Showing posts with label கேந்திரம். Show all posts
Showing posts with label கேந்திரம். Show all posts

Saturday, October 19, 2013

கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு

      முதலில் கேந்திராதிபத்ய தோஷம் என்றால் என்ன? என்று பார்ப்போம்! அதாவது நைசர்க்கிக சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகியவை லக்கின கேந்திரங்களுக்கு(4,7,10க்கு) அதிபதியாகி லக்கினத்திற்க்கு மற்ற கேந்திரங்களில் அமருமேயானால், அந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து, அந்த பாவத்தையும் அதைச்சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்தியத்தையும் பாழ்படுத்திவிடும். இதற்கான விதிமுறைகளைக் இனி காண்போம்.....
விதி எண் 1. 
      குரு, புதன், சுக்கிரன் அமரும் கேந்திரங்கள் அதன் மற்றொரு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அந்த கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடையாது. யோகமாக மாறி நல்ல பலன்களையே தரும்.
விதி எண் 2.
      கேந்திராதிபத்ய தோஷம் இருவகை (1) லக்கின கேந்திரம் நைசர்க்கிக சுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் சுப கேந்திராதிபத்ய தோஷம், (2)லக்கின கேந்திரம் நைசர்க்கிக அசுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் அசுப கேந்திராதிபத்ய தோஷம் எனப்படும்
விதி எண் 3. 
      சுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகம் கெடாது.
விதி எண் 4. 
      அசுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகமும் கெடும்.
விதி எண் 5. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் லக்கினத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத்தை அடையாது.
விதி எண் 6. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் அந்த பாவத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத் தன்மை கூடுதலாகவே அளிக்கும்.
விதி எண் 7. 
       பொதுவாக சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வந்தால் மட்டுமே அக்கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து தீமை செய்வார்கள்,ஆனால் அவர்களே மற்றொரு ஆதிபத்யமாக ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அக்கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படாது
..................................தொடரும்

Friday, June 7, 2013

தண்டனை! ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் ராசியிலோ அம்சத்திலோ சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் இருந்தாலோ அல்லது இருவரும் இனைந்து லக்கினத்தில் இருந்து கேந்திரத்தில் அமைந்து கெட்டிருந்தால் (இதில் வேறு கிரக இனைப்போ அல்லது வேறு கிரகங்களின் பார்வையோ, இந்த‌ இரு கிரகங்கள் ஆட்சி உச்சம் நீசம் பெறாமல் இருந்தால்)ஜாதகர் அரசின் கோபத்தால், அரச‌தண்டனை பெற்று மரணமடைவர் அல்லது கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டப்பட்டு மரணமடைவர் என்பது விதி

Thursday, May 30, 2013

கட்கயோகம் ஜோதிடக்குறிப்பு

      கட்கயோகம் என்பது 2ம் இடத்ததிபனும், 9ம் இடத்ததிபனும் பரிவர்த்தணை ஆகியிருக்க வேண்டும். லக்கினாதிபதி கேந்திரமோ, கோணமோ ஏறியிருக்க வேண்டும்.
      ஜாதகத்தில் கட்கயோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம், சிறந்த பொருளாதாரம், அதிக மகிழ்ச்சி பெற்றவர்களாயிருப்பர். சாஸ்திரம் கற்றவர்களாயிருப்பர். திறமையானவர்களாகவும், அறிவாளிகளாகவும், அதிகாரம் படைத்தவ்ர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், நன்றி உடையவர்களாகவும் இருப்பர்.

Saturday, October 20, 2012

செவ்வாயின் நலம் தரும் நிலை ஜோதிடக்குறிப்பு

      செவ்வாய் கேந்திர ஆதிபத்யம் அடைந்து, 6ம் இடத்தில் தனித்து இருந்தாலும் அல்லது சனி, சூரியன் ஆகியோரோடு சம்பந்தம் பெற்றாலும் அல்லது கேந்திர ஆதிபத்யம் பெற்ற செவ்வாய், சனி சூரியனோடு சம்பந்தம் பெற்று கோணத்தில் அமர்ந்தாலும் அந்த செவ்வாயால் நன்மையே.

