Saturday, August 28, 2021

திதி சூனியம்

 ஜோதிட உலகத்தில் இதுவரை யாரும் சொல்லப்படாத "திதி சூன்யம்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.


★"திதி சூனியம்" என்பது ஜோதிடத்தில் அனைத்தையும் விட மிக மிக முக்கியமானதாகும்.


★திதி சூனியம் தான் நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றாகும்.


★இந்த ஜென்மத்தில் நாம் செய்யக்கூடிய தவறுகளை சேகரித்து அதற்குத் தகுந்தாற்போல் நம்முடைய கர்மாவை சுமந்து கொண்டு அடுத்த பிறவியில் அதற்குத் தகுந்தவாறு நமக்கு தண்டனை கொடுக்கக் கூடியததே இந்த திதி சூன்ய வீடுகள் தான்.


★அதனால்தான் திதி சூன்யம் என்பது ஜோதிடத்தில் மிக மிக முக்கியமானதாகும்.


★இப்போது ஒவ்வொரு திதிக்கும் 2 திதி சூனியம் வீடுகள் இருக்கின்றன

அவற்றைப் பார்ப்போம்.


1.பிரதமை             ~   துலாம், மகரம்


2.துவிதியை.       ~   தனுசு,மீனம்


3.திருதியை.        ~   சிம்மம் மகரம்


4.சதுர்த்தி.            ~   ரிஷபம்,கும்பம்


5.பஞ்சமி               ~   மிதுனம்,கன்னி


6.சஷ்டி.                  ~  மேஷம், சிம்மம்


7.சப்தமி.                ~  கடகம்,தனுசு


8.அஷ்டமி              ~  மிதுனம்,கன்னி


9.நவமி.                  ~  சிம்மம்,விருச்சிகம்


10.தசமி.                 ~ சிம்மம்,விருச்சிகம்


11.ஏகாதசி.            ~ தனுசு, மீனம்


12.துவாதசி           ~ துலாம்,மகரம்


13.திரியோதசி.    ~ ரிஷபம்,சிம்மம்


14.சதுர்த்தசி.        ~  மிதுனம், கன்னி 

                                       தனுசு, மீனம்


★அம்மாவாசையில் மற்றும் பவுர்ணமி பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் கிடையாது.திதி சூன்ய வீடுகளும் கிடையாது.


★அமாவாசையில் பிறந்தவர்களுக்கு ராகு பகவானும்,பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு கேது பகவானும் திதி சூன்ய அதிபதிகள் ஆகும்.

மேலும் இவர்களைத்தான் இவர்கள் வணங்க வேண்டும்.


★திதி சூனியம் என்பது நாம் பிறந்து திதிக்கு எத்தனை வீடுகள் இருக்கிறதோ. அந்த வீடுகள் சூன்ய வீடுகளாக மாறி விடும்.அதாவது power cut ஆகி விடும்.no signal ஆக மாறிவிடும்.


★அதாவது நமது லக்னத்திலிருந்து திதி சூன்ய வீடுகள் எந்த பாவமாக வருகிறதோ அந்த 2 பாவங்களும் திதி சூனியமாகி விடும்


★அதாவது திதி சூன்ய வீடுகள் எத்தனாவது பாவமாக வருகிறதோ அந்த பாவம் சார்ந்து நாம் என்ன தவறு செய்தாலும்,என்ன பித்தலாட்டம் செய்தாலும்,பொய் சொன்னாலும்,அந்த பாவம் சார்ந்து நாம் என்ன தீய செயல்கள் செய்தாலும்.நாம் செய்த குற்றம் யாராலும் நிரூபிக்கப்பட முடியாது.யாராலும் நாம் செய்த தவறை கண்டுபிடிக்க முடியாது.சாட்சியும் இருக்காது.


★உதாரணமாக ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அவர் பிறந்த திதி "சஷ்டி" என்று வைத்துக் கொள்வோம்.


★சஷ்டி திதிக்கு" மேஷம்,சிம்மம்" என்ற 2 வீடுகள்  திதி சூன்ய வீடுகளாகும்.அதாவது 5 மற்றும் 9ம் பாவங்கள் ஆகும்.


★இந்த தனுசு லக்கின ஜாதகர் 5,9 இந்த இரண்டு பாவம் சார்ந்து என்ன தவறு செய்தாலும் என்ன பித்தலாட்டங்கள் செய்தாலும்  என்ன பொய் சொன்னாலும்.அந்தக் குற்றம் வெளி உலகத்தில் யாராலும் நிரூபிக்க பட முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு பாவங்களும் சூனிய வீடுகள் ஆகிவிட்டது.


