Showing posts with label 4ம் இடம். Show all posts
Showing posts with label 4ம் இடம். Show all posts

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

சுக்கிரனும் சித்த புருஷர்களும் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.

Wednesday, October 9, 2013

காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

Monday, May 27, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 7 ஜோதிடக்குறிப்பு

காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 10ம் இடத்திலும் கேது 4ம் இடத்திலும்

   ராகு இந்த இடத்தில் கெட்டிருந்தால் மட்டும் ஜாதகரின் முடிவெடுக்கும் தன்மை, தலைமைப்பண்பு ஆகியவற்றை கெடுக்கககூடும் அதுவும் ஜாதகரின் அளவற்ற ஆசையால் மற்றும் பொருமையின்மையால் மட்டுமே நடைபெறும் விதமாக அமையும்.

   ராகு 10ல் உபஜெய ஸ்தானத்தில் நல்ல பலன்களையே வழங்குவார். ஆனால் கேது 4ல் சுகமான ஒரு வாழ்க்கைத் தேடலுக்கு தடையாகவே இருக்கும். அதாவது ராகு 10ல் பொது வாழ்க்கைக்கான பொருப்புகளுடன் ஜாதகர் இருப்பதால், குடும்ப, வீட்டு விசயங்கள் பலமிலந்து காண‌ப்படும்.

   ஆனால் 10ல் உள்ள ராகு பொது வாழ்க்கைகான தலைமைப்பண்பை தலைமை வாழ்வை பல வருடம் யாரும் உடைக்க முடியாத அளவுக்கு வழங்குவார். அதே நேரம் 4ல் கேது ஜாதகருக்கு ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது, வாழ்க்கைகான அடித்தளம் நகருவதைப் போல் ஒரு உணர்வைத்தருகிறது.
 
   4ல் கேது பாதுகாப்பு இல்லாத உணர்வையும், பலவீனமான இதயத்தையும் தருவதால், உடல் நிலையில் கவனம் தேவை.

ராகு 11ம் இடத்திலும் கேது 5ம் இடத்திலும்

   ராகு 11ல் ஜாதகருக்கு, சம்பாத்தியத்தில் பிரச்சனையும், மூத்த சகோதரர் எதிரியாகக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   இங்கே ராகு பலமுடன் இருந்தால், இது லாப ஸ்தானதுடன் சம்பந்தமாதலால், உபஜெய ஸ்தானமாதலால் குறிபிடப்படும்படியான வருமானமும் அதுவும் புத்திசாலியான வழியிலும் மற்றும் வேறு மற்ற வழிகளிலும் உதாரணத்திற்கு கிரிக்கெட் சூதாட்டம், ஷேர் மார்கெட் போன்ற வழிகளிலும் வரவு வரும்.

   கேது 5ல் பிள்ளைகளுக்கு சரியில்லாத‌ நிலை என்பர், புத்திசாலித்தனத்தை குறைக்கும் நிலை அல்லது புத்திசாலித்தனம் பயன்படாத நிலை என்று சொல்லுவர்.

 ராகு 12ம் இடத்திலும் கேது 6ம் இடத்திலும்

   பொதுவாக ஜாதகருக்கு ராகு 12ல் துர்ஸ்தானத்தில் நல்ல பலன்களையே வழங்க வேண்டும். ராகு இந்த இடத்தில் ஜாதகரை எப்பொழுதும் கற்பனையிலேயே மிதக்க வைத்து விடுவார். நிகழ்காலத்தில் ஜாதகர் இருக்கவே மாட்டார். பொய்ய்த்தோற்றத்திலேயே வாழ்வார்.

    6ல் உள்ள கேது உடல் நிலையை பற்றிய கவலை என்பதே இருக்காது, கருத்துவேறுபாடுகள் என்பதே இவரிடம் இருக்காது. இவரிடம் வாக்குவாதம், ஒப்பந்தம் என்பது வீண்.

   பொதுவாக கேது 6ல் ஜெயிலுக்கு கூட அனுப்பலாம், ஆனல் அதில் இருந்து இவர்கள் வெளிவர மாட்டார்கள், ஜெயிலில் இருந்து வெளிவர முயற்ச்சிக்கக்கூட மாட்டார்கள். வேலை செய்யும் இடத்தில் புதிதாக ஏதாவது செய்வதாக் நினைத்துக்கொண்டு சிக்கலில் மேலும் மேலும் மாட்டிக்கொள்வார்கள்.
                                                     ..........தொடரும்

Thursday, May 23, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 5 ஜோதிடக்குறிப்பு


காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும்
 
   ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி, வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்குறியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
 
   ராகு 4ல் பலமுடன் இருந்தால், ஜாதகர் அசையும் அசையா சொத்துக்கள் சேர்ப்பதில் குறியாக இருகிறார்கள், அதனால் அவர்கள் பல சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனி செக்கியூரிடி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைகிறது.
 
