Showing posts with label சுக்கிரன். Show all posts
Showing posts with label சுக்கிரன். Show all posts

Friday, May 29, 2020

திருமண யோகத்திற்கு

1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.தே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19. பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20. இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8. ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!

சந்திரன் சுக்கிரன் கிரக சேர்க்கை

ஜாதகத்தில்.... சந்திரன் சுக்கிரன் கிரக சேர்க்கை.... பார்வை பலன் என்ன என்று பார்ப்போமா நண்பர்களே.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்.... வீட்டில் மாமியார் மருமகள் சண்டை நடந்து கொண்டே இருக்கும்...
மாமியார் மருமகள் சண்டையில் சுக்கிரன் பலம் பெற்றால் மருமகளின் கை ஓங்கி இருக்கும்.... சந்திரன் பலம் பெற்றால் மாமியார் கை ஓங்கியிருக்கும்...
மேலும் ஜாதகத்தில் இரண்டும் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் சம பலத்தில் இருக்கும் போது இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லும் குணம் வந்துவிடும்...
எதிர்பாலினர்களுக்காக அதிகமாக செலவுகள் செய்வார்.... பொழுதுபோக்குக்கும் சிற்றின்பத்திற்கும்...அதிகமாக செலவு செய்வார்கள்.
ஜாதகர் ஆடம்பரப் பிரியராக இருப்பார்...
எப்பொழுதும் எதிர்பாலினரை பற்றிய சிந்தனையில் இருப்பார்...
சொகுசான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார்....
கலைத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்...
வரவுக்கு மீறி செலவு செய்பவராக இருப்பார்...
மனைவியின் மன உளைச்சலுக்கு ஆளாவார்...
இவர்கள் திருமணத்துக்கு பின் தனிக்குடித்தனமாக வாழ்வது சிறப்பு...
கிரக சேர்க்கை பெண்ணுக்கு இருந்தால் அவர் மற்ற பெண்களிடம் முன்கோபம் ஆக இருப்பார்கள்.... கணவன் குடும்பத்தாருடனும் .... தன் குடும்பத்தாருடனும் ஒற்றுமை இல்லாமல் தனியாக தனிக்குடித்தனமாக இருக்கும் அமைப்பும்வ பெண்களுக்கு வந்துவிடும்....
ஆணுக்கு இருக்கும்பொழுது அம்மாவுக்கும்... மனைவிக்கும்.... சிறிது கூட ஒத்துப் போகாது..
மனைவியின் ஆடம்பர செலவில்( முக்கியமாக... மேக்கப்) பொருளாதாரத்தில் மிகவும் தங்கி விடவும் வாய்ப்பு ஏற்படுத்திவிடும்... இதுதான் மனைவிக்கும் இவருக்கும் ஒற்றுமையின்மை ஏற்படுத்தும்....
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை

அடுத்தடுத்து கிரகச் சேர்க்கை பலன் வரிசையில்.....
நாம் காண இருப்பது செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை பலன்கள்.....
இந்த செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தசாவதாரிணி யோகம் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பர்... பெரும்பாலும் வாழ்க்கைத்துணை பக்கத்திலேயே அமையும்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் பெரும்பாலும் காதல் கலப்பு திருமணம் செய்துகொள்வார்கள்....
இவர்கள் சிறுவயதில் பாலியல் விஷயங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முன் ஜென்மத்தில் வாழ்க்கை துணையாக யாராக இருந்தார்களோ... இந்த ஜென்மத்தில் வாழ்க்கைத் துணையாக ஆவார்கள் என முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
கணவன் மனைவி மிக அன்னியோன்யமாக இருப்பார்கள். இவர்களுக்குள் நல்ல வசிய சக்தி இருக்கும். கலைத்துறையில் பிரகாசிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
ஜாதகருக்கு சொகுசான வீடு வாகனம் அமையும்
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள் காமத்தில் அதிக அதீத ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்...
அழகான வாழ்க்கை துணை அமையும் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்... எனக்குத்தெரிந்து நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன்.... நீசம் பெற்ற சுக்கிரன் உடன் இணைந்த செவ்வாய் உள்ள ஆண் ஜாதகர்.. காதல் திருமணம் செய்து நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஆட்சி பெற்ற சுக்கிரனோடு இணைந்த செவ்வாய் அமைப்பு உள்ள பெண் ஜாதகரும்..... காதல் திருமணம் புரிந்து நல்லதொரு வாழ்க்கை வாழ்கிறார்.... வாழ்கிறார்கள்.
இந்த கிரக சேர்க்கையுடன் ராகு கேது சேருமானால் சேர்ந்து இருக்குமானால்.... அசுபர்களின் பார்வையும்... தசா புத்தியும் இருக்குமானால்.... ஒழுக்கம் கேள்விக்குறியாக இருக்கும் மிக தவறான வகையில் வருமானம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் (சூழ்நிலையை ஏற்படுத்தும்). மேலும் காமம் எண்ணங்கள் அதிகமாகும். கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும்.
இந்த கிரகங்களின் இருப்பு அதன் தன்மை கணவன் மனைவி ஒற்றுமையை கடுமையாக பாதிக்கும். எப்படி எனில் செவ்வாய் சுக்கிரன் இரண்டும் ஒருவருக்கு ஒருவர் 6 / 8 ஆக இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை குறைவாகவே இருக்கும் தசாபுத்தி சாதகமாக இல்லாத பட்சத்தில்... பிரச்சனை மற்றும் பிரிவினையை கூட தந்துவிடும். அல்லது தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது அல்லது தாம்பத்தியம் இல்லாமல் செய்துவிடும்.
ஜாதகர் மனைவி கூடவே..... இருந்தாலும் கூட மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பிடிக்கவில்லை என சொல்பவர்களும் உண்டு.
இவ்விரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்றுடன் ராகு அல்லது கேது சேரும்போது திருமணம் மிகவும் தாமதமாகவும் திருமணத்திற்கு பிறகு பிரிவினையை தருவதும் எளிதில் நடந்து விடும்.
இந்த அமைப்பு உள்ள ஆண் ஜாதகம் கணவன்-மனைவியும் அடிக்கடி பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர்... மேலும் இந்த அமைப்பில் தாம்பத்திய சுகம் குறைவாகவே இருக்கும் கணவன்-மனைவி ஈர்ப்பு குறைவாகவும் இருக்கும்.... அந்த இடத்தில் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குருவின் பார்வை இருக்கும்பட்சத்தில் மனைவியை கடைசிவரை கைவிடமாட்டார்.
செவ்வாய் சுக்கிரன் சம சப்தம பார்வையில் ராகு கேது உடன் இருக்கும்பொழுது கணவன் மனைவிக்கிடையில் வழக்கு வம்புகள் கண்டிப்பாக இருக்கும் அல்லது நடைபெறும். திருமணமாகியும் ஒரு சில வருடங்கள் சேர்ந்து இருந்து..... அதன்பிறகு கோர்ட் கேஸ் வழக்கு என்ன என அலைந்து தீர்ப்பும் வராமல் 15 வருடங்களாக இருப்பவர்களும் உண்டு...
ஆறுதலான விஷயம் என்றால் இவர்களுக்கு கலைத்துறையில் யோகமுண்டு... சொகுசான வீடு வாகனம் யோகம் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

