Sunday, July 31, 2011

நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு


1) ஜாதகத்தில் குருசந்திர யோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம் ஆகியவற்றில் ஒன்றாவது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
2) 2,12ம் இடங்களில் சுபர்கள் இருந்தால் நிம்மதி மிகவும் நன்றாக இருக்கும்.
3) 2,12ம் இடங்களில் பாபர்கள் இருந்தாலும் சுபர் பார்வை இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியால் உருவாக்கி கொள்ள முடியும்.
4) லக்கினத்தை பாபிகள் பார்க்காது, சுபர் பார்வை இருந்தால் நிம்மதி நிறைவு நன்றாக இருக்கும். குறிப்பாக குருவின் பார்வை லக்கினத்துக்கு கிடைத்தால் மிக நிம்மதியாக, மரியாதை மிக்க வாழ்க்கை வாழமுடியும்.

Saturday, July 30, 2011

கணக்கில் புலி ஜோதிடக்குறிப்பு

      ஜாதகத்தில் குருவும், புதனும் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு கணிதத்தில் திறமை அபாரமாக இருக்கும். கஷ்டமான கணக்குகளைக் கூட மனக்கணக்காகவே போட்டுவிடுவர். அதிலும் குருவும் புதனும் உச்சம் பெற்றிருந்தால் அபாரமாக இருக்கும். அவர்களை கணக்கில் புலி என்று சொல்லுவர். கணக்கில் நூற்றுக்குநூறு வாங்கும் குழந்தைகளின் ஜாத‌கத்தில் இந்த அமைப்பு இருப்பதைக் காண முடிகிற‌து

Friday, July 29, 2011

கம்பீர யோகம் ஜோதிடக்குறிப்பு

      சந்திரனுக்கு 12ல் சூரியன் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும். அதிலும் சந்திரனுக்கு 12ல் குரு இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக கம்பீரமாக காட்சி தருவார். தொழிலில் சாதனைகள் புரிவார். அரசாங்க பரிசுகளும், பாராட்டுகளும் இவருக்கு கிடைக்கும்

பானு யோகம் ஜோதிடக்குறிப்பு


      1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

Thursday, July 28, 2011

வாழ்க்கைச்சிறை ஜோதிடக்குறிப்பு

      ராகுவோ கேதுவோ லக்கினேசனுடன் சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் இருப்பது யோகமான அமைப்பு, உயர்வு தரும். ஆனால் இந்த அமைப்புக்கு 6ம் வீட்டோனின் சம்பந்தம் ஏற்படுமாயின் ஜாதகருக்கு வாழ்க்கை சிறைவாசம் போல் தெரியும். வயது கூடக்கூட குடும்பப்பற்று மறைந்து, துறவு மனப்பான்மை ஏற்ப்படும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையினை சிறையில் இருப்பது போல் கருதி வாழ்க்கையினை ஓட்ட வேண்டியிருக்கும்.

உள்ளங்கவர் கள்வன் ஜோதிடக்குறிப்பு


      சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகு இருந்து, அவரை பாவிகள் பார்க்கும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், ஜாதகர் வெளிப்பார்வைக்கு பரம யோக்கியவானாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருப்பர். ஆனால் உள்ளே முழுவதும் கள்ளத்தனமானவர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருப்பர். பேச்சும் செயலும் நல்லது செய்வது போல் இருக்கும், ஆனால் இவர்களை நம்பினவர்களை சீர்குலைக்கும் போக்கு இவர்களது செயல்களில் மறைந்திருக்கும். பிசினஸ் பார்ட்னர்களை ஏமாற்றிக் கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பர்.
      இதே போல் சுகஸ்தானத்தில் மற்ற பாபகிரகங்கள் இருந்து பாபகிரகங்கள் பார்த்தாலும் இதே நிலை தான், அதாவது ஜாதகர் ஒழுக்ககுறைவானவராக மிகுந்த கள்ளம் நிறைந்தவராக இருப்பார்.

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு



      பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 3


 தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால், தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ, சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான‌ ராஜயோக அமைப்பு 2


      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும். லக்கினத்தில் குரு, 4ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2ம் இடங்களில் அல்லது 9,10ம் இடங்களில் புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,5க்குடைய சனி நல்லவர். 9, 10க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல் நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10ல் ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 1


      முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........
நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌ வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்

