ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது பார்வதியோகம் பற்றி பார்ப்போம்.
ஜீவனாதிபதி 10க்குடையவன், அம்சக்கட்டத்தில் நிற்க்கும் வீட்டிற்க்குரியவன் ராசிக்க்ட்டத்தில் 10ம் இடத்தில் வலுவுடன் நிற்பது பார்வதியோகமாகும்
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 10க்குடையவன் அம்சக்கட்டத்தில் கடகத்தில் நிற்ப்பதாகக்கருதுவோம். கடகத்திற்க்குரியவர் சந்திரன் அவர் ராசிக்கட்டத்தில் 10ல் நின்றால் அது பார்வதி யோகமாகும்.
அவ்வாறு அந்த பத்தமிடம் அந்த கிரகத்திற்க்கு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அது பிரபல பார்வதியோகமாகும்.
ஜாதகர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவோ, அல்லது மிகப்பெரிய தொழிலதிபர்களாகவோ பிரகாசிக்க முடியும்.
அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர் லட்சங்களைத்தான் குவிக்க முடியும், கோடிகள் என்பது எட்டாக்கனி என்ற நிலை மாறி வருகிறது. அதிகாரிகள் கோடிகளைக் குவிப்பது சாதாரணமாகி வருகிறது.
எனவே பார்வதி யோகம் கோடிகளைக் குவிக்கும் சாதனையாளராக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment