Showing posts with label மேஷம். Show all posts
Showing posts with label மேஷம். Show all posts

Sunday, July 24, 2011

7ம் இடத்தில் சனி? ஜோதிடக்குறிப்பு


      பொதுவாகவே ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில் எந்த லக்னத்திற்கு 7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
      உதாரணமாக ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
      ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன் காரணமாக அனுஷ நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.
      இதேபோல் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம், சிம்ம லக்னத்திற்கு 7இல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.
      ஆனால் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.
      பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.
      எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      ஒருவருக்கு 7இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பலன்கள் வேறுபடுமா? 7ல் சனி இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.

Saturday, July 23, 2011

8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு


      பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
      எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

Friday, July 22, 2011

லக்கினப்படி கோடீஸ்வரயோகம் அமையும் வாய்ப்பு1


1) மேஷ லக்கினதில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஜாதகத்தில் பிரகாசித்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.
2) ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு  சனி நட்பு நிலையில் நல்லவர்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.
3) மிதுன லக்கினத்தில் உதிதவர்களுக்கு புதன், சுக்கிரன் ஜாதகத்தில் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
4) கடக லக்கினத்தில் குரு, செவ்வாய் பலம் கோடீஸ்வர யோகம் பெற உதவும்.
5) சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர்களது சுபத்துவ சம்பந்தம் கோடீஸ்வரர் ஆக உதவும்.
6) கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் உச்சம், சுக்கிரனின் சுபத்துவ சம்பந்தம் பெற்று வலுவுடன் விளங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

Saturday, July 16, 2011

உச்ச சூரியனும் நீச சனியும் ஜோதிடக்குறிப்பு

      மேஷத்தில் சூரியன் உச்சம், சனி நீசம் என்ற அமைப்பில் இருவரும் இனைந்து நிற்பது சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஜாதகர் அதிகாரப் பதவிகளில் தூங்கி வழிந்து கொண்டு இருப்பார் என சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் அதிகாரப்பதவிகளை வகிக்கலாம் ஆனால் சோபிக்க முடியாது என்பது பல ஜோதிடர்களின் கருத்து.
      அனுபவத்தில் பார்க்கும் போது இவர்களைத் திட்டிக்கொண்டே இவரது வேலைகளை கீழே வேலை செய்பவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சம்பளம் மட்டும் சரியாக கண‌க்குப் பார்த்து வாங்கிக்கொண்டிருப்பர்.இவர்கள் தவறான வழிகளில் சம்பாதிப்ப‌திலும் ஆர்வம் காட்டுவர்

Monday, July 11, 2011

மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முத‌ல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்

Monday, July 4, 2011

ராகுவால் ராஜயோகம்

      எந்த லக்கினம், எந்த ராசியானலும் சரி ராகு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம் இந்த ராசிகளில் த‌னித்து நின்று அதற்க்கு கேந்திரங்களில்( ராகுவிற்க்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10ம் இடங்களில்) ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களாவது இருந்தால் அது மிகச்சிறந்த ராஜயோகமாகும்.

Tuesday, June 21, 2011

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்1


      விரயாதிபன் எனில் 12க்குடையவன், விரயாதிபன், விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று கூறிச் சென்றுள்ளனர்.
      விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12க்குடையவன் உச்சம் பெற்று நிற்க, அவனை பாக்கியாதிபன் என்று சொல்ல்க்கூடிய 9க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும் ஆகிறார். அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.
      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9ம் இடமான பாதகஸ்தானத்தில் உச்சமடைவார். அவரை 9ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லது. சனியும் பாக்கிய, யோக, பாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.
      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். அவரை 9க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.
      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது யோகம் தான்.
      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறது. பிரபல யோகமே.
      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன் பார்ப்பது யோகம் தான்.
      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன், அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9க்குடையவரும் அவரே என்பதால் யோகபலன்க‌ளைத் த‌ருவார். லக்கினாதிபதி குருவின் பார்வை அவருக்கு கிடைகுமானால் யோகம் சிறப்பாக இருக்கும்.