Tuesday, July 26, 2011

12ம் இடம் ஜோதிட‌க்குறிப்பு


      12ஆம் இடம் நித்திரைக்கான இடம். 1, 2 என்று 12 வீடுகள் இருக்கிறது. 1 லக்னம், உடல், தோற்றம் இதெல்லாம் அடங்கும். 2ஆம் இடம் வாஸ்து, குடும்பம் என்று சொல்கிறோம். இதுபோல 12ஆம் இடம் சயனத்தானம். இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். 
      சயனத் தானத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும். இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம். 
      இவர்கள் சரியாக உறங்குவார்களா, நிம்மதியா உறங்க முடியாதா? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம். அதனால், இந்த 12ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வார்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். 
      பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம். இந்த சந்திரன் சனி, ராகு மாதிரியான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனி, ராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய் பரிதவிப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு. 
      இதேபோல பார்த்தீர்களென்றால், 12இல் செவ்வாய், 6க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். 12இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல், சரியான படுக்கை இல்லாமல் போவது, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல், உட்கார்ந்த நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும். 
      அதனால் இந்த சயனத்தானமான 12ஆம் இடம் மிகவும் முக்கியமான இடம். இந்த 12ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால்(குரு,சுக்கிரன்ம, புதன்), “படுத்தால் தூக்கம் வருதுங்க, ஒன்றும் பிரச்சனை இல்லைங்க, நிறைய பேர் கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தூக்கம் இல்லாம தவிக்கிறார்கள். அந்தப் பிரச்சனை எனக்கு இல்லைங்க” என்பார்கள்.

Monday, July 25, 2011

7ல் நீச்ச கிரகம்? ஜோதிடக்குறிப்பு


      பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு எதிலுமே மனத்திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
      ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் நீச்சமடைந்தாலும், ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கைத் துணை மனதிற்கு பிடிக்காமல் போகும். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்/ஆண் சிறப்பான குணநலன்களையும், அழகையும் பெற்றிருப்பர். இவரது மனதிற்கு அப்படித் தோன்றும் நிலை காணப்படும்.
      தனக்குப் பார்த்த பெண் சிறப்பாக படித்திருந்தாலும், குறிப்பிட்ட கல்லூரியில் படித்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று அந்த ஜாதகர் கருதுவார். இதன் காரணமாகவும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படும். 7இல் நீச்ச கிரகம் இருப்பதும் இதனை உணர்த்துவதற்காகவே.
      எனவே, 7இல் நீச்ச கிரகம் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு (படிப்பு/பொருளாதாரம்) குறைந்த இடத்தில் குணத்தில் உயர்ந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
      பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகம் இருப்பவர்கள் மனதளவில் திருப்தியடைய முயல வேண்டும். வாழ்க்கைத் துணை வசதி குறைவாக இருந்தாலும் நல்ல ஒழுக்கமான, படித்த ஆண்/பெண் ஆக இருந்தால் உடனே திருமணத்தை முடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

குரு சந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு


      குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள், சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.
      சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.
      பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

Sunday, July 24, 2011

7ம் இடத்தில் சனி? ஜோதிடக்குறிப்பு


      பொதுவாகவே ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில் எந்த லக்னத்திற்கு 7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
      உதாரணமாக ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
      ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன் காரணமாக அனுஷ நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.
      இதேபோல் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம், சிம்ம லக்னத்திற்கு 7இல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.
      ஆனால் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.
      பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.
      எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      ஒருவருக்கு 7இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பலன்கள் வேறுபடுமா? 7ல் சனி இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.

குரு சனி தொழில் சூட்சுமம் ஜோதிடக்குறிப்பு


      லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது.
      சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.

Saturday, July 23, 2011

8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு


      பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
      எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

Friday, July 22, 2011

கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு


      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு, நோய்  போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வாலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும். கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.
      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்ப்படும்

லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2


7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.
8) விருச்சிக‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய சந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து கோடீஸ்வர யோகம் அமையும். குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்
9) தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரு இடங்களாவது குரு பார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
10) மகர‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம் அமையும்.
11) கும்ப‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர் யோகம் ஏற்படும்.
12) மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்து, நல்ல இடங்களைப் பார்ப்பது மற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்.

லக்கினப்படி கோடீஸ்வரயோகம் அமையும் வாய்ப்பு1


1) மேஷ லக்கினதில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஜாதகத்தில் பிரகாசித்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.
2) ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு  சனி நட்பு நிலையில் நல்லவர்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.
3) மிதுன லக்கினத்தில் உதிதவர்களுக்கு புதன், சுக்கிரன் ஜாதகத்தில் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
4) கடக லக்கினத்தில் குரு, செவ்வாய் பலம் கோடீஸ்வர யோகம் பெற உதவும்.
5) சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர்களது சுபத்துவ சம்பந்தம் கோடீஸ்வரர் ஆக உதவும்.
6) கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் உச்சம், சுக்கிரனின் சுபத்துவ சம்பந்தம் பெற்று வலுவுடன் விளங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