   ஆனால் 10ல் உள்ள கேது ஜாதகரை பொதுமக்களிடம் இருந்து தனித்து செயல்பட வைப்பதால் இவர்கள் தலைவராகவெல்லாம் ஆக முடியாது.

ராகு 5ம் இடத்திலும் கேது 11ம் இடத்திலும்

   ஜாதகருக்கு, குழந்தைகள், அறிவுத்திறமை, திடீர் பணவரவு, ஆண்மை ஆகியவை பாதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   கேது 11ல் கெட்டிருந்தால் லாபம், புகழ்,  பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது ஆனால் கேது 11ல் பலமுடன் இருந்தால், ஜாதகருக்கு லாபம் நன்றாகவே வருகிறது, கெட்ட கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களில் 3, 6, 10, 11ல் நல்ல பலன்களையே வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 ராகு 6ம் இடத்திலும் கேது 12ம் இடத்திலும்

   பொதுவாக கெட்டகிரகங்கள் கெட்ட இடத்தில் மிக நல்ல பலன்களையே வழங்கும் என்பது விதி. குறிப்பாக ராகு 6ல் மிக உயர்வான பலன்களையே தருவார்.

   ஜாதகருக்கு ராகு 6ல் மிக சக்திவாய்ந்த எதிரிகளை தருவார், ஆரோக்கியம் கெடும், கடன்சுமை ஏறும், ஆனால் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வாழ்க்கையின் உயர்வுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியையும் தருவார்.

   இந்த இடத்தில் ராகு கேதுக்கள் கேந்திரங்களைப் பாதிக்காததால் ஜாதகரின் சமூகத்தோற்றம் கெடாது, உயர்வாகவே இருக்கும்.

   12ல் உள்ள கேதுவால் ஜாதகருக்கு சுக சயனம் கெடலாம். ஆனால் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல நல்ல ஒரு நிலை இது. ஆனால் தவறான ஆன்மீக குருக்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.

Friday, May 17, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 2 ஜோதிடக்குறிப்பு


      ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஜாதகரின் திருமணவாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக, சதா தம்பதியருக்கிடையே சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும், தம்பதியருக்கிடையே புரிதல் வரவே வராது. ஆனால் ஏழாமதிபதியோ அல்லது சுக்கிரனோ வலிமையாக இருந்தால் இந்த இன்னல்கள் மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம்.
      நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்து பத்தாமதிபதி பலம் பெறாவிட்டால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விசயங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
      காலசர்ப்ப யோகம் ஒரு யோகமாக அமையும் போது அதன் பலன்கள்....
      ஜாதகர் மன அமைதி இல்லாவிட்டாலும், அவர்கள் மிகச்சிறந்த உழைப்பளிகளாகவும், அவர் இருக்கும் தொழில் சார்ந்த துறையில் மிக உயர்ந்த நிலையை அடையவைக்கும்(மற்ற யோகங்கள் இருப்பின் அவற்றின் நிலைகேற்ப்ப). அதற்கான திறமையும் அவரிடம் முழுமையாக காணலாம்.
      அத்துடன் ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் மற்றும் உற‌வினர்கள் என்பவர்கள் கடைசியில் ஏமாற்றுப் பேர்வழிகளாகவே இருப்பர். காலசர்ப்ப யோக ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளால், மனவுறுதி படைத்தவராகவும், ஒரு சாத்வீகமானவராகவும் மெல்ல மெல்ல மாறிவிடுவார்.
                                                                                               தொடரும்..........

