Wednesday, May 15, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 1 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகம் என்பது அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது இந்த இருவருகிடையே அமைந்து இருப்பது. காலசர்ப்ப யோகம் என்பதே ஒரு அவயோகம் போல் நம்பப்படுகிறது. காலசர்ப்ப யோகம் அமையப்பெற்ற ஜாதகத்தில் உள்ள மற்ற மிகப்பெரிய யோகங்களைக்கூட தடுத்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் காலசர்ப்ப யோகம் அமையப்பெற்றுள்ள வீடுகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். காலசர்ப்ப யோகம் அமைந்துள்ள வீடுகள் பின் வருவன மாதிரி அமைந்தால், ஒவ்வொரு அமைப்பிற்கும் பலன்கள் மாறும்....
1. ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில்.
2. இரண்டாமிடத்திற்கும் மற்றும் எட்டமிடத்திற்க்கும் இடையில்.
3. மூன்றாமிடத்திற்கும் மற்றும் ஒன்பதாமிடத்திற்க்கும் இடையில்.
4. நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில்.
5. ஐந்தாமிடத்திற்கும் மற்றும் பதினொன்றாமிடத்திற்க்கும் இடையில்.
6. ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில்.

      ஒவ்வொரு அமைப்பிற்க்கும் மற்ற ஜாதக அமைப்பை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

      ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகருக்கு உலக வாழ்க்கைக்கான பிடிப்புக்கான பலமான யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையை நாடுவார். அதில் மிக உயர்ந்த நிலையை அடைவார்.
                                                       தொடரும்....

3 comments:

Gowda Ponnusamy said...

திரு.ஆனந்த் அவர்களுக்கு, பொதுவாக கால சர்ப்ப தோக்ஷம் என்பது 30 வருடத்திற்குப் பிறகு யோகமாக மாறும் என்று ஜோதிட விதி உள்ளது எனக் கூறப்படுகிறது.இதைப் பற்றிய விரிவான விளக்கம் அளித்தால் நல்லது.

Anand said...

ஐயா!
நன்றி! நான் எனது முழுக்கட்டுரையை முடிக்கும் வரை கத்திருக்கவும்!

Unknown said...

திரு.ஆனந்த் அவர்களுக்கு, ஒன்றாமிடம், இரண்டாமிடம் என்றால் என்ன? அதை எப்படி அறிவது

Post a Comment