Friday, August 6, 2021

யோகி கணிதம்

 யோகி அவயோகி கணிதம்..!


சோதிடத்தில் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் யோகி/அவயோகி உண்டு, இவ்விரண்டை ஜாதகத்தில் எவ்வாறு கணிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் சாரம்சம்..!


எந்த ஜாதகம் என்றாலும் காலபுருஷ லக்னம் மேஷத்தில் இருந்து மட்டுமே யோகியை கணிக்க வேண்டும், சூரியன் நின்ற தீர்க்கரேகை+சந்திரன் தீர்க்கரேகை+93.20 டிகிரி இதனை காலபுருஷ லக்னத்தில் இருந்து கணிதம் செய்தால் யோக நட்சத்திரத்தை கணிக்கலாம், அந்த நட்சத்திராதிபதியே யோகி..!


உதாரணமாக: சூரியன் கும்பத்தில் 15.11 டிகிரியில் என்றால் மேஷத்தில் இருந்து 315.11 டிகிரி ஆகும், சந்திரன் கும்பத்தில் 2 டிகிரியில் என்றால் மேஷத்தில் இருந்து 302 டிகிரி ஆகும், இவ்விரண்டையும் கூட்டினால் (315.11+302) 617.11 டிகிரி வரும், இப்பொழுது இதனுடன் 93.20 டிகிரியை கூட்டினால் 710.31 டிகிரி ஆகும், இது முழு ஜாதக கட்டத்தின் 360 டிகிரியை விட அதிகம் என்பதனால் 710.31-360 கழித்தால் 350.31 டிகிரி ஆகும், இது சரியாக மீனத்தில் 20.31 டிகிரியில் ரேவதி நட்சத்திரத்தில் விழும், ரேவதி நட்சத்திரம் யோக நட்சத்திரமாகவும், ரேவதி நட்சத்திராதிபதி புதன் யோகியாகவும் வருவார், இதில் போலி யோகி அந்த நட்சத்திரம் நின்ற வீட்டின் அதிபதி குரு ஆவார், போலி யோகி என்பவர் யோகிக்கு 2 ம் நிலை ஆவார்..!


அவயோகி என்பவர் ஜாதகருக்கு தீய கர்ம பலன்களை வழங்குபவர், இவரை யோக நட்சத்திரம் விழுந்த டிகிரியில் இருந்து 186.40 டிகிரி கூட்டி கணிக்க வேண்டும்..!


உதாரணமாக: மேலே யோகியானவர் ரேவதி நட்சத்திரம் என்றாகி அது மீனத்தில் 20.31 டிகிரியிலும் காலபுருஷ லக்னத்தில் இருந்து 350.31 டிகிரியாகவும் உள்ளது அல்லவா, ஆக இப்பொழுது இதனுடன் 186.40 டிகிரியை கூட்டினால் 537.11 வரும், இந்த எண்ணிக்கை முழு ராசிகட்ட டிகிரி 360 க்கு மேல் உள்ளதால் 537.11 ல் 360 கிழிக்க வேண்டும் (537.11-360)= 177.11 டிகிரி அவயோகி டிகிரியாகும், இது சரியாக கன்னி ராசியில் 27.11 டிகிரியில் சித்திரை நட்சத்திரத்தில் விழுகிறது, ஆகவே இந்த ஜாதகருக்கு அவயோக நட்சத்திரம் சித்திரை, அவயோகி செவ்வாய் ஆவார்..!


யோக நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்கள் யோக பலனையும், அவயோக நட்சத்திரத்தில் திரிகோண நட்சத்திரங்கள் அவயோக பலனையும் செய்யும், மேலே கூறிய உதாரண கிரகநிலைக்கு இதனை ஒப்பிட்டால், யோக நட்சத்திரத்தில் கோண நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, அவயோக நட்சத்திரத்தின் கோண நட்சத்திரங்கள் அவிட்டம், மிருகசிரீஷம் ஆகும், மீண்டும் சந்திப்போம்..!


No comments:

Post a Comment