உச்ச புத‌னும் நீச்ச சுக்கிரனும்


      கன்னி வீட்டில் புதன் உச்சம், சுக்கிரன் நீச்சம் இந்த அமைப்பினால் ஜாதகருக்கு ஏற்படும் பலன்களாவன.....
      பெண்களால் உருவாகும் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக சமாளிக்க முடியும். ஜாதகருக்கு குடும்பப் பற்று பாசம் சிறப்பாக இருக்கும். நெறிதவர மாட்டார். உச்ச,நீச்ச சுக்கிரனால் வரும் சர்க்கரை வியாதி வராது. பெண்களுடனான தவறான தொடர்புகள் இருக்காது. அப்படியே வேறு கிரக சூழ்நிலைகளால் ஏற்ப்பட்டால் பெயர் கெடாமலும், பொருள் இழப்புகளும் இருக்காது.புத்தி சாதுர்யத்தினை நேர் வழியில் பயன்படுத்துவர்.

Wednesday, July 20, 2011

பர்வத யோகம் ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் பர்வதயோகத்திற்க்கான அமைப்புகள் பின் வருமாறு....
1) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் எந்த கிரகமும் அமராமல் இருக்க வேண்டும்.
                              அல்லது
2) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது அமரவேண்டும்.
                              அல்லது
3) லக்கினாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று அமைய வேண்டும்.
      இந்த அமைப்பு பெற்றவர்கள் நல்ல வசதியான வாழ்க்கையும், எதிரிகள் இல்லாத்வர்களாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்காகவாவது பிரபலமானவர்களாகவும் இருப்பர். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து இந்த பர்வத யோகம் இன்னும் பலப்படும்.

Tuesday, July 19, 2011

சில கோடீஸ்வர யோகங்கள்‍ ஜோதிடக்குறிப்பு

1) ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.

Monday, July 18, 2011

ராகு கேதுவால் யோகம் ஜோதிடக்குறிப்பு


      ராகு, கேதுக்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்று நிற்க அவர்களுக்கு 9ல் சுபாவ சுபர்கள் ஆட்சி, உச்சம், நட்பு என்னும் நிலையில் இருப்பது கோடீஸ்வர யோகத்தில் ஒரு வகை.
அ) விருச்சிகத்தில் கேது, கடகத்தில் சந்திரன் அல்லது குரு நிற்பதால் இந்த யோகம் அமையும். கடகத்தில் குரு நிற்பது பிரபல யோகமாகும்.
ஆ) ரிஷபத்தில் ராகு, மகரத்தில் சுக்கிரன் நட்பு நிலையில் அல்லது குரு நீசம் பெற்று பங்கம் ஏற்பட்டு நின்றாலும் இந்த அமைப்பு பிரபல யோகமாகும்.
இ) கும்பத்தில் கேது நிற்க, துலாத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் நின்றாலும் இந்த யோகம் உண்டு.
      பராசர ஹோரையில் ரிஷபத்தில் ராகு உச்சம் எனவும், விருச்சிகத்தில் கேது உச்சம் எனவும், கும்பத்தில் ஆட்சி எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த இடங்களில் ராகு, கேதுக்கள் மிகுந்த பலம் பெறுவர். நன்மைகள் செய்வர் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Sunday, July 17, 2011

அஷ்டலட்சுமி யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6ல் ராகுவும், குரு கேந்திரம்(1, 4, 7, 10ல்) பெற்று அமைந்தால் அந்த அமைப்பு அஷ்டலட்சுமி யோகம் எனப்படுகிறது.
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மிக எளிதாக நல்ல நிலையை அடைந்துவிடுவர். மற்ற கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தால் இவர்கள் கோடீஸ்வரர்களாக, சாதனையாளராக‌ பிரகாசிக்க‌ முடியும்

Saturday, July 16, 2011

உச்ச சூரியனும் நீச சனியும் ஜோதிடக்குறிப்பு

      மேஷத்தில் சூரியன் உச்சம், சனி நீசம் என்ற அமைப்பில் இருவரும் இனைந்து நிற்பது சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஜாதகர் அதிகாரப் பதவிகளில் தூங்கி வழிந்து கொண்டு இருப்பார் என சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் அதிகாரப்பதவிகளை வகிக்கலாம் ஆனால் சோபிக்க முடியாது என்பது பல ஜோதிடர்களின் கருத்து.
      அனுபவத்தில் பார்க்கும் போது இவர்களைத் திட்டிக்கொண்டே இவரது வேலைகளை கீழே வேலை செய்பவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சம்பளம் மட்டும் சரியாக கண‌க்குப் பார்த்து வாங்கிக்கொண்டிருப்பர்.இவர்கள் தவறான வழிகளில் சம்பாதிப்ப‌திலும் ஆர்வம் காட்டுவர்

அமலா யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் வீட்டில் சுபகிரகம் அமைந்திருந்தால் அந்த அமைப்பிற்க்கு அமலா யோகம் எனப்படும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தையும், பெரும் புகழையும், எல்லா சுகங்களும் பெற்றவராவார்.
      லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் இடத்தில் சுபகிரகம் அமைந்தால் அமலா யோகம் ஏற்படும். ஆனால் ஏதோ ஒரு கிரகம் (பாபகிரகமானலும்) 10ல் அமைந்த கிரகத்தின் தசா புத்தியில் நல்ல செல்வ வளத்தைத் தரும். பாபகிரகமானால் செல்வம் வரும் வழி வேண்டுமானால் மாறுபடும் நல்வழியில் வராது.

அதியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற‌ சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7 மற்றும் 8ல் அமைந்தால் அந்த அமைப்பிற்கு அதியோகம் என்று பெயர்.
      அதியோக அமைப்பு பெற்றவர்கள் மிகவும் அமைதியான அன்பானவர்களாகவும், வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றவர்களாகவும் இருப்பர். மேலும் எதிரிகள் இல்லாத நிலையும், ஆரோக்கியமான நல்ல நீண்ட‌ ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு ஊருக்கோ, கிரம்மத்துக்கோ நகரத்துக்கோ தலைவராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் அமைச்சராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் மூன்று கிரகங்களோ அல்லது அதற்க்கு மேலோ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு நாட்டுகே தலைவராக இருப்பர்.
     

     

Friday, July 15, 2011

டுபாகூர் பேர்வழி, கோழை ஜோதிடக்குறிப்பு

      ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ ஜாதகர் டுபாகூர் பேர்வழியாக இருப்பார், பொய்யராக இருப்பார், பொய்யை நம்பும் படியாக கூறுபவராக இருப்பார். அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.
      ஒருவருடைய ஜாதகத்தில் பலமற்ற செவ்வாய் லக்கினத்தைப் பார்த்தால் ஜாதகர் பயந்தாங்கொள்ளியாக, கோழையாக‌ இருப்பார்.

யாரை குரு தசை குபேரனாக்கும்? ஜோதிடக்குறிப்பு

      மேஷ லக்கினம், மேஷ ராசியில் பிறந்த ஜாதகருக்கு, 10ல் செவ்வாய், 9ல் சூரியன் குரு இனைந்து நின்றால், லக்கினத்தில் நிற்க்கும் சுகாதிபதி சந்திரனை யோகாதிபதிகள் இருவரும் பார்க்கும் நிலையும், லக்கினாதிபதி உச்சம் பெற்ற நிலையும், யோகாதிபதி குரு ஆட்சி பெறும் நிலையும் ஒரு சேர ஏற்ப்படும் அல்லவா?
      இந்த ஜாத‌கரை குரு தசை குபேரனாக்கும். இதர தசைகளில் சந்திரன், செவ்வாய், சூரியன், குரு புத்தி அந்தரங்களில் மிக நல்ல பலன்கள் ஏற்படும்.

இசை மழையும், பண ம‌ழையும் ஜோதிடக்குறிப்பு

      புதன் சுக்கிரன் இருவரும் இனைந்து 2ம் இடத்தில் இருக்க, தைரியாதிபதியாகிய 3க்குடையவன் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தாலும் அல்லது 3க்குடையவர் ஆட்சி உச்சம் பெற்று, அவருடன் புதன் சுக்கிரன் இனைந்து நின்றாலும் ஜாதகர் இசை வல்லுனராக இருப்பார், அவருக்கு அதனால் பண ம்ழையும் பொழியும்.
     

Monday, July 11, 2011

பார்வதியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது பார்வதியோகம் பற்றி பார்ப்போம்.
      ஜீவனாதிபதி 10க்குடையவன், அம்சக்கட்டத்தில் நிற்க்கும் வீட்டிற்க்குரியவன் ராசிக்க்ட்டத்தில் 10ம் இடத்தில் வலுவுடன் நிற்பது பார்வதியோகமாகும்
      உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 10க்குடையவன் அம்சக்கட்டத்தில் கடகத்தில் நிற்ப்பதாகக்கருதுவோம். கடக‌த்திற்க்குரியவர் சந்திரன் அவர் ராசிக்கட்டத்தில் 10ல் நின்றால் அது பார்வதி யோகமாகும்.
      அவ்வாறு அந்த பத்தமிடம் அந்த கிரகத்திற்க்கு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அது பிரபல பார்வதியோகமாகும்.
      ஜாதகர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவோ, அல்லது மிகப்பெரிய தொழிலதிபர்களாகவோ பிரகாசிக்க முடியும்.
      அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர் லட்சங்களைத்தான் குவிக்க முடியும், கோடிகள் என்பது எட்டாக்கனி என்ற நிலை மாறி வருகிறது. அதிகாரிகள் கோடிகளைக் குவிப்பது சாதாரணமாகி வருகிறது.
      எனவே பார்வதி யோகம் கோடிகளைக் குவிக்கும் சாதனையாளராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முத‌ல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்

