மகரம், கும்ப லக்கினங்களில் உதித்தவர்களுக்கு கேது லக்கினத்தில் நின்றால் சந்தான பாக்கியத்துடன் செல்வவளமும் சேருகிறது.
Thursday, June 30, 2011
மனைவியால் ராஜயோகம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் வளர்பிறைச் சந்திரன் அல்லது புதன் தனித்து, பகை நீசம் பெறாமல் இருந்தால் அவளது கணவருக்கு உயர்வான ராஜயோக வாழ்க்கை அமையும். அதனால் அந்த பெண் செலவ சுகங்களை அனுபவிப்பாள்
6ல் ராகு/கேது
ஜாதகர் எந்த லக்கினத்தில் உதித்தவராக இருந்தாலும், அவருடைய ஜாதகத்தில் 6மிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் ஜாதகருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். இவரை எதிர்ப்பவர்கள் தாமாகவே அழிந்து விடுவர், அல்லது மனம் திருந்தி நண்பர்களாகி விடுவர்.
Wednesday, June 22, 2011
போராட்ட வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு
லக்கினாதிபதி 6,8,12ல் மறைய சுக தர்ம கர்மாதிபதிகள் பகை நீசம் மறைவு ஸ்தானங்களில் கெட்டு நின்றால் ஜாதகருடைய வாழ்க்கை பெரும் போராட்டமாகிவிடும்
கல்வியால் செல்வம் ஜோதிடக்குறிப்பு
தன ஸ்தானமான 2ம் இடத்தில் தனாதிபதி ஆட்சி பெற்று இருந்து அவருடன் சுபாவ சுபர் இணைந்து இருந்தாலும் அல்லது யோகதிபதி இணைந்து இருந்தாலும் அல்லது சுபாவ சுபர் பார்த்தாலும் அல்லது யோகதிபதி பார்த்தாலும் ஜாதகருக்கு குறையாத செல்வமும் நிறைவான கல்வியும் அமைகிறது. கல்வியால் செல்வம் சேருகிறது.
பேச்சில் இனிமை ஜோதிடக்குறிப்பு
வாக்கு ஸ்தானத்தில்(2ம் இடத்தில்) புதன் ஆட்சி பலத்துடன் நின்றாலும், குரு புதனுடைய வீடுகளான மிதுனம், கன்னியில் நின்றாலும், அம்சத்தில் புத்னுடைய வீடுகளில் குரு நின்றாலும், ஜாதகர் அனைவரையும் கவரும் வகையில் இனிமையாக பேசுவார்.
சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்
மிதுன லக்கின, கடக ராசிக்காரர்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குருவும் சனியும் இணைந்து நின்று, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று நின்றால் ஜாதகரை சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்.
1. சுக்கிரன்-பூர்வபுண்ணியாதிபதி
2. சனி-பாக்கியாதிபதி
3. குரு-ஜீவனாதிபதி
மேலே சொன்ன அமைப்பில் தரும-கர்மாத்பதி இணைப்பால் தரும-கர்மாதிபதி யோகம் ஏற்ப்படுகிறது. மிதுன லக்கின காரர்களுக்கு தரும-கர்மாதிபதி இணைப்பு யோகம் தராது என்று பழைய நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும். இவிணைப்பு கேந்திரத்தில் ஏற்ப்படுவதால் கேந்திராதிபத்திய தோஷத்திற்க்கு ஆளாகிய குருவினுடைய தோஷம் சனியுடன் இணைவதால் விலகி விடுவதால். நற்பலன்கள் எதிர்பார்க்கலாம்.
இந்த அமைப்பு உடையவர்கள் சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும். சனி தசை, குரு தசை யோகமளிக்கும். ஆண்களானால் பெண்களால் யோகமும், பெண்களானால் ஆண்களால் யோகமும் கிடைக்கும்.
மற்ற லக்கின, ராசிக்காரர்களுக்கும் சுக்கிர தசை குறித்து தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் வரும். வாழ்க வளமுடன்!