Wednesday, September 26, 2012

ஜாதகங்களில் யோகம் அமைய‌ வேண்டிய நிலைகள் ஜோதிடக்குறிப்பு


1. யோகர்கள் லக்கினத்திற்கு 6, 8, 12ல் அமையக்கூடாது.
2. யோகர்கள் ஆறு பலம்(ஷட் பலம்) பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.
3. யோகர்கள் நின்ற ராசினாதன் 6, 8, 12ல் இருக்க‌க்கூடாது.
4. யோகர்கள் நீசமாகி நிற்கக்கூடாது.
5. யோகர்கள் அஷ்டமாதிபதி சாரம் பெற்று நிற்கக்கூடாது.
6. யோகர்களுடன் ராகு, கேது நிற்கக்கூடாது.
7. யோகர்களுடன் துர்ஸ்தானாதிபதிகள் நிற்கக்கூடாது.
8. யோகர்களின் தசா இளவயதில் வராமல், மத்திம வயதில் 25க்கு மேல் வரவேண்டும்.
9. ஒரு கோள் இன்னொரு கோளுடன் சேர்ந்து யோகம் உருவாகிறபோது, அவர்களுடைய சொந்த வீடுகளில் இருந்தால் யோக பலன் அபரீதமாக இருக்கும்.
10. யோகருடன் லக்கினத்திற்கு மற்றொரு யோகர் கூடிநின்றாலும், அல்லது கேந்திர கோணாதிபதி கூடிநின்றாலும் பலன் அதன் திசா புத்திகளில் பிரமாதமாக இருக்கும்.
11. யோகனாதன் நின்று பார்கின்ற இடங்களும் பலம் பெறும், அந்த யோகர் செவ்வாய் சனியே ஆனாலும் பலன் நன்றாக இருக்கும்.
12. யோகனதர்களை சுபகிரகங்கள் பார்த்தால் பலன் நன்றாக இருக்கும்.
13. லக்கினாதிபதி நல்ல முறையில், 6, 8, 12ல் அமராமல், யோகங்களில் ஒன்றிரண்டு இருந்தால் ஜாதகரின் முன்னேற்றம் நன்றாகவே இருக்கும்.
14. பரிவர்த்தனை யோகத்தில், பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும்.
15. லக்கினாதிபதி மற்ற வீட்டதிபர்களுடன் பரிவர்த்தனை பெற்றால்(6, 8, 12 வீட்டதிபர்களைத் தவிர) அது மகாசுப பரிவர்த்தனை யோகமாகும்.
16. லக்கினாதிபதி 3ம் வீட்டதிபனுடன் பரிவர்த்தனை பெறுவது களயோகம் என்று ஜோதிடம் பெருமை படகூறுகிறது.
17. லக்கினாதிபதி 6, 8, 12ம் அதிபர்களுடன் பரிவர்த்தனை ஆவது அசுபபரிவர்த்தனை யோகம் என்று பெயர். இதன் பலன் ஒன்றை இழந்து மற்றொன்றை பெருவது ஆகும். உதாரணமாக, இதனால் சமயத்தில் சோகம், அவமரியாதை, அவப்பெயர், நன்மதிப்பு கெடலாம். திடீரென பொருள் ஈட்டுபவராகவும், பதவிசுகத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம்.

Friday, November 18, 2011

பாரிஜாத யோகம்


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

Tuesday, June 21, 2011

இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்குரியவர்களுக்கு 6,8,12க்கு உரியவர்கள் பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்கு உரியவர்கள் மறைந்து விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும் நிலை தான் உருவாகும்.

தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு


      பேச்சிலும் செயலிலும் தெளிவு இருந்தால்தான் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள்! வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொள்ளமுடியுமல்லவா.
      தரும ஸ்தானங்கள் எனப்படுகிற 1,5,9க்கு உடையவர்களும் அந்த இடங்களும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால் உயர் எண்ணங்களுடன் தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அளவான ஆசைகள், அவற்றிட்க்கு ஏத்த திட்டமிட்ட உழைப்பு, பலருக்கு உத‌வுவதால் பலருடைய அரவணைப்பு எல்லாமே எளிதில் வசப்படும்.
      கீழ்கண்ட அமைப்பில் ஒன்றிரண்டு ஜாத‌கத்தில் இருக்குமானால் நீங்கள் தெளிவும் சந்தோசமும் மிக்க யோகசாலியாக விளங்க முடியும்.
1. ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் நல்ல விதமாக நிற்ப்பது.
2. லக்கினத்தில் குரு, 9ல் சூரியன், 5ல் செவ்வாய் நிற்ப்பது.
3. லக்கினத்தில் சூரியன், 9ல் செவ்வாய், 5ல் குரு நிற்ப்பது. மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு இவ்வாறு இருந்தால் தெளிவும் சந்தோச மிக்க வாழ்க்கை அமைய உதவும்.
      1,5,9க்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பிரபல யோகமாக அமையும்.
      1,5,9க்குடையவர்கள் அவரவர் வீடுகளில் ஆட்சி பலத்துடன் நின்றாலே யோகமுண்டு.
      9ம் இடம் திரிகோண ஸ்தானம் என்பதால் அங்கு நிற்க்கும் கெட்டவர்களும் நல்லது செய்வர் என்ற விதிக்கேற்ப்ப ஸ்திர லக்கினகாரர்களுக்கு 9ம் இடம் பாதக ஸ்தானம் ஆனாலும் அங்கு அமர்ந்த 9ம் அதிபதி யோகாதிபதியே என்றே கருதவேண்டும். யோகமே செய்வார்.
      1,5,9க்குடையவர்கள் கேந்திர திரிகோணங்கள், தனலாப ஸ்தானங்களில் கெடாது அமர்ந்திருந்தால் தெளிவும் சந்தோசமும் மிக்க வாழ்க்கையே அமையும்.
      1,5,9க்குடையவர்கள் 6,8,12ல் மறைந்து விட்டால் ஜாதகர் குழப்பவாதியாகத் திகழ்வார். சின்ன சின்ன விசய‌ங்களில் கூட முடிவெடுக்க திண‌றுவர். சிறு வயதில் பெற்றோரும், வாலிப வயதில் மனைவியும், முதுமையில் பிள்ளைகளும் வழிகாட்டியாக வேண்டும்.
      1,5,9க்குடையவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் பகை, நீசம் பெற்று கெட்டிருந்தாலும் அல்லது 1,5,9க்குடையவர்கள் கெட்டு சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் சில சமயம் ஜாதகர் குழப்பவாதியாகவும், சில சமயம் தெளிவானவராகவும் காட்சி த‌ருவார்.
      1,5,9க்குடையவர்கள் ஜாதகத்தில் கெட்டு, 1,5,9ம் இடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
      மேலும் ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் மூவருமே சுத்தமாக கெட்டிட வாய்ப்பில்லை. ஒருவர் நன்றாக அல்லது ஒரு இடம் நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

Monday, June 20, 2011

அதிர்ஷ்டசாலி1‍‍-ஜோதிடக்குறிப்பு

அனைத்து லக்கினத்தில் உதித்தவர்களுக்கும், லக்கினாதிபதி கேந்திர வீடுகளில் ஒன்றில் கெடாது இருக்க அதை 5க்கு உடையவர் லக்கினாதிபதிக்கு சப்தம ஸ்ப்தம ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்( அதாவது 1, 5க்கு உடையவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க) அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவார்.