Thursday, July 25, 2019

சுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா ? மற்றுமொரு பார்வை

சுக்கிர தசை உனக்கு ஆரம்பிக்கப் போகிறது என்றாலே மயங்காதவர்கள் யாரும் இல்லை. வாழ்வில் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒருவரை அல்லது மேல் நிலைக்குச் சென்று விட்ட ஒருவரை “அவனுக்கென்னப்பா சுக்கிர தசை” என்று சொல்வது உலகியல் வழக்கு.
ஆனால் நடைமுறையில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் சுக்கிரனின் தசை ஆரம்பித்ததும் தன் நிலையிலிருந்து சரிவடைவதும், தசையின் முடிவில் கீழான நிலைக்கு வருவதையும் பார்க்கிறோம். எனவே சுக்கிரனின் தசை நடக்கும் ஒருவர் கொடுத்து வைத்தவர் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை சரிதானா என்பதைப் பார்ப்போம்.
முதலில் சுக்கிர தசைக்கு மட்டும் இந்த எதிர்பார்ப்பு ஏன் என்று பார்க்கப் போவோமேயானால், வேத ஜோதிடத்தில் ஒரு மனிதனின் ஆயுளை நூற்றியிருபது வருடங்களாகப் பிரித்து, அவற்றை சமமற்ற ஒன்பது பங்குகளாக அமைத்து, மனித வாழ்வின் நன்மை, தீமைகளை பகுதி பகுதியாகக் கணித்துச் சொல்லும் தசா, புக்தி வருடங்கள் என்ற அமைப்பை நமக்கு அருளிய பராசர மகரிஷி அவர்கள் சுக்கிரனுக்கு மட்டும் இருபது வருடங்களை ஒதுக்கியிருக்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்வில் சுக்கிரதசை வருமானால் அது இருபது வருடங்களுக்கு அவனை ஆளுமை செய்யும் என்பதோடு, ஒன்பது கிரக தசைகளிலும் அதிகமான வருடங்களைக் கொண்டது சுக்கிரன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதன், எண்பது வயது வரை உயிரோடு இருப்பான் எனத் தோராயமாகக் கொண்டால் அவனது வாழ்நாளின் கால் பகுதியை சுக்கிரன் எடுத்துக் கொள்வார். விபரமறியாப் பருவங்களான குழந்தை மற்றும் பள்ளி பருவத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கைப் பகுதியை சுக்கிரன் ஆக்கிரமித்துக் கொள்வார் என்பதால்தான், ஒருவருக்கு சுக்கிர தசை வரப் போகிறது எனும் போது அதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
சுக்கிரன் ஒருவரே நல்ல மனைவி, அருமையான வீடு, உயர்தரமான வாகனம், உல்லாச வாழ்க்கை, எங்கும் எதிலும் சொகுசாக இருத்தல், பெண்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இன்பம் ஆகியவற்றைத் தருபவர் என்பதாலும் சுக்கிர தசை வரப் போகிறது என்றவுடன் இதயத் துடிப்பு அதிகமாகிறது.
ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய விஷயத்தை எளிமையாக விளக்கியிருந்தேன்.
நமது ஞானிகள் வானில் ஒரு ஒழுங்கான நியதிக்குக் கட்டுப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களை மனித வடிவமாக்கி, அவர்களுக்கு கணவன்-மனைவி, தந்தை-மகன் போன்ற உறவுமுறைகளையும் கற்பித்ததற்கு மறைமுகமாக விளக்கங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
ஒன்பது கிரகங்களுக்குள்ளும் ஞானிகள் நட்பு, பகை உறவுகளை நமக்கு விளக்கிச் சொன்னது, அந்தக் கிரகங்களின் தசைகள் ஒருவருக்கு வரும்போது, எது நன்மை செய்யும் எது தீமையைத் தரும் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகத்தான்.
அதன்படி கிரகங்களுக்குள் ஜென்ம விரோதிகளாக உருவகப்படுத்தப்பட்ட குரு, சுக்கிரன் இருவரும் அடுத்தவரின் லக்னங்களுக்கு நன்மைகளைச் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் நன்மைகளைத் தர வேண்டுமெனில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது அசுர குரு எனப்படும் சுக்கிரனின் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு தேவகுருவான வியாழன் நன்மைகளைத் தரமாட்டார். அதேபோல தனக்கு எதிர்த் தன்மை உடையவரான குருவின் தனுசு, மீன லக்னங்களுக்கு சுக்கிரன் நல்லது செய்யமாட்டார்.
