Showing posts with label புதன். Show all posts
Showing posts with label புதன். Show all posts

Friday, May 29, 2020

சந்திரன் புதன் சேர்க்கை

சந்திரன் புதன் சேர்க்கை அல்லது பார்வை.....
ஜாதகர் சிறந்த அறிவாளியாகவும்.... உள்ளுணர்வு மிக்கவராகவும்.... சமாதான பிரியராகவும்... நகைச்சுவையாளராகவும்.... இருப்பர்
ஜாதகர் சிறுவயதிலேயே பெற்றோரை பிரிந்து வாழும் நிலை ஏற்படும்... இவருக்கும் பெற்றோருக்கும் ஆகாது... பெற்றோர் உடன் ஒத்துப் போக மாட்டார். குறிப்பாக இவருக்கும் அம்மாவுக்கும் ஆகாது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் யாரையேனும் ஒருவரை காதலித்து கொண்டு இருப்பார்.
""ஒருதலைக் காதல்"" இருக்க வாய்ப்பு உண்டு. காதல் சக்சஸ் கிடையாது . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்காது. முக்கியமா அம்மாவுக்குப் பிடிக்காது.
பிரிவு உண்டு.... ஏன்னா ஒருத்தரோட ஆதரவு இல்லாமல் போகிறது... போகும்.
உதாரணமா மீனத்தில் இந்த சேர்க்கை உள்ள ஜாதகர் படிப்பில் முதல் மாணவராக திகழ்கிறார்... பத்தாம் வகுப்புக்கு பிறகு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்... இவரின் காதல் விவகாரத்தால் பெற்றோர் இருவருக்கும் சண்டை நடந்த வண்ணமே இருக்கிறது.....
மேலும் இந்த இரண்டு கிரகங்களும் நட்சத்திர சார பரிவர்த்தனை பெற்றால் வயது வித்தியாச காதல் ஏற்படும்.
அடுத்து ரிஷபத்தில் இந்த சேர்க்கை இருக்கும் சாதகர் நல்ல படிக்கக்கூடிய மாணவராக நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருப்பார்... இவரும் தாயாரும் ஓரிடத்திலும் தந்தை ஒரு இடத்திலும் வசிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.
State Rank வாங்கிய பெரும்பாலானோருக்கு கிரக சேர்க்கை இருக்கும்.
உயர்ந்த இடத்தில் இருந்தாலும்..... தன் தகுதிக்கு மீறி கீழிறங்கி வந்து அனைவருடனும்... மக்களுடனும் பழகுவார்.
பொருத்தமே இல்லாத நண்பர்களால் நட்பு ஏற்பட்டு பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் கூட ஏற்படும்... இந்த சேர்க்கையின் பலவீனமே இதுதான்
மேலும் எமக்கு தெரிந்து ஒரு ஜாதகர் கல்வியில் முதல் மாணவராக இருந்தார் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார்.
இந்தச் சேர்க்கை உள்ளவருக்கு... யூகிக்கும் திறன் சிறப்பாக இருக்கும் நல்ல பேச்சுத் திறன் உள்ளவராக இருப்பார்.
அடுத்து முக்கியமாக மீனத்தில் இந்த சேர்க்கை இருக்கும் போது ஜாதக காதலித்த பெண்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாததாக இருந்தது இருக்கும் வாய்ப்பு உண்டு..
மேலும் மனம் //செயல் நீசத்தில் கெட்ட விஷயங்களில் வேகம் அதிகம் இருக்கும்.
இந்த கிரக சேர்க்கையோடு ராகு அல்லது கேது இருக்கும்பொழுது... ஜாதகருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.... அதனால் ட்ரீட்மெண்ட் எடுக்கும் நிலை கூட வரலாம்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

