திருவாதிரை, சுவாதி, சதயம் .
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது முதல் திசையாக ராகு திசை சந்திப்பார்கள் ..குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகு தசையின் சில விசித்திர அல்லது முரண்பாடான விஷயங்களை பார்ப்போம்.
1.குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை 3,6,10,11.ஆகிய இடங்களில் இருந்து தசா நடந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் அதிகமான படிப்பில் ஈடுபாடு, பிறமொழி பயில்தல் ,இசையில் ஆர்வம். என சுபத்துவம் ஆன விஷயங்கள். நடக்கும் பொழுது ஜாதகரின் பெற்றோர் வழியில் ஏதேனும் உயிர் காரகத்துவ சம்பந்தமான விஷயங்களில் பாதிப்பை தருகிறார்.
2.சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே படிப்பில் மந்தமாக /ஞாபகத் திறன் குறைவாக. படிப்பில் கை வைத்து விடுகிறார்.
3.அதிகபடியான அசைவ உணவை விரும்ப வைக்கிறார்.
4.நாத்திகம் பேச வைக்கிறார்.
5.மர்மமான, (Thriller movie),பேய் சம்பந்தமான படங்கள், அதிகமாக சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் ஆகியவற்றை விரும்பி பார்க்க வைக்கிறார்.
6.விளையாட்டுகளில், குத்துச்சண்டை, கால்பந்து போன்ற துரிதமான விளையாட்டுகளின் மீது ஆர்வம்.
7.எதையுமே ஒரு அலட்சியப்படுத்துதல் உறவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும்,
8.உயிர் காரகத்துவம் ஆன விஷயங்கள் தந்தை தந்தை வழி தாத்தா உறவுகள், தாய் தாய் வழி தாத்தா உறவுகளின் கை வைக்கிறார் (உறவு இழத்தல்) .
9.இன்னும் சில குழந்தைகளுக்கு இளம் வயதில் காதல் மோகம். (அதாவது 15 லிருந்து 23 வயதிற்குள்) ஏற்பட வைத்து அதற்குள் படிப்பில் கவனம் சிதற வைக்கிறார்.
10.வெகு சிலருக்கு குழந்தைகளுக்கு வரக்கூடிய ராகு தசா பெற்றோரை பாதிக்கிறது. குறிப்பாக தந்தைக்கு பாதிப்பு.
11.கனவு பயம்.
12.அதிகமாக விஷப்பூச்சிகள், அரவம், போன்றவற்றை கனவிலும் நேரிலும் காணுதல்.
மேற்கூறிய அனைத்தும் குழந்தைப்பருவத்தில் வரக்கூடிய ராகு தசையில் சந்திக்கக்கூடிய பொதுபலன்கள்.
No comments:
Post a Comment