சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. தனுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன ராகு
இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முதல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்
No comments:
Post a Comment