Showing posts with label திரிகோணம். Show all posts
Showing posts with label திரிகோணம். Show all posts

Saturday, October 19, 2013

கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு

      முதலில் கேந்திராதிபத்ய தோஷம் என்றால் என்ன? என்று பார்ப்போம்! அதாவது நைசர்க்கிக சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகியவை லக்கின கேந்திரங்களுக்கு(4,7,10க்கு) அதிபதியாகி லக்கினத்திற்க்கு மற்ற கேந்திரங்களில் அமருமேயானால், அந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து, அந்த பாவத்தையும் அதைச்சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்தியத்தையும் பாழ்படுத்திவிடும். இதற்கான விதிமுறைகளைக் இனி காண்போம்.....
விதி எண் 1. 
      குரு, புதன், சுக்கிரன் அமரும் கேந்திரங்கள் அதன் மற்றொரு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அந்த கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடையாது. யோகமாக மாறி நல்ல பலன்களையே தரும்.
விதி எண் 2.
      கேந்திராதிபத்ய தோஷம் இருவகை (1) லக்கின கேந்திரம் நைசர்க்கிக சுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் சுப கேந்திராதிபத்ய தோஷம், (2)லக்கின கேந்திரம் நைசர்க்கிக அசுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் அசுப கேந்திராதிபத்ய தோஷம் எனப்படும்
விதி எண் 3. 
      சுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகம் கெடாது.
விதி எண் 4. 
      அசுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகமும் கெடும்.
விதி எண் 5. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் லக்கினத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத்தை அடையாது.
விதி எண் 6. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் அந்த பாவத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத் தன்மை கூடுதலாகவே அளிக்கும்.
விதி எண் 7. 
       பொதுவாக சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வந்தால் மட்டுமே அக்கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து தீமை செய்வார்கள்,ஆனால் அவர்களே மற்றொரு ஆதிபத்யமாக ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அக்கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படாது
..................................தொடரும்

Friday, October 28, 2011

திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால் அது திரிலோச்சண யோகம் எனப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், ஆயுள் நீளம் உடையவர்களாகவும், நல்ல வசதி படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.
      இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தாலே அந்த அமைப்பு விசேசமானதே! இவ்வாறு அமைதவர்கள் நல்ல அமைதியான‌ வாழ்க்கையை பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எந்த சக்தியாலும் தடங்கல்கள் விளைவிக்கமுடியாது

Tuesday, June 21, 2011

இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்குரியவர்களுக்கு 6,8,12க்கு உரியவர்கள் பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்கு உரியவர்கள் மறைந்து விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும் நிலை தான் உருவாகும்.