சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.
மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் சிறப்பாக அமையும்.
மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.
சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாதவர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள் அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.
சுக்கிரன் சிம்ம வீட்டில் நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3ம் இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8ம் இடத்திலும் நிற்பார்.
சுக்கிரனுக்கு 3, 8ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8ம் இடங்களில் நின்றாலும் உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.
இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வீட்டில் 4மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு நின்றாலும், மீன வீட்டில் 10ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம் தராது.
மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்.
No comments:
Post a Comment