★இந்த தனுசு லக்ன ஜாதகர். காதல் சார்ந்த விஷயத்திலும் அல்லது காமம் சார்ந்த விஷயத்திலும்   மற்றும் தொலைதூரப் பயணம் சார்ந்த விஷயத்திலும் என்ன தவறு செய்தாலும் என்ன பித்தலாட்டங்கள் செய்தாலும்  என்ன பொய் சொன்னாலும் அந்த குற்றம் யாராலும் நிரூபிக்க முடியாது.


★இதில் இருக்கும் nagative என்னவென்றால் திதி சூனியம் பாவங்கள் சார்ந்த நாம் என்ன தவறு செய்தாலும் நிரூபிக்க முடியாது என்பது போல.அந்த பாவம் சார்ந்து நமக்கு மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அந்த குற்றத்தையும் நம்மால் நிரூபிக்க முடியாது.


★இப்பொழுது 5ம் பாவம் திதி சூன்யமாக எடுத்துக் கொள்வோம்.5ம் பாவம் என்பது காதல் உறவு இதனை சார்ந்து மற்றவர்கள் நமக்கு துரோகம் செய்தாலும் அந்த குற்றத்தை நம்மால் நிரூபிக்க முடியாது.


★அதாவது திதி சூனியம் வீடுகள் சார்ந்து நாம் என்ன தவறு செய்கிறோமோ அதற்கு தண்டனையாக நமக்கு அந்த பாவம் சார்ந்து மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை நம்மால் நிரூபிக்க முடியாது.இதுதான் திதி சூன்யமாகும்.


★திதி சூனியம் பாவம் சார்ந்து நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது.மீறி தவறு செய்தால் அது நமது கர்மாவில் கலந்து நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு  காரணமாகிவிடும்.

அடுத்த பிறவியில் அதற்கு தகுந்தார்போல் நமக்கு தண்டனையும் கொடுத்துவிடும்.


★நமது லக்னத்திலிருந்து திதி சூனியம் வீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக சிம்ம லக்னத்தில் பிறந்தவரை எடுத்துக் கொள்வோம்.சப்தமி திதியில் பிறந்திருக்கிறார் என்றால் அவருக்கு கடகம் மற்றும் தனுசு இரண்டு வீடுகள் திதி சூன்ய வீடுகள் ஆகும்.சிம்ம லக்னத்திற்கு கடகம் மற்றும் தனுசு எத்தனாவது பாவமாக வருகிறது என்று பாருங்கள்.


★அந்த இரண்டு பாவங்கள் தான் திதி சூனியமாகும்.அதாவது 5 மற்றும் 12 பாவங்கள் வரும்.இப்படித்தான் எல்லா திதிகளுக்கும் கண்டுபிடிக்க வேண்டும்.


★அம்மாவாசை மற்றும் பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு இந்த சூட்சமம் பொருந்தாது.


★மேலும் திதி சூன்ய அதிபதியை அசுப கிரகங்களாகிய ராகு, கேது, சனி,செவ்வாய், சூரியன், போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ, தொடர்போ இருந்தால் நம்முடைய உறவுநிலைகள் கெட்டுவிடும்.

உறவுகள் மூலமாக நமக்கு கஷ்டங்களும் பிரச்சினைகளும் ஏற்படும்.


★உதாரணமாக பகவான் 

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிறந்த திதி நவமி திதி ஆகும்.நவமித் திதிக்கு அதிபதி சூரியனாகும்.


★அவருடைய ஜாதகத்தில் சூரியனை அசுப கிரகங்களாகிய சனியும் செவ்வாயும் உச்சமாக தொடர்பு கொண்டிருப்பார்கள்.


★இதனால்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி  தனது வாழ்க்கையில் உறவுகள் மூலமாக அனைத்து கஷ்டத்தையும் அனுபவித்தார்.


★ஸ்ரீராமருக்கு அனைத்து கஷ்டங்களும், பிரச்சினைகளும் மற்றும் வேதனைகளும் உறவுகள் மூலமாக தான் ஏற்பட்டது.


★மேலும் அவரவர் பிறந்த திதிக்கு அதிபதியை ஒன்றுக்கு மேற்பட்ட அசுப கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ தொடர்போ இருக்கிறதா என்று பாருங்கள்.அப்படி இருந்தால் உறவுகள் சார்ந்த விஷயத்தில் மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.


