Thursday, June 3, 2021

சந்திர மங்கள யோகம்

சந்திரன்+செவ்வாய்


ஜனன ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் அல்லது சந்திரன் செவ்வாயை தொட்டால்,


1.சந்திர மங்கள யோகம்.

2.நல்ல பதவி, பொருளாதாரம்,

     நிர்வாக திறமை இருக்கும்.

3.தாயாருக்கு சொத்துண்டு.

4.தாயாருக்கு கோபம் அதிகம்.

5.வாகன பயணம் விரும்புவர் 

       அல்லது அதிகம் இருக்கும்.

6.ஜாதகருக்கு தாயார் முன்னின்று

  திருமணம் செய்து வைப்பார்கள்.

Sunday, May 30, 2021

குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை

 திருவாதிரை, சுவாதி, சதயம் .


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது முதல் திசையாக ராகு திசை சந்திப்பார்கள் ..குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகு தசையின் சில விசித்திர அல்லது முரண்பாடான விஷயங்களை பார்ப்போம்.


1.குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை 3,6,10,11.ஆகிய இடங்களில் இருந்து தசா நடந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் அதிகமான படிப்பில் ஈடுபாடு, பிறமொழி பயில்தல் ,இசையில் ஆர்வம். என சுபத்துவம் ஆன விஷயங்கள். நடக்கும் பொழுது ஜாதகரின் பெற்றோர் வழியில் ஏதேனும் உயிர் காரகத்துவ சம்பந்தமான விஷயங்களில் பாதிப்பை தருகிறார்.


2.சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே படிப்பில் மந்தமாக /ஞாபகத் திறன் குறைவாக. படிப்பில் கை வைத்து விடுகிறார்.


3.அதிகபடியான அசைவ உணவை விரும்ப வைக்கிறார்.

4.நாத்திகம் பேச வைக்கிறார்.

5.மர்மமான, (Thriller movie),பேய் சம்பந்தமான படங்கள், அதிகமாக சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் ஆகியவற்றை விரும்பி பார்க்க வைக்கிறார்.

6.விளையாட்டுகளில், குத்துச்சண்டை, கால்பந்து போன்ற துரிதமான விளையாட்டுகளின் மீது ஆர்வம்.

7.எதையுமே ஒரு அலட்சியப்படுத்துதல் உறவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும்,

8.உயிர் காரகத்துவம் ஆன விஷயங்கள் தந்தை தந்தை வழி தாத்தா உறவுகள், தாய் தாய் வழி தாத்தா உறவுகளின்  கை வைக்கிறார் (உறவு இழத்தல்) .


9.இன்னும் சில குழந்தைகளுக்கு இளம் வயதில் காதல் மோகம். (அதாவது 15 லிருந்து 23 வயதிற்குள்) ஏற்பட வைத்து அதற்குள் படிப்பில்  கவனம் சிதற வைக்கிறார்.

10.வெகு சிலருக்கு குழந்தைகளுக்கு வரக்கூடிய ராகு தசா பெற்றோரை பாதிக்கிறது. குறிப்பாக தந்தைக்கு பாதிப்பு.

11.கனவு பயம்.

12.அதிகமாக விஷப்பூச்சிகள், அரவம், போன்றவற்றை கனவிலும் நேரிலும் காணுதல். 


மேற்கூறிய அனைத்தும் குழந்தைப்பருவத்தில் வரக்கூடிய ராகு தசையில் சந்திக்கக்கூடிய பொதுபலன்கள்.

Wednesday, May 26, 2021

"ராகு கேது" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.