Sunday, July 10, 2011

இளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு

      3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அல்லது 3ம் வீடு இவை சுபகிரகங்களின் பார்வையோ சேர்கையோ பெற்றாலும், இவைகள் பலம் பெற்றாலும் இந்த யோகம் ஏற்ப்படுகிறது. 3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அசுபகிரகங்களின் வீட்டில், மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது.
      இந்த யோகத்தின் பலன் யாதெனில், ஜாதகர் இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அடைவர். அவர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பர், அதனால் ஜாதகருக்கு உதவுவர். ஜாதகரும் அவர்களிடம் மிகவும் அனுசரித்து நடந்துகொள்வார். இளைய சகோதர, சகோத‌ரிகளும் மிகவும் இவர்களை மதித்து நடந்துகொள்வர்

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

முதல் பாவம்:
      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

கிரகங்களின் மறைவு ஸ்தானங்கள்

      சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, – லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு.
      சந்திரன், புதன், குரு – லக்னத்துக்கு 3, 6, 8, 12 –ல் இருததால் மறைவு.
      சுக்கிரன், லக்னத்துக்கு 3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு 6, 12-ல் இருந்தால் மறைவு இல்லை.

வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு

      நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.
     

Friday, July 8, 2011

சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு

      சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.
      மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் சிறப்பாக அமையும்.
      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.
      சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாத‌வர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள் அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.
      சுக்கிரன் சிம்ம வீட்டில் நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3ம் இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8ம் இடத்திலும் நிற்பார்.
      சுக்கிரனுக்கு 3, 8ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8ம் இடங்களில் நின்றாலும் உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.
      இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வீட்டில் 4மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு நின்றாலும், மீன வீட்டில் 10ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம் தராது.
      மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்.

Thursday, July 7, 2011

வேதாந்தி ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் குருவுடன் 2க்குரியவன் சேர்ந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகர் வேதம், வேதாந்தம், காவியங்கள் அகியவைகளைக் கற்றுத் தேர்வார். அதில் ஞானம் பெற்றவராவார்.

மிகச்சிறந்த யோகம் ஜோதிடக்குறிப்பு

ஜோதிடத்தில் மிகச்சிறந்த யோகமாக சொல்லப்பட்டிருப்பது சன்னியாசி யோகமாகும். காரணம் ஒரு மனிதன் தெய்வத்தை, தெய்வநிலையை அடைவதை விட சிறந்த விசயம் ஏதுமில்லை. அதற்கான சில கிரக நிலைகள் பின்வருமாறு...
1. 9ம் இடத்தில் நான்கும், அதற்க்கு மேற்ப்பட்ட கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் மிகவும் சிறந்த ஞானியாக இருப்பார்.
2. 10ம் இடத்தில் மூன்றும் அதற்கு மேற்ப்பட்ட கிரகங்கள் அமைந்தால் அந்த ஜாதகர் உலகம் புகழும் சன்னியாசியாக இருப்பார்.
3. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் இனைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ காண‌ப்பட்டால் அந்த ஜாதகம் சன்னியாசி யோகமுடைய ஜாதகமாகும். ஒரு வேளை அந்த ஜாதகர் மற்ற கிரகங்களின் வலிமையால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும், வாழ்க்கையில் சிறிது காலமாவது சன்னியாசி போல் வாழ்வார்.

Wednesday, July 6, 2011

எப்போது திருமணம் ஜோதிடக்குறிப்பு


      குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
      சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும் திருமண யோகம் உண்டு.
      அதுபோல ஒரு சில ஜாதகருக்கு கோசார குரு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு கோசாரரீதியாக வந்தமரும் கால‌த்தில் திருமண யோகம் உண்டு

ஒரு குறுக்கு வழி

      லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள் வகுத்தல் 30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
      லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில் திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.
      அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.
      மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை அமையாமலே போகலாம்!

கேதுவால் யோகம்

      கேது லக்கினதிற்கு கோண‌ங்கலான‌ 1, 5, 9ம் இடத்திலும், லாபஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்க பிறந்த ஜாதகர் சொந்த இடத்திலும், வெளிதேசங்களிலும் வாசம் செய்வான். பொன், பொருள் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மிகவும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவான். இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கும்

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


      5ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம் கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில் கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

Tuesday, July 5, 2011

பாராட்டுமழை ஜோதிடக்குறிப்பு

பாக்கியாதிபதி என்கிற 9க்குடையவன் லக்கினமேறி குரு பார்வை பெற்றாலும், லக்கினாதிபதியுடன் 9க்குடையவன் சம்பந்தப்பட்டு குரு பார்வை பெற்றாலும் ஜாதகர் எப்போதும் பாராட்டு மழியில் நனைந்து கொண்டே இருப்பார்.

