லக்கினாதிபதி வலிமை பெறுவது நல்லது தான் என்றாலும் உச்ச வலிமை பெற்று விட்டால் ஜாதகருக்கு தன் முனைப்பு(ஈகோ) ஏற்பட்டு விடுகிறது. அப்படிபட்ட ஜாதகர் சரியோ தவறோ தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணுவர். இதனால் வீட்டிலும், சமுகத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
Showing posts with label லக்கினம். Show all posts
Showing posts with label லக்கினம். Show all posts
Sunday, October 5, 2014
Friday, October 3, 2014
சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே கடகம், ரிஷபம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.
சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே கடகம், ரிஷபம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.
Thursday, October 10, 2013
சுகபா யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்க, 11ம் இடத்தில் 2ம் இடத்ததிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்து, மேலும் இந்த சேர்க்கைக்கு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால், அதற்கு "சுகபா யோகம்" ஆகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர், பிறந்ததிலிருந்து எந்த துன்பமும் இல்லாமல்,கோடீஸ்வரர்களின் வீட்டில் பிறந்து சகல செளக்கியங்களையும் அனுபவிப்பார்கள். கவலையில்லாதவர்களாக, புகழுடையவர்களாக இருப்பர்.
Wednesday, October 9, 2013
காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.
Tuesday, October 8, 2013
மதன யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் லக்கினம் விருச்சிகமாக அமைந்து அதில் குரு மற்றும் சுக்கிரன் அமர, 11ம் இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் அது மதன யோகம் எனப்படும். இந்த யோகத்தை உடைய ஆண்கள் பெண்கள் விரும்பும்படியாக பேசுவர், பெண்களால் விரும்பப்படுவர்!
Tuesday, June 18, 2013
பஹுத்ர வ்யர்ஜன யோகம்-அதிர்ஷ்டசாலி ஜோதிடக்குறிப்பு
லக்கினாதிபதி 2ம் இடத்திலும், 2ம் அதிபதி 11ம் இடத்திலும், 11ம் அதிபதி லக்கினத்திலும் அமைந்தால் அந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலி; நன்றாக பணம் பண்ணக் கூடியவர்.
இதில் இந்த மூன்று கிரகங்கள் ஒன்றின் இடத்தில் ஒன்று மாறி முப்பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருக்கின்றது. இந்த யோகமானது இந்த மூன்று கிரகங்களின் பலத்தைப் பொறுத்து அமையும்.
இதில் இந்த மூன்று கிரகங்கள் ஒன்றின் இடத்தில் ஒன்று மாறி முப்பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருக்கின்றது. இந்த யோகமானது இந்த மூன்று கிரகங்களின் பலத்தைப் பொறுத்து அமையும்.
Friday, June 7, 2013
தண்டனை! ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் ராசியிலோ அம்சத்திலோ சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் இருந்தாலோ அல்லது இருவரும் இனைந்து லக்கினத்தில் இருந்து கேந்திரத்தில் அமைந்து கெட்டிருந்தால் (இதில் வேறு கிரக இனைப்போ அல்லது வேறு கிரகங்களின் பார்வையோ, இந்த இரு கிரகங்கள் ஆட்சி உச்சம் நீசம் பெறாமல் இருந்தால்)ஜாதகர் அரசின் கோபத்தால், அரசதண்டனை பெற்று மரணமடைவர் அல்லது கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டப்பட்டு மரணமடைவர் என்பது விதி
Tuesday, May 21, 2013
காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 3 ஜோதிடக்குறிப்பு
காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
காலசர்ப்ப யோகம், ஜாதகருக்கு, வேலையின்மை, திருமணம் நடக்காமை, வீடற்ற நிலமை, பரதேசி போல் ஒரு வாழ்க்கை, இந்த ஒரு கிரக அமைப்பே தரலாம்.
