Friday, May 29, 2020

திருமண யோகத்திற்கு

1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.தே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19. பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20. இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8. ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!

சூரியன் சனி கிரக சேர்க்கை

சூரியன் + சனி கிரக சேர்க்கை, பார்வை அல்லது பரிவர்த்தனை பலன்கள்.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்..... எனவே இச்சேர்க்கை இருக்கும் ஜாதகருக்கும்.... அப்பாவுக்கும் உறவுநிலை.... அவ்வளவு சிறப்பாக இருக்காது.
அப்பாவாக இருந்தால்... மகனிடம்...
ஐந்து வயது வரை அப்பாவா இருக்கணும்.. 10 வயது வரை நண்பனா இருக்கணும்...
15 வயசுக்கு மேல வழிகாட்டியாகத்தான் இருக்கணும்.
எப்பவும்.... தன்னுடைய அதிகாரத்தை... மகன் மீது செலுத்தவே... கூடாது.
அப்படி செலுத்தும் போது..... எடுபடாமல் போய்... அப்பாவுக்கு அது சங்கடமாக திரும்ப வரும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பின்படி அப்பாவும் மகனும் ஒரே வீட்டுல இருக்கிறப்ப.... ஜாதகருக்கு தொழில் அல்லது வேலை பாதிப்பையும்..... அப்பாவுக்கு உடல் பாதிப்பையும் ஏற்படுத்தி விடும்.
ஒரு நல்ல விஷயம் என்ன?? அப்படின்னா.... இந்த அமைப்பு ஜாதகருக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தித் தரும்.
இந்த கிரக சேர்க்கையானது... ஜாதகருக்கு அரசு வேலைக்கான வாய்ப்பையும் அல்லது செய்கின்ற தொழிலுக்கு அரசாங்கத்தோட.... உதவியையும் பெற்று கொடுக்கும்
தொழிலில் பதவி யோகத்தையும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த கிரக சேர்க்கையானது.... ஜாதகரை பரம்பரை அல்லது பாரம்பரிய தொழில் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும். அதில் சிறப்பு அடையலாம்.
மேலும் சனியோட பார்வையில் இருக்கும் சூரியன்அமைப்பினால்....
அப்பாவுக்கு மகனால் அதிக தொல்லைகளை ஏற்படுத்தி... வெறுத்துப் போய்.... படிக்கிற வயசுல ஹாஸ்டல்ல சேர்த்து விடும் சூழ்நிலை ஏற்படுத்தி விட்டுடும்.
வேலை செய்யும் வயதில் மகன் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போய் தங்கி வேலைய பாருடா.... என சொல்லும் அளவுக்கு நிலைமை போகும்.
தந்தை மகன் உறவை கடுமையாக பாதிக்கும் இருவரும் பிரிந்து இருப்பது நல்லது
சூரியன் சனியும்... அதாவது சூரியன் உச்சம் ஆகும் இடத்துல சனி நீசம் ஆகும் இந்த சூழ்நிலையில்.... சேர்க்கை பிறப்பு ஜாதகத்தில் அமையும்போது....
அப்பா... மகன் மீது ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை வரும். தொழிலில்...... அப்பாவுக்கு கீழ அடுத்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலை தான் இருக்கும். அப்பாவை மீறி மகனால் எதுவும் செய்ய முடியாது.
அடுத்து சூரியன் நீசம் ஆகும் வீட்டில் சனி உச்சமாக இருக்கிறது இந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்கும் போது.... மகன் சொல்றத கேட்கக் கூடிய அப்பாவா.... இருக்கிற மாதிரியான சூழ்நிலை வரும்.
இங்கு மகனின் ஆதிக்கம் அதிகமாகி அப்பாவை விரட்டும் அல்லது அடிமை போல் நடத்தும் சூழ்நிலை கூட வரும்.... ஏன்... அப்பாவை அடிக்கும் சூழ்நிலை கூட வரும்.
இதுல இந்த அமைப்பு அப்பாவோட ஜாதகத்துல இருந்தா.... மகனோடு உறவு ஆகாது...
மகனுக்கு இருந்தால் தொழில் வாய்ப்பு அதிகமா இருக்கும்.... இது தான் சூட்சுமம்.
என்னுடைய கணிப்பின் படி அப்பாவும் மகனும் பிரிந்து இருப்பதே நல்லது.
ஏன்னா!!!!!!.... அப்பா சிறப்பாக இருந்தால் மகன் சிறப்பா இருக்கமாட்டார்.
மகன் சிறப்பாக இருந்தால்.... அப்பா இருக்க மாட்டார்
மேலும்....
சூரியன் உயிரணு உற்பத்தியை குறிக்கக்கூடிய கிரகம்...
சனி உயிரணுவை தடை செய்யக்கூடிய கிரகம்...
அதாவது.... உயிர் உற்பத்தி காரக கிரகம் சூரியன்.... உயிர் அழிவுக்கு காரக கிரகம் சனி
இதனால் இரண்டு கிரகங்கள் சேர்க்கை ஜாதகருக்கு உயிரணு உற்பத்தி..... பாதிக்கப்படும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது மணமகன் அல்லது மணமகள் இருவருக்குமே கிரக சேர்க்கை இருக்குமானால் சேர்க்காமல் தவிர்த்து விடுவது...... மிக, மிக நல்லது.
இது குழந்தை பாக்கியத்தை மிக கடுமையாக பாதிக்கப்பட்டு... எனக்கு தெரிந்த.... ஒரு ஜாதக அமைப்பில்.....
கணவன் மனைவி பத்து வருடமாக குழந்தை இல்லாமல் அடுத்து வந்த இரண்டு வருடத்தில் அதாவது 12 வருடம் கழித்துதான்... குழந்தை பாக்கியம் கிடைத்தது.
முக்கிய குறிப்பாக பெண்ணுக்கு சூரியன் சனி சேர்க்கை இருக்கும் போது......
ஜாதகியும் அப்பாவும்.... ஒருவருக்கொருவர் பாசத்துடனும்...
மிகப் பிரியமாக நடந்து கொள்வார்.
அப்பாவா...? கணவனா...? எனக் கேட்டால் அப்பாவே முக்கிய்ம்... என கூறுவார்.
இப்படி பெண் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில்..... வீட்டோட மாப்பிள்ளையாக அமைத்துக் கொள்வது நல்லது.
திருமணப் பொருத்தம் பார்க்கும் இப்படி அமைப்பு இருக்கும் பட்சத்தில்..... ஒரு ஜோதிடனாக நான் இதைச்.... சொல்லியே விடுவேன்.
மேலும் முக்கியமாக.... இக்கிரக சேர்க்கை உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சனி ராகு கிரக சேர்க்கை