Monday, March 12, 2012

நன்மை செய்யாத அமைப்புகள்6 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனின் தசை நடை பெறும் போது அதில் சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
      சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் தன் துணைவருடன் ஒற்றுமை குறையும். ஆனால் பிரிவைத்தராது மனதளவில் அன்யோன்யத்தை குறைக்கும். இதில் சுக்கிரன் மேஷ‌த்தில் இருந்து சந்திரன் நாலில் இருந்தால் சிக்கல் அதிகம் தான். அதே போல் ராகுவும் சுக்கிரனுக்கு நாலில் இருந்தால் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ந‌ம்முடைய நிலைபற்றிய‌ போராட்டத்தை கொடுக்கும்
      ஆனால் தாய்/தகப்பன் உணர்வை அதிகரிக்க செய்யும். அதாவது பிள்ளைகளின் மீது பொறுப்பைக் கொடுக்கும்.
     

Friday, November 4, 2011

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்.

Friday, August 26, 2011

சுப-சுக விரயம் ஜோதிட‌க்குறிப்பு


      12ம் இடத்திற்குரியவர் சுக ஸ்தானமாகிய 4ம் இடத்தில் நின்றால் ஜாதகருக்கு சுகவிரயம் அதிகமாக இருக்கும்.
      அதே போல் 12ம் இடத்தில் சுபாவ சுபர்கள் நின்றாலும், 12ம் இடத்தின் உச்ச அதிபன் 12ல் நின்றாலும் ஜாதகருக்கு சுபவிரயம் அதுகமிருக்கும். குடும்பத்தில் நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பம், உற்றார், உறவினர் என்றால் உதவத்தான் வேண்டும். ஜாதகர் புலம்பாமல் பரந்த மனப்பான்மையுடன் செலவுகள் செய்தால் சுகப்படலாம்.

Friday, July 29, 2011

பானு யோகம் ஜோதிடக்குறிப்பு


      1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

Thursday, July 28, 2011

உள்ளங்கவர் கள்வன் ஜோதிடக்குறிப்பு


      சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகு இருந்து, அவரை பாவிகள் பார்க்கும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், ஜாதகர் வெளிப்பார்வைக்கு பரம யோக்கியவானாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருப்பர். ஆனால் உள்ளே முழுவதும் கள்ளத்தனமானவர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருப்பர். பேச்சும் செயலும் நல்லது செய்வது போல் இருக்கும், ஆனால் இவர்களை நம்பினவர்களை சீர்குலைக்கும் போக்கு இவர்களது செயல்களில் மறைந்திருக்கும். பிசினஸ் பார்ட்னர்களை ஏமாற்றிக் கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பர்.
      இதே போல் சுகஸ்தானத்தில் மற்ற பாபகிரகங்கள் இருந்து பாபகிரகங்கள் பார்த்தாலும் இதே நிலை தான், அதாவது ஜாதகர் ஒழுக்ககுறைவானவராக மிகுந்த கள்ளம் நிறைந்தவராக இருப்பார்.

Wednesday, July 20, 2011

பர்வத யோகம் ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் பர்வதயோகத்திற்க்கான அமைப்புகள் பின் வருமாறு....
1) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் எந்த கிரகமும் அமராமல் இருக்க வேண்டும்.
                              அல்லது
2) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது அமரவேண்டும்.
                              அல்லது
3) லக்கினாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று அமைய வேண்டும்.
      இந்த அமைப்பு பெற்றவர்கள் நல்ல வசதியான வாழ்க்கையும், எதிரிகள் இல்லாத்வர்களாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்காகவாவது பிரபலமானவர்களாகவும் இருப்பர். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து இந்த பர்வத யோகம் இன்னும் பலப்படும்.

Tuesday, July 19, 2011

சில கோடீஸ்வர யோகங்கள்‍ ஜோதிடக்குறிப்பு

1) ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.

Sunday, July 17, 2011

அஷ்டலட்சுமி யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6ல் ராகுவும், குரு கேந்திரம்(1, 4, 7, 10ல்) பெற்று அமைந்தால் அந்த அமைப்பு அஷ்டலட்சுமி யோகம் எனப்படுகிறது.
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மிக எளிதாக நல்ல நிலையை அடைந்துவிடுவர். மற்ற கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தால் இவர்கள் கோடீஸ்வரர்களாக, சாதனையாளராக‌ பிரகாசிக்க‌ முடியும்

Sunday, July 10, 2011

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

முதல் பாவம்:
      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு

      நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.
     

