Showing posts with label சனி. Show all posts
Showing posts with label சனி. Show all posts

Friday, May 29, 2020

சூரியன் சனி கிரக சேர்க்கை

சூரியன் + சனி கிரக சேர்க்கை, பார்வை அல்லது பரிவர்த்தனை பலன்கள்.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்..... எனவே இச்சேர்க்கை இருக்கும் ஜாதகருக்கும்.... அப்பாவுக்கும் உறவுநிலை.... அவ்வளவு சிறப்பாக இருக்காது.
அப்பாவாக இருந்தால்... மகனிடம்...
ஐந்து வயது வரை அப்பாவா இருக்கணும்.. 10 வயது வரை நண்பனா இருக்கணும்...
15 வயசுக்கு மேல வழிகாட்டியாகத்தான் இருக்கணும்.
எப்பவும்.... தன்னுடைய அதிகாரத்தை... மகன் மீது செலுத்தவே... கூடாது.
அப்படி செலுத்தும் போது..... எடுபடாமல் போய்... அப்பாவுக்கு அது சங்கடமாக திரும்ப வரும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பின்படி அப்பாவும் மகனும் ஒரே வீட்டுல இருக்கிறப்ப.... ஜாதகருக்கு தொழில் அல்லது வேலை பாதிப்பையும்..... அப்பாவுக்கு உடல் பாதிப்பையும் ஏற்படுத்தி விடும்.
ஒரு நல்ல விஷயம் என்ன?? அப்படின்னா.... இந்த அமைப்பு ஜாதகருக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தித் தரும்.
இந்த கிரக சேர்க்கையானது... ஜாதகருக்கு அரசு வேலைக்கான வாய்ப்பையும் அல்லது செய்கின்ற தொழிலுக்கு அரசாங்கத்தோட.... உதவியையும் பெற்று கொடுக்கும்
தொழிலில் பதவி யோகத்தையும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த கிரக சேர்க்கையானது.... ஜாதகரை பரம்பரை அல்லது பாரம்பரிய தொழில் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும். அதில் சிறப்பு அடையலாம்.
மேலும் சனியோட பார்வையில் இருக்கும் சூரியன்அமைப்பினால்....
அப்பாவுக்கு மகனால் அதிக தொல்லைகளை ஏற்படுத்தி... வெறுத்துப் போய்.... படிக்கிற வயசுல ஹாஸ்டல்ல சேர்த்து விடும் சூழ்நிலை ஏற்படுத்தி விட்டுடும்.
வேலை செய்யும் வயதில் மகன் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போய் தங்கி வேலைய பாருடா.... என சொல்லும் அளவுக்கு நிலைமை போகும்.
தந்தை மகன் உறவை கடுமையாக பாதிக்கும் இருவரும் பிரிந்து இருப்பது நல்லது
சூரியன் சனியும்... அதாவது சூரியன் உச்சம் ஆகும் இடத்துல சனி நீசம் ஆகும் இந்த சூழ்நிலையில்.... சேர்க்கை பிறப்பு ஜாதகத்தில் அமையும்போது....
அப்பா... மகன் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை வரும். தொழிலில்...... அப்பாவுக்கு கீழ அடுத்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலை தான் இருக்கும். அப்பாவை மீறி மகனால் எதுவும் செய்ய முடியாது.
அடுத்து சூரியன் நீசம் ஆகும் வீட்டில் சனி உச்சமாக இருக்கிறது இந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்கும் போது.... மகன் சொல்றத கேட்கக் கூடிய அப்பாவா.... இருக்கிற மாதிரியான சூழ்நிலை வரும்.
இங்கு மகனின் ஆதிக்கம் அதிகமாகி அப்பாவை விரட்டும் அல்லது அடிமை போல் நடத்தும் சூழ்நிலை கூட வரும்.... ஏன்... அப்பாவை அடிக்கும் சூழ்நிலை கூட வரும்.
இதுல இந்த அமைப்பு அப்பாவோட ஜாதகத்துல இருந்தா.... மகனோடு உறவு ஆகாது...
மகனுக்கு இருந்தால் தொழில் வாய்ப்பு அதிகமா இருக்கும்.... இது தான் சூட்சுமம்.
என்னுடைய கணிப்பின் படி அப்பாவும் மகனும் பிரிந்து இருப்பதே நல்லது.
ஏன்னா!!!!!!.... அப்பா சிறப்பாக இருந்தால் மகன் சிறப்பா இருக்கமாட்டார்.
மகன் சிறப்பாக இருந்தால்.... அப்பா இருக்க மாட்டார்
மேலும்....
சூரியன் உயிரணு உற்பத்தியை குறிக்கக்கூடிய கிரகம்...
சனி உயிரணுவை தடை செய்யக்கூடிய கிரகம்...
அதாவது.... உயிர் உற்பத்தி காரக கிரகம் சூரியன்.... உயிர் அழிவுக்கு காரக கிரகம் சனி
இதனால் இரண்டு கிரகங்கள் சேர்க்கை ஜாதகருக்கு உயிரணு உற்பத்தி..... பாதிக்கப்படும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது மணமகன் அல்லது மணமகள் இருவருக்குமே கிரக சேர்க்கை இருக்குமானால் சேர்க்காமல் தவிர்த்து விடுவது...... மிக, மிக நல்லது.
இது குழந்தை பாக்கியத்தை மிக கடுமையாக பாதிக்கப்பட்டு... எனக்கு தெரிந்த.... ஒரு ஜாதக அமைப்பில்.....
கணவன் மனைவி பத்து வருடமாக குழந்தை இல்லாமல் அடுத்து வந்த இரண்டு வருடத்தில் அதாவது 12 வருடம் கழித்துதான்... குழந்தை பாக்கியம் கிடைத்தது.
முக்கிய குறிப்பாக பெண்ணுக்கு சூரியன் சனி சேர்க்கை இருக்கும் போது......
ஜாதகியும் அப்பாவும்.... ஒருவருக்கொருவர் பாசத்துடனும்...
மிகப் பிரியமாக நடந்து கொள்வார்.
அப்பாவா...? கணவனா...? எனக் கேட்டால் அப்பாவே முக்கிய்ம்... என கூறுவார்.
இப்படி பெண் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில்..... வீட்டோட மாப்பிள்ளையாக அமைத்துக் கொள்வது நல்லது.
திருமணப் பொருத்தம் பார்க்கும் இப்படி அமைப்பு இருக்கும் பட்சத்தில்..... ஒரு ஜோதிடனாக நான் இதைச்.... சொல்லியே விடுவேன்.
மேலும் முக்கியமாக.... இக்கிரக சேர்க்கை உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சனி ராகு கிரக சேர்க்கை