சனி + ராகு கிரக சேர்க்கை 
ஒருவருக்கு ஜாதகத்தில் இது வேண்டாத..... கூடாத....... கிரக சேர்க்கைகளில் முக்கியமான ஒன்று.
இது கர்ம தோஷம் இருப்பதை சுட்டிக் காட்டும்.
ஜாதகர் எதை செய்தாலும் தவறாகவே முடியும்.
கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்....
வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தும்......
ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்....
பூர்வீகத்தை விட்டு வெளியேற்றும்....
பூர்வீக ஊரில்.... பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது...
குலதெய்வம் அனுகிரகம் இருக்காது...
சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்தும்.... கஷ்டப்பட்டு உழைத்தும்... குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்....
சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இக்கிரக சேர்க்கை இருக்கும்.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.
இன்னொருவரிடம் வேலை செய்வதே நல்லது.....
கண்டிப்பாக... பூர்வீக இடத்தில் இருக்கக்கூடாது... பூர்வீக சொத்து இல்லாமல் இருப்பது நல்லது.
எவ்வளவுதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும்,, தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத... தகுதிக்கு குறைவான இடத்தில்.... குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும் இக்சேர்க்கை உள்ளவர்களின் நடவடிக்கைகள், யாருக்கும் பிடிக்காது....
யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.
விதி வயப்பட்டு செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை.
நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிப்பதிக்காமலும்.... வருமானம் இல்லாமலும் இருப்பர்.
திடீர் வீழ்ச்சியையும் கொடுக்கும்......
ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட.... சொல்லிக்கொள்ளும்படி வேலை இல்லாமலும்.... சூதாட்டம்.... திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்க சூழ்நிலை கூட ஏற்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை விபத்து மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும்....
ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தும்... தொழில் அமைந்தும்... தன்னுடைய ஒழுக்கக் குறைவினால்... சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
பூர்வீக சொத்தையும் சேர்த்து அழிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் முக்கியமாக...... அறியாமல் தவறு செய்து ஏமாறுபவர்களுக்கு கூட இக்கிரக சேர்க்கை இருக்கும்.
இவர்களுக்கு கர்மாவே... தோசமாக இருப்பதால், திடீர் திடீர் என அசுபகாரியங்கள் நடக்கும்.
முக்கியமாக....
இது ""விதி"" கிரகம் என்பதால்.......
நடப்பது..... நடந்தே தீரும்.... ஜாதகர் விரும்பினாலும்......................... விரும்பாவிட்டாலும்......
இச்சேர்க்கை உள்ள ஜாதகர்.... வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்றால்.... மட்டுமே...
தீமை குறைந்து... ஓரளவு நிம்மதியாகவும்.. சிறப்பாகவும்.... வாழலாம்.
இது முழுக்க முழுக்க அந்நிய மதம்....
அந்நிய மொழி.... அந்நிய நாடு...
அந்நிய மனிதர்களாலே லாபம் அடையக் கூடிய கிரகச்சேர்க்கை....
மொத்தத்தில் இது கர்ம வினை பயன்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சூரியன் ராகு கிரக சேர்க்கை

சூரியன் ராகு கிரக சேர்க்கை பலன் 
(குரு பார்வையும்... குருவுடன் இருந்தாலும்.. பலன் மாறும்)
என்னடா இவன்.. கெட்ட விஷயங்களா.... சொல்கிறாரே.... என நண்பர்கள் யாரும் நினைக்கவேண்டாம். இந்தமாதிரி கஷ்டமான சூழ்நிலை இருக்கிறவங்கதான்... ஜோதிடராகிய எங்கள தேடி வருகிறார்கள்.
அவர்களுக்கு அன்பான வார்த்தைகளையும்... ஜோதிட ஆலோசனைகளையும்... அதன் மூலம் பரிகார தெய்வ வழிபாடுகளையும் சொல்லி அனுப்புகிறோம். இப்படிப்பட்ட அனுபவங்கள் தான் எம்முடைய எழுத்துக்களாக வந்துள்ளது... அந்த அனுபவங்களையே முகநூல் வாட்ஸ் அப் நண்பர்களுக்கு பகிர்கின்றேன்....
இது.... பொதுமக்கள் விழிப்புணர்வுக்காகவும்... நாம்... எமது ஜோதிட மாணவர்களுக்காகவும் எழுதும் கட்டுரை பதிவு இது.
தந்தை வழி முன்னோர்கள் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்.... வாழ்ந்திருக்கக் கூடும்.
ஜாதகரின் அப்பா சட்டத்திற்கு புறம்பானவராகவும், சூதாட்டங்களில் ஈடுபடுபவராகவும், பொய்யராகவும், வியாதி உடையவராகவும், மனைவியை பிரிந்து வாழ்பவராகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவராகவும் இருப்பார்.
பொதுவா சொல்லப் போனால் அப்பா ஒழுக்கம் இல்லாதவராகவும் இருப்பார்.
ஜாதகரின் அப்பாவுக்கு கோச்சார கிரகங்களின் சூழ்நிலையை பொருத்து எதிர்பாராத கண்டங்கள் தரும், அப்பாவுக்கும் மகனுக்கும் உறவுநிலை சிறப்பாக இருக்காது.
ஜாதகர் பிறந்த காலத்தில் ஜாதகரின் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்.
ஜாதகர்... நிர்வாகத்திறமை இல்லாதவராக இருப்பார். அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் தொல்லைகளை அனுபவிப்பார்.
அரசியல் ஈடுபாடு இவர்களுக்கு பயனைத் தராது.
ஜாதகருக்கு அரசு மற்றும் அரசியல் ரீதியான தொல்லைகள் ஏற்படும். அரசியலில் பதவி கிடைக்காது அல்லது பதவியை தவறாக பயன்படுத்துவார். அப்படி பயன்படுத்தும் போது..... ஒரு நாளேனும்.... அரசு தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கண் பார்வை கோளாறு... உயிரனு குறைபாடு.... எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்பு உண்டு...
இந்த கிரக சேர்க்கை அமைப்பு சீரான வருமானத்தை தடை செய்யும்.
இவர்களுக்கு கடன் கிடைக்காது அல்லது கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் போலீஸ் ஸ்டேஷன் படியேறும் சூழ்நிலை கூட வரும்
இந்த கிரக சேர்க்கை பரம்பரை தோஷம் உள்ளதை சுட்டிக்காட்டும். இந்த தோஷம் அவர்கள் பரம்பரையில் யாராவது ஒருவருக்கு திருமண வாழ்வு பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும்.
எமக்கு தெரிந்து மேஷத்தில் இந்த அமைப்பு உள்ளவர்களின்.... தந்தை அரசு உத்தியோகத்தில் இருந்தும்... சூதாட்டத்தில் ஈடுபடுவராக இருக்கிறார். அதனால் சொத்துக்களை இழந்து விடுகிறார்.... ஜாதகரும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரியைப் போல் நடந்து கொள்கிறார்கள்... நடந்து கொள்வார்கள்.
மேலும் துலாமில் இருக்கும் போது இந்த சேர்க்கை அமைப்பு உள்ள ஜாதகரின் தந்தையார்... கூலி வேலை செய்கிறார் அவர் இரண்டு திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது மேலும் அப்பா செய்த குற்றத்திற்காக... ஜாதகராகிய மகன் தண்டனை அனுபவிக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.... இது ஒருவகையான பித்ரு தோஷம்.... என எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இவரது தந்தை தன் இனத்தாருடனோ அல்லது தன் சமுதாயத்தினரிடனோ... ஒத்துப் போய் வாழும் சூழ்நிலை இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சூரியன் கேது கிரக சேர்க்கை

