Showing posts with label மகர லக்கினம். Show all posts
Showing posts with label மகர லக்கினம். Show all posts

Thursday, July 28, 2011

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு



      பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 3


 தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால், தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ, சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

Friday, July 8, 2011

சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு

      சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.
      மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் சிறப்பாக அமையும்.
      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.
      சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாத‌வர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள் அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.
      சுக்கிரன் சிம்ம வீட்டில் நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3ம் இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8ம் இடத்திலும் நிற்பார்.
      சுக்கிரனுக்கு 3, 8ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8ம் இடங்களில் நின்றாலும் உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.
      இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வீட்டில் 4மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு நின்றாலும், மீன வீட்டில் 10ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம் தராது.
      மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்.

Saturday, June 18, 2011

அதிர்ஷ்டசாலி-ஜோதிடக் குறிப்பு


9,10க்கு உடையவர்கள் தரும கருமாதிபதி ஆவர். இவர்கள் பரிவர்தனையாகி நின்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
ரிஷப லக்கினகாரர்களுக்கு 9,10க்கு உடையவர் சனியாவார். அவர் கெடாது நல்ல நிலையில் இருந்தாலே ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர் பரிவர்த்தனை மகர லக்கினகரர்களைத் தவிர இதர லக்கினகாரர்களுக்கு யோக பலன்களைத் தரும்.
மகர லக்கினகாரர்களுக்கு 9, 10ம் இடம் கன்னி, துலாம் ஆகும். கன்னியில் சுக்கிரன் நீசமடைவார். இவர்களுக்கு கன்னியில் சுக்கிரனும் புதனும் இனைந்து நின்றால் சுக்கிரனுக்கு நீச பங்கம் ஏற்ப்படும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பில் இருவரும் கெடாது சாதாரண நிலையில்(ந‌ட்பு, சமம்) இருந்தால் யோகம் தான். இருவரில் ஒருவர் வலுவாகவும் ஒருவர் சாதாரணமாக இருந்தால் யோகம் அதிகமுண்டு. இருவரும் வலுவாக சுபர் பார்வையுடன் சேர்க்கையுடன் இருந்தால் பிரபல யோகமாகும்.