செவ்வாய் புதன் கிரக சேர்க்கை

இக்கிரக சேர்க்கை ஆண்களைவிட பெண்களுக்குத்தான் கெடுபலன்கள் அதிகமாகக் கொடுக்கும்.... படிக்கின்ற வயதில் காதல் விவகாரத்தில் ஈடுபடுத்தி படிப்பை தடைசெய்கிறது.
ஆரம்பத்திலேயே தாண்டிவிட்டால் ஆராய்ச்சி கல்வி வரை படிப்பைத் தொடர முடியும். எனக்குத்தெரிந்து ஜாதகர் படிக்கிற காலத்தில் திருமணமானவரை கூட்டிச் சென்று கல்யாணம் செய்து கல்வி தடையாகி..... திருமண உறவு முறிந்து.... பின்பு.... மீண்டு வந்து உயர்நிலைக் கல்வி முடித்து..... இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள்.
மேலும் திருமணத்துக்குப் பின்பும்.... கணவன் இருக்க காதலனும்... மனைவி இருக்க காதலியும் உண்டு என்கிற நிலையை தந்துவிடுகிறது *(தாங்களாகவே எந்த ஒரு முடிவுக்கு வர வேண்டாம். சுயமான வைத்தியமும்.... சுயமான ஜோதிடமும் எப்பொழுதும் ஆபத்து)*
கல்லூரி காலங்களில் உடன் படித்த மாணவரை.... நீண்ட போராட்டத்திற்கு பின்... திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் உண்டு... அதேசமயத்தில் பட்டப் படிப்பை முடித்திருந்த ஜாதகிக்கு..... எட்டாவது படித்த நபர்.... வாழ்க்கை துணையாக அமைவதும் நிகழத்தான் செய்கிறது...
ஆண்களுக்கு இக்கிரக சேர்க்கைகள்.... கணிதத்துறையில் கில்லாடியாக உருவாக்குகிறது. இன்ஜினியரிங் கல்வி படிப்பதற்கு இந்த கிரக சேர்க்கை மிகவும் நல்லது.
இந்த கிரக சேர்க்கை படிப்பிற்கேற்ற வாழ்க்கைத்துணையை தருவதில்லை.... அறிவு சார்ந்த முடிவுகளில் ஒருவர் எடுக்கும் முடிவு இன்னொருவருக்கு பிடிக்காது..... மேலும் படிப்பு மற்றும் அறிவு சார்ந்த சண்டைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆண்களுக்கு கிரகசேர்க்கை இருக்கும்போது.... வரவு செலவு செய்யும் போதும்... அந்த விஷயங்களில் துல்லியமாக கணிதம் பார்த்து வரவு செலவை கனிப்பர். ஏனெனில் இவர்களுக்கு கணித அறிவு மிக அழகாக அறிவு மிகுந்ததாக இருக்கும்.
காலி இடத்துடன் வீடு அமையும் யோகத்தை தருகிறது. இந்த கிரக சேர்க்கை. இக்கிரகச்சேர்க்கையோடு.... *சனி* சேரும்போது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்... அதேநேரத்தில் கணவன் மனைவிக்குள்... பகை என்பதால்...
ஆணுக்கு... பெண்.... படிப்பு ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக இருக்கும்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

Tuesday, July 16, 2019

புதஆதித்ய யோகம்

சூரியன் + புதன் கிரக சேர்க்கை....
பிறப்பு ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன் பார்ப்போமா நண்பர்களே.....
இது புதஆதித்ய யோகம்... என்றும் நிபுனத்துவ யோகம்.... என்றும்...... ஜோதிடத்தில் இந்த கிரக சேர்க்கைக்கு சொல்லப்பட்டுள்ளது.
இந்த சேர்க்கையில் தீய பலன்கள் எதுவும் கிடையாது.
செல்வச் சேர்க்கையும் எதுவும் கிடையாது.
(குரு சேர்ந்திருக்கும்போது மாறும்.... ஜாதக அலங்காரம் பாடல் 491 ""சன்மம் தன்னில் மதிமகன் சூரியகுருவும் மகிழ்ந்து நிற்கில்... சீறேறு தனம் படைத்து புலவன் ஆவான்""... என சொல்லப்பட்டுள்ளது.
இங்கு குரு இருப்பதால் செல்வம் எடுக்கப்படுகிறது. இதுபற்றி விரிவாக இன்னொரு பதிவில் ஆராயலாம்)
இந்த சூரியன் புதன் கிரக சேர்க்கை உள்ள ஜாதகர்..... அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதாவது நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள்.. இச்சேர்க்கை உள்ள ஜாதகரை கல்வியில் சிறந்தவராக்கும்.... மிகுந்த அறிவாற்றல் உள்ளவராகவும்.... மேலும் வெளிப்படையாக பேசக் கூடியவராக இருப்பார்..
என்னுடைய ஜோதிட அனுபவ வகையில்..... யுகேஜி படிக்கும் குழந்தை.... நான்காவது ஐந்தாவது பாட புத்தகத்தை கூட எளிதில் படித்து புரிந்துகொள்ளும் தன்மை பெற்றவராக இருக்கிறார்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் அன்றாடம் படிக்க கூடியவராகவும் எதையும் வேகமாக புரிந்து கொள்பவராகவும்..... அறிவாற்றல் மற்றும் பேறறிவு உள்ளவராக இருப்பார். கற்ற கல்விக்கான நற்பலன்களையும் அனுபவிப்பார். காதலில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வார்
நல்ல நண்பர்கள் சேர்க்கை உள்ளவராகவும்..... தொடர்ந்து படிக்கும் எண்ணம் ஏற்பட்டு அடுத்தடுத்து பட்டங்கள் வாங்குவதும் இவர்களுக்கு நடக்கும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பில்.... சூரியன் கடன் கொடுப்பவரும்... வாங்குபவருமான காரகத்துவத்தையும்....
புதன் வங்கியையும் குறிக்கும் என்பதனால்..... இவர்களுக்கு கடன் எளிதில் கிடைக்கும்.
இதை படிக்கிற பேங்க் மேனேஜர் யாராவது இருந்தீங்கன்னா.... எங்களைப் போன்ற ஜோதிடர்களை அணுகி அல்லது ஜாதகத்தை நீங்களே வாங்கி பார்த்துட்டு.... ஜாதகருக்கு கடன் கொடுக்கலாம்...
கடன் வாங்கினாலும் 100% கட்டிவிடுவார்....
அதேபோன்று (டிரேடிங்) வாங்கி விற்கும் வியாபாரம் செய்தாலும் மிகச் சிறப்பான நிலையும்.... நல்ல எதிர்காலமும் உண்டு....
சூரியன் அப்பாவையும் குறிக்கும் என்பதால்.... இவரின் ஜாதகப்படி
அப்பாவுக்கு நட்பு வட்டம் அதிகமாக இருக்கும்.. அப்பா கல்வியாளராகவும்.. அறிவாளியாகவும்.... வியாபாரத்தில் நாட்டம் உடையவராகவும்... சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகவும்.... நகைச்சுவையாளராகவும்.... சமாதான பிரியராகவும்.... இருப்பார்..
புதன் மாமா மற்றும் நண்பர்களை குறிப்பதால்.....
இவரின் மாமா மற்றும் நண்பர்கள் வெளிப்படையானவர்களாகவும்.... அவர்கள் அரசு தொடர்பில் இருப்பவர்களாகவும்... இருப்பர்.

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

Monday, August 4, 2014

சிராக யோகம் ஜோதிடக்குறிப்பு

சிராக யோகம் என்றால் என்ன?
புதனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெறுவதோடு, வியாழனும் அவ்விரு கிரகங்களுக்கும் கேந்திரம் பெற்று நின்றால் அது சிராக யோகம் எனப்படும். இது ஒரு அரிய யோகம் எப்போதாவது ஏற்ப்படுவது. இதன் பலன்கள்...
1. உயர் கல்வி உண்டாகும்
2. நல்ல செல்வம் உண்டாகும்
3. வாகனம் முதலான வசதிகள் உண்டாகும்
4. அசையா சொத்துக்கள் சேரும்
5. நல்ல மனைவி, புத்திரர்கள் ஏற்ப்படுவார்கள்
6. கெளரவமான உயர்பதவி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்
அதாவது சிறப்பான ராஜ யோக பலன்களை இந்த யோகம் தரும்
சிராக யோகம் குறித்து நாபச யோகங்கள் குறித்த விளக்கங்களில் பராசுரர் எடுத்துக்கூறியுள்ளார். மால யோகம் எனவும் இந்த யோகம் அழைக்கப்படுகிறது.

Saturday, October 19, 2013

கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு

      முதலில் கேந்திராதிபத்ய தோஷம் என்றால் என்ன? என்று பார்ப்போம்! அதாவது நைசர்க்கிக சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகியவை லக்கின கேந்திரங்களுக்கு(4,7,10க்கு) அதிபதியாகி லக்கினத்திற்க்கு மற்ற கேந்திரங்களில் அமருமேயானால், அந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து, அந்த பாவத்தையும் அதைச்சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்தியத்தையும் பாழ்படுத்திவிடும். இதற்கான விதிமுறைகளைக் இனி காண்போம்.....
விதி எண் 1. 
      குரு, புதன், சுக்கிரன் அமரும் கேந்திரங்கள் அதன் மற்றொரு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அந்த கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடையாது. யோகமாக மாறி நல்ல பலன்களையே தரும்.
விதி எண் 2.
      கேந்திராதிபத்ய தோஷம் இருவகை (1) லக்கின கேந்திரம் நைசர்க்கிக சுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் சுப கேந்திராதிபத்ய தோஷம், (2)லக்கின கேந்திரம் நைசர்க்கிக அசுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் அசுப கேந்திராதிபத்ய தோஷம் எனப்படும்
விதி எண் 3. 
      சுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகம் கெடாது.
விதி எண் 4. 
      அசுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகமும் கெடும்.
விதி எண் 5. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் லக்கினத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத்தை அடையாது.
விதி எண் 6. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் அந்த பாவத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத் தன்மை கூடுதலாகவே அளிக்கும்.
விதி எண் 7. 
       பொதுவாக சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வந்தால் மட்டுமே அக்கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து தீமை செய்வார்கள்,ஆனால் அவர்களே மற்றொரு ஆதிபத்யமாக ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அக்கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படாது
..................................தொடரும்

Tuesday, October 8, 2013

மதன யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினம் விருச்சிகமாக அமைந்து அதில் குரு மற்றும் சுக்கிரன் அமர, 11ம் இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் அது மதன யோகம் எனப்படும். இந்த யோகத்தை உடைய ஆண்கள் பெண்கள் விரும்பும்படியாக பேசுவர், பெண்களால் விரும்பப்படுவர்!

Friday, July 5, 2013

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Wednesday, July 3, 2013

கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு

      கலைத்துறையில் பிரகாசிக்க, கவிஞ‌ர்களாக, இசைக்கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர், நடிகையாக, கதாசிரியர்களாக, பிரகாசிக்க புதன், சுக்கிரன், சந்திரன், குருவின் பலமே பெரிதும் உதவுகின்றது.
1) ப‌லமுள்ள சுக்கிரனை, சந்திரன் பார்த்தால், தமது திறமையை எழுத்து கவிதைகள் மூலம் பேரும் புகழும் பெற்று பிரகாசிப்பர்
2) சுக்கிரன் புதன் சேர்ந்து இரண்டில் இருந்து குரு பார்த்தால் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக திகழ்வர்.
3) 1ம் இடம் 5ம் இடம் கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் நல்ல கலைஞர்களாவர்.
4) சுக்கிரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சந்திரன் இருந்தாலும் அல்லது சந்திரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சுக்கிர‌ன் இருந்தாலும் கலைத்துறையில் பிரகசிப்பர்.
5) லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 1ம் இடத்திலோ அல்லது 2ம் இடத்திலோ புதன் இருந்து, 10ம் இடத்தை குரு பார்த்தால் கலையுலகில் சிறப்புடன் பிரகாசிப்பர்.
6)சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலைத் தருகிறது.
7) கேது 1, 5, 9 ல் நவம்சத்தில் இருந்தால் புத்தக எழுத்தாளர்.
8) குரு சந்திரன் இனைந்து 5 அல்லது 9ம் இடத்தில் இருந்தாலும், சந்திரன் 5 அல்லது 9ம் இடத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் கதை, கட்டுரை எழுதுபவர்.
9) சந்திரன் இருக்கும் இடத்திற்க்கு 10ல் புதன் சனி சேர்க்கை பெற்று கெடாமல் இருந்தால், கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர்.
10) புதனும் குருவும் இனைந்து 1, 2, 5 அல்லது 9ல் பழுதுராமல் இருந்தால் சிறந்த கவிஞர், கதாசிரியராவார்.