சூரியன் கேது கிரக சேர்க்கை 
ஜாதகரின் தந்தை ஆன்மிகத்தில் அல்லது ஏதேனும் இயக்கத்தில் தன்னை இணைத்து ஈடுபடுத்திக்கொண்டால்... சிறப்பாக இருப்பார்
ஆன்மீகவாதி எனில் அவருக்கு ஞானத்தையும் பக்தியையும் தரும் ஆன்மீக வாழ்வில் மேலும் முன்னேறிச் செல்வார். முக்தி அடைவதே லட்சியம் என சொல்பவரும் உண்டு.
அப்படி இல்லையேல் ஜாதகரின் தந்தை இல்வாழ்வில் ஈடுபடும் போது விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தந்தைக்கும் மகனுக்கும் (ஜாதகருக்கு) சிறப்பாக இருக்காது.. தந்தைக்கு சட்ட சிக்கல்கள் வரும்.. அல்லது இருக்கும்.. கடனாளியாக நோயாளியாகவோ இருப்பார். ஜாதகரின் குடும்பத்திற்கு பயன் படமாட்டார்.. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் படி ஆகும்.
பத்து வருடங்களுக்கு மேல் ஜாதகர் உடன் பேசாமல் இருக்கும் தந்தையையும்... நான் அறிவேன். இதற்கும் அவர் அரசியலிலும் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். இப்படி அசுப பலன்களையே தரும்
ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர் எனில் எளிதில் ஞானம் கிடைக்கும்.
கண் மற்றும் எலும்பில் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஏதேனும் ஒரு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது... தியானம் நன்றாக வரும் ஏனெனில் சூரியன் ஆன்மாவையும் கேது ஞானத்தையும் குறிப்பதால் ஜாதகர் தியானப் பயிற்சி செய்தால் மிகவும் மேலான நிலையை அடைவார்....
இந்த கிரக சேர்க்கை ஜாதகர் அல்லது அப்பாவை அரசியலில் ஈடுபடத் தூண்டும்...
மேலும் முக்கியமாக.... இக்கிரக சேர்க்கை உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சனி கேது கிரக சேர்க்கை

சனி + கேது கிரக சேர்க்கை
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள்...
ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிக.... மிக மிக நல்லது.
இவர்களது குடும்ப வாழ்க்கையை...... ஆன்மீகம் சார்ந்து அமைத்துக் கொள்வதும் நன்று..
அப்படி அமைத்துக் கொண்டால் பெரிய அளவில்... பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்மீகம் சார்ந்து.. அது சம்பந்தப்பட்ட தொழில் செய்வது... மிக மிக நல்லது.
அப்படி இல்லை எனில்... காலமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையோடு வாழும் சூழ்நிலை இருக்கும். தீராத பிரச்சினை ஒன்று கூடவே இருக்கும். அது கடன், நோய், வழக்கு மற்றும் அதன் தசா புக்தி அந்தர நாட்களில் அறுவை சிகிச்சை... எனத்தரும்.
இந்த கிரக சேர்க்கையானது... ஜாதகரை பெரிய அளவுக்கு உயர்த்தி திடீரென வீழ்ச்சியை கொடுத்து.....
வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவோ, நோயாளியாகவோ அல்லது வழக்குகளை சந்திப்பவராகவோ அல்லது வழக்குக்காக போராடிக் கொண்டிருப்பவர்களாகவோ... செய்துவிடும்...
மீண்டும் சொல்கிறேன்.... இவர்கள் இல்லறத்தோடு கூடிய ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
இவர்களுக்கு நோய் வந்தால் நிச்சயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். வாழ்க்கையில் அடுத்து அடுத்து ஏற்பட்ட தோல்விகளால்.... இறுதிக்காலத்தில் இவர்களாகவே ஆன்மீக வாழ்க்கைக்கு சென்றுவிடுவர்.
குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாக ஆககூடிய இந்த சேர்க்கை உள்ள ஜாதகர்கள் பின்னாளில் ஏற்படும்..... தன்னுடைய தவறான முடிவுகளால்... தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கடன் அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடனாளியாகவே வாழும் சூழ்நிலை ஏற்படும்
இச்சேர்க்கை வாழ்வின் ஒரு பகுதியில் மிகவும் சிறப்பாக கோடி கோடியாக சம்பாதிக்கும் திறமையை கொடுத்து.... பேராசையால் சினிமாவில் முதலீடு செய்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு..... அனைத்து கஷ்டத்துக்கு ஆளானவர்களும் உண்டு.
மேலும் ஒவ்வொரு முறை தொழில் முன்னுக்கு வரும் போதெல்லாம்..... குடும்ப உறவுகளால் ஏற்படும் திடீர் இழப்புகள் மற்றும் பழைய, புதிய காதல் விவகாரங்களால் தொழிலில் கடுமையான வீழ்ச்சியை சந்திப்பவர்களும் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சந்திரன் செவ்வாய் கிரக சேர்க்கை