சனி + ராகு கிரக சேர்க்கை 
ஒருவருக்கு ஜாதகத்தில் இது வேண்டாத..... கூடாத....... கிரக சேர்க்கைகளில் முக்கியமான ஒன்று.
இது கர்ம தோஷம் இருப்பதை சுட்டிக் காட்டும்.
ஜாதகர் எதை செய்தாலும் தவறாகவே முடியும்.
கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்....
வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தும்......
ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்....
பூர்வீகத்தை விட்டு வெளியேற்றும்....
பூர்வீக ஊரில்.... பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது...
குலதெய்வம் அனுகிரகம் இருக்காது...
சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்தும்.... கஷ்டப்பட்டு உழைத்தும்... குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்....
சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இக்கிரக சேர்க்கை இருக்கும்.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.
இன்னொருவரிடம் வேலை செய்வதே நல்லது.....
கண்டிப்பாக... பூர்வீக இடத்தில் இருக்கக்கூடாது... பூர்வீக சொத்து இல்லாமல் இருப்பது நல்லது.
எவ்வளவுதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும்,, தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத... தகுதிக்கு குறைவான இடத்தில்.... குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும் இக்சேர்க்கை உள்ளவர்களின் நடவடிக்கைகள், யாருக்கும் பிடிக்காது....
யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.
விதி வயப்பட்டு செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை.
நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிப்பதிக்காமலும்.... வருமானம் இல்லாமலும் இருப்பர்.
திடீர் வீழ்ச்சியையும் கொடுக்கும்......
ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட.... சொல்லிக்கொள்ளும்படி வேலை இல்லாமலும்.... சூதாட்டம்.... திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்க சூழ்நிலை கூட ஏற்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை விபத்து மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும்....
ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தும்... தொழில் அமைந்தும்... தன்னுடைய ஒழுக்கக் குறைவினால்... சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
பூர்வீக சொத்தையும் சேர்த்து அழிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் முக்கியமாக...... அறியாமல் தவறு செய்து ஏமாறுபவர்களுக்கு கூட இக்கிரக சேர்க்கை இருக்கும்.
இவர்களுக்கு கர்மாவே... தோசமாக இருப்பதால், திடீர் திடீர் என அசுபகாரியங்கள் நடக்கும்.
முக்கியமாக....
இது ""விதி"" கிரகம் என்பதால்.......
நடப்பது..... நடந்தே தீரும்.... ஜாதகர் விரும்பினாலும்......................... விரும்பாவிட்டாலும்......
இச்சேர்க்கை உள்ள ஜாதகர்.... வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்றால்.... மட்டுமே...
தீமை குறைந்து... ஓரளவு நிம்மதியாகவும்.. சிறப்பாகவும்.... வாழலாம்.
இது முழுக்க முழுக்க அந்நிய மதம்....
அந்நிய மொழி.... அந்நிய நாடு...
அந்நிய மனிதர்களாலே லாபம் அடையக் கூடிய கிரகச்சேர்க்கை....
மொத்தத்தில் இது கர்ம வினை பயன்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சனி கேது கிரக சேர்க்கை