அதிலும் ஒரு ஜாதகருக்கு எதிரிகளை உருவாக்கித் தரும் மறைவு ஸ்தானமான ஆறாம் பாவத்தின் அதிபதிகளாக இவர்கள் இருவரும் அமைகையில் தங்களது தசையில் கெடுபலன்களை அதிகமாகச் செய்வார்கள். இந்நிலை தனுசு லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக சுக்கிரன் வரும்போதும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக குரு வரும்போதும் நடக்கும்.
துலாம் லக்னத்திற்கு குரு உச்சம் பெறும் நிலையில் ஆறாம் பாவத்தைப் பார்த்து வலுப்படுத்தி, வேறு வகையில் பலவீனமடையாவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆறாம் பாவத்தின் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, சிறை போன்ற கெடுபலன்களை தனது தசையில் வலிமையுடன் செய்வார்.
அதேபோல சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றிருந்தாலோ, வேறுவகைகளில் ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டு அந்த பாவத்தை பலப்படுத்தி இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு கெடுபலன்களையே அதிகமாகத்  தருவார். எனவே சுக்கிர தசை மற்றும் புக்தி நன்மைகளைத் தரும் என்பது எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தாது.
அதேநேரத்தில் பாவத்பாவ விதிகளின்படி ஒரு ஸ்தானாதிபதி அந்த பாவத்திற்கு ஆறு, எட்டில் மறைந்தால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். இதுபோன்ற நிலையில் தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் பாவத்திற்கு ஆறாமிடமான பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு குரு பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்கள்.
ஆறாமிடத்தை அடுத்து அஷ்டமம் எனும் எட்டாமிடத்திற்கு சுக்கிரன் அதிபதியாகும் நிலை மீன லக்னத்திற்கு ஏற்படும். சுக்கிரன் மீன லக்னத்திற்கு வலுவாக இருக்கும் நிலையில் அவரது தசையில் பெரும்பாலும் ஜாதகனை வெளிநாடு, வெளிமாநிலங்களில் அலைந்து திரிந்து பொருள் தேட வைப்பார்.
சிலநிலைகளில் பெண்கள் விஷயத்தில் அவமானம் வழக்கு போன்ற விஷயங்களையும் செய்வார். அதுபோலவே ரிஷபத்திற்கு எட்டிற்கு அதிபதியாகும் குருவும் தனித்து வலுப்பெறும் நிலையில் கெடுதல்களையும், வெளிநாடு வெளிமாநில அமைப்புகளையும் தருவார்.
ஆனால் எட்டாமிடத்தை விட ஆறாமிடமே அதிகமான அசுபத் தன்மை வாய்ந்தது என்பதாலும், ஒரு ஜாதகனின் எதிரியையும், அவனுக்கு வேண்டாதவைகளையும் குறிக்கும் பாவம் ஆறாமிடம் என்பதாலும், தனுசு லக்னத்திற்கு லக்னாதிபதி குரு வலுவிழந்து, சுக்கிரன் ஆறில் ஆட்சி பெறும் போதோ, அல்லது வேறு வகைகளில் வலுப் பெற்று இருக்கும்போதோ சுக்கிர தசை வந்தால் கொடிய பலன்கள் நடக்கும்.
இதுபோன்ற நிலையில் சுக்கிர தசை ஜாதகரை மிகக் கீழான ஒரு நிலைக்கு கொண்டு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதுபோன்ற ஜாதக அமைப்பில் கேது தசையில் வலிமையான அதிகார அமைப்பில் இருந்து, பொருள் சம்பாதித்து, சுக்கிர தசையில் தவறு செய்து பிடிபட்டு, அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இழந்து வழக்கு, சிறை என்று அலைந்து திரியும் ஜாதகங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.
மேலும் சுக்கிரன், பெண்கள், காமம், உல்லாசம், ஆடம்பரம், கேளிக்கை இவற்றிற்கு அதிபதி என்பதால் சுக்கிர தசையில் பெண்களின் மூலமாக கெடுதல்களும், அவமானங்களும், தோல்விகளும் இருக்கும். இப்படிப்பட்ட நிலை துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் வலுவிழந்து குரு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றாலும் நடக்கும்.
எந்த ஒரு லக்னத்திற்குமே லக்னாதிபதி வலுவிழந்திருக்கும் நிலையில்  ஆறுக்குடையவன் பலம் பெற்றிருக்கக் கூடாது. அப்படி ஒருநிலையில் நாம் வலுவிழந்து நம் எதிரி பலத்தோடு இருக்கிறார் என்பதுதான் பொருள்.
இதுபோன்ற ஒரு நிலை ஜாதகத்தில் அமைந்தால் அவரது முன்னேற்றத்திற்குத் தடை இருக்கும் என்பது ஒரு சூட்சுமமான, ஞானிகளால் வெளிப்படையாகச் சொல்லப்படாத விதி. இதையே அடிக்கடி கட்டுரைகளிலும் கேள்வி-பதில்களிலும் எழுதி வருகிறேன்.