மோசடிப் பேர்வழி ஜோதிடக்குறிப்பு
சந்திரன் செவ்வாயை பார்ப்பது சிறப்பான அமைப்பு சந்திரமங்கள யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் ஒருவரது ஜாதகத்தில் 3ம் வீட்டில் செவ்வாய் இருந்து அவரை 9ம் வீட்டில் நின்ற சந்திரன் பார்த்தால் ஜாதகர் நம்பிக்கை மோசடிப் பேர்வழியாக இருப்பார். சொன்னது ஏதும் செய்ய மாட்டார். ஏமாறுபவர்களிடம் நம்பிக்கை தருவது போல் பேசி மோசடி செய்வார். காசு பறிப்பார். வாங்கிய கடனைத் திருப்பித் தரமாட்டார்.
பெண்களால் உயர்வு ஜோதிடக்குறிப்பு
தனுசு, மீனம் ஆகிய குரு பகவானின் வீடுகளில் 7ம் வீட்டுக்கு உரியவனுடன் ராகு இணைந்து நின்றால் ஜாதகர் மரியாதையும் மதிப்பிற்க்குரிய பெண்களால் உயர்வினைப் பெறுவார்.
ஆயுளைக் கொடுக்கும்/கெடுக்கும் ராகு
ராகு சுக ஸ்தானத்தில் சுபர் சம்பந்தம் பெற்று நிற்க 2,7,12ம் இடங்களில் சுபாவ சுபர்கள் இருந்தால் தீர்க்காயுளைக் கொடுக்கும் ராகுவாக விளங்குவார்.
அதே ராகு சுக ஸ்தானத்தில் பாவிகள் சம்பந்தம் பெற 2,7,12ம் இடங்களில் சுபாவ பாவிகள் இருந்தால் ஆயுளைக் கெடுக்கும் ராகுவாக விளங்குவார். மத்திம அல்லது அற்ப ஆயுள் தான்.
Tuesday, June 21, 2011
இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு
சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்குரியவர்களுக்கு 6,8,12க்கு உரியவர்கள் பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்கு உரியவர்கள் மறைந்து விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும் நிலை தான் உருவாகும்.
5ல் சூரியன்
சூரியன் 5ல் நின்றால் பிள்ளைகளால் நிம்மதி, சந்தோசம் கெடும். சக்திக்கு மீறிய செலவுகளை பிள்ளைகள் உருவாக்குவர். அனுதினமும் சூரிய நமஸ்காரமும், சிவனை ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து வழிபடவேண்டும்
விரயாதிபன் தரும் ராஜயோகம்2
விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன், அவர் 5ம் இடமான மீனத்தில் உச்சம் பெறுவார். அவரை பாக்கியதிபதி சந்திரன் பார்த்தாலே யோகம் பிரமாதமாக இருக்கும்.
தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் அவர் 2ல் உச்சம், அவரை பக்கியதிபதி சூரியன் நண்பர் பார்த்தாலே யோகம் நன்றாக இருக்கும்.
கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி லக்கினாதிபதி சனியே ஆகிறார், அவர் 9ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியாதிபதி சுக்கிரன் பார்க்கும் போது தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது. பாதக யோகதிபதி சுக்கிரனால் நல்ல பலன்களே நடக்கும் என்பதில் ஐயமில்லை.
மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சனி, அவர் 8ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியதிபதி செவ்வாய் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் யோக பலன் கிடைக்கும்.
எனவே விரயாதிபன் உச்சம் பெற்று, பாக்கியதிபதி பார்வையை பெறுவது யோகமே. விரையாதிபன் மறைவு ஸ்தனங்களில் இருப்பதை விட, உச்சம் பெற்று சுபர் பார்வை பெறும் போது நல்ல பலன்கள் கூடுதலாக நடக்க வாய்ப்பு அதிகம்
விரயாதிபன் தரும் ராஜயோகம்1
விரயாதிபன் எனில் 12க்குடையவன், விரயாதிபன், விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று கூறிச் சென்றுள்ளனர்.
விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12க்குடையவன் உச்சம் பெற்று நிற்க, அவனை பாக்கியாதிபன் என்று சொல்ல்க்கூடிய 9க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.
மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும் ஆகிறார். அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.
ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9ம் இடமான பாதகஸ்தானத்தில் உச்சமடைவார். அவரை 9ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லது. சனியும் பாக்கிய, யோக, பாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.
மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். அவரை 9க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.
கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது யோகம் தான்.
சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறது. பிரபல யோகமே.
கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன் பார்ப்பது யோகம் தான்.
துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன், அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9க்குடையவரும் அவரே என்பதால் யோகபலன்களைத் தருவார். லக்கினாதிபதி குருவின் பார்வை அவருக்கு கிடைகுமானால் யோகம் சிறப்பாக இருக்கும்.
தொழிலில் நஷ்டம் ஜோதிடக்குறிப்பு
லாபதிபதி 8ல் மறைந்தால் சுயதொழில் உதவாது. அடிமைத்தொழில் செய்யும் இடத்திலும் பிரச்சனைகள் வரும். பொறுமை காக்க வேண்டும், நல்ல வேலை அமைந்துவிட்டால் அதனை நல்ல முறையில் உழைத்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை தொழிலில் முதலீடு செய்வதை விட நீண்டகால் வங்கி டெபாசிட்டுகள் அல்லது நிலபுலன்களில் முதலீடு செய்வது நல்லது.
11ம் இடத்ததிபதி
லாப ஸ்தானத்தில் லாபாதிபதி ஆட்சி பலத்துடன் விளங்கினால் அவர் பூர்வபுண்ணிய ஸ்தானத்தினை பார்ப்பார். தொழிலில் மிதமான லாபம், சகோதரர்கள் ஆதரவு, அமைதியான வாழ்க்கை ஜாதகருக்கு அமையும். வாழ்வில் படிப்படியான முன்னேற்றத்தினை அடைவார். தெய்வீக வழிபாடுகளை ஜாதகர் சிறப்பாக செய்வார். குடும்ப கெளரவம் மேண்மையாக இருக்கும்.
தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு
பேச்சிலும் செயலிலும் தெளிவு இருந்தால்தான் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள்! வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொள்ளமுடியுமல்லவா.
தரும ஸ்தானங்கள் எனப்படுகிற 1,5,9க்கு உடையவர்களும் அந்த இடங்களும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால் உயர் எண்ணங்களுடன் தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அளவான ஆசைகள், அவற்றிட்க்கு ஏத்த திட்டமிட்ட உழைப்பு, பலருக்கு உதவுவதால் பலருடைய அரவணைப்பு எல்லாமே எளிதில் வசப்படும்.
கீழ்கண்ட அமைப்பில் ஒன்றிரண்டு ஜாதகத்தில் இருக்குமானால் நீங்கள் தெளிவும் சந்தோசமும் மிக்க யோகசாலியாக விளங்க முடியும்.
1. ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் நல்ல விதமாக நிற்ப்பது.
2. லக்கினத்தில் குரு, 9ல் சூரியன், 5ல் செவ்வாய் நிற்ப்பது.
3. லக்கினத்தில் சூரியன், 9ல் செவ்வாய், 5ல் குரு நிற்ப்பது. மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு இவ்வாறு இருந்தால் தெளிவும் சந்தோச மிக்க வாழ்க்கை அமைய உதவும்.
1,5,9க்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பிரபல யோகமாக அமையும்.
1,5,9க்குடையவர்கள் அவரவர் வீடுகளில் ஆட்சி பலத்துடன் நின்றாலே யோகமுண்டு.
9ம் இடம் திரிகோண ஸ்தானம் என்பதால் அங்கு நிற்க்கும் கெட்டவர்களும் நல்லது செய்வர் என்ற விதிக்கேற்ப்ப ஸ்திர லக்கினகாரர்களுக்கு 9ம் இடம் பாதக ஸ்தானம் ஆனாலும் அங்கு அமர்ந்த 9ம் அதிபதி யோகாதிபதியே என்றே கருதவேண்டும். யோகமே செய்வார்.