சனி + கேது கிரக சேர்க்கை
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள்...
ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிக.... மிக மிக நல்லது.
இவர்களது குடும்ப வாழ்க்கையை...... ஆன்மீகம் சார்ந்து அமைத்துக் கொள்வதும் நன்று..
அப்படி அமைத்துக் கொண்டால் பெரிய அளவில்... பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்மீகம் சார்ந்து.. அது சம்பந்தப்பட்ட தொழில் செய்வது... மிக மிக நல்லது.
அப்படி இல்லை எனில்... காலமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையோடு வாழும் சூழ்நிலை இருக்கும். தீராத பிரச்சினை ஒன்று கூடவே இருக்கும். அது கடன், நோய், வழக்கு மற்றும் அதன் தசா புக்தி அந்தர நாட்களில் அறுவை சிகிச்சை... எனத்தரும்.
இந்த கிரக சேர்க்கையானது... ஜாதகரை பெரிய அளவுக்கு உயர்த்தி திடீரென வீழ்ச்சியை கொடுத்து.....
வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவோ, நோயாளியாகவோ அல்லது வழக்குகளை சந்திப்பவராகவோ அல்லது வழக்குக்காக போராடிக் கொண்டிருப்பவர்களாகவோ... செய்துவிடும்...
மீண்டும் சொல்கிறேன்.... இவர்கள் இல்லறத்தோடு கூடிய ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
இவர்களுக்கு நோய் வந்தால் நிச்சயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். வாழ்க்கையில் அடுத்து அடுத்து ஏற்பட்ட தோல்விகளால்.... இறுதிக்காலத்தில் இவர்களாகவே ஆன்மீக வாழ்க்கைக்கு சென்றுவிடுவர்.
குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாக ஆககூடிய இந்த சேர்க்கை உள்ள ஜாதகர்கள் பின்னாளில் ஏற்படும்..... தன்னுடைய தவறான முடிவுகளால்... தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கடன் அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடனாளியாகவே வாழும் சூழ்நிலை ஏற்படும்
இச்சேர்க்கை வாழ்வின் ஒரு பகுதியில் மிகவும் சிறப்பாக கோடி கோடியாக சம்பாதிக்கும் திறமையை கொடுத்து.... பேராசையால் சினிமாவில் முதலீடு செய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு..... அனைத்து கஷ்டத்துக்கு ஆளானவர்களும் உண்டு.
மேலும் ஒவ்வொரு முறை தொழில் முன்னுக்கு வரும் போதெல்லாம்..... குடும்ப உறவுகளால் ஏற்படும் திடீர் இழப்புகள் மற்றும் பழைய, புதிய காதல் விவகாரங்களால் தொழிலில் கடுமையான வீழ்ச்சியை சந்திப்பவர்களும் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சந்திரன் சனி சேர்க்கை