சந்திரன் செவ்வாய்... கிரக சேர்க்கை.... பார்வை அல்லது பரிவர்த்தனை.....
ஜாதகர் மற்றும் ஜாதகரின் அம்மா கோபம் உடையவராகவும்.... தைரியம் உடையவராகவும்.... எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பவர்களாகவும்... இருப்பர்.
ஜாதகர் சுறுசுறுப்பானவராகவும்... விவசாயம் செய்பவராகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
ஜாதகருக்கு வீடு வாகனம் மற்றும் மிஷனரிஸ் பற்றிய அறிவு இயல்பாகவே இருக்கும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பு சிறந்த மெக்கானிக் ஆகவும்.... வாஸ்து நிபுணராகவும்.... நீரோட்டம் பார்ப்பவராகவும்... இருப்பார்கள்.
அதிலும் ஆட்சி பெற்ற செவ்வாய் ஆட்சிபெற்ற சந்திரனை பார்வை செய்யும் பொழுது சிறந்த மெக்கானிக்காக இருப்பவர்களும் உண்டு
சுக்கிரன் வீட்டில் இந்த சேர்க்கை இருக்கும் போது வாஸ்து நிபுணராகவும் நீரோட்டம் பார்ப்பவர் ஆகவும் இருப்பார்கள்.
முக்கியமாக...... செவ்வாய் வீட்டில் சந்திரன் நீசம் ஆவதாலும்....
சந்திரன் வீட்டில் செவ்வாய் நீசம் ஆவதாலும்.....
இக்கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சில தீய பலன்களும் தந்துவிடுகிறது அல்லது நடந்துவிடுகிறது.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் வாழ்வில் முன்பாதியில் மிகுந்த ஆரோக்கியம் உடையவர்களாகவும் நல்ல உடல் கட்டமைப்பு உள்ளவர்களாகவும் இருப்பர்
இவர்கள் பின்பாதி வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து தினமும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால்......
இந்த அமைப்பு உள்ளவர்கள் 40 வயதிற்கு மேல் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும்..... யோகா... தியானம்... நடைபயிற்சி... மேற்கொள்வது மிகவும் உத்தமம்.
கிரக சேர்க்கையில் ஆண்கள் பெண்கள் இருந்தாலும்.... சகோதர தோஷத்தை தருகிறது இவர்கள் சகோதர உறவுகளுடன் சேர்ந்து வாழும்போது இருவர் வாழ்க்கையுமே குறை உள்ளதாக மாறிவிடுகிறது.
ஆட்சி பெற்ற செவ்வாய் வீட்டில்..... சந்திரனும் சேர்ந்து இருக்கும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர உறவுகள் ஒன்றாக வாழ்ந்த போது.... இருவருக்குமே குழந்தை பாக்கியம் சிறக்கவில்லை.... தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தபோது தான் இருவருக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்தது.
மேலும் ஒரே வீட்டில் வசித்து அல்லது ஒரே இடத்தில் தொழில் செய்து என இருந்தால் யாராவது ஒருவருடைய வாழ்க்கை.... குறை உள்ளதாக இருக்கும்.
ஏனெனில் சந்திரன் என்றால் சலனம்.... சகோதரரும் சலனம் உடையவராக இருப்பார்.
சந்திரன் வளர்பிறை தேய்பிறை இது போல் சகோதரரும் வளர்வதும் தேய்வதும் ஆக வாழ்க்கையில் இருப்பார் அதனால் சுப பிரிவாக வேலை விசயமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு என அடிக்கடி பிரிந்து செல்வதும், இருப்பதும் நல்லது.
ஆட்சி பெற்ற செவ்வாய்.... சுக்கிரனின் வீட்டில் இருக்கும் உச்ச சந்திரனை பார்வையிடும் பொழுது... ""பாலியல்ரீதியான"" தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
பெண்கள் ஜாதகம் எனில்..... ஜாதகி கணவன் மீது மிகவும் பிரியமாக இருப்பார்... மேலும் கிரகசேர்க்கை... ""கணவருக்கு"" இருதார அமைப்பை தந்துவிடுகிறது
ஜாதகருக்கும்..... தன் மனைவி அல்லாத மூத்த வயதுடைய இன்னொரு பெண்ணிடம் பழக்கம் இருக்க வாய்ப்பு உண்டு.
எனக்குத்தெரிந்து கன்னியில் செவ்வாய் சந்திரன் இருக்கும் கிரக சேர்க்கை உள்ள பெண் ஜாதகத்தில்.... ஜாதகிக்கு... நிச்சயம் ஆன பின்புதான் மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளது தெரியவந்தது....
மேலும் இந்த கிரகச்சேர்க்கை பெண்.... இரண்டாம் தாரமாக இருந்தால் சிறக்கும் என சொல்லப்படுகிறது.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் புதன் சேர்க்கை

