Showing posts with label 1ம் இடம். Show all posts
Showing posts with label 1ம் இடம். Show all posts

Tuesday, June 18, 2013

பஹுத்ர வ்யர்ஜன யோகம்-அதிர்ஷ்டசாலி ஜோதிடக்குறிப்பு

      லக்கினாதிபதி 2ம் இடத்திலும், 2ம் அதிபதி 11ம் இடத்திலும், 11ம் அதிபதி லக்கினத்திலும் அமைந்தால் அந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலி; நன்றாக பணம் பண்ணக் கூடியவர்.
      இதில் இந்த மூன்று கிரகங்கள் ஒன்றின் இடத்தில் ஒன்று மாறி முப்பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருக்கின்றது. இந்த யோகமானது இந்த மூன்று கிரகங்களின் பலத்தைப் பொறுத்து அமையும்.

Tuesday, June 4, 2013

பரிவர்த்தனையால் ராஜ‌யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும், 10ம் இடத்ததிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்தால் அது ஒரு ராஜயோகமாகும். இந்த பரிவர்த்தனை யோகம் ஜாதகருக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புகழ், அதிகாரம் ஆகியவற்றை வழங்கும்.

Thursday, May 30, 2013

மஹாராஜ யோகம் ஜோதிடக்குறிப்பு

      1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் ப‌ரிவர்தனை ஆகியிருந்து அல்லது 1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் லக்கினத்திலோ, 5ம் இடத்திலோ இருந்து ஆல்லது 1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் ஆட்சி, உச்சம் ராசியிலோ அல்லது நவம்சத்திலோ பெற்றிருந்து, அந்த ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகத்தால் பார்க்கப்பட்டால் அது மஹாராஜ யோகம் எனப்படும்.
      மஹாராஜ யோகம் பெற்றவ்ர்கள், பெயரோடும், புகழோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்வர்.

Thursday, May 23, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 6 ஜோதிடக்குறிப்பு


காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 7ம் இடத்திலும் கேது 1ம் இடத்திலும்
 
   ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவர்கள் சுயநல வாதிகளாகவே இருப்பர், கெட்டவர்கள் இந்த இடத்தில் ராகு கெட்டிருந்தால் நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
 
   ராகு 7ல் பலமுடன் இருந்தால், ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவரின் ஆசை மிகுந்த குறிக்கோள் ஜாதகருக்கு நன்மை செய்வதாகவே அமைகிறது.
 
   ஆனால் 1ல் உள்ள கேது ஜாதகருக்கு ரத்தக்க்கொதிப்பு, தலைவலி, வாழ்க்கையில் உற்சாகமின்மை, அதனால் நோய் சாதரணமாக பீடிக்கும் தன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும்

   ஜாதகருக்கு, புது விதமான சமயத்தில் தீர்க்க முடியாத நோயாலும், செய்வினையாலும், திடீர் அதிர்ச்சியாலும் பிரச்சனைகள் வரக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   இங்கே ராகு பலமுடன் இருந்தால், திடீர் பண வரவு, வாழ்க்கையில் பல ரகசியமான நடவடிக்கைகள், சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கும் தன்மை, விஷத்தை பயண்படுத்தி நோய் தீர்க்கும் தனமை, மனநலத்திற்கு தீர்வு சொல்பவர்களாக அமைவர்.

   கேது 2ல் மிகுந்த வருமானம் ஆனால் சேமிப்பற்ற நிலை, குடும்ப நபர்களிடம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலை, முகத்திலும், பல்லிலும் மருத்துவம் பார்க்கும் நிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். பொதுவாக ஜாதகர் செல்வத்தில் ஒரு உறுதியற்ற நிலையும், தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பார்.

 ராகு 9ம் இடத்திலும் கேது 3ம் இடத்திலும்

   பொதுவாக ஜாதகருக்கு ராகு 9ல் கெட்டிருந்தால் பணநஷ்டத்தை சூதாட்டத்தில் ஏற்படுத்துவார் என்றும் ஜாதகருக்கு தெய்வந‌ம்பிக்கை என்பதே இருக்காதென்பது விதி.

   இந்த இடத்தில் ராகு பலமுடன் இருந்தால் அதிக ஆன்மீக நம்பிக்கையும், அதைப்பற்றியே போதிக்கும் போதகர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் போதிக்கும் போதனைகள் சற்று முரண்பட்டதாகவே இருக்கும்.
 