சந்திரன் சனி சேர்க்கை அல்லது பார்வை அல்லது பரிவர்த்தனை.......
இது ஒரு மீள்பதிவு
இது புனர்பூ தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது வாழ்நாள் முழுவதும் செத்து பிழைப்பது.
இது பொதுவாழ்க்கைக்கு சிறப்பாகவும்....
குடும்ப வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று பொருள்.
இவர் கடும் உழைப்பாளியாக இருப்பார்.
எப்போதும் ஒருவித சோகத்துடனும்.... தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பர்.
இவர் பழமைவாதி..... பழம்பெரும் விஷயங்களைப் பேசுபவராக இருப்பார்.
பிறரை குறை கூறிக் கொண்டே இருப்பார் அதனால் இவரிடம் யாரும் நட்புடன் பழக மாட்டர்.
இவர்களுக்கு யூக அறிவு சிறப்பாக இருக்கும்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் பகலில் சாமியாராகவும்...... இரவில் சம்சாரியாகவும் இருப்பர்.
இவர்களுக்கு எந்த சுபகாரியமும் தாமதமாகத்தான் நடக்கும்.
ஒவ்வொரு முயற்சியும் முதலில் தோல்வியும் அதன் பிறகு வெற்றியையும் தரும்.
ஏதேனும் ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர்.
மற்றவர்களின் சுமைகளை இவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதனால்.... இவர்கள் அடிக்கடி சாமியாராக போய்விடுவேன்..... என்று கூறிக் கொண்டே இருப்பர்.
இவர்களிடம் தொழில் பற்றிய அறிவு மிக சிறப்பாக இருக்கும்..
இவர்கள் யோசனை சொல்லி முன்னுக்கு வந்தவர்கள் அதிகம் இருப்பர்.
இவர்கள் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருப்பதால் மற்றவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது.
எல்லாவற்றிற்கும் கணக்கு பார்ப்பவர்களாக இருப்பார்கள்.... மேலும் இவர்கள் இல்வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வருவார்களானால் தன்னுடைய உழைப்பினால் மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்.
தொழிலில் கவனம் முழுவதும் செலுத்தும்போது மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்....
குடும்பம் அமைப்பு என்று வரும்போது சுமாராகத்தான் குடும்ப விஷயங்களை கவனிப்பார்கள்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு.... நிச்சயித்த திருமணம் கூட.....
கடைசி நேரத்தில் நின்று விடும் வாய்ப்பு உண்டு.
எப்பொழுதுமே தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி செய்கின்ற தொழில்களையும் செய்கின்ற இடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
சந்திரன் என்றாலே பாதிநாள் வளர்ச்சியையும் பாதிநாள் தேய்மானத்தையும் குறிக்கும் இவர்கள் செய்கின்ற தொழிலும் அப்படியே நிலை இல்லாமல் இருக்கும்.
ஒரு மளிகைக் கடை வைத்திருக்கும் நபர் கூட இந்த சேர்க்கை இருந்தால் வாழ்நாளில் எப்படியும் குறைந்தது 10முறையாவது கடை நடத்தும் இடத்தை மாற்றி இருப்பார்.
அதே மாதிரி சந்திரன் என்பது இடமாற்றத்தை குறிப்பதால் அடிக்கடி பயணம் செய்துகொண்டே இருப்பது இவர்களில் அமைப்பாகும் மெடிக்கல் representative மற்றும் மார்க்கெட்டிங் வேலையில் உள்ள நபர்கள் இந்த கிரக சேர்க்கை இருக்கும்.
முக்கியமாக எங்களைப்போன்ற ஜோதிடர்களுக்கு இந்த கிரக சேர்க்கை இருக்குமானால் வாடிக்கையாளர்களின் நிறைகுறைகளை அல்லது குற்றங்களை எளிதில் கண்டுபிடித்து விடும் வாய்ப்பு வந்து விடும்.
ஒரு சில நேரங்களில் திருமண தாமதத்திற்கு இந்த கிரகமும் பங்காற்றுகிறது. தாலிகட்டும் வரை நிச்சயம் இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