★இல்லை என்றால் பிரச்சினைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நமக்கு உறவுகள் மூலம் வந்து விடும்.


★இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நாம் கவனமாக இருந்து கொண்டால் ஓரளவுக்கு சமாளித்து விடலாம்.


★பரிகாரத்திற்கு நாம் பிறந்த திதி வேலை செய்யாது.இந்த பூமியில் நம்முடைய ஆத்மா முதன்முதலில் ஜனனம் எடுத்த கரு உருவான திதி தான் வேலை செய்யும்.


★எந்த திதியில் நம்முடைய முதல் கரு உருவானது என்பதை கண்டுபிடிக்க நாம் பிறந்த திதியில் இருந்து 9 திதிகளை கழித்தால் வரும் திதி தான் நம்முடைய தாயின் கர்ப்பப்பையில்   நாம் உருவான திதியாகும்.


★உதாரணமாக தசமி திதியில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து 9 திதிகளை கழித்துக் கொண்டால் பிரதமை திதி வரும்.இந்த திதியில் தான் இவருடைய கரு முதன்முதலில் உருவானதாகும்.


★திரியோதசி திதியில் பிறந்தவர்கள் எடுத்துக் கொள்வோம்.இவர்களின் கரு உருவான திதி சதுர்த்தி திதி ஆகும்.


★நம்முடைய ஆத்மா உருவான திதிக்கு எந்த கிரகம் அதிபதியோ அந்த கிரகத்திற்கு தான் நாம் பரிகாரம் செய்ய வேண்டும்.

அப்போதுதான் பரிகாரம் வேலை செய்யும்.இல்லையென்றால் பரிகாரம் வேலை செய்யாது.


★நாம் பிறந்த திதியும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதில் இருந்து ஒன்பது திதிகளை கழிக்க வேண்டும்.

Friday, August 6, 2021

சிறந்த கல்வி தரும் யோகங்கள்

 சிறந்த கல்வி தரும் யோகங்கள்


1, சங்க யோகம் :- லக்கனாதிபதி பலம் பெற்று 5 --- 6 ஆம் அதிபதிகள ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுவது.


2 , திரியோசன யோகம் :- சூரியன்,  சந்திரன்,  செவ்வாய் ஒன்றுக்கொன்று திரிகோணம் பெறுவது.


3, சரஸ்வதி யோகம் :- குரு + சுக்கிரன்,  

1 -- 2 -- 4 -- 5 --- 7 --- 9 --- 10 இல் இருந்து குரு பலம் பெறுவது.


4 , புத்திமாதுரு யோகம் :- 5 ஆம் அதிபதி சுபனாக சுபருடன் சம்பந்தப்படுவது.


5 , புத்தி யோகம் :- 5 ஆம் அதிபதி சுபனாக அவர் இருந்த நவாம்சாதிபதி சுபராக ராசியில் சுபர் சம்பந்தம் பெறுவது.


6, பலமொழிகளை அறிந்தவர் :- சூரியனுக்கு 12 இல் செவ்வாய்,  குரு இருப்பது.


7 , திரிகால ஞானயோகம் :- குரு பலம் பெற்று நவாம்சத்திலும் பலம் பெற்று சுபர் சம்பந்தம் பெறுவது.

யோகி கணிதம்

 யோகி அவயோகி கணிதம்..!


சோதிடத்தில் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் யோகி/அவயோகி உண்டு, இவ்விரண்டை ஜாதகத்தில் எவ்வாறு கணிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் சாரம்சம்..!


எந்த ஜாதகம் என்றாலும் காலபுருஷ லக்னம் மேஷத்தில் இருந்து மட்டுமே யோகியை கணிக்க வேண்டும், சூரியன் நின்ற தீர்க்கரேகை+சந்திரன் தீர்க்கரேகை+93.20 டிகிரி இதனை காலபுருஷ லக்னத்தில் இருந்து கணிதம் செய்தால் யோக நட்சத்திரத்தை கணிக்கலாம், அந்த நட்சத்திராதிபதியே யோகி..!