Sunday, June 9, 2013

பிரம்ம யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தால் அது பிரம்ம யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள் என்பது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற முழுமையான எண்ணம், அதற்கான பொருள், ஆரோக்கியம், புகழ் ஆகியன நன்றாக அமையும். இந்த ஜாதகர் நன்றாக கல்வி கற்றவராகவும், கற்றவர்களிடம் மதிப்பு பெற்ற‌வர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மிக நல்லவராகவும், நல்லது செய்வதற்காக வளைந்து கொடுப்பவராகவும் இருப்பர் என்கிறது ஜோதிடவிதி.

      குறிப்பாக இந்த அமைப்பில் மூன்று நல்ல கிரகங்களும் ஈடுபட்டுள்ளன என்பதுடன் அனைத்து லக்கினகாரர்களுக்கும் இது அமையாது, காரணம் மேஷ லக்கின காரர்களுக்கு குருவே 9ம் அதிபதியாக வருவதால் 9ம் அதிபதிக்கு குரு கேந்திரம் என்பது சாத்தியமில்லை.
      கடக லக்கின‌ காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனே 9 மற்றும் 11ம் அதிபதியாக வருவதால் இங்கு முதல் இரண்டு விதிகள் அடிபட்டுப் போகின்றன‌
      அதேபோல் கன்னியா லக்கின காரர்களுக்கு புதனே 10ம் அதிபதியாக வருவதாலும், தனுர் லக்கினகரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனே 10 மற்றும் 11ம் அதிபதியாக வருவதாலும் மேலே சொல்லப்பட்ட விதிகள் சாத்தியமில்லை.
      ஆனால் தனுர் லக்கினகாரர்களுக்கு 10ம் அதிபதிக்கு பதிலாக விதியில் சொல்லப்பட்டபடி லக்கினாதிபதியை கணக்கில் கொள்ளலாம்.
      யோக நிலையின் விதிப்படி கடகம், கன்னி மற்றும் மேஷ லக்கினகாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் முழுவீச்சில் பலன் தரும்.
      மூன்று விதிகளும் ஒன்றாக அமைந்தால் தான் யோகம் முழுதாக பயன் கொடுக்கும் மாறக எதோ ஒன்றிரண்டு விதிகள் ஒத்து போனால் முழு யோகம் இல்லாவிட்டாலும், மிக குறைந்த அளவில் பலன் கொடுக்கலாம்.

Wednesday, March 7, 2012

புதன் 6ல் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதன் 6ல் தனித்து அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் முடிந்தவரை கடன் வாங்காமலேயே இருப்பது நல்லது அவ்வாறு வாங்கினால் அந்த ஜாதகரால் அந்த கடனை அடைப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
      புதன் தனித்து 6ல் அமர்ந்திருக்கும் ஜாதகர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், எதிர்பார்ப்பு அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பர். அதனால் அவர்களுக்கு கவலை அதிகமிருக்கும். அந்த கவலையால் நரம்பு, மனம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம்.
      அதே நேரம் புதன் 6ல் தனித்தோ அல்லது ஆறாம் அதிபதியுடன் இணைப்போ அல்லது தொடர்போ கொண்ட ஜாதகர்களுக்கு மருந்து அல்லது மருத்துவம் பற்றிய ஆர்வமிருக்கும், அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வர். சிறிய அளவிளாவது மருந்துகளைப் பயண்படுத்துவது பற்றி அறிந்து இருப்பர். அதனால் மருந்துகளை மருத்துவ‌ருடைய அறிவுருத்தலில்லாமல் தனக்குத் தானே எடுத்துக்கொள்வர்.

