💥ஒரு மணிதன் எதனால் பலமாகிறான் என்றால் அவனை சார்ந்த உறவுகளே கூட்டு குடும்பத்தில் வாழ நிறைய பேருக்கு பிடிக்கும் ஆனால் ஒரு சில காரணங்களால் தனி குடித்தனம் சென்று உறவுகளை சிலர் இழக்கிறார்கள்.
💥சிலர் தனி மனித பிடிவாதம் ஈகோ வினால் உறவுகளை இழக்கிறார்கள்
உறவுகள்தான் ஒருவரின் பலமே.
💥அந்த உறவுகளை ஜாதகத்தில் சொல்லி வைத்துள்ளார்கள் ஒரு ஜாதகத்தில் கட்டத்தில் 12ல் எல்லா உறவுகளையும் ஜாதகத்தில் காணலாம் ஆனால்
7 பாவகங்களை உறவுகளின் முதன்மை பாவகங்களாக அமைத்து இருக்கிறார்கள்.
💥3 மிடம் இளைய சகோதர ஸ்தானத்தை குறிக்கிறது அதுவே தைரியவீரிய ஸ்தானமாகவும் விளங்குகிறது தம்பிஉடையான் படைக்கஞ்சான்
💥4 மிடம் தாயாரின் ஸ்தானத்தை குறிக்கிறது இதுவே சுகஸ்தானமாகவும் வீடு வாகனம் கொடுக்கும் ஸ்தானமாகவும் விளங்குகிறது தாய்தான் தன் மகன் சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்
💥5 மிடம் புத்திர ஸ்தானமாக விளங்குகிறது தன் பூர்வ புண்ணியத்தை சொல்லும் பிள்ளைகள் மகனோ மகளயோ குறிக்கிறது.
💥6 மிடம் தாய் மாமன் ஸ்தானம்
தாய்ஸ்தானத்திற்க்கு சகோதரஸ்தானமாக வருகிறது மலை ஏறிப்போனாலும் மாமன் மச்சான் உறவு தேவை .
💥7மிடம் மனைவியை குறிக்கும் ஸ்தானம் நண்பர்களையும் ஏழாமிடமே சொல்கிறது கணவன் மனைவி நண்பர்களைபோல் வாழனும்னு
வாழ்த்து வாங்க.
💥9 மிடம் தந்தையை குறிக்கும்
பாக்கிய ஸ்தானமும் அதுவே ஆனால் சிலருக்கு தந்தை அமைவது பாக்கியமாகவும் சில லக்னங்களுக்கு
பாதகாதிபதியாகவும் அமைவது அவரவர் பாக்கியமே
தாயாரின் ஸ்தானத்திற்க்கும் ஒன்றுக்கொன்று மறைவாக வருகிறது .
💥11 மிடம் மூத்த சகோதர ஸ்தானத்தை குறிக்கிறது லாபத்தை குறித்தாலும்
சில லக்னங்களுக்கு சகோதரன் பாதகம் செய்வதையும் பார்க்கிறோம்
உறவுகளை சொல்லும் பாவகங்களின் பலன் முழுவதுமாக யாருக்கும் கிடைப்பதில்லை தம்பி தங்கை உறவிருந்தால் சிலருக்கு தாய் மாமன் உறவு கிடைக்காது இப்படி எல்லா உறவுகளும் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காது .
உறவுகளை 3,4,5,6,7,9,11சொல்லும் பாவகங்களின் அதிபதி லக்னத்திற்க்கோ லக்னாதிபதிக்கோ மறைந்தால் அந்த உறவுகளால் எந்த பலனும் இல்லை.
No comments:
Post a Comment