உதாரணமாக: சூரியன் கும்பத்தில் 15.11 டிகிரியில் என்றால் மேஷத்தில் இருந்து 315.11 டிகிரி ஆகும், சந்திரன் கும்பத்தில் 2 டிகிரியில் என்றால் மேஷத்தில் இருந்து 302 டிகிரி ஆகும், இவ்விரண்டையும் கூட்டினால் (315.11+302) 617.11 டிகிரி வரும், இப்பொழுது இதனுடன் 93.20 டிகிரியை கூட்டினால் 710.31 டிகிரி ஆகும், இது முழு ஜாதக கட்டத்தின் 360 டிகிரியை விட அதிகம் என்பதனால் 710.31-360 கழித்தால் 350.31 டிகிரி ஆகும், இது சரியாக மீனத்தில் 20.31 டிகிரியில் ரேவதி நட்சத்திரத்தில் விழும், ரேவதி நட்சத்திரம் யோக நட்சத்திரமாகவும், ரேவதி நட்சத்திராதிபதி புதன் யோகியாகவும் வருவார், இதில் போலி யோகி அந்த நட்சத்திரம் நின்ற வீட்டின் அதிபதி குரு ஆவார், போலி யோகி என்பவர் யோகிக்கு 2 ம் நிலை ஆவார்..!


அவயோகி என்பவர் ஜாதகருக்கு தீய கர்ம பலன்களை வழங்குபவர், இவரை யோக நட்சத்திரம் விழுந்த டிகிரியில் இருந்து 186.40 டிகிரி கூட்டி கணிக்க வேண்டும்..!


உதாரணமாக: மேலே யோகியானவர் ரேவதி நட்சத்திரம் என்றாகி அது மீனத்தில் 20.31 டிகிரியிலும் காலபுருஷ லக்னத்தில் இருந்து 350.31 டிகிரியாகவும் உள்ளது அல்லவா, ஆக இப்பொழுது இதனுடன் 186.40 டிகிரியை கூட்டினால் 537.11 வரும், இந்த எண்ணிக்கை முழு ராசிகட்ட டிகிரி 360 க்கு மேல் உள்ளதால் 537.11 ல் 360 கிழிக்க வேண்டும் (537.11-360)= 177.11 டிகிரி அவயோகி டிகிரியாகும், இது சரியாக கன்னி ராசியில் 27.11 டிகிரியில் சித்திரை நட்சத்திரத்தில் விழுகிறது, ஆகவே இந்த ஜாதகருக்கு அவயோக நட்சத்திரம் சித்திரை, அவயோகி செவ்வாய் ஆவார்..!


யோக நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்கள் யோக பலனையும், அவயோக நட்சத்திரத்தில் திரிகோண நட்சத்திரங்கள் அவயோக பலனையும் செய்யும், மேலே கூறிய உதாரண கிரகநிலைக்கு இதனை ஒப்பிட்டால், யோக நட்சத்திரத்தில் கோண நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, அவயோக நட்சத்திரத்தின் கோண நட்சத்திரங்கள் அவிட்டம், மிருகசிரீஷம் ஆகும், மீண்டும் சந்திப்போம்..!


மாரகாதிபதி நட்சத்திரம்

 எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு மாரகாதிபதி நட்சத்திரம் லக்னத்தில் ஒளிந்திருக்கும் ..

உறவுகள்

💥ஒரு மணிதன் எதனால் பலமாகிறான் என்றால் அவனை சார்ந்த உறவுகளே கூட்டு குடும்பத்தில் வாழ நிறைய பேருக்கு பிடிக்கும் ஆனால் ஒரு சில காரணங்களால் தனி குடித்தனம் சென்று உறவுகளை சிலர் இழக்கிறார்கள்.

💥சிலர் தனி மனித பிடிவாதம் ஈகோ வினால் உறவுகளை இழக்கிறார்கள்
உறவுகள்தான் ஒருவரின் பலமே.

💥அந்த உறவுகளை ஜாதகத்தில் சொல்லி வைத்துள்ளார்கள் ஒரு ஜாதகத்தில் கட்டத்தில் 12ல் எல்லா உறவுகளையும் ஜாதகத்தில் காணலாம் ஆனால் 
7 பாவகங்களை உறவுகளின் முதன்மை பாவகங்களாக அமைத்து இருக்கிறார்கள்.

 💥3 மிடம் இளைய சகோதர ஸ்தானத்தை குறிக்கிறது அதுவே தைரியவீரிய  ஸ்தானமாகவும் விளங்குகிறது தம்பிஉடையான் படைக்கஞ்‌‌‌சான் 

💥4 மிடம் தாயாரின் ஸ்தானத்தை குறிக்கிறது இதுவே சுகஸ்தானமாகவும் வீடு வாகனம் கொடுக்கும் ஸ்தானமாகவும்  விளங்குகிறது தாய்தான் தன் மகன் சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பார் 

💥5 மிடம் புத்திர ஸ்தானமாக விளங்குகிறது தன் பூர்வ புண்ணியத்தை சொல்லும்  பிள்ளைகள் மகனோ மகளயோ குறிக்கிறது.

💥6 மிடம் தாய் மாமன் ஸ்தானம்
தாய்ஸ்தானத்திற்க்கு சகோதரஸ்தானமாக வருகிறது மலை ஏறிப்போனாலும் மாமன் மச்சான் உறவு தேவை .

💥7மிடம்  மனைவியை குறிக்கும் ஸ்தானம் நண்பர்களையும் ஏழாமிடமே சொல்கிறது கணவன் மனைவி நண்பர்களைபோல் வாழனும்னு 
வாழ்த்து வாங்க‌.

💥9 மிடம் தந்தையை குறிக்கும்
 பாக்கிய ஸ்தானமும் அதுவே ஆனால் சிலருக்கு தந்தை அமைவது பாக்கியமாகவும் சில லக்னங்களுக்கு
 பாதகாதிபதியாகவும்  அமைவது அவரவர் பாக்கியமே 
 தாயாரின் ஸ்தானத்திற்க்கும்  ஒன்றுக்கொன்று மறைவாக வருகிறது .

💥11 மிடம் மூத்த சகோதர ஸ்தானத்தை குறிக்கிறது  லாபத்தை குறித்தாலும் 
சில லக்னங்களுக்கு சகோதரன் பாதகம் செய்வதையும் பார்க்கிறோம் 
உறவுகளை சொல்லும் பாவகங்களின் பலன் முழுவதுமாக யாருக்கும் கிடைப்பதில்லை தம்பி தங்கை உறவிருந்தால் சிலருக்கு தாய்  மாமன் உறவு கிடைக்காது இப்படி எல்லா உறவுகளும் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காது .

உறவுகளை 3,4,5,6,7,9,11சொல்லும் பாவகங்களின் அதிபதி லக்னத்திற்க்கோ லக்னாதிபதிக்கோ மறைந்தால் அந்த உறவுகளால் எந்த பலனும் இல்லை.

Wednesday, July 7, 2021

குரு+ புதன் இணைவு

 உ

குரு+ புதன் இணைவு எனில்..


குருவின் 5, 7, 9 ம் பாா்வை புதனுக்கு..


10ல் புதன் அமா்ந்து குருவின் பாா்வை புதனுக்கு...


10ல் சூரியன்+ புதன்.. இவற்றுக்கு குரு,பாா்வை..


ஜாதகர்...


ஆசிரியர் பணி... ஜோதிட ஆசிரியர்,  அரசு ஆசிரியர்..

Tuesday, June 29, 2021

மாந்தி கணிதம்

ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாறும், பகல், இரவு பொழுதுகளுக்கு தகுந்தவாறும்  மாறுபடும். அதை கணிப்பது எப்படி என பார்ப்போம்.

பகல் நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை பகல் நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும். உதய நாழிகை என்பது காலை சூரிய உதயத்திலிருந்து கணிக்கப்படுவதாகும்.

எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 – 2 = 26. எனவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே திங்கள் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 =18.எனவே செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.

புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே புதன் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.

வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10.எனவே வியாழக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.

வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.

சனிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே சனிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.

பகல் நேர மாந்தி உதய நாழிகைகள்

ஞாயிற்றுக்கிழமை - 26 நாழிகை

திங்கள்கிழமை - 22 நாழிகை

செவ்வாய்க்கிழமை - 18 நாழிகை

புதன் கிழமை - 14 நாழிகை

வியாழக்கிழமை - 10 நாழிகை

வெள்ளிக்கிழமை - 6 நாழிகை

சனிக்கிழமை - 2 நாழிகை

இரவு நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை இரவு நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும்.

எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.

திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே திங்கள் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.

புதன் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 - 2 = 26.எனவே புதன் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.

வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே வியாழக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.

வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 = 18.எனவே வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.

சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே சனிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.

