label மிதுன லக்கினம். Show all posts

Thursday, July 28, 2011

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 1


      முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........
நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌ வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்

Friday, July 8, 2011

சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு

      சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.
      மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் சிறப்பாக அமையும்.
      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.
      சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாத‌வர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள் அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.
      சுக்கிரன் சிம்ம வீட்டில் நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3ம் இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8ம் இடத்திலும் நிற்பார்.
      சுக்கிரனுக்கு 3, 8ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8ம் இடங்களில் நின்றாலும் உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.
      இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வீட்டில் 4மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு நின்றாலும், மீன வீட்டில் 10ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம் தராது.
      மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்.

Wednesday, June 22, 2011

சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்


      மிதுன லக்கின, கடக ராசிக்காரர்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குருவும் சனியும் இணைந்து நின்று, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று நின்றால் ஜாதகரை சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்.
1. சுக்கிரன்-பூர்வபுண்ணியாதிபதி
2. சனி-பாக்கியாதிபதி
3. குரு-ஜீவனாதிபதி

      மேலே சொன்ன அமைப்பில் தரும‍-கர்மாத்பதி இணைப்பால் தரும-கர்மாதிபதி யோகம் ஏற்ப்படுகிறது. மிதுன லக்கின காரர்களுக்கு தரும-கர்மாதிபதி இணைப்பு யோகம் தராது என்று பழைய நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும். இவிணைப்பு கேந்திரத்தில் ஏற்ப்படுவதால் கேந்திராதிபத்திய தோஷத்திற்க்கு ஆளாகிய குருவினுடைய தோஷம் சனியுடன் இணைவதால் விலகி விடுவதால். நற்பலன்கள் எதிர்பார்க்கலாம்.
      இந்த அமைப்பு உடையவர்கள் சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும். சனி தசை, குரு தசை யோகமளிக்கும். ஆண்களானால் பெண்களால் யோகமும், பெண்களானால் ஆண்களால் யோகமும் கிடைக்கும்.
      மற்ற லக்கின, ராசிக்காரர்களுக்கும் சுக்கிர தசை குறித்து தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் வரும். வாழ்க வளமுடன்!