Showing posts with label மகரம். Show all posts
Showing posts with label மகரம். Show all posts

Friday, July 22, 2011

லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2


7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.
8) விருச்சிக‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய சந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து கோடீஸ்வர யோகம் அமையும். குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்
9) தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரு இடங்களாவது குரு பார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
10) மகர‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம் அமையும்.
11) கும்ப‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர் யோகம் ஏற்படும்.
12) மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்து, நல்ல இடங்களைப் பார்ப்பது மற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்.

Monday, July 4, 2011

ராகுவால் ராஜயோகம்

      எந்த லக்கினம், எந்த ராசியானலும் சரி ராகு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம் இந்த ராசிகளில் த‌னித்து நின்று அதற்க்கு கேந்திரங்களில்( ராகுவிற்க்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10ம் இடங்களில்) ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களாவது இருந்தால் அது மிகச்சிறந்த ராஜயோகமாகும்.

Thursday, June 30, 2011

லக்கினத்தில் கேது

மகரம், கும்ப லக்கினங்களில் உதித்தவர்களுக்கு கேது லக்கினத்தில் நின்றால் சந்தான பாக்கியத்துடன் செல்வவளமும் சேருகிறது.

Tuesday, June 21, 2011

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்2


      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன், அவர் 5ம் இடமான மீனத்தில் உச்சம் பெறுவார். அவரை பாக்கியதிபதி சந்திரன் பார்த்தாலே யோகம் பிரமாதமாக இருக்கும்.
      தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் அவர் 2ல் உச்சம், அவரை பக்கியதிபதி சூரியன் நண்பர் பார்த்தாலே யோகம் நன்றாக இருக்கும்.
      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி லக்கினாதிபதி சனியே ஆகிறார், அவர் 9ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியாதிபதி சுக்கிரன் பார்க்கும் போது தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது. பாதக யோகதிபதி சுக்கிரனால் நல்ல பலன்களே நடக்கும் என்பதில் ஐயமில்லை.
      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சனி, அவர் 8ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியதிபதி செவ்வாய் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் யோக பலன் கிடைக்கும்.
      எனவே விரயாதிபன் உச்சம் பெற்று, பாக்கியதிபதி பார்வையை பெறுவது யோகமே. விரையாதிபன் மறைவு ஸ்தனங்களில் இருப்பதை விட, உச்சம் பெற்று சுபர் பார்வை பெறும் போது நல்ல பலன்கள் கூடுதலாக நடக்க வாய்ப்பு அதிகம்

Monday, June 20, 2011

அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு

மகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில் உலாவி எல்லோரையும் விட நான் தான்  மகாபுத்திசாலி எனும் கர்வம் உடையவராக எல்லோரையும் கேலி செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது இந்த குண இயல்பால் விரோதிகளை நிறையவே தேடிக்கொள்வார்.