இந்த யோகமானது,வாழ்க்கையில் ஒருமுறை மிகமுன்னேற்றமான பாதையில் பயணிக்கவும் (பொருள் வாழ்க்கையில் இதை எற்படுத்துபவர் ராகு), பின் ஒரு முறை பொருள் ப்யணத்தில் தடங்கல் ஏற்ப்பட்டு, அசிங்கப்பட்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஏதுமற்ற ஒரு குழப்பமான் நிலைக்கு தள்ளப்படுதல் (இதை ஏற்படுத்துபவர் கேது). அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும்.
இதில் ராகுவானவர் பயங்கர தன்னம்பிக்கையை கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த பாதைக்கு(பொருள் வாழ்க்கைக்கு) பயணிக்கச் செய்துவிடுவார், இதில் ராகுவனவர் லக்கினம் முதல் ஆறு இடங்களில் அமைய வேண்டும்.
காலசர்ப்ப யோகத்தில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கிடையில் அமைய வேண்டும். இதில் லக்கினம் அல்லது ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப யோகத்தில் வராது.
அந்த மாதிரி அமைப்பை(ஒரு கிரகமோ அல்லது லக்கினமோ வெளியே அமையப்பெற்றவர்கள்) உடையவர்கள், மிகசிறந்த ஒரு இனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ தலைவனாகக் கூட ஆகிவிடுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற மிக நல்ல தலைவராக இருப்பர்(முக்கியமாக சுக்கிரனோ அல்லது குருவோ ராகு கேதுவை விட்டு வெளியே இருந்தால்).
பல உலகப்புகழ் பெற்ற நல்ல தலைவர்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் அடைபட்டு, ஒரு சில கிரகங்கள் ராகு கேது அமைந்திருக்கும் அதே இடத்தில் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ அதே டிகிரியில் அமையப்பெற்று இருப்பதைக்காணலாம்..........
தொடரும்
Wednesday, September 26, 2012
ஜாதகங்களில் யோகம் அமைய வேண்டிய நிலைகள் ஜோதிடக்குறிப்பு
1. யோகர்கள் லக்கினத்திற்கு 6, 8, 12ல் அமையக்கூடாது.
2. யோகர்கள் ஆறு பலம்(ஷட் பலம்) பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.
3. யோகர்கள் நின்ற ராசினாதன் 6, 8, 12ல் இருக்கக்கூடாது.
4. யோகர்கள் நீசமாகி நிற்கக்கூடாது.
5. யோகர்கள் அஷ்டமாதிபதி சாரம் பெற்று நிற்கக்கூடாது.
6. யோகர்களுடன் ராகு, கேது நிற்கக்கூடாது.
7. யோகர்களுடன் துர்ஸ்தானாதிபதிகள் நிற்கக்கூடாது.
8. யோகர்களின் தசா இளவயதில் வராமல், மத்திம வயதில் 25க்கு மேல் வரவேண்டும்.
9. ஒரு கோள் இன்னொரு கோளுடன் சேர்ந்து யோகம் உருவாகிறபோது, அவர்களுடைய சொந்த வீடுகளில் இருந்தால் யோக பலன் அபரீதமாக இருக்கும்.
10. யோகருடன் லக்கினத்திற்கு மற்றொரு யோகர் கூடிநின்றாலும், அல்லது கேந்திர கோணாதிபதி கூடிநின்றாலும் பலன் அதன் திசா புத்திகளில் பிரமாதமாக இருக்கும்.
11. யோகனாதன் நின்று பார்கின்ற இடங்களும் பலம் பெறும், அந்த யோகர் செவ்வாய் சனியே ஆனாலும் பலன் நன்றாக இருக்கும்.
12. யோகனதர்களை சுபகிரகங்கள் பார்த்தால் பலன் நன்றாக இருக்கும்.
13. லக்கினாதிபதி நல்ல முறையில், 6, 8, 12ல் அமராமல், யோகங்களில் ஒன்றிரண்டு இருந்தால் ஜாதகரின் முன்னேற்றம் நன்றாகவே இருக்கும்.