மேலும் குரு, சுக்கிரனுக்கு எதிர்த் தன்மையுடையவர் மற்றும் ஆகாதவர்  என்றாலும் நமது மூல நூல்களில் சுக்கிரனின் அறிவிக்கப்பட்ட எதிரியாகச் சொல்லப்படுவது சூரியனும், சந்திரனும்தான்.
எனவே இவர்கள் இருவரின் கடக, சிம்ம லக்னங்களுக்கும் சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், பெண் சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து தனது ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்.
மற்றபடி சுக்கிரனின் நட்பு லக்னங்களான மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு சுக்கிர தசை அபாரமான நன்மைகளைச் செய்யும். மேற்கண்ட லக்னங்களுக்கு சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தாலும் சுக்கிர தசை பெரிய அளவில் தீமைகளைச் செய்யாது.
ஒரு முக்கியக் கருத்தாக எந்த ஒரு தசையிலும் இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் இரண்டு விதமான முரண்பட்ட பலன்களை செய்வார்கள் என்பதால் ஒரு மகா தசை முழுக்க முழுக்க நன்மைகளையோ, முழுவதும் தீமைகளையோ செய்து விடுவது இல்லை.
நல்ல ஆதிபத்தியத்தின்படி முதலில் நன்மைகளைச் செய்யும் ஒரு கிரகம் அடுத்து தீய ஆதிபத்தியத்தின்படி தசையின் பிற்பகுதியில் கெடுபலன்களையோ, சாதகமற்ற பலன்களையோ செய்யும்.
ஒரு தசையின் முதற் பகுதியில் ஒரு கிரகம் தீமைகளைச் செய்யுமாயின், அடித்த கையே அணைக்கும் என்பதன்படி அதே கிரகத்தின் பிற்பகுதி தசை முதலில் தந்த தீமைகளால் நடந்த விளைவுகளை நீக்கி நன்மைகளைச் செய்து விட்டுப் போகும். இதுவே சிருஷ்டியின் ரகசியம்.
சுக்கிர தசைக்கு இந்த அமைப்பு சரிபாதியாக அமையும்போது, சுக்கிரன் நன்மைகளை செய்யும் நிலையில் இருந்தால், தனது தசையின் முதல் பத்து வருடங்கள்  தனது நல்ல காரகத்துவங்களை ஜாதகருக்கு குறைவின்றித் தருவார்.
ஜாதகனின் வயதைப் பொருத்து அவருக்கு திருமணத்தின் மூலம் நல்ல மனைவியையும், அருமையான சொகுசான வீடு, உயர்தர வாகனம், பெண் குழந்தைகள், எந்த ஒரு நிலையிலும் சொகுசாக, சுகமாக வாழும் நிலை, பெண்களால் நன்மை போன்ற அமைப்புகளைச் செய்வார்.
அதேபோல இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வரும் இருவரை திடீரென ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி காதல் எனும் அமைப்பில் நுழைய வைப்பவர் சுக்கிரன்தான்.
காதலின் அடிப்படையே காமம்தான் என்பதால் சுக்கிரன் வலுப் பெற்றவர்கள் காதல் என்ற பெயரில் காமத்தைப் பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
கலைத்துறையில் ஜெயிப்பவர் யார்?
கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்திற்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்திற்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.
உதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் நடனம், நடிப்பிலும், சினிமா எடுப்பதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒருவருக்கு ஆர்வம் இருக்கும். மேற்கண்ட துறைகளில் ஜாதகர் புகழோடும் இருப்பார்.
ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் வந்து விடும். குறிப்பாக சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் ஜீவனாதிபதி ஆவதால் இந்த லக்னத்தவர்களே அதிகமாக கலைத்துறையில் முயற்சிப்பவராக இருப்பார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கேமிரா இயக்குனர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச்மேன் என அவரவரின் ஜாதக வலுக்கேற்ப ஒருவர் கலைத்துறையில் இருப்பார்.
சுக்கிரன் சுப வலுவில்லாமல் அந்த ஜாதகருக்கு தீமை தரும் அமைப்பில் இருந்தால் பயனற்ற வழிகளில் கலைத்துறையில் வாய்ப்புத் தேட வைத்து வாய்ப்பும் கிடைக்காமல், வேறு வாழ்க்கை வழிகளையும் காட்டாமல் இளமைப் பருவம்  முழுவதையும் தொலைக்க வைத்து பின்னால் வருந்தவும் வைப்பார்.