சந்திரன் புதன் சேர்க்கை அல்லது பார்வை.....
ஜாதகர் சிறந்த அறிவாளியாகவும்.... உள்ளுணர்வு மிக்கவராகவும்.... சமாதான பிரியராகவும்... நகைச்சுவையாளராகவும்.... இருப்பர்
ஜாதகர் சிறுவயதிலேயே பெற்றோரை பிரிந்து வாழும் நிலை ஏற்படும்... இவருக்கும் பெற்றோருக்கும் ஆகாது... பெற்றோர் உடன் ஒத்துப் போக மாட்டார். குறிப்பாக இவருக்கும் அம்மாவுக்கும் ஆகாது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் யாரையேனும் ஒருவரை காதலித்து கொண்டு இருப்பார்.
""ஒருதலைக் காதல்"" இருக்க வாய்ப்பு உண்டு. காதல் சக்சஸ் கிடையாது . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்காது. முக்கியமா அம்மாவுக்குப் பிடிக்காது.
பிரிவு உண்டு.... ஏன்னா ஒருத்தரோட ஆதரவு இல்லாமல் போகிறது... போகும்.
உதாரணமா மீனத்தில் இந்த சேர்க்கை உள்ள ஜாதகர் படிப்பில் முதல் மாணவராக திகழ்கிறார்... பத்தாம் வகுப்புக்கு பிறகு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்... இவரின் காதல் விவகாரத்தால் பெற்றோர் இருவருக்கும் சண்டை நடந்த வண்ணமே இருக்கிறது.....
மேலும் இந்த இரண்டு கிரகங்களும் நட்சத்திர சார பரிவர்த்தனை பெற்றால் வயது வித்தியாச காதல் ஏற்படும்.
அடுத்து ரிஷபத்தில் இந்த சேர்க்கை இருக்கும் சாதகர் நல்ல படிக்கக்கூடிய மாணவராக நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருப்பார்... இவரும் தாயாரும் ஓரிடத்திலும் தந்தை ஒரு இடத்திலும் வசிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.
State Rank வாங்கிய பெரும்பாலானோருக்கு கிரக சேர்க்கை இருக்கும்.
உயர்ந்த இடத்தில் இருந்தாலும்..... தன் தகுதிக்கு மீறி கீழிறங்கி வந்து அனைவருடனும்... மக்களுடனும் பழகுவார்.
பொருத்தமே இல்லாத நண்பர்களால் நட்பு ஏற்பட்டு பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் கூட ஏற்படும்... இந்த சேர்க்கையின் பலவீனமே இதுதான்
மேலும் எமக்கு தெரிந்து ஒரு ஜாதகர் கல்வியில் முதல் மாணவராக இருந்தார் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார்.
இந்தச் சேர்க்கை உள்ளவருக்கு... யூகிக்கும் திறன் சிறப்பாக இருக்கும் நல்ல பேச்சுத் திறன் உள்ளவராக இருப்பார்.
அடுத்து முக்கியமாக மீனத்தில் இந்த சேர்க்கை இருக்கும் போது ஜாதக காதலித்த பெண்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாததாக இருந்தது இருக்கும் வாய்ப்பு உண்டு..
மேலும் மனம் //செயல் நீசத்தில் கெட்ட விஷயங்களில் வேகம் அதிகம் இருக்கும்.
இந்த கிரக சேர்க்கையோடு ராகு அல்லது கேது இருக்கும்பொழுது... ஜாதகருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.... அதனால் ட்ரீட்மெண்ட் எடுக்கும் நிலை கூட வரலாம்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் சுக்கிரன் கிரக சேர்க்கை

ஜாதகத்தில்.... சந்திரன் சுக்கிரன் கிரக சேர்க்கை.... பார்வை பலன் என்ன என்று பார்ப்போமா நண்பர்களே.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்.... வீட்டில் மாமியார் மருமகள் சண்டை நடந்து கொண்டே இருக்கும்...
மாமியார் மருமகள் சண்டையில் சுக்கிரன் பலம் பெற்றால் மருமகளின் கை ஓங்கி இருக்கும்.... சந்திரன் பலம் பெற்றால் மாமியார் கை ஓங்கியிருக்கும்...
மேலும் ஜாதகத்தில் இரண்டும் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் சம பலத்தில் இருக்கும் போது இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லும் குணம் வந்துவிடும்...
எதிர்பாலினர்களுக்காக அதிகமாக செலவுகள் செய்வார்.... பொழுதுபோக்குக்கும் சிற்றின்பத்திற்கும்...அதிகமாக செலவு செய்வார்கள்.
ஜாதகர் ஆடம்பரப் பிரியராக இருப்பார்...
எப்பொழுதும் எதிர்பாலினரை பற்றிய சிந்தனையில் இருப்பார்...
சொகுசான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார்....
கலைத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்...
வரவுக்கு மீறி செலவு செய்பவராக இருப்பார்...
மனைவியின் மன உளைச்சலுக்கு ஆளாவார்...
இவர்கள் திருமணத்துக்கு பின் தனிக்குடித்தனமாக வாழ்வது சிறப்பு...
கிரக சேர்க்கை பெண்ணுக்கு இருந்தால் அவர் மற்ற பெண்களிடம் முன்கோபம் ஆக இருப்பார்கள்.... கணவன் குடும்பத்தாருடனும் .... தன் குடும்பத்தாருடனும் ஒற்றுமை இல்லாமல் தனியாக தனிக்குடித்தனமாக இருக்கும் அமைப்பும்வ பெண்களுக்கு வந்துவிடும்....
ஆணுக்கு இருக்கும்பொழுது அம்மாவுக்கும்... மனைவிக்கும்.... சிறிது கூட ஒத்துப் போகாது..
மனைவியின் ஆடம்பர செலவில்( முக்கியமாக... மேக்கப்) பொருளாதாரத்தில் மிகவும் தங்கி விடவும் வாய்ப்பு ஏற்படுத்திவிடும்... இதுதான் மனைவிக்கும் இவருக்கும் ஒற்றுமையின்மை ஏற்படுத்தும்....
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சந்திரன் சனி சேர்க்கை