14. பரிவர்த்தனை யோகத்தில், பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும்.
15. லக்கினாதிபதி மற்ற வீட்டதிபர்களுடன் பரிவர்த்தனை பெற்றால்(6, 8, 12 வீட்டதிபர்களைத் தவிர) அது மகாசுப பரிவர்த்தனை யோகமாகும்.
16. லக்கினாதிபதி 3ம் வீட்டதிபனுடன் பரிவர்த்தனை பெறுவது களயோகம் என்று ஜோதிடம் பெருமை படகூறுகிறது.
17. லக்கினாதிபதி 6, 8, 12ம் அதிபர்களுடன் பரிவர்த்தனை ஆவது அசுபபரிவர்த்தனை யோகம் என்று பெயர். இதன் பலன் ஒன்றை இழந்து மற்றொன்றை பெருவது ஆகும். உதாரணமாக, இதனால் சமயத்தில் சோகம், அவமரியாதை, அவப்பெயர், நன்மதிப்பு கெடலாம். திடீரென பொருள் ஈட்டுபவராகவும், பதவிசுகத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம்.
Wednesday, January 4, 2012
புஷ்கலா யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரனுடன் இணைந்து கேந்திர திரிகோணத்திலோ அல்லது சந்திரனுடைய அதிநட்பு வீட்டிலோ இருந்து, அந்த சந்திரன் அமர்ந்த, ராசியாதிபதி லக்கினத்தில் அமர்ந்திருக்கும் இருக்கும் கிரகத்தை பார்ப்பது புஷ்கலா யோகம் எனப்படும்.
புஷ்கலா யோகம் அமையப் பெற்றவர்கள், சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களாகவும், செல்வம் செல்வக்க்கோடு கூடிய அந்தஸ்த்து உடையவர்களாகவும், நாட்டை ஆள்பவர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.
Thursday, December 22, 2011
கோ-யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.
இந்த அமைப்பை பெற்றவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார்.
Sunday, December 18, 2011
மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட யோகம் என்று பெயர்
இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.
Friday, November 18, 2011
பாரிஜாத யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.
Wednesday, November 16, 2011
பேரியோகம் ஜோதிடக்குறிப்பு
1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமானம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.
Friday, November 11, 2011
வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில், 11ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும், அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.
அந்த அமைப்பு உடைய ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்.
Monday, October 24, 2011
தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு
12ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை பெற்றாலோ, 12ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12ம் வீட்டில் சுபர் அமர்ந்தாலோ, 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ, 12ம் வீட்டில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்.
Saturday, August 20, 2011
குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு
ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடலமைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிறருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.
Sunday, July 31, 2011
நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு
1) ஜாதகத்தில் குருசந்திர யோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம் ஆகியவற்றில் ஒன்றாவது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
2) 2,12ம் இடங்களில் சுபர்கள் இருந்தால் நிம்மதி மிகவும் நன்றாக இருக்கும்.
3) 2,12ம் இடங்களில் பாபர்கள் இருந்தாலும் சுபர் பார்வை இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியால் உருவாக்கி கொள்ள முடியும்.
4) லக்கினத்தை பாபிகள் பார்க்காது, சுபர் பார்வை இருந்தால் நிம்மதி நிறைவு நன்றாக இருக்கும். குறிப்பாக குருவின் பார்வை லக்கினத்துக்கு கிடைத்தால் மிக நிம்மதியாக, மரியாதை மிக்க வாழ்க்கை வாழமுடியும்.
Sunday, July 24, 2011
குரு சனி தொழில் சூட்சுமம் ஜோதிடக்குறிப்பு
லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது.
சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.
Saturday, July 23, 2011
8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வதால் பலன் ஜோதிடக்குறிப்பு
பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
Subscribe to:
Posts (Atom)