Saturday, September 29, 2012

ஆண் ஜாதகத்தில் திருமணத்தடை ஜோதிடக்குறிப்பு:


      ஆண் ஜாதகத்தில் திருமணத்தடைக்கான சில காரணங்கள் லக்கின வாரியாக:
      மேஷ‌ லக்கினம்: சுக்கிரன் கன்னியிலும், செவ்வாய் விருச்சிகத்தில் மறைதலும்; அலிகிரக வீட்டில் சுக்கிரன் அமர்தல் அல்லது அவர்களின் பாதசாரம் பெறுதல்.
      ரிஷப லக்கினம்: சந்திரனும் செவ்வாயும் விருச்சிகத்தில் அமர்வது; சுக்கிரனும் செவ்வாயும் துலாம், தனுசு, மேஷத்தில் மறைதல்
      மிதுன லக்கினம்: குரு விருச்சிகத்தில் இருக்க, புதனும் சனியும் சேருதல்: தனுசில் செவ்வாய் சனி சேருதல்.
      கடக லக்கினம்: சனியும் சந்திரனும் மிதுனத்தில் இருத்தல்; மகரத்தில் சுக்கிரனும் சந்திரனும் கூடி நிற்பது.
      சிம்ம லக்கினம்: சனி மகரத்தில் அமர, சூரியனும் சுக்கிரனும் சேருவது. கும்பத்தில் சனி செவ்வாய் சேருவது.
      கன்னி லக்கினம்: புதனும் குருவும் கும்பம், மேஷம், சிம்ம ராசிகளில் இருப்பதும்; குரு சிம்மத்தில் இருக்க புதன் செவ்வாய் சேருதல்.
      துலா லக்கினம்: மேஷத்தில் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை அல்லது சனி செவ்வாய் மேஷத்தில் சேருதல்; சுக்கிரனும் செவ்வாயும் கன்னியில் இருத்தல்.
      விருச்சிக லக்கினம்: சுக்கிரன் மேஷத்தில் அமர, செவ்வாயும் புதனும் ஒரே வீட்டில் இருத்தல்; செவ்வாயும் சுக்கிரனும் அலிகிரக வீட்டில் இருத்தல்.
      தனுசு லக்கினம்: புதன் ரிஷபத்தில் இருக்க, சந்திரனும் குருவும் சேர்ந்து ரிஷபம், கடகம், விருச்சிகத்தில் இருத்தல்.
      மகர லக்கினம்: சந்திரன் அலிகிரக வீட்டிலோ அல்லது அலிகிரகத்தின் பாதசாரம் பெற்றாலோ தடைகள் உண்டு; மிதுனம், சிம்மம், தனுசு ராசிகளில் சனி, சந்திரன் அமருதல்.
      கும்ப லக்கினம்: சிம்மத்தில் சந்திரன் சுக்கிரன் அல்லது சனி செவ்வாய் சேருதல்; சூரியன் கடகத்திலிருக்க, புதனும்  சனியும் சேர்ந்து இருத்தல்.
      மீன லக்கினம்: கன்னியில் சந்திரன் சுக்கிரன் அல்லது சனி செவ்வாய் சேருதல்; குருவும் புதனும் சிம்மம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் இருத்தல்.
      மேலும் ஆண் ஜாதகத்தில் 7ம் அதிபன் 6, 8, 12ல் மறைந்து அல்லது பகை சாரம் பெற்று, பாவி ஏழாம் இடத்தை பார்த்து, சுக்கிரன் கெட்டு விட்டால் திருமணத் தடை உண்டு.
      லக்கினம், ராசியை பாபகிரகங்கள் பார்த்தாலோ, மற்றும் லக்கினாதிபதி, ராசியாதிபதியை பாபகிரகங்கள் பார்த்தாலோ திருமணம் தாமத‌மாகும்.
      லக்கினத்திற்கு 7,3ல் பாபகிரகங்கள் அமர்ந்தாலோ அல்லது 7, 3ம் இடத்தை பாபகிரகங்கள் பார்த்தாலோ திருமணம் தடைபடும்.
      லக்கினத்திற்கு இரண்டுக்குடையவனுடன் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் கூடினால் தாமத திருமணமே!

No comments:

Post a Comment