Monday, July 4, 2011

விபரீத ராஜயோகம்


      துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லக்கூடிய 3,6,8,12ம் அதிபதிகள், அந்த 3,6,8,12ம் இடங்களில்(துர்ஸ்தானாதிபதிகள் துர்ஸ்தானங்களில்) இடம் மாறி அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகமாகும்.
      அதாவது உதாரணத்திற்க்கு 3ம் அதிபதி 8ல், 6ம் அதிஅப்தி 12ல், 12ம் அதிபதி 3ல், 8ம் அதிபதி 3ல் இவ்வாறு அமர்வது விபரீதராஜயோகமாகும். இதில் அனைத்து அதிபதிகளும் இடம் மாறி இருக்க வேண்டும் என்பதல்லாமல் இருவரோ மூவரோ இடம் மாறியிருந்தால் கூட போதும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட மொழிக்கேற்ப்ப ராஜயோக பலன்களைத்தருவர்.
      இதன் பலன் என்னெவெனில் எதிர்பாராமல் வரும் நல்ல பலன்கள், உழைப்பிற்க்கு அதிகமான ஊதியம், திடீர் வரவுகள், திடீர் சொத்துகள், திடீர் சம்பத்து என கூறிக்கொண்டே போகலாம்.

ராகுவால் ராஜயோகம்

      எந்த லக்கினம், எந்த ராசியானலும் சரி ராகு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம் இந்த ராசிகளில் த‌னித்து நின்று அதற்க்கு கேந்திரங்களில்( ராகுவிற்க்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10ம் இடங்களில்) ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களாவது இருந்தால் அது மிகச்சிறந்த ராஜயோகமாகும்.

Sunday, July 3, 2011

வளமான வாழ்வு அமைய‌


1) லக்கினம், லக்கினாதிபதி சிறப்பாக அமைய வேண்டும். ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு பெற இந்த அமைப்பு உதவும்...
   அ) லக்கினாதிபதி ஆட்சி, உச்ச, நட்பு வீட்டில் இருப்பது.
   ஆ) லக்கினத்தை குரு பார்ப்பது, ராசியை குரு பார்ப்பது.
   இ) லக்கினாதிபதி சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருப்பது.
2) 5,9ம் இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்
   5,9ம் இடத்ததிபதிகள் ஜாதகத்தில் வலுபெற்றிருக்க வேண்டும், அவிடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு. ஜாதகரின் பூர்வபுண்ணிய பலன் அதிகரித்து, நல்ல சுக செளக்கியங்களை அனுபவிப்பார்.
3) தன ஸ்தானமும் லாப ஸ்தானமும் அதன் அதிபதிகளும் பலம் பெற வேண்டும். இருவரும் பரிவர்த்தனை ஆகிருப்பது பிரபல யோகமாக க‌ருதப்படுகிறது.
4) சுகமான வாழ்வு பெற சுகஸ்தானதிபதியும், சுகஸ்தானமும் சிறப்பாக இருக்க வேண்டும்.கல்வி, சொந்தவீடு, வாகனம், நிம்மதியான வாழ்வு, தாய் குறித்த ஸ்தானம் ஆகையால் இந்த ஸ்தானம் நன்றாக அமைவது சிறப்பு.
5) ஒருவரது வேலை, தொழில் முயற்சி வெற்றி பெறவும், நல்ல விதமாக அமையவும் ஜீவன ஸ்தானம் நல்ல விதமாக அமைய வேண்டும். பத்தில் ஒரு பாவியாவது அமைய வேண்டும் என்ற் ஜோதிட மொழிப்படி, பத்தில் கிரகம் நிற்க்க சுபர் பார்வை சேர்க்கை பதமிடத்திற்க்கும், பத்தம்மதிபதிக்கும் ஏற்படுமாயின் வளமான வாழ்வு அமையும்.
6) நல்ல மனைவி அமைந்தால் தானே இல்லறம் இனிக்கும். அதற்க்கு கள‌த்திர ஸ்தானம், அதன் அதிபதி நல்லவிதமாக அமைய வேண்டும். களத்திர ஸ்தானத்தில் பகை நீசம் பெறும் கிரகங்கள் அமராதிருத்தலும், களத்திர ஸ்தானாதிபதி பகை நீசம் மறைவு பெறமலும், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமரமலும் இருந்தாலே போதுமானது, இல்லற வாழ்வு இனிக்கும்.

   வளமான வாழ்வு பெற ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி, தானாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, களத்திராதிபதி, பாகியாதிபதி, ஜீவனாதிபதி, லாபாதிபதி ஆகிய 8 பேரும் அந்த 8 இடங்களும் சிறப்பாக அமைய வேண்டும். ஆனால் அவ்வாறு அமைவது அபூர்வமே.
   அதனால் இதில் ஏதாவது 3, 4 இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருந்தாலே வளமான வாழ்வு அமையும்.

