Wednesday, July 6, 2011

எப்போது திருமணம் ஜோதிடக்குறிப்பு


      குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
      சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும் திருமண யோகம் உண்டு.
      அதுபோல ஒரு சில ஜாதகருக்கு கோசார குரு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு கோசாரரீதியாக வந்தமரும் கால‌த்தில் திருமண யோகம் உண்டு

ஒரு குறுக்கு வழி

      லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள் வகுத்தல் 30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
      லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில் திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.
      அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.
      மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை அமையாமலே போகலாம்!

No comments:

Post a Comment