சந்திரன் சனி சேர்க்கை அல்லது பார்வை அல்லது பரிவர்த்தனை.......
இது ஒரு மீள்பதிவு
இது புனர்பூ தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது வாழ்நாள் முழுவதும் செத்து பிழைப்பது.
இது பொதுவாழ்க்கைக்கு சிறப்பாகவும்....
குடும்ப வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று பொருள்.
இவர் கடும் உழைப்பாளியாக இருப்பார்.
எப்போதும் ஒருவித சோகத்துடனும்.... தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பர்.
இவர் பழமைவாதி..... பழம்பெரும் விஷயங்களைப் பேசுபவராக இருப்பார்.
பிறரை குறை கூறிக் கொண்டே இருப்பார் அதனால் இவரிடம் யாரும் நட்புடன் பழக மாட்டர்.
இவர்களுக்கு யூக அறிவு சிறப்பாக இருக்கும்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் பகலில் சாமியாராகவும்...... இரவில் சம்சாரியாகவும் இருப்பர்.
இவர்களுக்கு எந்த சுபகாரியமும் தாமதமாகத்தான் நடக்கும்.
ஒவ்வொரு முயற்சியும் முதலில் தோல்வியும் அதன் பிறகு வெற்றியையும் தரும்.
ஏதேனும் ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர்.
மற்றவர்களின் சுமைகளை இவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதனால்.... இவர்கள் அடிக்கடி சாமியாராக போய்விடுவேன்..... என்று கூறிக் கொண்டே இருப்பர்.
இவர்களிடம் தொழில் பற்றிய அறிவு மிக சிறப்பாக இருக்கும்..
இவர்கள் யோசனை சொல்லி முன்னுக்கு வந்தவர்கள் அதிகம் இருப்பர்.
இவர்கள் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருப்பதால் மற்றவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது.
எல்லாவற்றிற்கும் கணக்கு பார்ப்பவர்களாக இருப்பார்கள்.... மேலும் இவர்கள் இல்வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வருவார்களானால் தன்னுடைய உழைப்பினால் மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்.
தொழிலில் கவனம் முழுவதும் செலுத்தும்போது மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்....
குடும்பம் அமைப்பு என்று வரும்போது சுமாராகத்தான் குடும்ப விஷயங்களை கவனிப்பார்கள்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு.... நிச்சயித்த திருமணம் கூட.....
கடைசி நேரத்தில் நின்று விடும் வாய்ப்பு உண்டு.
எப்பொழுதுமே தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி செய்கின்ற தொழில்களையும் செய்கின்ற இடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
சந்திரன் என்றாலே பாதிநாள் வளர்ச்சியையும் பாதிநாள் தேய்மானத்தையும் குறிக்கும் இவர்கள் செய்கின்ற தொழிலும் அப்படியே நிலை இல்லாமல் இருக்கும்.
ஒரு மளிகைக் கடை வைத்திருக்கும் நபர் கூட இந்த சேர்க்கை இருந்தால் வாழ்நாளில் எப்படியும் குறைந்தது 10முறையாவது கடை நடத்தும் இடத்தை மாற்றி இருப்பார்.
அதே மாதிரி சந்திரன் என்பது இடமாற்றத்தை குறிப்பதால் அடிக்கடி பயணம் செய்துகொண்டே இருப்பது இவர்களில் அமைப்பாகும் மெடிக்கல் representative மற்றும் மார்க்கெட்டிங் வேலையில் உள்ள நபர்கள் இந்த கிரக சேர்க்கை இருக்கும்.
முக்கியமாக எங்களைப்போன்ற ஜோதிடர்களுக்கு இந்த கிரக சேர்க்கை இருக்குமானால் வாடிக்கையாளர்களின் நிறைகுறைகளை அல்லது குற்றங்களை எளிதில் கண்டுபிடித்து விடும் வாய்ப்பு வந்து விடும்.
ஒரு சில நேரங்களில் திருமண தாமதத்திற்கு இந்த கிரகமும் பங்காற்றுகிறது. தாலிகட்டும் வரை நிச்சயம் இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சந்திரன் ராகு கிரக சேர்க்கை

சந்திரன் ராகு கிரக சேர்க்கை பலன்... பார்வை பலன்... பார்வைங்கறப்ப இங்க கேதுவும்...ஜ வந்துவிடுவார்....
பலன் என்னவென்று பார்ப்போமா நண்பர்களே.....
ஜாதகருக்கு அடிக்கடி கண்டங்களும் விபத்துக்களும் ஏற்படும் ஜாதகர் தகுதிக்கு மீறி பேராசை காரராக இருப்பார்... அதனால் அவமானத்தையும் அடைவார்
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் துணிந்து ஈடுபடுவார்கள்... ஙவந விஷ பூச்சிகளால் தொல்லைகள் ஏற்படும்
செய்வினை பாதிப்புகளும் ஆவிகள் தொல்லைகளும் ஏற்படும்..... எதையும் புரிந்து கொள்ளாமல் தான் சொல்வதே சரி.... என்று வாதிடுவார்..
எதைக் கொடுத்தாலும் திருப்தி இருக்காது ... அதிகம் பேராசை காரணமாகவும்.... பொய்யராகவும், நோய் உள்ளவராகவும், அவமானங்களை சந்திப்பராகவும் பழிவாங்கும் உணர்வு உள்ளவராகவும் மாந்திரீக ஈடுபாடு அதிகம் உள்ளவராகவும் இருப்பார்.. ஜாதகருக்கு அடிக்கடி கண்டங்களும் கஷ்டங்களை இருக்கும்
சந்திரன் உணவு என்பதால் ஜாதகருக்கு எது சாப்பிட்டாலும் ஒவ்வாமை நோயாக மாறும் வாய்ப்புண்டு... கட்டுப்பாடில்லாத உணவு பழக்க வழக்கத்தால் அடிக்கடி நோய்வாய்ப் பட்டு அவதியுடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்
விதவைப் பெண்கள் மீது மோகம் கொள்வார் வெளிநாடு செல்லும் யோகத்தை பெறுவார்.... காரணம் தெரியாத நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு
கிரக சேர்க்கை அம்மாவை இளமையிலே மிகவும் கஷ்டப்பட வைக்கும்... (மனதளவில், உடலளவில், வாழ்க்கை அளவில்)..வறுமையாலும் நோயாலும் கஷ்டப்படக் கூடிய நிலையும் ஏற்படும்...
தன் தாயாராலே தவறாக வழி நடத்தப்பட்டு( தவறு என்று உணர கூடிய சூழ்நிலை இல்லாமலே) வாழ்க்கைக் எ
கெடுத்துக் கொள்பவர்களுக்கும் கிரக சேர்க்கை உண்டு.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிகம் வாய் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என தொழிலில் கருத்தாக இருப்பார்களேயானால் *மஹாசக்தி யோகம்* என்னும் யோகத்தை தந்து பெரும் பணக்காரராகவும்... புகழுடையவராகவும்.. மாற்றும்.|
ஜாதகர் வெளிப்பார்வைக்கு தைரியசாலியாக தெரிந்தாலும் கூட.... வாழ்க்கையில் திடீரென ஏற்படும் மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி செய்யும் அளவுக்கு செல்வார்கள்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் கேது கிரகசேர்க்கை

ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டால் ஞானம் எளிதில் கிடைக்கும்...
பின்னால் வருபவரை முன்கூட்டியே அறிந்து தெளிவார்..
தெய்வ தரிசனமும் குருவின் ஆசிகளும் எளிதில் கிடைக்கும் ஆனால் இல்வாழ்க்கையில் இருப்பார்களேயானால் இல்வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் விரக்தியுடனனும் வெறுப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.. வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும் சட்ட சிக்கல்கள் வரும் தனிமை வாட்டும் உறவுகள் முழுவதும் பகையாகும் நோயினால் பாதிக்கப் படக்கூடும் இதே அமைப்பு உள்ள பெண் ஜாதகத்தில் கணவனும் மனைவியும் பிரச்சனை ஏற்பட்டு அதிக தடவை போலீஸ் ஸ்டேஷன் படி ஏறி இறங்கி இருப்பர்
இவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் அறுவைசிகிச்சை கண்டிப்பாக நடக்கும் இந்த கிரக சேர்க்கை 90% சாமியாரா போவதற்கான வாய்ப்புகள் உண்டு அம்மாவுக்கும் ஜாதகருக்கும் பிரிவினை வரும்.... எமக்குத்தெரிந்து ஜோதிடத்தில் சிறந்த நிலையில் இருக்கும் ஒரு ஜாதகர் இல்வாழ்க்கையில் சிறப்பு இல்லாமல் இருக்கிறார் அவர் தன்னுடைய உள்ளுணர்வின் ஆனால் மற்றவர்களுக்கு சொல்லும் விஷயம் சரியானதாக... இருக்கிறது சிறந்த ஜோதிடராக இருக்கிறார்...
பொதுவாகவே வாழ்க்கையில் ஜாதகருக்கு மனப்போராட்டம் அதிகமாக இருக்கக்கூடிய கிரகசேர்க்கை அமைப்பு இது....
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

செவ்வாய் புதன் கிரக சேர்க்கை

இக்கிரக சேர்க்கை ஆண்களைவிட பெண்களுக்குத்தான் கெடுபலன்கள் அதிகமாகக் கொடுக்கும்.... படிக்கின்ற வயதில் காதல் விவகாரத்தில் ஈடுபடுத்தி படிப்பை தடைசெய்கிறது.
ஆரம்பத்திலேயே தாண்டிவிட்டால் ஆராய்ச்சி கல்வி வரை படிப்பைத் தொடர முடியும். எனக்குத்தெரிந்து ஜாதகர் படிக்கிற காலத்தில் திருமணமானவரை கூட்டிச் சென்று கல்யாணம் செய்து கல்வி தடையாகி..... திருமண உறவு முறிந்து.... பின்பு.... மீண்டு வந்து உயர்நிலைக் கல்வி முடித்து..... இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள்.
மேலும் திருமணத்துக்குப் பின்பும்.... கணவன் இருக்க காதலனும்... மனைவி இருக்க காதலியும் உண்டு என்கிற நிலையை தந்துவிடுகிறது *(தாங்களாகவே எந்த ஒரு முடிவுக்கு வர வேண்டாம். சுயமான வைத்தியமும்.... சுயமான ஜோதிடமும் எப்பொழுதும் ஆபத்து)*
கல்லூரி காலங்களில் உடன் படித்த மாணவரை.... நீண்ட போராட்டத்திற்கு பின்... திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் உண்டு... அதேசமயத்தில் பட்டப் படிப்பை முடித்திருந்த ஜாதகிக்கு..... எட்டாவது படித்த நபர்.... வாழ்க்கை துணையாக அமைவதும் நிகழத்தான் செய்கிறது...
ஆண்களுக்கு இக்கிரக சேர்க்கைகள்.... கணிதத்துறையில் கில்லாடியாக உருவாக்குகிறது. இன்ஜினியரிங் கல்வி படிப்பதற்கு இந்த கிரக சேர்க்கை மிகவும் நல்லது.
இந்த கிரக சேர்க்கை படிப்பிற்கேற்ற வாழ்க்கைத்துணையை தருவதில்லை.... அறிவு சார்ந்த முடிவுகளில் ஒருவர் எடுக்கும் முடிவு இன்னொருவருக்கு பிடிக்காது..... மேலும் படிப்பு மற்றும் அறிவு சார்ந்த சண்டைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆண்களுக்கு கிரகசேர்க்கை இருக்கும்போது.... வரவு செலவு செய்யும் போதும்... அந்த விஷயங்களில் துல்லியமாக கணிதம் பார்த்து வரவு செலவை கனிப்பர். ஏனெனில் இவர்களுக்கு கணித அறிவு மிக அழகாக அறிவு மிகுந்ததாக இருக்கும்.
காலி இடத்துடன் வீடு அமையும் யோகத்தை தருகிறது. இந்த கிரக சேர்க்கை. இக்கிரகச்சேர்க்கையோடு.... *சனி* சேரும்போது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்... அதேநேரத்தில் கணவன் மனைவிக்குள்... பகை என்பதால்...
ஆணுக்கு... பெண்.... படிப்பு ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக இருக்கும்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

