கீழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும்.
1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும்.
2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன யோகம் ஏற்படும்.
3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டு (10 )அதிபதி இடம் பெற்றால், தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல தன யோக அமைப்பு.
4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் .
5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம். (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும் )
6. லாப ஸ்தானத்தில் (11 ம் வீட்டில்) ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம் ஏற்படுத்தும்.
7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.
8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம்.
9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.
மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment