Showing posts with label 3ம் இடம். Show all posts
Showing posts with label 3ம் இடம். Show all posts

Monday, July 22, 2019

விபரீத ராஜ‌யோகம்

துஷ்ட ஸ்தானம் என்பது 3, 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது விபரீத ராஜ‌யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

Thursday, May 23, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 6 ஜோதிடக்குறிப்பு


காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 7ம் இடத்திலும் கேது 1ம் இடத்திலும்
 
   ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவர்கள் சுயநல வாதிகளாகவே இருப்பர், கெட்டவர்கள் இந்த இடத்தில் ராகு கெட்டிருந்தால் நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
 
   ராகு 7ல் பலமுடன் இருந்தால், ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவரின் ஆசை மிகுந்த குறிக்கோள் ஜாதகருக்கு நன்மை செய்வதாகவே அமைகிறது.
 
   ஆனால் 1ல் உள்ள கேது ஜாதகருக்கு ரத்தக்க்கொதிப்பு, தலைவலி, வாழ்க்கையில் உற்சாகமின்மை, அதனால் நோய் சாதரணமாக பீடிக்கும் தன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும்

   ஜாதகருக்கு, புது விதமான சமயத்தில் தீர்க்க முடியாத நோயாலும், செய்வினையாலும், திடீர் அதிர்ச்சியாலும் பிரச்சனைகள் வரக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   இங்கே ராகு பலமுடன் இருந்தால், திடீர் பண வரவு, வாழ்க்கையில் பல ரகசியமான நடவடிக்கைகள், சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கும் தன்மை, விஷத்தை பயண்படுத்தி நோய் தீர்க்கும் தனமை, மனநலத்திற்கு தீர்வு சொல்பவர்களாக அமைவர்.

   கேது 2ல் மிகுந்த வருமானம் ஆனால் சேமிப்பற்ற நிலை, குடும்ப நபர்களிடம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலை, முகத்திலும், பல்லிலும் மருத்துவம் பார்க்கும் நிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். பொதுவாக ஜாதகர் செல்வத்தில் ஒரு உறுதியற்ற நிலையும், தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பார்.

 ராகு 9ம் இடத்திலும் கேது 3ம் இடத்திலும்

   பொதுவாக ஜாதகருக்கு ராகு 9ல் கெட்டிருந்தால் பணநஷ்டத்தை சூதாட்டத்தில் ஏற்படுத்துவார் என்றும் ஜாதகருக்கு தெய்வந‌ம்பிக்கை என்பதே இருக்காதென்பது விதி.

   இந்த இடத்தில் ராகு பலமுடன் இருந்தால் அதிக ஆன்மீக நம்பிக்கையும், அதைப்பற்றியே போதிக்கும் போதகர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் போதிக்கும் போதனைகள் சற்று முரண்பட்டதாகவே இருக்கும்.
 
   3ல் உள்ள கேது கெட்டிருந்தால் ஜாதகருக்கு குடும்ப உறவு சுமூகமாக இருக்காது, அத்துடன் அமைதியான மனநிலை என்பது அமையவே அமையாது, அதனால் ஜாதக்ர் வாழ்க்கையை எப்போதும் தவ‌றாகவே எடுத்துக்கொள்வார். இவருக்கு மற்றவர்களுடன் பேச்சு வழி உறவு என்பது எல்லோருக்கும் போல் சரியானதாகவே அமையாது, முரண்பட்டதாகவே அமையும்.

   பொதுவாக கேது உபஜெய ஸ்தானத்தில், 3ல் கெட்ட பலன்களைத்தராது. 3ல் கேது, பேச்சில் சிலர் முரண்பாடானவர்களாக இருந்தாலும் அது மிகப்பெரிய ஒரு பாதிப்பைத் தராது.
                                                     ..........தொடரும்

Wednesday, May 22, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 4 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகத்தில்....
   ராகு 1ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும்
      ஜாதகர் எளிதில் எரிச்சலடைபவராகவும், பொருமை இல்லாதவராகவும், எதிலும் திருப்தி இல்லாதவராகவும், கூட்டணி மற்றும் கூட்டுதொழில் குழப்பம் மற்றும் ஏமாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும்.
      ராகு 1ம் இடத்தில், ஜாதகரின் திருமண பந்தத்தில் பிடித்தம் இல்லாதவராகவும், மனைவி மேல் பிரியம் இல்லாதவராக இருப்பார்.
      கேது 7ம் இடத்தில், மனைவி ஜாதகருடன் வேற்றுமையும், ஜாதகரை உதாசீனம் செய்பவளாக இருப்பாள்.
   ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும்
      ராகு 2ம் இடத்தில், ஜாதகரின் பேச்சு தேள் கொட்டுவது போல் கொட்டுவார், அதே நேரம் விஷகடி அல்லது விஷம் உட்கொள்ளுதல் நிலை ஏற்படலாம்.
      கேது 8ம் இடத்தில், நோய் குணமடைவதில் தாமதம், அறுவை சீகிச்சை, சிறிது மனநலம் பதிப்பு ஏற்படலாம்.
 ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும்
      ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
      ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
      கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக‌ நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக‌) மட்டுமே நாடுவர்.
                                                                                                        ..............தொடரும்

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

Saturday, August 20, 2011

குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு


      ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
      லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
      2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
      3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
      4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
      5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
      6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
      7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
      8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
      9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
      10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
      11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
      12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
       இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

Friday, July 15, 2011

இசை மழையும், பண ம‌ழையும் ஜோதிடக்குறிப்பு

      புதன் சுக்கிரன் இருவரும் இனைந்து 2ம் இடத்தில் இருக்க, தைரியாதிபதியாகிய 3க்குடையவன் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தாலும் அல்லது 3க்குடையவர் ஆட்சி உச்சம் பெற்று, அவருடன் புதன் சுக்கிரன் இனைந்து நின்றாலும் ஜாதகர் இசை வல்லுனராக இருப்பார், அவருக்கு அதனால் பண ம்ழையும் பொழியும்.
     

Sunday, July 10, 2011

இளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு

      3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அல்லது 3ம் வீடு இவை சுபகிரகங்களின் பார்வையோ சேர்கையோ பெற்றாலும், இவைகள் பலம் பெற்றாலும் இந்த யோகம் ஏற்ப்படுகிறது. 3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அசுபகிரகங்களின் வீட்டில், மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது.
      இந்த யோகத்தின் பலன் யாதெனில், ஜாதகர் இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அடைவர். அவர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பர், அதனால் ஜாதகருக்கு உதவுவர். ஜாதகரும் அவர்களிடம் மிகவும் அனுசரித்து நடந்துகொள்வார். இளைய சகோதர, சகோத‌ரிகளும் மிகவும் இவர்களை மதித்து நடந்துகொள்வர்

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

முதல் பாவம்:
      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

Wednesday, July 6, 2011

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


      5ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம் கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில் கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

Monday, July 4, 2011

விபரீத ராஜயோகம்


      துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லக்கூடிய 3,6,8,12ம் அதிபதிகள், அந்த 3,6,8,12ம் இடங்களில்(துர்ஸ்தானாதிபதிகள் துர்ஸ்தானங்களில்) இடம் மாறி அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகமாகும்.
      அதாவது உதாரணத்திற்க்கு 3ம் அதிபதி 8ல், 6ம் அதிஅப்தி 12ல், 12ம் அதிபதி 3ல், 8ம் அதிபதி 3ல் இவ்வாறு அமர்வது விபரீதராஜயோகமாகும். இதில் அனைத்து அதிபதிகளும் இடம் மாறி இருக்க வேண்டும் என்பதல்லாமல் இருவரோ மூவரோ இடம் மாறியிருந்தால் கூட போதும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட மொழிக்கேற்ப்ப ராஜயோக பலன்களைத்தருவர்.
      இதன் பலன் என்னெவெனில் எதிர்பாராமல் வரும் நல்ல பலன்கள், உழைப்பிற்க்கு அதிகமான ஊதியம், திடீர் வரவுகள், திடீர் சொத்துகள், திடீர் சம்பத்து என கூறிக்கொண்டே போகலாம்.

Wednesday, June 22, 2011

மோசடிப் பேர்வழி ஜோதிடக்குறிப்பு

      சந்திரன் செவ்வாயை பார்ப்பது சிறப்பான அமைப்பு சந்திரமங்கள யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் ஒருவரது ஜாதகத்தில் 3ம் வீட்டில் செவ்வாய் இருந்து அவரை 9ம் வீட்டில் நின்ற சந்திரன் பார்த்தால் ஜாதகர் நம்பிக்கை மோசடிப் பேர்வழியாக இருப்பார். சொன்னது ஏதும் செய்ய மாட்டார். ஏமாறுபவர்களிடம் நம்பிக்கை தருவது போல் பேசி மோசடி செய்வார். காசு பறிப்பார். வாங்கிய கடனைத் திருப்பித் தரமாட்டார்.

Saturday, June 18, 2011

தன-தைரிய யோகம்

3க்கு உரியவன் 2ல் வலுவுடன் இருந்தால் கவிதை, கட்டுரைகள் எழுதுவது வகையிலும், சகோதரர் உதவியாலும் பணம் சேரும்.