இரவு நேர மாந்தி உதய நாழிகைகள்

ஞாயிற்றுக்கிழமை - 10 நாழிகை

திங்கள்கிழமை - 6 நாழிகை

செவ்வாய்க்கிழமை - 2 நாழிகை

புதன் கிழமை - 26 நாழிகை

வியாழக்கிழமை - 22 நாழிகை

வெள்ளிக்கிழமை - 18 நாழிகை

சனிக்கிழமை - 14 நாழிகை

மாந்தி ஸ்புடம் கணிக்கும் முறை

மாந்திஸ்புடம் என்பது  ஒரு குறிப்பிட்ட தினத்தில் பகல் நேரத்திற்கு ஒன்றாகவும், இரவு நேரத்திற்கு வேறாகவும் இருக்கும். 

 1 நாள் = 60 நாழிகை = 360 பாகை

 1 பகல் = 30 நாழிகை = 180 பாகை

1 இரவு = 30 நாழிகை = 180 பாகை

பகல் நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , பகல் நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே பகல் நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி அத்துடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.

பகல் நேர மாந்தி ஸ்புடம் = (பகல் நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்)

எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.

ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (26 * 6) =156 

      =156 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

திங்கள்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (22* 6) = 132

=132 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (18*6)= 108 நாழிகை

=108 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

புதன் கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (14*6)= 84

= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

வியாழக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (10*6)= 60

= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (6*6)=36

= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

சனிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12

=12 + (அன்றைய சூரிய ஸ்புடம்)


இரவு நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , இரவு நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால்  வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே இரவு நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால்  வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.

இரவு நேர மாந்தி ஸ்புடம் = (இரவு நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (10 * 6) = 60

      = 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

திங்கள்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (6* 6) = 36

= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12 நாழிகை

= 12 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

புதன் கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (26*6) = 156

= 156 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

வியாழக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (22*6) = 132

= 132 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (18*6) = 108

= 108 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

சனிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (14*6) = 84

= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180

மேற்கண்டவாறு கணித்து வரும் பாகைகள் 360 க்கு மேல் இருந்தால், கணித்து வந்த பாகைகளிலிருந்து 360 பாகைகளை கழிக்க வேண்டும்.

Monday, June 21, 2021

12 ஸ்தானங்களில் செவ்வாய் எனில்

1ல் செவ்வாய் எனில்

ஜாதகர் எதிலும் வெற்றி பெற,வேண்டும் என்ற எண்ணம் உடையவா்.. அதற்கான"உழைப்பும் இருக்கும்.


2ல் செவ்வாய் எனில்

ஜாதகர் பேச்சு மூலம்,எந்த விசயத்தையும்  முயற்சி செய்வாா். வெற்றி கிடைக்கும்.


3ல் செவ்வாய் எனில் செயலில் தைரியம் அதிகமாக இருக்கும்.. துணிச்சல் அதிகம்.. பின்விளைவுகறை பற்றி யோசிக்க மாட்டாா்.


4ல் செவ்வாய் எனில் ஜாதகர் ,வீடு, மனை , பெற முயற்சி,செய்வாா்.. தனது தாய்க்காக முயற்சி செய்வாா்


5ல் செவ்வாய் எனில் ஜாதகர் தனது முயற்சிகள் அனைத்தும் குழந்தைகளுக்காக இருக்கும்...


6மிடம் செவ்வாய் எனில்..

ஜாதகர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவாா்..


7ல் செவ்வாய் எனில்.. தனது நண்பா்களுக்காக, வாழ்க்கைத்துணைக்காக முயற்சிகள் செய்வாா்..


8ல் செவ்வாய் எனில் ஜாதகர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க முயற்சி செய்வாா்..


9ல் செவ்வாய்.. தனது தந்தை,  ஆசிரியருக்கு.. கோவில் திருப்பணி செய்ய முயற்சி செய்வாா்..


10ல் செவ்வாய்.. தனது பெற்றோருக்கு கடமையை , கர்மாவை நிறைவேற்ற ஜாதகர் முயற்சி செய்வாா்


11ல் செவ்வாய்.. தனது லாபத்தை பெற.. மூத்தோருக்காக முயற்சி செய்வாா்..


12ல் செவ்வாய்.. மருத்துவ செலவுகளை"குறைக்க முயற்சி செய்வாா்

Tuesday, June 8, 2021

மகளின் வாழ்க்கை யை பற்றிய அக்கறை

பொது பதிவு


லக்னத்தில் 5ல் புதன் இருந்தால் உங்கள் மகளின் சிந்தனை தான்.. எப்போதும்


மகளின் வாழ்க்கை யை பற்றிய அக்கறை அதிகம்

வேகமாக உணவு உண்ணக்கூடியவா்

 உ

வாக்குஸ்தான அதிபதியுடன் செவ்வாய்.. இணைவு..