செவ்வாய் சனி கிரகச் சேர்க்கை பலன்கள்

இவ்விரு கிரகங்களும் ஒன்று கொண்டு பகையானது நன்மையும் தீமையும் கலந்து பயன்களைத் தருகிறது...
சொல்லப்போனால் அதிகமாக கெடுபலன்களை தருவதாகவே ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.... ஏனெனில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் மேஷத்திற்கு பாதகாதிபதியாகவும்... செவ்வாய் பகவான் அட்டமாதிபதியாகவும் வருகிறது... பாதகாதிபதியும் அட்டமாதிபதியும் சேர்ந்தால் என்ன ஆவது..... இந்த இரண்டு கிரகங்களும் பார்வை செய்யக் கூடிய இடம் கடுமையாக பாதிக்கப்படுகிறது பாவக ரீதியாகவும்.... உடல் உறுப்புகள் ரீதியாகவும்.....
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் சனி இருந்தால்... கண்டிப்பாக முகத்திலோ அல்லது நாட்களிலோ சிறிய அளவிலாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை வரும்
விருச்சிகத்தில் இந்த கிரக சேர்க்கை இருக்கும் பெண் ஜாதகிக்கு..... சிறுவயதிலேயே பற்களை இழந்து... செயற்கை பல் கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது பெண்ணுக்கு ஒரு சில காலகட்டங்களில் கர்ப்பப்பை எடுக்கும் சூழ்நிலை வந்துவிடும்....
மேலும் சனி மந்த காரகன் என்று சொல்லப்படுவதுண்டு... செவ்வாய் தைரியம் வேகம் காரணம் சொல்லப்படுகிறது.... வேகமான ஒருவனும் மந்தமான ஒருவனும் சேர்ந்து என்ன செய்வார்கள்.... விவேகமற்ற வேகம் ... கெடு பலன்களைத்தானே.... தரும்...
இதில் இன்னொரு விஷயம் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் செவ்வாய் திறமையான போலீஸ்.... சனி திறமையான திருடன்...
அப்ப இந்த கிரக சேர்க்கை ஜாதகருக்கு மிகப்பெரிய போராட்டமாக தான் இருக்கும் வெற்றி பெறுவது கடினம்....
அடுத்து.......
இந்த இரு கிரகங்களும் சேர்ந்து இருக்கும்போது தொழில்துறையில் யோகத்தை தருகிறது அதிலும் முக்கியமாக மெக்கானிக் துறை கட்டிடத் துறை டிரைவிங் துறை இவற்றில் சிறப்பான நிலைப்பாட்டை தருகிறது...
ஜாதகருக்கு பழமையான வீடு வாகன யோகத்தை தருகிறது. தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்... கண்டிப்பாக இவர்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும்... வாங்கின வீடாக இருந்தாலும் சரி கட்டுன வீடாக இருந்தாலும் சரி வாஸ்துக்காக என்று செலவு செய்து இருப்பார்
கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை நடைபெறும்.
பெண்களுக்கு கிரக சேர்க்கை இருக்கும் போது கணவருடன் சேர்ந்து பிசினஸ் செய்யும் பெண்களாக இருப்பர் இருவருக்கும் தொழில் சம்பந்தப்பட்ட சண்டைகள் நடந்து கொண்டே இருக்கும் அல்லது கணவன் செய்யும் தொழிலில்.... தொழில் செய்யும் விதம் மனைவிக்கு பிடிக்காமல் போகும்...
சனி ஒரு அலி கிரகம் என்பதால் கணவனால் தாம்பத்திய சுகம் திருப்தியாக இருக்காது...
ஜாதகரின் சகோதர உறவுகள் மந்தமாகவும்
அல்லது ஏதேனும் ஊனம் அல்லது குறை உள்ளவராகவும் இருப்பார்.... அதேநேரத்தில் ஜாதகர் சகோதரருக்கு மிகுந்த கஷ்டத்தை தரும் ஏன் சகோதர உறவுகள் மிகவும் பகையாக கூட வாய்ப்பு உண்டு..... பழைய அல்லது பூர்வீக சொத்துக்கள் யோகத்தையும் தரும்
இந்த கிரக சேர்க்கை இருக்கும் இடத்தைப் பொறுத்து..... எம் அனுபவத்தில் பலன்கள் மாறுபடுகிறது..... கன்னி ராசியில் இந்த சேர்க்கை இருக்கும் ஜாதகி திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் தன்னுடன் ஒரு நாள் கூட சேரவில்லை என திரும்ப வந்து விடுகிறார்.... இந்த கிரக சேர்க்கை திருமண வாழ்க்கையை.... கடுமையாக பாதிக்கும் கணவனால் தாம்பத்திய சுகம் கிடைக்காது பெரும்பாலும் மறுமணத்தைத் தரும்... குறிப்பாக கிரக சேர்க்கை சனியின் வீடுகளான மகரம் கும்பத்தில் புதனின் வீடான கன்னியில் மிதுனத்தில் இருக்கும் போது திருமண வாழ்வை கடுமையாக பாதிக்கும் ஏனெனில் புதனும் சனியும் அலி கிரகம் என்பதால்....
ரிஷப ராசியில் இதே கிரக சேர்க்கை இருக்கும் ஜாதகர் படிக்காவிட்டாலும் மிகப்பெரிய அளவில் ஒர்க்ஷாப் வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவரும் உண்டு....
சனி தொழில் காரகன் வேலைக்காரகன்.... என்பதால் செவ்வாயின் காரகத்துவ தொழில்களான மெக்கானிக் டிரைவர்... மற்றும் போக்குவரத்து நெருப்பு மின்சாரம் கட்டட பணி விவசாயம் போலீஸ் ராணுவம் டாக்டர்... இவற்றில் சிறப்பைத்தரும்.... சகோதர உறவுகளுடன் சேர்ந்து தொழில் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும்....
பொதுவாக ஜட காரகத்துவத்திற்கு நன்மையையும்.... உயிர் காரகத்துவத்திற்கு தீமையையும் ஏற்படுத்தும்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

