Thursday, July 28, 2011

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான‌ ராஜயோக அமைப்பு 2


      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும். லக்கினத்தில் குரு, 4ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2ம் இடங்களில் அல்லது 9,10ம் இடங்களில் புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,5க்குடைய சனி நல்லவர். 9, 10க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல் நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10ல் ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.

1 comment:

Post a Comment