ஒரு ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7 மற்றும் 8ல் அமைந்தால் அந்த அமைப்பிற்கு அதியோகம் என்று பெயர்.
அதியோக அமைப்பு பெற்றவர்கள் மிகவும் அமைதியான அன்பானவர்களாகவும், வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றவர்களாகவும் இருப்பர். மேலும் எதிரிகள் இல்லாத நிலையும், ஆரோக்கியமான நல்ல நீண்ட ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர்.
இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அமர்ந்தால் ஒரு ஊருக்கோ, கிரம்மத்துக்கோ நகரத்துக்கோ தலைவராக இருப்பர்.
இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அமர்ந்தால் அமைச்சராக இருப்பர்.
இதில் அமரும் கிரகங்களில் மூன்று கிரகங்களோ அல்லது அதற்க்கு மேலோ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அமர்ந்தால் ஒரு நாட்டுகே தலைவராக இருப்பர்.
No comments:
Post a Comment