  ★இந்த ஜகத்தை ஆளக் கூடிய சக்தி படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள். ★ராகு கேது நிழல் கிரகங்கள் கிடையாது நிழல் கதிர்கள். ★ராகு பகவான் கரு நாகப்பாம்பு,கேது பகவான் செம்பாம்பு, செம் பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன் என்று கேதுவிற்கு ஒரு ஸ்லோகமே உள்ளது. ★பரிபூரண சூரியகிரகணம் ராகு,பரி பூர்ண சந்திர கிரகணம் கேது, ★பரிபூர்ண அமாவாசை ராகு, பரி பூரண பௌர்ணமி கேது, ★சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் தான் ராகுவும், கேதுவும் ★ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே. ★அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே, ★அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ★ராகு வைரஸை பரப்பும் கூடிய வைரஸ்,மிருதன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல,வைரஸை பரப்ப கூடிய வைரஸ். ★கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ் அதாவது நாயகன் சினிமாவில் வரும் கமலஹாசன் போல Negativeஐ அழிக்கக்கூடிய Nagative. ★ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம். ★ஏன் பில்லி,சூனியம் ,ஏவல், மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அம்மாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு. ★ஏனென்றால் அம்மாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.அதனால் தான் பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்வார்கள் ராகுவின் நாளிலேயே செய்கிறார்கள். ★கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம்.அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகை செடிகள் அல்லது மூலிகை பொருட்கள் பரிக்க செல்வதும் செய்கிறார்கள். ★பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும்.அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள். ★ராகு நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான். ★ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது. ★நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு.உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது. ★கேது தான் முக்திக்கு அதிபதி.நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவரே கேது பகவான் தான். ★கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது. ★கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது. ★ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும். ★ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான் வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு ஜூனரம் என்பதே கிடையாது எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ★ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்ளும். ★அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்த வர்களின் உடம்பிற்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது.அந்தத் தீராத ஆசை உடைய ஆவிகள் தான் ராகு பகவான். ★அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ★கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம். ★நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. *மூலாதாரம் *சுவாதிஷ்டானம் *மணிப்பூரகம் *அனாஹதம் *விசுக்தி *ஆக்நீயா *சகஸ்ராரம். ★இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.அதாவது ★மூலாதாரம் மூலம் நட்சத்திரம். ★சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம். ★மணிப்பூரகம் மகம் நட்சத்திரம். ★அனாஹதம் சதயம் நட்சத்திரம். ★விசுக்தி அஸ்வினி நட்சத்திரம். ★இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது. ★இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு அல்லது Connectionஐ ஏற்படுத்துபவர்களே இராகு கேது தான். ★ஏன் செய்வினை செய்பவர்கள் ஏவல், பில்லி ,சூனியம், மாந்திரீகம் செய்பவர்கள் நமது உச்சந் தலை முடியையும்.கால் நகத்தையும் கேட்கிறார்கள். ★ஏனென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நீக்குவதற்கு அதனால்தான் அமாவாசையில் இது எல்லாம் செய்கிறார்கள். ★அம்மாவாசை செய்தால் தான் இதையெல்லாம் செய்ய இயலும்.அல்லது பலிக்கும். ★அதனால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே இராகு கேதுவின் கையில் உள்ளது. ★இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர். ★அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் முதல் நட்சத்திர மண்டலம் "அஸ்வினி" என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்"மகம்" நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் "மூலம்' நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது. ★இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

Wednesday, April 21, 2021

Top 10 கோடீஸ்வர யோகம்.

1. 10ம் அதிபதி இருக்கும் நவாம்ச அதிபதி ராசியில் 11அதிபதியுடன் 11ல் இருப்பது.


2. 1, 9 ம் அதிபதிகள் இணைந்து வலுப்

பெற்று 11ல் இருப்பது.


3. 10ம் அதிபதி இருக்கும் நவாம்ச அதிபதி ராசியில் 2ம் பாவத்தில் இருப்பது.


4. சந்திரன் வலுப்பெற அதற்கு 12ல்

ராகு இருப்பது மகாசக்தி யோகம்.


5. லக்னாதிபதி 5 கோள்களால் பார்க்கப்படுவது.


6. உச்சம் பெற்ற கோள் சரராசியில் இருப்பது.


7. லக்னம் லக்னாதிபதி சரராசியில் இருந்து சரராசிக்கோள்களால் பார்க்

கப்படுவது.


