Sunday, June 19, 2011

சூரியன் தரும் சுகங்கள்


சூரியன் ஆட்சி, உச்ச பலத்துடன் சுபர் பார்வை சம்பந்தம்  பெற்று நின்றால் ஜாதகருக்கு கிடைக்கும் சுகங்களாவன:‍
1. ஜாதகருக்கு அரசு/அர‌சியல் தொடர்புகளால் லாபமுண்டு.
2. வி.ஐ.பிக்களின் தொடர்பு சுலபமாக கிடைக்கும், ஜாதகரும் வி.ஐ.பியாக திகழ‌முடியும்.
3. ஜாதகர் ஒழுங்கு நன்னடத்தை காரணமாக, பாரட்டுகளையும், நல்ல நல்ல வாய்ப்புகளையும் பெறமுடியும்.
4. ஜாதகர் தனது கெளரவம், ஆளுமைத்திறன் இவற்றை உணர்ந்து சமுதாயத்தில் தன்னை எல்லோரும் நல்ல விதமாக பேசுமாறு நடந்து கொள்வார்.
5. எதிரிக்கு அஞ்சமாட்டார், தனது வழியில் குறிக்கிடுபவர்களை பந்தாடுவார். வீரன், சூரன் என பெயர் வாங்குவார்.
6. ஆண்மையும் வீரமும் தரும் சூரியன், தனது வாழ்நாளில் எளியவர்களைக் காப்பாற்றுவார், தான தருமங்கள் செய்வார். ஆலய பணி, தெய்வகாரியங்களுக்கு உதவுவது என அனைத்து நல்ல காரியங்களும் தன்னால் இயன்றவரை செய்வார்.
சூரியன் ஜாதகத்தில் பகை, நீசம், கெட்டவர்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால்:
1. ஜாதகர் இம்சை அரசனாக மாறி மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் கான்பார்.
2. தனது சுயநலத்திற்க்காக உலக பாவங்கள், பாதகங்கள் அனைத்தையும் செய்வார்.
3. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யோக்கியனைப் போல் நடமாடும் மாகாநடிகனாக விளங்குவார்.

No comments:

Post a Comment