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

Friday, November 4, 2011

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்.

Monday, October 3, 2011

தெய்வபலம் ஜோதிடகுறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 9ம் இடத்தில் ச‌ந்திரன், புதன், சுக்கிரன், குரு, கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும், அதனால் தெய்வ பலமும் உண்டாகும். குறிப்பாக 9ல் சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்.

Monday, September 26, 2011

சுலப அரசியல் செல்வாக்கு ஜோதிடக்குறிப்பு

      10ம் இடம் மிதுனம் அல்லது கன்னியாகி அங்கு சூரியன், புதன் இனைந்து நின்றால் ஜாதகருக்கு அரசியல் செல்வாக்கு சுலபமாக கிடைக்கும். அரசியலில் உயரிய பதவிகளை வகிக்க்க முடியும். உதாரணம் பி.வி.ந‌ரசிம்மராவ் ஜாதகம், இவர் மைனாரிட்டி எம்பிக்களுடன் சிறப்பாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர் என்பது நீங்கள் அறிந்ததே.

Friday, September 2, 2011

வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு

      லக்கினத்தில் கேது, 7ல் ராகு, 10ல் புதன் எனும் அமைப்பு ஆண்களின் ஜாதகத்தில் இருக்குமானால், அவர்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மேல் இச்சை ஏற்படுகிறது. அவர்கள் விதவைக்கு வாழ்வளித்தால் வாழ்வு சுகப்படும்.

Sunday, August 28, 2011

மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு


      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.
      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.
      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.

Sunday, August 7, 2011

குறைகூறும் மனைவி யாருக்கு? ஜோதிடக்குறிப்பு


      ஆண்களின் ஜாதகத்தில் 7ம் இடத்ததிபன் மிதுனம்/கன்னியில் கெட்டு நிற்க அல்லது 7 அதிபன் புதனாக இருந்து பகை நீசம் பெற்றோ அல்லது பாவிகளுடன் இனைந்தோ கெட்டு நின்றால்,
      அவர்களுக்கு வாய்த்த மனைவி வாயாடிகளாகவும், வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும், கணவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிக்கொண்டு கண‌வனை வார்த்தைகளால் வறுத்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்து தின்று கொண்டு இருக்கிறவர்களாகவும்.
       எனக்கு வீட்டு வேலையே சரியாக இருக்கிறது, நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும். அந்த வீட்டு வேலையையும் சரிவர செய்யாமல் பேச்சு செயல் அனைத்திலும் பதட்டம் கொண்டு செயல் படுபவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு சந்தோசம் இல்லை நீயும் சந்தோசமாக இருக்ககூடாது என்று செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.
      இவர்கள் முழுக்க முழுக்க கணவனை குறைகூறிக்கொண்டு இருந்தாலும், இவர்களை சமூகம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இந்த ஜாதகர்கள் சகித்துக் கொண்டு வாழ்பவர்களாக இருப்பதைப்பார்க்க முடிகிறது. இந்த ஜாதகர்களின் வாழ்க்கை தாமரை இலை தண்ணிர் போல் அமையும் வாழ்க்கை என்று குறிப்பிடலாம் அல்லவா?

Saturday, July 30, 2011

கணக்கில் புலி ஜோதிடக்குறிப்பு

      ஜாதகத்தில் குருவும், புதனும் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு கணிதத்தில் திறமை அபாரமாக இருக்கும். கஷ்டமான கணக்குகளைக் கூட மனக்கணக்காகவே போட்டுவிடுவர். அதிலும் குருவும் புதனும் உச்சம் பெற்றிருந்தால் அபாரமாக இருக்கும். அவர்களை கணக்கில் புலி என்று சொல்லுவர். கணக்கில் நூற்றுக்குநூறு வாங்கும் குழந்தைகளின் ஜாத‌கத்தில் இந்த அமைப்பு இருப்பதைக் காண முடிகிற‌து