8. நான்கு சரராசிகளில் யோகம் தரும் கோள்கள் இருப்பது.


9. 1, 4அதிபதிகள் மற்றும் சுக்கிரன், சந்திரனுக்கு 4ம் அதிபதி ஆகியவை இணைந்திருப்பது.


10. தர்ம கர்மாதிபதிகள் 9, 10ம் அதிபதி

கள் 9, 10ல் சுபபலமாய் அமர்ந்து பாபர்

கள் சேர்க்கை பார்வையில்லாமல் இருப்பது.

Sunday, November 29, 2020

நீசபங்க ராஜயோகம் : சில உண்மைகள்.

  உங்கள் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோகக் கிரகங்கள் வலிமை அடைந்தும், தீமை செய்யக்கூடிய பகைக் கிரகங்கள் வலுவிழந்தும் இருந்தால் நீங்கள் இந்த உலகில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அதிர்ஷ்டசாலியாக வாழ்வீர்கள் என்பது ஜோதிட விதி. 

ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்து இருக்கிறதா என்பதை அக் கிரகம் இருக்கும் வீட்டின் நிலையை வைத்து கீழ்க்கண்டவாறு பிரிக்கிறது வேத ஜோதிடம். 

1) உச்சம் 

2) மூலத்திரிகோணம் 

3) ஆட்சி 

4) நட்பு 

5) சமம் 

6) பகை 

7) நீசம் 

மேற்கண்ட அமைப்பை வைத்து ஒரு கிரகத்திற்கு மதிப்பெண் தருவதாக இருந்தால், நீச நிலைக்கு பூஜ்யமும், பகைக்குப் பத்து மதிப்பெண்களும், சமத்திற்கு இருபதும், நட்புக்கு நாற்பதும், ஆட்சிக்கு அறுபதும், மூலத் திரிகோணம் எண்பது, உச்சம் நூறு எனத் தோராயமாகக் கொள்ளலாம். 

இதன்படி ஒரு கிரகம் தனது வலிமை அனைத்தையும் இழக்கின்ற நிலை நீசம் எனப் படுகிறது. 

நீசநிலையில் ஒரு கிரகம் இருந்தால் அந்தக் கிரகம் தனது காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தர இயலாது என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது. 

அதாவது ஒரு கிரகம் நீசம் பெற்றால் அக் கிரகம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் முழுமையாக உங்களுக்கு கிடைக்காது, அந்தக் கிரகத்தால் உங்களுக்கு எவ்வித பயனும் இருக்காது என்பது இதன் உட்பொருள். 

விதி என்ற ஒன்று இருந்தால் விலக்கு என்பது இருந்தே தீரும் என்பதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவை திரும்பப் பெறுகிறது என்பதும் வேத ஜோதிட விதிதான். 

அதன்படி இந்த நீசபங்க அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில் ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தைப் பெறும் பொழுது, அது உச்சத்தை விட மேலான ஒரு வலிமையை அடையும் என்பதே. 

இது மதிப்பெண் நிலையில் 100க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோத நிலையைப் பெறும். அதே நேரத்தில் இன்னொரு விளைவாக நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தைத் தந்துதான் பிறகு வளர்ச்சியைத் தரும். அதாவது அந்தக் கிரகம் முதலில் ஒன்றுமில்லாத நிலையை ஏற்படுத்தித்தான் பிறகு உச்சத்திற்குக் கொண்டு செல்லும். 

உதாரணமாக லக்னாதிபதி கிரகம் நீசம் அடைந்து, முறையான நீசபங்கம் பெற்றிருந்தால், நீங்கள் வாழ்க்கையில் முதலில் கஷ்டப்பட்டு, ஒன்றுமில்லாத நிலையில் இருந்து, வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரமிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைவீர்கள். 

அதுபோலவே நீசக் கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ, அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்து பிறகு வளர்ச்சி பெறும். 

முறையான நீசபங்கம் என்பது உச்சத்தை விட மேலான நிலை என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். 

எடுத்துக்காட்டாக, சூரியன் நீசம் பெற்றால் அரசு வேலை இல்லை. அரச லாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக் கனவுகூட காண முடியாது..! 

சரி.... 

சுக்கிரன் நீசம் பெற்றால் கலைத்துறையைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாது. நடிப்பு வராது. பொதுமக்கள் மத்தியில் புகழுடன் தோன்ற முடியாது. குறிப்பாக சினிமாவில் ஜெயிக்க முடியாது. 

இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சுக்கிரன் நீசமான அமைப்பில் பிறந்தவர். 

புதன் நீசம் பெற்றால் அறிவாளியாக முடியாது. நிபுணத்துவம் இருக்காது. சிந்தனைத் திறன் சிறிதளவே இருக்கும். கணிதத் திறன் வராது. எதையும் புதிதாக கண்டுபிடிக்க முடியாது. 

உலக வரலாற்றில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதலாமவர் என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி, பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைக் கூறும் சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்த இயற்பியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புதன் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர். 

குரு நீசம் பெற்றால் ஆன்மீகத்தில் உயர்வில்லை. தெய்வ அருள் கிடைக்காது. ஆனால் தன் பக்தர்களால் தெய்வத்தின் நிலையில் வைத்து வணங்கப்படும் புனிதர், பகவான் ஸ்ரீசத்யசாய்பாபா குரு மகரத்தில் நீசம் பெற்ற நிலையில் பிறந்தவர். 

இதைப்போல இன்னும் நிறைய உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். 

அதேநேரத்தில் இது போன்றவர்கள் முதலில் வாழ்வில் நீச நிலையில் (ஒன்றுமில்லாத நிலையில்) இருந்து பிறகு தம் துறையில் உச்சத்திற்கு சென்றவர்களே. 

பெரும்பாலான ஜோதிடர்களுக்கு இந்த நீச பங்கத்தை அளவிடுவதில் குழப்பம் ஏற்படும். உனக்கு நீச பங்க ராஜயோகம் இருக்கிறது என்று ஜாதகரிடம் சொல்லுவார். கேட்பவரும் ராஜயோகத்தை எண்ணி கனவு காணும் நிலையில் அந்த தசை அவரிடம் உள்ளதையும் பறித்துக் கொண்டிருக்கும். 

அப்படியானால் முறையான நீசபங்கம் என்பது என்ன? அதை எப்படிக் கணக்கிடுவது? 

அதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. 

முக்கியமானவைகளைச் சொல்கிறேன். 

1) நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுவது. 

2) நீசக்கிரகம் பரிவர்த்தனை பெறுவது. 

3) நீசன் வர்க்கோத்தமம் பெறுவது. 

4) நீசக்கிரகத்துடன் ஒரு உச்சன் இணைவது. 

5) நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது. 

6) நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருப்பது. 

7) நீசனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆவது. 

8) நீசனை இன்னொரு நீசக்கிரகம் பார்ப்பது 

9) நீசன் வக்கிரம் அடைவது 

10) நீசன் அம்சத்தில் சுபவர்க்கம் பெறுவது 

இது போன்ற விதிகளில் 

பெரும்பாலானவற்றின்படி ஒரு நீசக்கிரகம், நீசபங்கத்தைப் பெற்று, அதாவது ஒரு நீசக்கிரகம், சந்திர கேந்திரத்தில் இருந்து, அதனுடன் உச்சக் கிரகமும் இணைந்து, நீசன் வர்க்கோத்தமும் பெற்று, நீச நாதன் சந்திர கேந்திரத்தில் இருந்து, வீடு கொடுத்தவன் பரிவர்த்தனையும் பெற்று இதுபோல அதிகமான முறைகளில் நீசபங்கம் பெற்றால், அதுவே முறையான நீசபங்கம் ஆகும். 

