காலசர்ப்பயோகத்தில்......
ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும்
ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி, வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்குறியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
ராகு 4ல் பலமுடன் இருந்தால், ஜாதகர் அசையும் அசையா சொத்துக்கள் சேர்ப்பதில் குறியாக இருகிறார்கள், அதனால் அவர்கள் பல சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனி செக்கியூரிடி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைகிறது.
ஆனால் 10ல் உள்ள கேது ஜாதகரை பொதுமக்களிடம் இருந்து தனித்து செயல்பட வைப்பதால் இவர்கள் தலைவராகவெல்லாம் ஆக முடியாது.
ராகு 5ம் இடத்திலும் கேது 11ம் இடத்திலும்
ஜாதகருக்கு, குழந்தைகள், அறிவுத்திறமை, திடீர் பணவரவு, ஆண்மை ஆகியவை பாதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
கேது 11ல் கெட்டிருந்தால் லாபம், புகழ், பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது ஆனால் கேது 11ல் பலமுடன் இருந்தால், ஜாதகருக்கு லாபம் நன்றாகவே வருகிறது, கெட்ட கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களில் 3, 6, 10, 11ல் நல்ல பலன்களையே வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ராகு 6ம் இடத்திலும் கேது 12ம் இடத்திலும்
பொதுவாக கெட்டகிரகங்கள் கெட்ட இடத்தில் மிக நல்ல பலன்களையே வழங்கும் என்பது விதி. குறிப்பாக ராகு 6ல் மிக உயர்வான பலன்களையே தருவார்.
ஜாதகருக்கு ராகு 6ல் மிக சக்திவாய்ந்த எதிரிகளை தருவார், ஆரோக்கியம் கெடும், கடன்சுமை ஏறும், ஆனால் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வாழ்க்கையின் உயர்வுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியையும் தருவார்.
இந்த இடத்தில் ராகு கேதுக்கள் கேந்திரங்களைப் பாதிக்காததால் ஜாதகரின் சமூகத்தோற்றம் கெடாது, உயர்வாகவே இருக்கும்.
12ல் உள்ள கேதுவால் ஜாதகருக்கு சுக சயனம் கெடலாம். ஆனால் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல நல்ல ஒரு நிலை இது. ஆனால் தவறான ஆன்மீக குருக்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.
1 comment:
hello sir your postings are nice can you please provide your email id..thanks
Post a Comment