   3ல் உள்ள கேது கெட்டிருந்தால் ஜாதகருக்கு குடும்ப உறவு சுமூகமாக இருக்காது, அத்துடன் அமைதியான மனநிலை என்பது அமையவே அமையாது, அதனால் ஜாதக்ர் வாழ்க்கையை எப்போதும் தவ‌றாகவே எடுத்துக்கொள்வார். இவருக்கு மற்றவர்களுடன் பேச்சு வழி உறவு என்பது எல்லோருக்கும் போல் சரியானதாகவே அமையாது, முரண்பட்டதாகவே அமையும்.

   பொதுவாக கேது உபஜெய ஸ்தானத்தில், 3ல் கெட்ட பலன்களைத்தராது. 3ல் கேது, பேச்சில் சிலர் முரண்பாடானவர்களாக இருந்தாலும் அது மிகப்பெரிய ஒரு பாதிப்பைத் தராது.
                                                     ..........தொடரும்

Wednesday, May 22, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 4 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகத்தில்....
   ராகு 1ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும்
      ஜாதகர் எளிதில் எரிச்சலடைபவராகவும், பொருமை இல்லாதவராகவும், எதிலும் திருப்தி இல்லாதவராகவும், கூட்டணி மற்றும் கூட்டுதொழில் குழப்பம் மற்றும் ஏமாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும்.
      ராகு 1ம் இடத்தில், ஜாதகரின் திருமண பந்தத்தில் பிடித்தம் இல்லாதவராகவும், மனைவி மேல் பிரியம் இல்லாதவராக இருப்பார்.
      கேது 7ம் இடத்தில், மனைவி ஜாதகருடன் வேற்றுமையும், ஜாதகரை உதாசீனம் செய்பவளாக இருப்பாள்.
   ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும்
      ராகு 2ம் இடத்தில், ஜாதகரின் பேச்சு தேள் கொட்டுவது போல் கொட்டுவார், அதே நேரம் விஷகடி அல்லது விஷம் உட்கொள்ளுதல் நிலை ஏற்படலாம்.
      கேது 8ம் இடத்தில், நோய் குணமடைவதில் தாமதம், அறுவை சீகிச்சை, சிறிது மனநலம் பதிப்பு ஏற்படலாம்.
 ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும்
      ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
      ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
      கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக‌ நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக‌) மட்டுமே நாடுவர்.
                                                                                                        ..............தொடரும்

Friday, May 17, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 2 ஜோதிடக்குறிப்பு


      ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஜாதகரின் திருமணவாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக, சதா தம்பதியருக்கிடையே சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும், தம்பதியருக்கிடையே புரிதல் வரவே வராது. ஆனால் ஏழாமதிபதியோ அல்லது சுக்கிரனோ வலிமையாக இருந்தால் இந்த இன்னல்கள் மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம்.
      நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்து பத்தாமதிபதி பலம் பெறாவிட்டால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விசயங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
      காலசர்ப்ப யோகம் ஒரு யோகமாக அமையும் போது அதன் பலன்கள்....
      ஜாதகர் மன அமைதி இல்லாவிட்டாலும், அவர்கள் மிகச்சிறந்த உழைப்பளிகளாகவும், அவர் இருக்கும் தொழில் சார்ந்த துறையில் மிக உயர்ந்த நிலையை அடையவைக்கும்(மற்ற யோகங்கள் இருப்பின் அவற்றின் நிலைகேற்ப்ப). அதற்கான திறமையும் அவரிடம் முழுமையாக காணலாம்.
      அத்துடன் ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் மற்றும் உற‌வினர்கள் என்பவர்கள் கடைசியில் ஏமாற்றுப் பேர்வழிகளாகவே இருப்பர். காலசர்ப்ப யோக ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளால், மனவுறுதி படைத்தவராகவும், ஒரு சாத்வீகமானவராகவும் மெல்ல மெல்ல மாறிவிடுவார்.
                                                                                               தொடரும்..........

Wednesday, May 15, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 1 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகம் என்பது அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது இந்த இருவருகிடையே அமைந்து இருப்பது. காலசர்ப்ப யோகம் என்பதே ஒரு அவயோகம் போல் நம்பப்படுகிறது. காலசர்ப்ப யோகம் அமையப்பெற்ற ஜாதகத்தில் உள்ள மற்ற மிகப்பெரிய யோகங்களைக்கூட தடுத்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் காலசர்ப்ப யோகம் அமையப்பெற்றுள்ள வீடுகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். காலசர்ப்ப யோகம் அமைந்துள்ள வீடுகள் பின் வருவன மாதிரி அமைந்தால், ஒவ்வொரு அமைப்பிற்கும் பலன்கள் மாறும்....
1. ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில்.
2. இரண்டாமிடத்திற்கும் மற்றும் எட்டமிடத்திற்க்கும் இடையில்.
3. மூன்றாமிடத்திற்கும் மற்றும் ஒன்பதாமிடத்திற்க்கும் இடையில்.
4. நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில்.
5. ஐந்தாமிடத்திற்கும் மற்றும் பதினொன்றாமிடத்திற்க்கும் இடையில்.
6. ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில்.