Tuesday, July 16, 2019

பல‌ பெண்களுடன் தொடர்பு

குரு ,சுக்கிரன் ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்து, குருவுக்கும் சுக்கிரனுக்கும் அடுத்த கட்டத்தில் அல்லது அதற்கு முன் கட்டத்தில் புதன் அமர்ந்து இருந்தாள், அந்த ஜாதகருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.... இது பொதுப்பலன் மட்டுமே. உங்களுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு கூறவும். 

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

சுக்கிரனும் சித்த புருஷர்களும் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.

Saturday, October 19, 2013

கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு

      முதலில் கேந்திராதிபத்ய தோஷம் என்றால் என்ன? என்று பார்ப்போம்! அதாவது நைசர்க்கிக சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகியவை லக்கின கேந்திரங்களுக்கு(4,7,10க்கு) அதிபதியாகி லக்கினத்திற்க்கு மற்ற கேந்திரங்களில் அமருமேயானால், அந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து, அந்த பாவத்தையும் அதைச்சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்தியத்தையும் பாழ்படுத்திவிடும். இதற்கான விதிமுறைகளைக் இனி காண்போம்.....
விதி எண் 1. 
      குரு, புதன், சுக்கிரன் அமரும் கேந்திரங்கள் அதன் மற்றொரு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அந்த கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடையாது. யோகமாக மாறி நல்ல பலன்களையே தரும்.
விதி எண் 2.
      கேந்திராதிபத்ய தோஷம் இருவகை (1) லக்கின கேந்திரம் நைசர்க்கிக சுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் சுப கேந்திராதிபத்ய தோஷம், (2)லக்கின கேந்திரம் நைசர்க்கிக அசுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் அசுப கேந்திராதிபத்ய தோஷம் எனப்படும்
விதி எண் 3. 
      சுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகம் கெடாது.
விதி எண் 4. 
      அசுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகமும் கெடும்.
விதி எண் 5. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் லக்கினத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத்தை அடையாது.
விதி எண் 6. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் அந்த பாவத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத் தன்மை கூடுதலாகவே அளிக்கும்.
விதி எண் 7. 
       பொதுவாக சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வந்தால் மட்டுமே அக்கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து தீமை செய்வார்கள்,ஆனால் அவர்களே மற்றொரு ஆதிபத்யமாக ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அக்கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படாது
..................................தொடரும்

Wednesday, October 9, 2013

காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

Tuesday, October 8, 2013

மதன யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினம் விருச்சிகமாக அமைந்து அதில் குரு மற்றும் சுக்கிரன் அமர, 11ம் இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் அது மதன யோகம் எனப்படும். இந்த யோகத்தை உடைய ஆண்கள் பெண்கள் விரும்பும்படியாக பேசுவர், பெண்களால் விரும்பப்படுவர்!