இதுபோன்ற நிலைகளில் மட்டுமே அந்தக் கிரகம் நீச பங்க ராஜயோகத்தைச் செய்யும். அப்போதுதான் அந்த நீசன் உங்களை தன் காரகத்துவங்களில் (செயல்பாடுகளில்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வான்.

Tuesday, November 10, 2020

 ஜோதிட குறிப்புகள்

*********

மகர ராசிக்கார்ரகள் வீட்டின் அருகாமையிலேயே  தொழில் 

விருச்சிகனும், மேஷ ராசிக்காரனும் காலையில் எழுந்தவுடன் "அப்பனே முருகா" என்பர்

எந்த மதக்காரனாக, இருந்தாலும் மிதுன லக்கின, இராசிக்கார்கள் திருப்பதி பகவானை தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்

மேஷத்தோனுக்கு நெற்றியிலோ, அல்லது தலையிலோ அடிபட்ட தழும்பு இருக்கும்

திருவோணத்தோனுக்கு பேசும் போது உச்சந்தலையை சொறிவார்கள்

கன்னியில் இராகு இருந்தால் வேற்று மத ,இனத்தவருடன் காதலோ, தொடர்போ ஏற்படும்.

உபய, இராசி, லக்கினம்(மீனம், மிது, தனு, கன்னி)திருப்தியான வாழ்க்கை துணை அமையாது.

பெரும்பாலும் ஏழரை நடக்கும்போது தான் விவாஹம் நடக்கும்.

சனி, சூரி சேர்ந்து இருந்தால் தந்தைக்கும், மகனுக்கும் ஆகாது, ஆனால் தந்தை தொழிலையே மகன் செய்ய வேண்டி வரும்.

குருவை, சந்திரன் பார்த்தாலோ, சேர்ந்தாலோ அது கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம் என சொல்லுவார்கள், ஆனால் உண்மையில் இவர்கள் கோழைகளாக இருப்பர், இவர்களை பின்னால் இருந்து ஊக்கம் கொடுத்தால் மட்டுமே  ஜொலிப்பார்கள்.

கும்ப லக்கினக்கார்கள், ஆரம்பத்தில் கோமாளிகளாகத்தான் இருப்பார்கள்

லக்கினாதி உச்சமாக இருப்பதை விட,ஆட்சியாக இருந்தால் நலம்

உச்சம் அவர் உழைப்பு அடுத்தவருக்காக பெரும்பாலும் பயன் படும். ஆட்சியாக இருந்தால்  அவருக்கு சிறப்பு,

உச்சனை, உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான்.

நீசனை, நீசன் பார்த்தால் நினைத்தெல்லாம் முடிப்பான்

லக்கின கேந்திரம்(முதல் வீடு)

சதுர்கேந்திரம் (நான்கு)

சப்தம கேந்திரம் (ஏழு)

தசம கேந்திரம் (பத்து)

இவை நான்கும்  எந்த மனிதனுக்கும் சிறப்பாக அமையாது, அமைந்ததும் இல்லை,

லக்கினத்தில் குரு இருந்தால் ஒரு காலகட்டத்தில் குடும்பத்தை விட்டு விலகி ஆன்மீக வழி செல்ல வழி ஏற்படும்.

நீர் ராசிகளில் இராகு வெளி நாட்டு பயணம் நிச்சயம்

ஏழரை சனி ஆரம்பிக்கும் போது காக்கை தலையில் கொட்டி போகவோ, எச்சத்தை கொட்டவோ செய்யும்.

Saturday, June 6, 2020

லக்ன யோகர்கள்

பொதுவாக ஜாதகத்தில் லக்ன யோகர்கள் சுய சாரம் பெறுவது மிகவும் சிறப்பு. அப்படி அவர்கள் சுய சாரத்தில் இருந்தால் ஜாதகர் நிச்சயம் வளர்ச்சி பெறுவார். எந்த ஒரு கீழ்நிலையில் ஜாதகர் இருந்தாலும் ஜாதகர் நிச்சயம் வாழ்வில் வளர்ச்சி காண்பார்.