      ஒவ்வொரு அமைப்பிற்க்கும் மற்ற ஜாதக அமைப்பை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

      ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகருக்கு உலக வாழ்க்கைக்கான பிடிப்புக்கான பலமான யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையை நாடுவார். அதில் மிக உயர்ந்த நிலையை அடைவார்.
                                                       தொடரும்....

Wednesday, January 4, 2012

புஷ்கலா யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரனுடன் இணைந்து கேந்திர திரிகோணத்திலோ அல்லது சந்திரனுடைய அதிநட்பு வீட்டிலோ இருந்து, அந்த சந்திரன் அமர்ந்த, ராசியாதிபதி லக்கினத்தில் அமர்ந்திருக்கும் இருக்கும் கிரகத்தை பார்ப்பது புஷ்கலா யோகம் எனப்படும்.
      புஷ்கலா யோகம் அமையப் பெற்றவர்கள், சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களாகவும், செல்வம் செல்வக்க்கோடு கூடிய அந்தஸ்த்து உடையவர்களாகவும், நாட்டை ஆள்பவர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.

Thursday, December 22, 2011

கோ-யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.
      இந்த அமைப்பை பெற்ற‌வர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார். 

Friday, November 18, 2011

பாரிஜாத யோகம்


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

Wednesday, November 16, 2011

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு


1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

Friday, November 11, 2011

வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில், 11ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும், அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.
      அந்த அமைப்பு உடைய‌ ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்.

Monday, November 7, 2011

எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்


இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

Friday, November 4, 2011

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்.

Monday, October 24, 2011

தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு

      12ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை பெற்றாலோ, 12ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12ம் வீட்டில் சுபர் அமர்ந்தாலோ, 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ, 12ம் வீட்டில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்.

Friday, September 2, 2011

வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு

      லக்கினத்தில் கேது, 7ல் ராகு, 10ல் புதன் எனும் அமைப்பு ஆண்களின் ஜாதகத்தில் இருக்குமானால், அவர்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மேல் இச்சை ஏற்படுகிறது. அவர்கள் விதவைக்கு வாழ்வளித்தால் வாழ்வு சுகப்படும்.

Sunday, August 28, 2011

மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு


      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.
      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.
      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.

Sunday, July 31, 2011

நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு


1) ஜாதகத்தில் குருசந்திர யோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம் ஆகியவற்றில் ஒன்றாவது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
2) 2,12ம் இடங்களில் சுபர்கள் இருந்தால் நிம்மதி மிகவும் நன்றாக இருக்கும்.
3) 2,12ம் இடங்களில் பாபர்கள் இருந்தாலும் சுபர் பார்வை இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியால் உருவாக்கி கொள்ள முடியும்.
4) லக்கினத்தை பாபிகள் பார்க்காது, சுபர் பார்வை இருந்தால் நிம்மதி நிறைவு நன்றாக இருக்கும். குறிப்பாக குருவின் பார்வை லக்கினத்துக்கு கிடைத்தால் மிக நிம்மதியாக, மரியாதை மிக்க வாழ்க்கை வாழமுடியும்.

Friday, July 29, 2011

பானு யோகம் ஜோதிடக்குறிப்பு


      1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

Thursday, July 28, 2011

வாழ்க்கைச்சிறை ஜோதிடக்குறிப்பு

      ராகுவோ கேதுவோ லக்கினேசனுடன் சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் இருப்பது யோகமான அமைப்பு, உயர்வு தரும். ஆனால் இந்த அமைப்புக்கு 6ம் வீட்டோனின் சம்பந்தம் ஏற்படுமாயின் ஜாதகருக்கு வாழ்க்கை சிறைவாசம் போல் தெரியும். வயது கூடக்கூட குடும்பப்பற்று மறைந்து, துறவு மனப்பான்மை ஏற்ப்படும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையினை சிறையில் இருப்பது போல் கருதி வாழ்க்கையினை ஓட்ட வேண்டியிருக்கும்.