முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........
நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.
மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்பந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்
ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.
மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.
கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்
2 comments:
மேஷ ராசி சிம்ம லக்கினம் செவ்வாய் தசை குரு புத்தி பலன்கள் என்ன
KADAGA LAGANATHIN THIRUMANAVALKAI YEPADI AMAIUM
Post a Comment