Tuesday, June 21, 2011

தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு


      பேச்சிலும் செயலிலும் தெளிவு இருந்தால்தான் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள்! வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொள்ளமுடியுமல்லவா.
      தரும ஸ்தானங்கள் எனப்படுகிற 1,5,9க்கு உடையவர்களும் அந்த இடங்களும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால் உயர் எண்ணங்களுடன் தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அளவான ஆசைகள், அவற்றிட்க்கு ஏத்த திட்டமிட்ட உழைப்பு, பலருக்கு உத‌வுவதால் பலருடைய அரவணைப்பு எல்லாமே எளிதில் வசப்படும்.
      கீழ்கண்ட அமைப்பில் ஒன்றிரண்டு ஜாத‌கத்தில் இருக்குமானால் நீங்கள் தெளிவும் சந்தோசமும் மிக்க யோகசாலியாக விளங்க முடியும்.
1. ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் நல்ல விதமாக நிற்ப்பது.
2. லக்கினத்தில் குரு, 9ல் சூரியன், 5ல் செவ்வாய் நிற்ப்பது.
3. லக்கினத்தில் சூரியன், 9ல் செவ்வாய், 5ல் குரு நிற்ப்பது. மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு இவ்வாறு இருந்தால் தெளிவும் சந்தோச மிக்க வாழ்க்கை அமைய உதவும்.
      1,5,9க்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பிரபல யோகமாக அமையும்.
      1,5,9க்குடையவர்கள் அவரவர் வீடுகளில் ஆட்சி பலத்துடன் நின்றாலே யோகமுண்டு.
      9ம் இடம் திரிகோண ஸ்தானம் என்பதால் அங்கு நிற்க்கும் கெட்டவர்களும் நல்லது செய்வர் என்ற விதிக்கேற்ப்ப ஸ்திர லக்கினகாரர்களுக்கு 9ம் இடம் பாதக ஸ்தானம் ஆனாலும் அங்கு அமர்ந்த 9ம் அதிபதி யோகாதிபதியே என்றே கருதவேண்டும். யோகமே செய்வார்.
      1,5,9க்குடையவர்கள் கேந்திர திரிகோணங்கள், தனலாப ஸ்தானங்களில் கெடாது அமர்ந்திருந்தால் தெளிவும் சந்தோசமும் மிக்க வாழ்க்கையே அமையும்.
      1,5,9க்குடையவர்கள் 6,8,12ல் மறைந்து விட்டால் ஜாதகர் குழப்பவாதியாகத் திகழ்வார். சின்ன சின்ன விசய‌ங்களில் கூட முடிவெடுக்க திண‌றுவர். சிறு வயதில் பெற்றோரும், வாலிப வயதில் மனைவியும், முதுமையில் பிள்ளைகளும் வழிகாட்டியாக வேண்டும்.
      1,5,9க்குடையவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் பகை, நீசம் பெற்று கெட்டிருந்தாலும் அல்லது 1,5,9க்குடையவர்கள் கெட்டு சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் சில சமயம் ஜாதகர் குழப்பவாதியாகவும், சில சமயம் தெளிவானவராகவும் காட்சி த‌ருவார்.
      1,5,9க்குடையவர்கள் ஜாதகத்தில் கெட்டு, 1,5,9ம் இடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
      மேலும் ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் மூவருமே சுத்தமாக கெட்டிட வாய்ப்பில்லை. ஒருவர் நன்றாக அல்லது ஒரு இடம் நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment