Friday, May 17, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 2 ஜோதிடக்குறிப்பு


      ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஜாதகரின் திருமணவாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக, சதா தம்பதியருக்கிடையே சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும், தம்பதியருக்கிடையே புரிதல் வரவே வராது. ஆனால் ஏழாமதிபதியோ அல்லது சுக்கிரனோ வலிமையாக இருந்தால் இந்த இன்னல்கள் மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம்.
      நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்து பத்தாமதிபதி பலம் பெறாவிட்டால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விசயங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
      காலசர்ப்ப யோகம் ஒரு யோகமாக அமையும் போது அதன் பலன்கள்....
      ஜாதகர் மன அமைதி இல்லாவிட்டாலும், அவர்கள் மிகச்சிறந்த உழைப்பளிகளாகவும், அவர் இருக்கும் தொழில் சார்ந்த துறையில் மிக உயர்ந்த நிலையை அடையவைக்கும்(மற்ற யோகங்கள் இருப்பின் அவற்றின் நிலைகேற்ப்ப). அதற்கான திறமையும் அவரிடம் முழுமையாக காணலாம்.
      அத்துடன் ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் மற்றும் உற‌வினர்கள் என்பவர்கள் கடைசியில் ஏமாற்றுப் பேர்வழிகளாகவே இருப்பர். காலசர்ப்ப யோக ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளால், மனவுறுதி படைத்தவராகவும், ஒரு சாத்வீகமானவராகவும் மெல்ல மெல்ல மாறிவிடுவார்.
                                                                                               தொடரும்..........

1 comment:

Gowda Ponnusamy said...

நண்பர் அவர்களுக்கு வணக்கங்கள்.ஒரு சந்தேகம்.1-7 ல் முறையே கேது-ராகு இருந்து(மிதுன லக்னம் & ராசி) என்னும் போது சனி(மட்டும் வெளியே)5ல்,குருவின் விசாகம் நட்சத்திரத்தில். லக்னத்தில் கேது+சந்+குரு சேர்க்கை.இந்த அமைப்பு கால சர்ப்ப தோக்ஷம் என்ற கணக்கில் வருமா?.

Post a Comment