சிறந்த தன யோகங்கள்


கீழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும்.

1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும்.

2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன யோகம் ஏற்படும்.

3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டு (10 )அதிபதி இடம் பெற்றால், தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல‌ தன யோக அமைப்பு.

4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் .

5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம்.  (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும் )

6. லாப ஸ்தானத்தில் (11 ம் வீட்டில்) ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம் ஏற்படுத்தும்.

7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம்.

9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Saturday, July 2, 2011

குருசண்டாள யோகம்


      ஒருவருடைய ஜாதகத்தில் குருவுடன் ராகு சேர்ந்து நின்றால் அது குருசண்டாள யோகமாகும். இந்த யோகத்தில் குருவோ ராகுவோ ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் அபரிதாமாக இருக்கும்.
      இதில் ராகுவோடு சேர்ந்த குரு தன் தசா, புத்தி, அந்தரங்களில் கொடுக்கும் பலன்களை விட, குருவோடு சேர்ந்த ராகு மிக நல்ல பலன்களை (பூவுடன் சேர்ந்த நாறும் மனப்பது போல‌) கொடுப்பார்.
      இதில் குருவோ, ராகுவோ பகை, நீசம் பெற்று கெட்டுவிட்டால் யோகம் கெட்டுவிடும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியாக இருப்பார் அல்லது கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஏதோ பெயரளவிற்க்கு பக்தி செய்வார்.

சனி தெசை யாருக்கு யோகம் செய்யும்


      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி பாதகயோகாதிப்தி, தருமகருமாதிபதி ஆகிறார் எனவே இவர்களை சனி தசை செல்வச்சீமானாக்கும்.
அதிலும் கீழ்க்கண்டவாரு ஜாதகதில் கிரகங்கள் அமைந்தால் யோகம் தரும்.

      1) 9,10க்குடைய சனி 10ல் ஆட்சி பலத்துடன் இருப்பது. 9ல் ஆட்சி பலம் பெற்றாலும் பாதக ஸ்தானம் என்பதால் 10மிடமே சாலச் சிற‌ந்தது.
      2) சுக பூர்வபுண்ணியாதிபதிகளான சூரியன், புதன் கன்னியில் புதஅதித்ய யொகம் என்ற அமைப்பில் இருப்பது.
      3) கடகத்தில் குரு உச்சம் பெற்று நிற்பதுடன் யோகதிபதி சனி மற்றும் கோணாதிபதி புதன் ஆட்சி உச்ச பலம் பெற்று நின்றால் யோகம் பல மடங்கு இருக்கும்.
      இவர்களுக்கு சனி தசை மட்டுமல்லாது குரு தசை, புதன் தசை, இதர தசைகளில் சனி, குரு, புதன் புத்தி அந்தரங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
      இவர்கள் ஷேர் மார்கெட், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயரிப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி வாய்ப்புகள் இவர்களைத் தேடி வரும்.

நல்ல காலம் எப்போது?


      ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் சந்திர‌ன் வலுவாக இருந்தால் அவருக்கு 24 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அவருக்கு 28 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் புதன் பலமுடன் இருந்தால் அவருக்கு 32 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      குரு பலமாக‌ இருந்தால் அவருக்கு 16 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சுக்கிரன் பலமாக‌ இருந்தால் அவருக்கு 25 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சனி பலமாக‌ இருந்தால் அவருக்கு 35 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் ராகு பலமுடன் இருந்தால் அவருக்கு 42 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் கேது பலமுடன் இருந்தால் அவருக்கு 48 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      இவ்வாறு பலன் சொல்லும் போது கூடுதலாக கவனிக்க வேண்டியவை எதுவெனில்...........
      ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ பலமாக அமைந்தால், அந்த ஜதகத்தின் லக்கினாதிபதி, சந்திரலக்கினாதிபதி ஆகியோர்களின் நிலை அதாவது அவர்கள் பகை நீசம் பெற்று கெடாமல் இருந்தாலே போதும், ஜதகருக்கு நல்ல காலம் முன்னரே ஆரம்பித்து விடுவதை பார்க்க முடிகிறது.
      உதாரணத்திற்க்கு மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகர் ஒருவருக்கு கேது பலமாக அமைந்து, ஜதகத்தில் செவ்வாய் கெடாமல் இருந்து, பாதாகாதிபதி குரு 11ல் அமர்ந்ததால், அவர் குருவிற்குறிய 16 வயதில் +2 முடித்தவுடன், சின்ன சின்ன வேலையில் அமர்ந்து முன்னேறி, பின்பு செவ்வாய்க்குறிய 28 வயதில்  சொந்தமாக வீடு கட்டி, கார் வாங்கி நல்ல நிலையில் செட்டிலாகி விட்டார்.
      ராகு கேது பலமுடன் உள்ள ஜாதகர், லக்கினாதிபதி, சந்திர லக்கினாதிபதி, யோகாதிபதி, இந்த மூவரில் எவர் வலுவாக உள்ளனரோ அல்லது மூவரில் இருவரோ அல்லது மூவரும் வலுவாக உள்ளனர் என்றாலோ, எந்த கிரகத்திற்க்கு குறைந்த வயது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த வயதில் அவருக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிடும்.