Tuesday, July 16, 2019

மூச்சு

ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கியிருக்க முடியும். கேதுவின் அம்சமான மீன்கள் நாம் சுவாசிப்பது போல் காற்றை நேரடியாக மூக்கு வழியாக சுவாசிப்பதில்லை. ஆனால் வாய் வழியே நீரை உள்ளிழுத்து நீரில் உள்ள பிராண வாயுவை நேரடியாக ரத்தத்தில் சேர்த்துக்கொள்கிறது. 
ஜாதகத்தில் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கமுடியாது. ராகுவின் அம்சமான பன்றிகள் வேக வேகமாக மூச்சை விடுபவை , அது போல் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்கள் வேக வேகமாக மூச்சை விடுவார்கள். பன்றி போல் மூச்சு விட்டால் அது ஆயுளைக்குறைக்கும். 
மீன் மூச்சு விடுவது குரு+கேது 
பன்றி மூச்சு விடுவது குரு+ராகு
ஆமை மூச்சு விடுவது குரு+சனி

வக்கிர கதி பலன்

வக்கிர கதி பலன் உரைத்தல்
இந்த ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் வக்கிரகதியில் சனி துலாத்தில், குரு கன்னி ராசியில்
செவ்வாயும் சனியும் பரம எதிரிகள்
சனியும் குருவும் நல்ல நட்பு
சனி முன்னோக்கி செவ்வாயை நோக்கி செல்கிறது தொழிலில் தீவிரமாக எதிரியினால் பிரச்சனை ஏற்படுகிறது சனி பயந்து வக்கிர கதியாகி குருவிடம் நோக்கி செல்கிறது.
குருவின் உதவியால்
செவ்வாயின் பிரச்சனையிலிருந்து சனி தப்பியது.

பூச்சியினால் அவதி

கோச்சார சனி கோசார கேது ஜாதகத்தில் உள்ள ராகு, குருவை சந்திக்கும் நேரம் அந்த அந்த காலகட்டத்தில் ஜாதகர் ஏதாவது ஒரு பூச்சியினால் தினமும் தூங்காமல் அவதிப்படுவார்.. 
குறிப்பு: 
சனி- இருட்டு,
ராகு- கடித்தல், 
கேது - பூச்சிகள் ( insects)
குரு - Native...

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

Friday, July 5, 2013

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Friday, June 7, 2013

தண்டனை! ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் ராசியிலோ அம்சத்திலோ சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் இருந்தாலோ அல்லது இருவரும் இனைந்து லக்கினத்தில் இருந்து கேந்திரத்தில் அமைந்து கெட்டிருந்தால் (இதில் வேறு கிரக இனைப்போ அல்லது வேறு கிரகங்களின் பார்வையோ, இந்த‌ இரு கிரகங்கள் ஆட்சி உச்சம் நீசம் பெறாமல் இருந்தால்)ஜாதகர் அரசின் கோபத்தால், அரச‌தண்டனை பெற்று மரணமடைவர் அல்லது கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டப்பட்டு மரணமடைவர் என்பது விதி

Wednesday, January 2, 2013

புனர்பூ தோஷம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சனி சந்திரன் இரண்டுக்கும் சம்பந்தம் ஏற்பட்டிருந்தால் அது புனர்பூ தோஷம் எனப்படும். சனி சந்திரன் சம்பந்தம் என்பது, இருவரும் இனைந்து ஒரே ராசியில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது, ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாகி நிற்பது.
இதன் பலன் திருமணத்தில் தாமதமும் பல விதமான த‌டைகளும் ஏற்படுதல்.