சந்திரன் + செவ்வாய்  இணைவு...


செவ்வாய் + ராகு..


சந்திரன்+ ராகு...


செவ்வாய்+ சந்திரன்+ ராகு...


ஜாதகர் வேகமாக உணவு உண்ணக்கூடியவா்... பொறுமை இருப்பதில்லை

Thursday, June 3, 2021

சந்திர மங்கள யோகம்

சந்திரன்+செவ்வாய்


ஜனன ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் அல்லது சந்திரன் செவ்வாயை தொட்டால்,


1.சந்திர மங்கள யோகம்.

2.நல்ல பதவி, பொருளாதாரம்,

     நிர்வாக திறமை இருக்கும்.

3.தாயாருக்கு சொத்துண்டு.

4.தாயாருக்கு கோபம் அதிகம்.

5.வாகன பயணம் விரும்புவர் 

       அல்லது அதிகம் இருக்கும்.

6.ஜாதகருக்கு தாயார் முன்னின்று

  திருமணம் செய்து வைப்பார்கள்.

Sunday, May 30, 2021

குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை

 திருவாதிரை, சுவாதி, சதயம் .


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது முதல் திசையாக ராகு திசை சந்திப்பார்கள் ..குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகு தசையின் சில விசித்திர அல்லது முரண்பாடான விஷயங்களை பார்ப்போம்.


1.குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை 3,6,10,11.ஆகிய இடங்களில் இருந்து தசா நடந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் அதிகமான படிப்பில் ஈடுபாடு, பிறமொழி பயில்தல் ,இசையில் ஆர்வம். என சுபத்துவம் ஆன விஷயங்கள். நடக்கும் பொழுது ஜாதகரின் பெற்றோர் வழியில் ஏதேனும் உயிர் காரகத்துவ சம்பந்தமான விஷயங்களில் பாதிப்பை தருகிறார்.


2.சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே படிப்பில் மந்தமாக /ஞாபகத் திறன் குறைவாக. படிப்பில் கை வைத்து விடுகிறார்.


3.அதிகபடியான அசைவ உணவை விரும்ப வைக்கிறார்.

4.நாத்திகம் பேச வைக்கிறார்.

5.மர்மமான, (Thriller movie),பேய் சம்பந்தமான படங்கள், அதிகமாக சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் ஆகியவற்றை விரும்பி பார்க்க வைக்கிறார்.

6.விளையாட்டுகளில், குத்துச்சண்டை, கால்பந்து போன்ற துரிதமான விளையாட்டுகளின் மீது ஆர்வம்.

7.எதையுமே ஒரு அலட்சியப்படுத்துதல் உறவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும்,

8.உயிர் காரகத்துவம் ஆன விஷயங்கள் தந்தை தந்தை வழி தாத்தா உறவுகள், தாய் தாய் வழி தாத்தா உறவுகளின்  கை வைக்கிறார் (உறவு இழத்தல்) .


9.இன்னும் சில குழந்தைகளுக்கு இளம் வயதில் காதல் மோகம். (அதாவது 15 லிருந்து 23 வயதிற்குள்) ஏற்பட வைத்து அதற்குள் படிப்பில்  கவனம் சிதற வைக்கிறார்.

10.வெகு சிலருக்கு குழந்தைகளுக்கு வரக்கூடிய ராகு தசா பெற்றோரை பாதிக்கிறது. குறிப்பாக தந்தைக்கு பாதிப்பு.

11.கனவு பயம்.

12.அதிகமாக விஷப்பூச்சிகள், அரவம், போன்றவற்றை கனவிலும் நேரிலும் காணுதல். 


மேற்கூறிய அனைத்தும் குழந்தைப்பருவத்தில் வரக்கூடிய ராகு தசையில் சந்திக்கக்கூடிய பொதுபலன்கள்.

Wednesday, May 26, 2021

"ராகு கேது" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.