1,5,9க்குடையவர்கள் கேந்திர திரிகோணங்கள், தனலாப ஸ்தானங்களில் கெடாது அமர்ந்திருந்தால் தெளிவும் சந்தோசமும் மிக்க வாழ்க்கையே அமையும்.
1,5,9க்குடையவர்கள் 6,8,12ல் மறைந்து விட்டால் ஜாதகர் குழப்பவாதியாகத் திகழ்வார். சின்ன சின்ன விசயங்களில் கூட முடிவெடுக்க திணறுவர். சிறு வயதில் பெற்றோரும், வாலிப வயதில் மனைவியும், முதுமையில் பிள்ளைகளும் வழிகாட்டியாக வேண்டும்.
1,5,9க்குடையவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் பகை, நீசம் பெற்று கெட்டிருந்தாலும் அல்லது 1,5,9க்குடையவர்கள் கெட்டு சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் சில சமயம் ஜாதகர் குழப்பவாதியாகவும், சில சமயம் தெளிவானவராகவும் காட்சி தருவார்.
1,5,9க்குடையவர்கள் ஜாதகத்தில் கெட்டு, 1,5,9ம் இடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் மூவருமே சுத்தமாக கெட்டிட வாய்ப்பில்லை. ஒருவர் நன்றாக அல்லது ஒரு இடம் நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.
Monday, June 20, 2011
தொட்டது துலங்க ஜோதிடக்குறிப்பு
ஒருவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், கெடாது நல்ல இடங்களில் இருக்க அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது அல்லது ஜீவனஸ்தானத்திற்க்கு சுபர் பார்வை, சுபர் சம்பந்தம் இருக்குமானால் ஜாதகர் தொட்டது துலங்கும். அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் நல்ல லாபம் பெறுவார். இவருக்கும் நிறைய ஊதியம் கொடுத்து மகிழ்விப்பார். ஜாதகர் சுயதொழில் செய்தாலும் உயர்வடைவார்.
ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். ஜாதகர் திறமைசாலியாக இருந்தாலும் பெரிதாக ஏதும் சோபிக்க முடியாது. அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் சுமாரான லாபம் பெறுவார். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் சுமாரான ஊதியம் பெறுவார். ஒரு இடத்தில் வேலை செய்யும் போது இவர் பத்தோடு பதினொன்றாக இருப்பர். இவருக்கு மற்றவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் போது இவருக்கும் கிடைக்கும். வாழ்வு இவர் அதிர்ஷ்டக்கட்டை என்று நொந்து கொள்ளக்கூடிய விதமாகத் தான் இருக்கும்.
ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை கொடியவர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் கொடியவருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். இவர்கள் எந்த இடத்திலும் வேலைக்கு ஒழுங்காக இருக்கமாட்டார். இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிக்கு நஷ்டம் தான் வரும். இவர்களை முதலாளி வேலையை விட்டு நீக்கி விடுவர் அல்லது ஊதியம் போதவில்லை என்று இவர்களாகவே வேலையை விட்டு நின்று விடுவர்.
இந்த மாதிரி அமைப்புடையவர்கள் நீச்சத்தொழில்கள் எனப்படுகிற பொருட்களை அழிக்கும் தொழிலை காண்ட்ராக்ட் எடுத்து செய்தால் சோபிக்கலாம்
நீச தொழில்கள்:
1. பழைய கட்டிடங்களை இடிப்பது
2. பழைய பாலங்களை இடிப்பது,
3. பாழடைந்து கிடக்கும் தோட்டம், துறவு இவைகளை சுத்தம் செய்யும் தொழில்
4. மருத்துவமனைக் கழிவுகளை அகற்றுவது போன்றவை.
இவர்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் சோபிக்கலாம்.
அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு
மகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில் உலாவி எல்லோரையும் விட நான் தான் மகாபுத்திசாலி எனும் கர்வம் உடையவராக எல்லோரையும் கேலி செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது இந்த குண இயல்பால் விரோதிகளை நிறையவே தேடிக்கொள்வார்.
பிரபல ராஜயோகம்
லக்கினாதிபதி லாபம் ஏற வேண்டும், 9,10க்குடையவர்களை 8,11க்குடையவர்கள் பார்க்கவோ, இனையவோ கூடாது. இந்நிலை ஜாதகத்தில் இருந்தால் பிரபல ராஜயோகம்
அதிர்ஷ்டசாலி1-ஜோதிடக்குறிப்பு
அனைத்து லக்கினத்தில் உதித்தவர்களுக்கும், லக்கினாதிபதி கேந்திர வீடுகளில் ஒன்றில் கெடாது இருக்க அதை 5க்கு உடையவர் லக்கினாதிபதிக்கு சப்தம ஸ்ப்தம ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்( அதாவது 1, 5க்கு உடையவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க) அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவார்.
Sunday, June 19, 2011
சூரியன் தரும் சுகங்கள்
சூரியன் ஆட்சி, உச்ச பலத்துடன் சுபர் பார்வை சம்பந்தம் பெற்று நின்றால் ஜாதகருக்கு கிடைக்கும் சுகங்களாவன:
1. ஜாதகருக்கு அரசு/அரசியல் தொடர்புகளால் லாபமுண்டு.
2. வி.ஐ.பிக்களின் தொடர்பு சுலபமாக கிடைக்கும், ஜாதகரும் வி.ஐ.பியாக திகழமுடியும்.
3. ஜாதகர் ஒழுங்கு நன்னடத்தை காரணமாக, பாரட்டுகளையும், நல்ல நல்ல வாய்ப்புகளையும் பெறமுடியும்.
4. ஜாதகர் தனது கெளரவம், ஆளுமைத்திறன் இவற்றை உணர்ந்து சமுதாயத்தில் தன்னை எல்லோரும் நல்ல விதமாக பேசுமாறு நடந்து கொள்வார்.
5. எதிரிக்கு அஞ்சமாட்டார், தனது வழியில் குறிக்கிடுபவர்களை பந்தாடுவார். வீரன், சூரன் என பெயர் வாங்குவார்.
6. ஆண்மையும் வீரமும் தரும் சூரியன், தனது வாழ்நாளில் எளியவர்களைக் காப்பாற்றுவார், தான தருமங்கள் செய்வார். ஆலய பணி, தெய்வகாரியங்களுக்கு உதவுவது என அனைத்து நல்ல காரியங்களும் தன்னால் இயன்றவரை செய்வார்.
சூரியன் ஜாதகத்தில் பகை, நீசம், கெட்டவர்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால்:
1. ஜாதகர் இம்சை அரசனாக மாறி மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் கான்பார்.
2. தனது சுயநலத்திற்க்காக உலக பாவங்கள், பாதகங்கள் அனைத்தையும் செய்வார்.
3. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யோக்கியனைப் போல் நடமாடும் மாகாநடிகனாக விளங்குவார்.
4ல் ராகு
ஒருவரது ஜாதகத்தில் 4ல் ராகு இருந்தால் அவர் ரகசியங்களை பாதுகாப்பார். அவரது உண்மையான வசதி குறித்துக் கூட நெருங்கிப் பழகுகிறவர்களிடம்கூட பேச மாட்டார்.
உச்சனும் நீச்சனும் ஒரே வீட்டில்
ஜாதகத்தில் ஒரே வீட்டில் உச்சனும் நீச்சனும் கூடினால், உச்சன் குறைவான பலன்களையும், நீச்சன் அதிக நற்பலன்களையும் தருவார். மீனத்தில் நிற்க்கும் சுக்கிரன் புதனால் ஜாதகருக்கு கீழ்கண்டவாரு நற்பலன்கள் எற்ப்பட வாய்ப்புண்டு. உச்ச சுக்கிரனால் வரும் சர்க்கரை வியாதி, பெண்களால் பிரச்சனைகள் வராமல், புதன் தரும் புத்தி சாதுரியத்தினால் ஜாதகர் தன்னைக் காத்துக்கொண்டு படிப்படியாக தன் சுய முயற்ச்சியால் வேகமாக முன்னேறுவார்.
