ஜோதிடத்தில் மிகச்சிறந்த யோகமாக சொல்லப்பட்டிருப்பது சன்னியாசி யோகமாகும். காரணம் ஒரு மனிதன் தெய்வத்தை, தெய்வநிலையை அடைவதை விட சிறந்த விசயம் ஏதுமில்லை. அதற்கான சில கிரக நிலைகள் பின்வருமாறு...
1. 9ம் இடத்தில் நான்கும், அதற்க்கு மேற்ப்பட்ட கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் மிகவும் சிறந்த ஞானியாக இருப்பார்.
2. 10ம் இடத்தில் மூன்றும் அதற்கு மேற்ப்பட்ட கிரகங்கள் அமைந்தால் அந்த ஜாதகர் உலகம் புகழும் சன்னியாசியாக இருப்பார்.
3. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் இனைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ காணப்பட்டால் அந்த ஜாதகம் சன்னியாசி யோகமுடைய ஜாதகமாகும். ஒரு வேளை அந்த ஜாதகர் மற்ற கிரகங்களின் வலிமையால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும், வாழ்க்கையில் சிறிது காலமாவது சன்னியாசி போல் வாழ்வார்.
No comments:
Post a Comment