செவ்வாய் குரு கிரக சேர்க்கை

ஜாதகர் தைரியமானவராகவும் சுறுசுறுப்பானவராகவும் எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பவராகவும் கோவில் கட்டுபவராகவும் ஏதேனும் இயக்கங்களில் பதவி உடையவராகவும் இருப்பார்....
இவர்கள் கோவில் கட்டட திருப்பணிகளுக்கு.... விழாக்கால திருப்பணிகளுக்கு.... வசூலுக்கு சென்றால் உடன் வசூலாகும்... கோவில் பணிகளை முன்னின்று எடுத்துச் செல்வார் அந்த அளவுக்கு யோகம் மற்றும் புண்ணியம் உண்டு....
மேலும் வாடகை வருமானம் வரும் யோகம் உள்ளவராக இருப்பார்.
மிக சிறப்பான வீடு வாகனம் உடையவராகவும் இருப்பார்.
விளையாட்டுத் துறையில் ஈடுபாடு உடையவராக இருப்பார் வெற்றிகளையும் தருபவராகவும் கொள்பவராகவும் கொடுப்பவராகவும் இருப்பார்...
எமக்கு தெரிந்த இந்த கிரக அமைப்பு உள்ள ஜாதகர் 13 வயதிலேயே விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வாங்கி உள்ளார்.
மேலும் நேர்மையான முறையில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் இந்த கிரக அமைப்பு உண்டு
ஜாதகரின் சகோதரர்கள் சமுதாயத்தில்செல்வத்துடனும் செல்வாக்கான மற்றும் மதிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..
பெண்கள் ஜாதகம் ஆயின்..... ஜாதகிக்கு ஒழுக்கமான கௌரவமான செல்வம் செல்வாக்கான கணவன் அமைவார்....
மேலும் இந்த கிரக அமைப்பு ஜாதகியின் கணவருக்கு அரசு பணி அதிலும் ஆசிரியப் பணி புரிபவராக கூட இருப்பார்...
கணவரின் பெயரில் சொந்த வீடு வாகனம் அமையும் அரசு உயர் பணியில் இருப்பவர்கள் கூட இருப்பார்கள்..
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை

அடுத்தடுத்து கிரகச் சேர்க்கை பலன் வரிசையில்.....
நாம் காண இருப்பது செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை பலன்கள்.....
இந்த செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தசாவதாரிணி யோகம் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பர்... பெரும்பாலும் வாழ்க்கைத்துணை பக்கத்திலேயே அமையும்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் பெரும்பாலும் காதல் கலப்பு திருமணம் செய்துகொள்வார்கள்....
இவர்கள் சிறுவயதில் பாலியல் விஷயங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முன் ஜென்மத்தில் வாழ்க்கை துணையாக யாராக இருந்தார்களோ... இந்த ஜென்மத்தில் வாழ்க்கைத் துணையாக ஆவார்கள் என முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
கணவன் மனைவி மிக அன்னியோன்யமாக இருப்பார்கள். இவர்களுக்குள் நல்ல வசிய சக்தி இருக்கும். கலைத்துறையில் பிரகாசிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
ஜாதகருக்கு சொகுசான வீடு வாகனம் அமையும்
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள் காமத்தில் அதிக அதீத ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்...
அழகான வாழ்க்கை துணை அமையும் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்... எனக்குத்தெரிந்து நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன்.... நீசம் பெற்ற சுக்கிரன் உடன் இணைந்த செவ்வாய் உள்ள ஆண் ஜாதகர்.. காதல் திருமணம் செய்து நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஆட்சி பெற்ற சுக்கிரனோடு இணைந்த செவ்வாய் அமைப்பு உள்ள பெண் ஜாதகரும்..... காதல் திருமணம் புரிந்து நல்லதொரு வாழ்க்கை வாழ்கிறார்.... வாழ்கிறார்கள்.
இந்த கிரக சேர்க்கையுடன் ராகு கேது சேருமானால் சேர்ந்து இருக்குமானால்.... அசுபர்களின் பார்வையும்... தசா புத்தியும் இருக்குமானால்.... ஒழுக்கம் கேள்விக்குறியாக இருக்கும் மிக தவறான வகையில் வருமானம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் (சூழ்நிலையை ஏற்படுத்தும்). மேலும் காமம் எண்ணங்கள் அதிகமாகும். கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும்.
இந்த கிரகங்களின் இருப்பு அதன் தன்மை கணவன் மனைவி ஒற்றுமையை கடுமையாக பாதிக்கும். எப்படி எனில் செவ்வாய் சுக்கிரன் இரண்டும் ஒருவருக்கு ஒருவர் 6 / 8 ஆக இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை குறைவாகவே இருக்கும் தசாபுத்தி சாதகமாக இல்லாத பட்சத்தில்... பிரச்சனை மற்றும் பிரிவினையை கூட தந்துவிடும். அல்லது தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது அல்லது தாம்பத்தியம் இல்லாமல் செய்துவிடும்.
ஜாதகர் மனைவி கூடவே..... இருந்தாலும் கூட மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பிடிக்கவில்லை என சொல்பவர்களும் உண்டு.
இவ்விரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்றுடன் ராகு அல்லது கேது சேரும்போது திருமணம் மிகவும் தாமதமாகவும் திருமணத்திற்கு பிறகு பிரிவினையை தருவதும் எளிதில் நடந்து விடும்.
இந்த அமைப்பு உள்ள ஆண் ஜாதகம் கணவன்-மனைவியும் அடிக்கடி பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர்... மேலும் இந்த அமைப்பில் தாம்பத்திய சுகம் குறைவாகவே இருக்கும் கணவன்-மனைவி ஈர்ப்பு குறைவாகவும் இருக்கும்.... அந்த இடத்தில் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குருவின் பார்வை இருக்கும்பட்சத்தில் மனைவியை கடைசிவரை கைவிடமாட்டார்.
செவ்வாய் சுக்கிரன் சம சப்தம பார்வையில் ராகு கேது உடன் இருக்கும்பொழுது கணவன் மனைவிக்கிடையில் வழக்கு வம்புகள் கண்டிப்பாக இருக்கும் அல்லது நடைபெறும். திருமணமாகியும் ஒரு சில வருடங்கள் சேர்ந்து இருந்து..... அதன்பிறகு கோர்ட் கேஸ் வழக்கு என்ன என அலைந்து தீர்ப்பும் வராமல் 15 வருடங்களாக இருப்பவர்களும் உண்டு...
ஆறுதலான விஷயம் என்றால் இவர்களுக்கு கலைத்துறையில் யோகமுண்டு... சொகுசான வீடு வாகனம் யோகம் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*