Friday, July 1, 2011

பட்டதாரி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் புதன் இணைப்பு புதாஅதித்ய யோகம் எனப்படுகிறது. இந்த அமைப்பு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குகிறது. அதாவது குறைந்தபட்சம் அவர் பட்டதாரியாக இருப்பார், அத்துடன் இந்த அமைப்பிற்க்கு குருவின் சேர்க்கை, பார்வை மூலமாக சிறப்பான‌ சம்பந்தம் ஏற்பட்டால் அவர் பட்ட‌மேல்ப்படிப்பு, முனைவர் பட்டம், போன்றவைகளை பெறுவார்.

குழந்தை பாக்கியம் எப்போது?


      ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      ஆனால் பெண்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தை பார்ப்பதோடு, 5க்கு 5ம் இடமான 9ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      குரு பகவான் புத்திரகாரகன் ஆகிறார், அவருடைய நிலையை வைத்தும் புத்திர பலனைக் கானலாம்.
      ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், குருவும் நன்றாக அமையவில்லை என்றால், அதாவது பகை நீசம் பெற்று கெட்டு நின்றால் புத்திர பாக்கியம் நன்றாக அமைவதில்லை.
      புத்திர ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கம் அடைந்தால் புத்திர பலன் உண்டாவதில்லை அல்லது புத்திர இழப்பு ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும்(காரகா பாவ நாஸ்த்தி) புத்திர பலன் உண்டாவதில்லை. அது குருவினுடைய ஆட்சி உச்ச வீடாக இருந்தால் மாறாக‌ நற்பலன்கள் ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், இவர்கள் அம்சத்தில் நின்ற இடத்ததிபதி ஆகியோருடைய திசை புத்தி காலங்களில் புத்திர பலன் உண்டாகிறது.
      கோசார ரீதியாக குரு ராசியிலிருந்து 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது புத்திர பலன் உண்டாகிறது.
      ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள் புத்திர ஸ்தானமாக வந்தால் புத்திர வழியில் நற்பலன்கள் அமைவதில்லை.
      புத்திர ஸ்தானம் கடகமாக இருந்து அதில் சனி தனது நட்சத்திர காலில் வீற்றிருந்தால் நிறைய புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.
      புதன் 5ம் இடத்தில் இருந்தால் பெண் புத்திர பாக்கியம் ஏற்படும், அல்லது புத்திர பக்கியம் குறைவாக இருக்கும்.
      5க்குடையவர் எத்தனை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றுள்ளாரோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      அதே போல் 5ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      புத்திர ஸ்தானத்தில் ராகு, கேது வீற்றிருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் அமர்ந்த இடத்தில் இருந்து ஜென்ம லக்கினம் வரை எண்ணினால் எத்தனை ராசிகள் வருகிறதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      ஒருவருடைய ஜாதகத்தில், சூரியன், புதன், சனி சேர்க்கை பெற்று 11ம் இடத்தில் வீற்றிருந்தால் பல பிள்ளைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும்.
      இதில் எது மிக அதிக பலமோ அதன்படி பலன்கள் நடக்கும்.

சிறப்பான குரு யோகம்

மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு 5ல் உச்சம் பெற்றாலும், கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு லக்கினத்தில் உச்சம் பெற்றாலும் அதனை சிறப்பான குரு யோகம் என்று சொல்லலாம். இவர்கள் சிறு வயதிலேயே செல்வச் சீமானாகி விடுவர். விளம்பரப் படங்கள், சினிமாக்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களும், 15,16 வயதில் நடிகைகளாகி திரைஉலகில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், பெற்றோர், மூதாதையர் சொத்துக்களை வாழ்நாள் முழுவதும் சிறுவயதிலிருந்தே அனுபவிக்கும் யோகமும், சிறு வய‌திலேயே பரம்பரைத் தொழிலை கவனிகத் தொடங்குவதாலும், இந்த சிறப்பான குரு யோகம் செயல்படுகிறது.

லக்கினத்தில் சந்திரன்

லக்கினத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்தால் ஜாதகர் கவர்ச்சிகரமான தோற்றம், கற்பனை வளம் மற்றும் தெளிவான சிந்தனைகளை அருவியாகப் பொழியக்கூடிய பேச்சாற்றல் மிக்கவராகத் திகழ்வார். பேச்சில் உளறல் குழறல் இருக்காது