Friday, July 5, 2013

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Wednesday, July 3, 2013

கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு

      கலைத்துறையில் பிரகாசிக்க, கவிஞ‌ர்களாக, இசைக்கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர், நடிகையாக, கதாசிரியர்களாக, பிரகாசிக்க புதன், சுக்கிரன், சந்திரன், குருவின் பலமே பெரிதும் உதவுகின்றது.
1) ப‌லமுள்ள சுக்கிரனை, சந்திரன் பார்த்தால், தமது திறமையை எழுத்து கவிதைகள் மூலம் பேரும் புகழும் பெற்று பிரகாசிப்பர்
2) சுக்கிரன் புதன் சேர்ந்து இரண்டில் இருந்து குரு பார்த்தால் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக திகழ்வர்.
3) 1ம் இடம் 5ம் இடம் கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் நல்ல கலைஞர்களாவர்.
4) சுக்கிரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சந்திரன் இருந்தாலும் அல்லது சந்திரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சுக்கிர‌ன் இருந்தாலும் கலைத்துறையில் பிரகசிப்பர்.
5) லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 1ம் இடத்திலோ அல்லது 2ம் இடத்திலோ புதன் இருந்து, 10ம் இடத்தை குரு பார்த்தால் கலையுலகில் சிறப்புடன் பிரகாசிப்பர்.
6)சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலைத் தருகிறது.
7) கேது 1, 5, 9 ல் நவம்சத்தில் இருந்தால் புத்தக எழுத்தாளர்.
8) குரு சந்திரன் இனைந்து 5 அல்லது 9ம் இடத்தில் இருந்தாலும், சந்திரன் 5 அல்லது 9ம் இடத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் கதை, கட்டுரை எழுதுபவர்.
9) சந்திரன் இருக்கும் இடத்திற்க்கு 10ல் புதன் சனி சேர்க்கை பெற்று கெடாமல் இருந்தால், கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர்.
10) புதனும் குருவும் இனைந்து 1, 2, 5 அல்லது 9ல் பழுதுராமல் இருந்தால் சிறந்த கவிஞர், கதாசிரியராவார்.

Sunday, June 9, 2013

பிரம்ம யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தால் அது பிரம்ம யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள் என்பது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற முழுமையான எண்ணம், அதற்கான பொருள், ஆரோக்கியம், புகழ் ஆகியன நன்றாக அமையும். இந்த ஜாதகர் நன்றாக கல்வி கற்றவராகவும், கற்றவர்களிடம் மதிப்பு பெற்ற‌வர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மிக நல்லவராகவும், நல்லது செய்வதற்காக வளைந்து கொடுப்பவராகவும் இருப்பர் என்கிறது ஜோதிடவிதி.

      குறிப்பாக இந்த அமைப்பில் மூன்று நல்ல கிரகங்களும் ஈடுபட்டுள்ளன என்பதுடன் அனைத்து லக்கினகாரர்களுக்கும் இது அமையாது, காரணம் மேஷ லக்கின காரர்களுக்கு குருவே 9ம் அதிபதியாக வருவதால் 9ம் அதிபதிக்கு குரு கேந்திரம் என்பது சாத்தியமில்லை.
      கடக லக்கின‌ காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனே 9 மற்றும் 11ம் அதிபதியாக வருவதால் இங்கு முதல் இரண்டு விதிகள் அடிபட்டுப் போகின்றன‌
      அதேபோல் கன்னியா லக்கின காரர்களுக்கு புதனே 10ம் அதிபதியாக வருவதாலும், தனுர் லக்கினகரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனே 10 மற்றும் 11ம் அதிபதியாக வருவதாலும் மேலே சொல்லப்பட்ட விதிகள் சாத்தியமில்லை.
      ஆனால் தனுர் லக்கினகாரர்களுக்கு 10ம் அதிபதிக்கு பதிலாக விதியில் சொல்லப்பட்டபடி லக்கினாதிபதியை கணக்கில் கொள்ளலாம்.
      யோக நிலையின் விதிப்படி கடகம், கன்னி மற்றும் மேஷ லக்கினகாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் முழுவீச்சில் பலன் தரும்.
      மூன்று விதிகளும் ஒன்றாக அமைந்தால் தான் யோகம் முழுதாக பயன் கொடுக்கும் மாறக எதோ ஒன்றிரண்டு விதிகள் ஒத்து போனால் முழு யோகம் இல்லாவிட்டாலும், மிக குறைந்த அளவில் பலன் கொடுக்கலாம்.

Thursday, June 6, 2013

பல ஆண்களுடன் தொடர்பு! ஜோதிடக்குறிப்பு

      ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியிருந்து    அந்த அமைப்பை எந்த‌ ஒரு கிரகமும் சேராமலும் அல்லது எந்த மற்ற கிரகத்தாலும் பார்க்கப்படமலும் இருந்தால் அந்த ஜாதகி பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பாள். அந்த ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தால் அவள் கணவனும் அவ்வாரே! அவளும் கணவனுக்கு தெரிந்தே அந்தத் தொடர்புகள் கொண்டிருப்பாள்.

Tuesday, May 21, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 3 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
      காலசர்ப்ப யோகம், ஜாதகருக்கு, வேலையின்மை, திருமணம் நடக்காமை, வீடற்ற நிலமை, பரதேசி போல் ஒரு வாழ்க்கை, இந்த ஒரு கிரக அமைப்பே தரலாம்.
      இந்த யோகமானது,வாழ்க்கையில் ஒருமுறை மிகமுன்னேற்றமான பாதையில் பயணிக்கவும் (பொருள் வாழ்க்கையில் இதை எற்படுத்துபவர் ராகு), பின் ஒரு முறை பொருள் ப்யணத்தில் தடங்கல் ஏற்ப்பட்டு, அசிங்கப்பட்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஏதுமற்ற ஒரு குழப்பமான் நிலைக்கு தள்ளப்படுதல் (இதை ஏற்படுத்துபவர் கேது). அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும்.
      இதில் ராகுவானவர் பயங்கர தன்னம்பிக்கையை கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த பாதைக்கு(பொருள் வாழ்க்கைக்கு) பயணிக்கச் செய்துவிடுவார், இதில் ராகுவனவர் லக்கினம் முதல் ஆறு இடங்களில் அமைய வேண்டும்.
      காலசர்ப்ப யோகத்தில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கிடையில் அமைய வேண்டும். இதில் லக்கினம் அல்லது ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப யோகத்தில் வராது.
      அந்த மாதிரி அமைப்பை(ஒரு கிரகமோ அல்லது லக்கினமோ வெளியே அமையப்பெற்றவர்கள்) உடையவர்கள், மிகசிறந்த ஒரு இனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ தலைவனாகக் கூட ஆகிவிடுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற மிக நல்ல தலைவராக இருப்பர்(முக்கியமாக சுக்கிரனோ அல்லது குருவோ ராகு கேதுவை விட்டு வெளியே இருந்தால்).
      பல உலகப்புகழ் பெற்ற நல்ல தலைவர்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் அடைபட்டு, ஒரு சில கிரகங்கள் ராகு கேது அமைந்திருக்கும் அதே இடத்தில் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ அதே டிகிரியில் அமையப்பெற்று இருப்பதைக்காணலாம்..........
                                                                                         தொடரும்

Monday, March 12, 2012

நன்மை செய்யாத அமைப்புகள்6 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனின் தசை நடை பெறும் போது அதில் சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
      சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் தன் துணைவருடன் ஒற்றுமை குறையும். ஆனால் பிரிவைத்தராது மனதளவில் அன்யோன்யத்தை குறைக்கும். இதில் சுக்கிரன் மேஷ‌த்தில் இருந்து சந்திரன் நாலில் இருந்தால் சிக்கல் அதிகம் தான். அதே போல் ராகுவும் சுக்கிரனுக்கு நாலில் இருந்தால் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ந‌ம்முடைய நிலைபற்றிய‌ போராட்டத்தை கொடுக்கும்
      ஆனால் தாய்/தகப்பன் உணர்வை அதிகரிக்க செய்யும். அதாவது பிள்ளைகளின் மீது பொறுப்பைக் கொடுக்கும்.
     

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Wednesday, November 16, 2011

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு


1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

Friday, November 11, 2011

வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில், 11ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும், அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.
      அந்த அமைப்பு உடைய‌ ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்.

Monday, November 7, 2011

எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்


இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்