2ம் இடத்ததிபன் சம்பந்தம்
1. 2க்கு உரியவன் சூரியன் சம்பந்தம் பெற்றால் அரசியலில் பிரகாசிக்க உதவும்.
2. 2க்கு உரியவன் சந்திரன் சம்பந்தம் பெற்றால் அறிவியல் அறிஞராக உதவும்
Saturday, June 18, 2011
அதிர்ஷ்டசாலி-ஜோதிடக் குறிப்பு
9,10க்கு உடையவர்கள் தரும கருமாதிபதி ஆவர். இவர்கள் பரிவர்தனையாகி நின்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
ரிஷப லக்கினகாரர்களுக்கு 9,10க்கு உடையவர் சனியாவார். அவர் கெடாது நல்ல நிலையில் இருந்தாலே ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர் பரிவர்த்தனை மகர லக்கினகரர்களைத் தவிர இதர லக்கினகாரர்களுக்கு யோக பலன்களைத் தரும்.
மகர லக்கினகாரர்களுக்கு 9, 10ம் இடம் கன்னி, துலாம் ஆகும். கன்னியில் சுக்கிரன் நீசமடைவார். இவர்களுக்கு கன்னியில் சுக்கிரனும் புதனும் இனைந்து நின்றால் சுக்கிரனுக்கு நீச பங்கம் ஏற்ப்படும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பில் இருவரும் கெடாது சாதாரண நிலையில்(நட்பு, சமம்) இருந்தால் யோகம் தான். இருவரில் ஒருவர் வலுவாகவும் ஒருவர் சாதாரணமாக இருந்தால் யோகம் அதிகமுண்டு. இருவரும் வலுவாக சுபர் பார்வையுடன் சேர்க்கையுடன் இருந்தால் பிரபல யோகமாகும்.
Labels:
10ம் இடம்,
9ம் இடம்,
சனி,
சுக்கிரன்,
புதன்,
மகர லக்கினம்,
ரிஷப லக்கினம்
தன-தைரிய யோகம்
3க்கு உரியவன் 2ல் வலுவுடன் இருந்தால் கவிதை, கட்டுரைகள் எழுதுவது வகையிலும், சகோதரர் உதவியாலும் பணம் சேரும்.
ஜீவனச்சனி தரும் உயர்வுகள்
10ம் இடத்தில் சனி நின்றால் ஜாதகர் உழைப்பால் உயரலாம். உன்னத நிலை அடையலாம். ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெண்கள் விசயத்தில் அத்துமீறினால் அதளபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். உயர்ந்த நிலையை அடைந்ததும் நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும். பெண்களுடன் அதிகமாக பழக வேண்டிய இடங்களுக்கு தனியே செல்லக்கூடாது. தனது பதவி சுகத்தை நேர்மையான வழியில் அனுபவிக்க வேண்டும். அதிகார பலத்தினால் நிறைய பேருக்கு உதவவேண்டும், உபத்திரவம் செய்யக்கூடாது.
மோட்ச யோகம்
மோட்ச யோகம் மூன்று விதம்:
1. 12ல் கேது நிற்ப்பது பிரபலமான மோட்ச யோகமாகும்.
2. ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 12ல் சூரியன் உச்சம் பெறுவதும்,
3. சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 12ல் குரு உச்சம் பெறுவதும் மோட்ச யோகமாகும்.
மேலே சொன்ன அமைப்புடையவர்கள் பொது காரியங்கள், தரும கரியங்கள், தெய்வீககாரியங்கள் அனைத்திற்கும் தன்னால் முடிந்த உதவிகள் செய்து வந்தால் யோகம் வலிமை அடையும்.
Subscribe to:
Posts (Atom)