Saturday, October 20, 2012

செவ்வாயின் நலம் தரும் நிலை ஜோதிடக்குறிப்பு

      செவ்வாய் கேந்திர ஆதிபத்யம் அடைந்து, 6ம் இடத்தில் தனித்து இருந்தாலும் அல்லது சனி, சூரியன் ஆகியோரோடு சம்பந்தம் பெற்றாலும் அல்லது கேந்திர ஆதிபத்யம் பெற்ற செவ்வாய், சனி சூரியனோடு சம்பந்தம் பெற்று கோணத்தில் அமர்ந்தாலும் அந்த செவ்வாயால் நன்மையே.

Tuesday, September 4, 2012

கொடுமனம் கொண்டவர்கள்? ஜோதிடக்குறிப்பு


      ராகு இருந்த இடத்தில் இருந்து 5ல் மற்றும் 9ல் சனி, குரு இருந்தால் ஜாதகர் சண்டாளன் ஆவார்.
      ராகு இருந்த இடத்துக்கு பத்தாம் அதிபதி நீச்சமடைந்து ராகுவுடன் இருப்பின், அந்த ஜாதகர் செய்யும் பாவச்செயல்கள் பெரும் பிரசித்தி அடையும்.
      சனி லக்கினாதிபதியாகி 6ல் அமர, 6ம் அதிபதி 10ல் அமர்ந்து அவருக்கு இருபுறமும் பாபர்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் அடைந்தால். அந்த ஜாதகர்கள் தமக்கு யார் நன்மை செய்திருந்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு தீமையே செய்வர்.
      லக்கினாதிபதியும் 5ம் அதிபதியும் நீசமடைந்திருந்தாலும் அல்லது லக்கினத்திலும் ஐந்திலும் நீசமடைந்த கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கொடுமையான சித்தம் கொண்டவர்கள்.
      லக்கினாதிபதி லக்கினத்தில் அமர, அவருடன் 5, 6, 10, 11ம் அதிபதிகள் இனைந்திருந்தால், ஜாதகர் தினமும் பலரை ஏமாற்றுபவராக இருப்பார்.
      லக்கினத்திற்க்கு 2ம் வீட்டில் சனியோ, சுக்கிரனோ அமர்ந்து இருந்தாலும் அல்லது 2ம் வீட்டைப் பார்த்தாலும், 5,10ம் அதிபதிகள் பகை நீசமடைந்து 2ல் இருந்தாலும், இத்தகையோர் பேசிப் பேசியே பிறரை ஏமாற்றுபவர்களாக இருப்பர்

Sunday, December 18, 2011

மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட யோகம் என்று பெயர்
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த‌ தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

Sunday, November 13, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு


 ஒரு ஜாதகத்தில் சனியின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) அதிக நன்மை தராத வேலை, அதிகவேலையால் பளு.
2) பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது
3) எதிரிகளால் தொல்லை
4) சகமனிதர்கள் ஒத்துழையாமை
5) நோய்களால் தொல்லை
6) திருமண முறிவு
7) தொழில் தொடர்புகள் முறிவு
போன்றவை ஏற்படலாம்...

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

Monday, November 7, 2011

எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்


இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

Friday, August 19, 2011

வெளிநாட்டு யோகம் சில அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு



      வெளிநாட்டில் படிப்பத‌ற்காகவும், தொழில் அல்லது வேலை நிமித்தமாகவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் செல்லுவோர் ஜாதக‌ அமைப்பு பற்றி ஒரு சிறு அலசல்.

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாது, வலுவாக(ஆட்சி, உச்சம், நட்பு, சுபர் பார்வை அல்லது சேர்க்கை) இருக்க வேண்டும்.

2. குரு, சனி( வாயு கிரகங்கள்), சந்திரன், சுக்கிரன்( நீர் கிரகங்கள்) ஆகியோர் கெடாது நீர் ராசிகளில்(கடகம், விருச்சிகம், மீனம்) அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாடு சென்று வரலாம்.

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆமிடங்கள்(3-9,6-12,5-11,1-7 என அமர்ந்திருப்பது) நின்றாலும் வெளிநாட்டு யோகம் அமையும்

Thursday, July 28, 2011

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு



      பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்