Tuesday, May 21, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 3 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
      காலசர்ப்ப யோகம், ஜாதகருக்கு, வேலையின்மை, திருமணம் நடக்காமை, வீடற்ற நிலமை, பரதேசி போல் ஒரு வாழ்க்கை, இந்த ஒரு கிரக அமைப்பே தரலாம்.
      இந்த யோகமானது,வாழ்க்கையில் ஒருமுறை மிகமுன்னேற்றமான பாதையில் பயணிக்கவும் (பொருள் வாழ்க்கையில் இதை எற்படுத்துபவர் ராகு), பின் ஒரு முறை பொருள் ப்யணத்தில் தடங்கல் ஏற்ப்பட்டு, அசிங்கப்பட்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஏதுமற்ற ஒரு குழப்பமான் நிலைக்கு தள்ளப்படுதல் (இதை ஏற்படுத்துபவர் கேது). அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும்.
      இதில் ராகுவானவர் பயங்கர தன்னம்பிக்கையை கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த பாதைக்கு(பொருள் வாழ்க்கைக்கு) பயணிக்கச் செய்துவிடுவார், இதில் ராகுவனவர் லக்கினம் முதல் ஆறு இடங்களில் அமைய வேண்டும்.
      காலசர்ப்ப யோகத்தில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கிடையில் அமைய வேண்டும். இதில் லக்கினம் அல்லது ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப யோகத்தில் வராது.
      அந்த மாதிரி அமைப்பை(ஒரு கிரகமோ அல்லது லக்கினமோ வெளியே அமையப்பெற்றவர்கள்) உடையவர்கள், மிகசிறந்த ஒரு இனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ தலைவனாகக் கூட ஆகிவிடுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற மிக நல்ல தலைவராக இருப்பர்(முக்கியமாக சுக்கிரனோ அல்லது குருவோ ராகு கேதுவை விட்டு வெளியே இருந்தால்).
      பல உலகப்புகழ் பெற்ற நல்ல தலைவர்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் அடைபட்டு, ஒரு சில கிரகங்கள் ராகு கேது அமைந்திருக்கும் அதே இடத்தில் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ அதே டிகிரியில் அமையப்பெற்று இருப்பதைக்காணலாம்..........
                                                                                         தொடரும்

1 comment:

Anonymous said...

லக்கினம் வெளியில் வந்தால் கால சர்ப்ப தோசம் இல்லை என்கிறீர்.. ஆனால் மற்ற அனைத்து இணைய பதிவிலும் லக்கனம் இந்த யோகத்திற்க்கு கணக்கில் எடுத்துக் கொள்கப்படாமல் இருக்கிறதே... அதாவது லக்கினம் வெளியில் இருந்தாலும் அதை கால சர்ப்ப தோசம் என்றே கூறுகிறார்கள்..

Post a Comment