காலசர்ப்பயோகத்தில்......
ராகு 7ம் இடத்திலும் கேது 1ம் இடத்திலும்
ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவர்கள் சுயநல வாதிகளாகவே இருப்பர், கெட்டவர்கள் இந்த இடத்தில் ராகு கெட்டிருந்தால் நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
ராகு 7ல் பலமுடன் இருந்தால், ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவரின் ஆசை மிகுந்த குறிக்கோள் ஜாதகருக்கு நன்மை செய்வதாகவே அமைகிறது.
ஆனால் 1ல் உள்ள கேது ஜாதகருக்கு ரத்தக்க்கொதிப்பு, தலைவலி, வாழ்க்கையில் உற்சாகமின்மை, அதனால் நோய் சாதரணமாக பீடிக்கும் தன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும்
ஜாதகருக்கு, புது விதமான சமயத்தில் தீர்க்க முடியாத நோயாலும், செய்வினையாலும், திடீர் அதிர்ச்சியாலும் பிரச்சனைகள் வரக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
இங்கே ராகு பலமுடன் இருந்தால், திடீர் பண வரவு, வாழ்க்கையில் பல ரகசியமான நடவடிக்கைகள், சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கும் தன்மை, விஷத்தை பயண்படுத்தி நோய் தீர்க்கும் தனமை, மனநலத்திற்கு தீர்வு சொல்பவர்களாக அமைவர்.
கேது 2ல் மிகுந்த வருமானம் ஆனால் சேமிப்பற்ற நிலை, குடும்ப நபர்களிடம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலை, முகத்திலும், பல்லிலும் மருத்துவம் பார்க்கும் நிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். பொதுவாக ஜாதகர் செல்வத்தில் ஒரு உறுதியற்ற நிலையும், தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பார்.
ராகு 9ம் இடத்திலும் கேது 3ம் இடத்திலும்
பொதுவாக ஜாதகருக்கு ராகு 9ல் கெட்டிருந்தால் பணநஷ்டத்தை சூதாட்டத்தில் ஏற்படுத்துவார் என்றும் ஜாதகருக்கு தெய்வநம்பிக்கை என்பதே இருக்காதென்பது விதி.
இந்த இடத்தில் ராகு பலமுடன் இருந்தால் அதிக ஆன்மீக நம்பிக்கையும், அதைப்பற்றியே போதிக்கும் போதகர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் போதிக்கும் போதனைகள் சற்று முரண்பட்டதாகவே இருக்கும்.
3ல் உள்ள கேது கெட்டிருந்தால் ஜாதகருக்கு குடும்ப உறவு சுமூகமாக இருக்காது, அத்துடன் அமைதியான மனநிலை என்பது அமையவே அமையாது, அதனால் ஜாதக்ர் வாழ்க்கையை எப்போதும் தவறாகவே எடுத்துக்கொள்வார். இவருக்கு மற்றவர்களுடன் பேச்சு வழி உறவு என்பது எல்லோருக்கும் போல் சரியானதாகவே அமையாது, முரண்பட்டதாகவே அமையும்.
பொதுவாக கேது உபஜெய ஸ்தானத்தில், 3ல் கெட்ட பலன்களைத்தராது. 3ல் கேது, பேச்சில் சிலர் முரண்பாடானவர்களாக இருந்தாலும் அது மிகப்பெரிய ஒரு பாதிப்பைத் தராது.
..........தொடரும்