  ★இந்த ஜகத்தை ஆளக் கூடிய சக்தி படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள். ★ராகு கேது நிழல் கிரகங்கள் கிடையாது நிழல் கதிர்கள். ★ராகு பகவான் கரு நாகப்பாம்பு,கேது பகவான் செம்பாம்பு, செம் பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன் என்று கேதுவிற்கு ஒரு ஸ்லோகமே உள்ளது. ★பரிபூரண சூரியகிரகணம் ராகு,பரி பூர்ண சந்திர கிரகணம் கேது, ★பரிபூர்ண அமாவாசை ராகு, பரி பூரண பௌர்ணமி கேது, ★சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் தான் ராகுவும், கேதுவும் ★ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே. ★அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே, ★அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ★ராகு வைரஸை பரப்பும் கூடிய வைரஸ்,மிருதன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல,வைரஸை பரப்ப கூடிய வைரஸ். ★கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ் அதாவது நாயகன் சினிமாவில் வரும் கமலஹாசன் போல Negativeஐ அழிக்கக்கூடிய Nagative. ★ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம். ★ஏன் பில்லி,சூனியம் ,ஏவல், மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அம்மாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு. ★ஏனென்றால் அம்மாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.அதனால் தான் பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்வார்கள் ராகுவின் நாளிலேயே செய்கிறார்கள். ★கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம்.அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகை செடிகள் அல்லது மூலிகை பொருட்கள் பரிக்க செல்வதும் செய்கிறார்கள். ★பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும்.அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள். ★ராகு நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான். ★ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது. ★நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு.உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது. ★கேது தான் முக்திக்கு அதிபதி.நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவரே கேது பகவான் தான். ★கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது. ★கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது. ★ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும். ★ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான் வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு ஜூனரம் என்பதே கிடையாது எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ★ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்ளும். ★அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்த வர்களின் உடம்பிற்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது.அந்தத் தீராத ஆசை உடைய ஆவிகள் தான் ராகு பகவான். ★அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ★கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம். ★நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. *மூலாதாரம் *சுவாதிஷ்டானம் *மணிப்பூரகம் *அனாஹதம் *விசுக்தி *ஆக்நீயா *சகஸ்ராரம். ★இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.அதாவது ★மூலாதாரம் மூலம் நட்சத்திரம். ★சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம். ★மணிப்பூரகம் மகம் நட்சத்திரம். ★அனாஹதம் சதயம் நட்சத்திரம். ★விசுக்தி அஸ்வினி நட்சத்திரம். ★இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது. ★இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு அல்லது Connectionஐ ஏற்படுத்துபவர்களே இராகு கேது தான். ★ஏன் செய்வினை செய்பவர்கள் ஏவல், பில்லி ,சூனியம், மாந்திரீகம் செய்பவர்கள் நமது உச்சந் தலை முடியையும்.கால் நகத்தையும் கேட்கிறார்கள். ★ஏனென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நீக்குவதற்கு அதனால்தான் அமாவாசையில் இது எல்லாம் செய்கிறார்கள். ★அம்மாவாசை செய்தால் தான் இதையெல்லாம் செய்ய இயலும்.அல்லது பலிக்கும். ★அதனால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே இராகு கேதுவின் கையில் உள்ளது. ★இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர். ★அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் முதல் நட்சத்திர மண்டலம் "அஸ்வினி" என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்"மகம்" நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் "மூலம்' நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது. ★இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

Wednesday, April 21, 2021

Top 10 கோடீஸ்வர யோகம்.

1. 10ம் அதிபதி இருக்கும் நவாம்ச அதிபதி ராசியில் 11அதிபதியுடன் 11ல் இருப்பது.


2. 1, 9 ம் அதிபதிகள் இணைந்து வலுப்

பெற்று 11ல் இருப்பது.


3. 10ம் அதிபதி இருக்கும் நவாம்ச அதிபதி ராசியில் 2ம் பாவத்தில் இருப்பது.


4. சந்திரன் வலுப்பெற அதற்கு 12ல்

ராகு இருப்பது மகாசக்தி யோகம்.


5. லக்னாதிபதி 5 கோள்களால் பார்க்கப்படுவது.


6. உச்சம் பெற்ற கோள் சரராசியில் இருப்பது.


7. லக்னம் லக்னாதிபதி சரராசியில் இருந்து சரராசிக்கோள்களால் பார்க்

கப்படுவது.


8. நான்கு சரராசிகளில் யோகம் தரும் கோள்கள் இருப்பது.


9. 1, 4அதிபதிகள் மற்றும் சுக்கிரன், சந்திரனுக்கு 4ம் அதிபதி ஆகியவை இணைந்திருப்பது.


10. தர்ம கர்மாதிபதிகள் 9, 10ம் அதிபதி

கள் 9, 10ல் சுபபலமாய் அமர்ந்து பாபர்

கள் சேர்க்கை பார்வையில்லாமல் இருப்பது.