Friday, May 29, 2020

செவ்வாய் சனி கிரகச் சேர்க்கை பலன்கள்

இவ்விரு கிரகங்களும் ஒன்று கொண்டு பகையானது நன்மையும் தீமையும் கலந்து பயன்களைத் தருகிறது...
சொல்லப்போனால் அதிகமாக கெடுபலன்களை தருவதாகவே ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.... ஏனெனில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் மேஷத்திற்கு பாதகாதிபதியாகவும்... செவ்வாய் பகவான் அட்டமாதிபதியாகவும் வருகிறது... பாதகாதிபதியும் அட்டமாதிபதியும் சேர்ந்தால் என்ன ஆவது..... இந்த இரண்டு கிரகங்களும் பார்வை செய்யக் கூடிய இடம் கடுமையாக பாதிக்கப்படுகிறது பாவக ரீதியாகவும்.... உடல் உறுப்புகள் ரீதியாகவும்.....
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் சனி இருந்தால்... கண்டிப்பாக முகத்திலோ அல்லது நாட்களிலோ சிறிய அளவிலாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை வரும்
விருச்சிகத்தில் இந்த கிரக சேர்க்கை இருக்கும் பெண் ஜாதகிக்கு..... சிறுவயதிலேயே பற்களை இழந்து... செயற்கை பல் கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது பெண்ணுக்கு ஒரு சில காலகட்டங்களில் கர்ப்பப்பை எடுக்கும் சூழ்நிலை வந்துவிடும்....
மேலும் சனி மந்த காரகன் என்று சொல்லப்படுவதுண்டு... செவ்வாய் தைரியம் வேகம் காரணம் சொல்லப்படுகிறது.... வேகமான ஒருவனும் மந்தமான ஒருவனும் சேர்ந்து என்ன செய்வார்கள்.... விவேகமற்ற வேகம் ... கெடு பலன்களைத்தானே.... தரும்...
இதில் இன்னொரு விஷயம் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் செவ்வாய் திறமையான போலீஸ்.... சனி திறமையான திருடன்...
அப்ப இந்த கிரக சேர்க்கை ஜாதகருக்கு மிகப்பெரிய போராட்டமாக தான் இருக்கும் வெற்றி பெறுவது கடினம்....
அடுத்து.......
இந்த இரு கிரகங்களும் சேர்ந்து இருக்கும்போது தொழில்துறையில் யோகத்தை தருகிறது அதிலும் முக்கியமாக மெக்கானிக் துறை கட்டிடத் துறை டிரைவிங் துறை இவற்றில் சிறப்பான நிலைப்பாட்டை தருகிறது...
ஜாதகருக்கு பழமையான வீடு வாகன யோகத்தை தருகிறது. தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்... கண்டிப்பாக இவர்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும்... வாங்கின வீடாக இருந்தாலும் சரி கட்டுன வீடாக இருந்தாலும் சரி வாஸ்துக்காக என்று செலவு செய்து இருப்பார்
கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை நடைபெறும்.
பெண்களுக்கு கிரக சேர்க்கை இருக்கும் போது கணவருடன் சேர்ந்து பிசினஸ் செய்யும் பெண்களாக இருப்பர் இருவருக்கும் தொழில் சம்பந்தப்பட்ட சண்டைகள் நடந்து கொண்டே இருக்கும் அல்லது கணவன் செய்யும் தொழிலில்.... தொழில் செய்யும் விதம் மனைவிக்கு பிடிக்காமல் போகும்...
சனி ஒரு அலி கிரகம் என்பதால் கணவனால் தாம்பத்திய சுகம் திருப்தியாக இருக்காது...
ஜாதகரின் சகோதர உறவுகள் மந்தமாகவும்
அல்லது ஏதேனும் ஊனம் அல்லது குறை உள்ளவராகவும் இருப்பார்.... அதேநேரத்தில் ஜாதகர் சகோதரருக்கு மிகுந்த கஷ்டத்தை தரும் ஏன் சகோதர உறவுகள் மிகவும் பகையாக கூட வாய்ப்பு உண்டு..... பழைய அல்லது பூர்வீக சொத்துக்கள் யோகத்தையும் தரும்
இந்த கிரக சேர்க்கை இருக்கும் இடத்தைப் பொறுத்து..... எம் அனுபவத்தில் பலன்கள் மாறுபடுகிறது..... கன்னி ராசியில் இந்த சேர்க்கை இருக்கும் ஜாதகி திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் தன்னுடன் ஒரு நாள் கூட சேரவில்லை என திரும்ப வந்து விடுகிறார்.... இந்த கிரக சேர்க்கை திருமண வாழ்க்கையை.... கடுமையாக பாதிக்கும் கணவனால் தாம்பத்திய சுகம் கிடைக்காது பெரும்பாலும் மறுமணத்தைத் தரும்... குறிப்பாக கிரக சேர்க்கை சனியின் வீடுகளான மகரம் கும்பத்தில் புதனின் வீடான கன்னியில் மிதுனத்தில் இருக்கும் போது திருமண வாழ்வை கடுமையாக பாதிக்கும் ஏனெனில் புதனும் சனியும் அலி கிரகம் என்பதால்....
ரிஷப ராசியில் இதே கிரக சேர்க்கை இருக்கும் ஜாதகர் படிக்காவிட்டாலும் மிகப்பெரிய அளவில் ஒர்க்ஷாப் வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவரும் உண்டு....
சனி தொழில் காரகன் வேலைக்காரகன்.... என்பதால் செவ்வாயின் காரகத்துவ தொழில்களான மெக்கானிக் டிரைவர்... மற்றும் போக்குவரத்து நெருப்பு மின்சாரம் கட்டட பணி விவசாயம் போலீஸ் ராணுவம் டாக்டர்... இவற்றில் சிறப்பைத்தரும்.... சகோதர உறவுகளுடன் சேர்ந்து தொழில் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும்....
பொதுவாக ஜட காரகத்துவத்திற்கு நன்மையையும்.... உயிர் காரகத்துவத்திற்கு தீமையையும் ஏற்படுத்தும்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

No comments:

Post a Comment