Sunday, July 3, 2011

வளமான வாழ்வு அமைய‌


1) லக்கினம், லக்கினாதிபதி சிறப்பாக அமைய வேண்டும். ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு பெற இந்த அமைப்பு உதவும்...
   அ) லக்கினாதிபதி ஆட்சி, உச்ச, நட்பு வீட்டில் இருப்பது.
   ஆ) லக்கினத்தை குரு பார்ப்பது, ராசியை குரு பார்ப்பது.
   இ) லக்கினாதிபதி சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருப்பது.
2) 5,9ம் இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்
   5,9ம் இடத்ததிபதிகள் ஜாதகத்தில் வலுபெற்றிருக்க வேண்டும், அவிடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு. ஜாதகரின் பூர்வபுண்ணிய பலன் அதிகரித்து, நல்ல சுக செளக்கியங்களை அனுபவிப்பார்.
3) தன ஸ்தானமும் லாப ஸ்தானமும் அதன் அதிபதிகளும் பலம் பெற வேண்டும். இருவரும் பரிவர்த்தனை ஆகிருப்பது பிரபல யோகமாக க‌ருதப்படுகிறது.
4) சுகமான வாழ்வு பெற சுகஸ்தானதிபதியும், சுகஸ்தானமும் சிறப்பாக இருக்க வேண்டும்.கல்வி, சொந்தவீடு, வாகனம், நிம்மதியான வாழ்வு, தாய் குறித்த ஸ்தானம் ஆகையால் இந்த ஸ்தானம் நன்றாக அமைவது சிறப்பு.
5) ஒருவரது வேலை, தொழில் முயற்சி வெற்றி பெறவும், நல்ல விதமாக அமையவும் ஜீவன ஸ்தானம் நல்ல விதமாக அமைய வேண்டும். பத்தில் ஒரு பாவியாவது அமைய வேண்டும் என்ற் ஜோதிட மொழிப்படி, பத்தில் கிரகம் நிற்க்க சுபர் பார்வை சேர்க்கை பதமிடத்திற்க்கும், பத்தம்மதிபதிக்கும் ஏற்படுமாயின் வளமான வாழ்வு அமையும்.
6) நல்ல மனைவி அமைந்தால் தானே இல்லறம் இனிக்கும். அதற்க்கு கள‌த்திர ஸ்தானம், அதன் அதிபதி நல்லவிதமாக அமைய வேண்டும். களத்திர ஸ்தானத்தில் பகை நீசம் பெறும் கிரகங்கள் அமராதிருத்தலும், களத்திர ஸ்தானாதிபதி பகை நீசம் மறைவு பெறமலும், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமரமலும் இருந்தாலே போதுமானது, இல்லற வாழ்வு இனிக்கும்.

   வளமான வாழ்வு பெற ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி, தானாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, களத்திராதிபதி, பாகியாதிபதி, ஜீவனாதிபதி, லாபாதிபதி ஆகிய 8 பேரும் அந்த 8 இடங்களும் சிறப்பாக அமைய வேண்டும். ஆனால் அவ்வாறு அமைவது அபூர்வமே.
   அதனால் இதில் ஏதாவது 3, 4 இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருந்தாலே வளமான வாழ்வு அமையும்.

சிறந்த தன யோகங்கள்


கீழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும்.

1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும்.

2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன யோகம் ஏற்படும்.

3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டு (10 )அதிபதி இடம் பெற்றால், தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல‌ தன யோக அமைப்பு.

4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் .

5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம்.  (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும் )

6. லாப ஸ்தானத்தில் (11 ம் வீட்டில்) ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம் ஏற்படுத்தும்.

7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம்.

9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Wednesday, June 22, 2011

போராட்ட வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

      லக்கினாதிபதி 6,8,12ல் மறைய சுக தர்ம கர்மாதிபதிகள் பகை நீசம் மறைவு ஸ்தானங்களில் கெட்டு நின்றால் ஜாதகருடைய வாழ்க்கை பெரும் போராட்டமாகிவிடும்

ஆயுளைக் கொடுக்கும்/கெடுக்கும் ராகு


      ராகு சுக ஸ்தானத்தில் சுபர் சம்பந்தம் பெற்று நிற்க 2,7,12ம் இடங்களில் சுபாவ சுபர்கள் இருந்தால் தீர்க்காயுளைக் கொடுக்கும் ராகுவாக விளங்குவார்.
      அதே ராகு சுக ஸ்தானத்தில் பாவிகள் சம்பந்தம் பெற‌ 2,7,12ம் இடங்களில் சுபாவ பாவிகள் இருந்தால் ஆயுளைக் கெடுக்கும் ராகுவாக விளங்குவார். மத்திம அல்லது அற்ப ஆயுள் தான்.