செவ்வாய் கேந்திர ஆதிபத்யம் அடைந்து, 6ம் இடத்தில் தனித்து இருந்தாலும் அல்லது சனி, சூரியன் ஆகியோரோடு சம்பந்தம் பெற்றாலும் அல்லது கேந்திர ஆதிபத்யம் பெற்ற செவ்வாய், சனி சூரியனோடு சம்பந்தம் பெற்று கோணத்தில் அமர்ந்தாலும் அந்த செவ்வாயால் நன்மையே.
Saturday, October 20, 2012
Saturday, September 29, 2012
ஆண் ஜாதகத்தில் திருமணத்தடை ஜோதிடக்குறிப்பு:
ஆண் ஜாதகத்தில் திருமணத்தடைக்கான சில காரணங்கள் லக்கின வாரியாக:
மேஷ லக்கினம்: சுக்கிரன் கன்னியிலும், செவ்வாய் விருச்சிகத்தில் மறைதலும்; அலிகிரக வீட்டில் சுக்கிரன் அமர்தல் அல்லது அவர்களின் பாதசாரம் பெறுதல்.
ரிஷப லக்கினம்: சந்திரனும் செவ்வாயும் விருச்சிகத்தில் அமர்வது; சுக்கிரனும் செவ்வாயும் துலாம், தனுசு, மேஷத்தில் மறைதல்
மிதுன லக்கினம்: குரு விருச்சிகத்தில் இருக்க, புதனும் சனியும் சேருதல்: தனுசில் செவ்வாய் சனி சேருதல்.
கடக லக்கினம்: சனியும் சந்திரனும் மிதுனத்தில் இருத்தல்; மகரத்தில் சுக்கிரனும் சந்திரனும் கூடி நிற்பது.
சிம்ம லக்கினம்: சனி மகரத்தில் அமர, சூரியனும் சுக்கிரனும் சேருவது. கும்பத்தில் சனி செவ்வாய் சேருவது.
கன்னி லக்கினம்: புதனும் குருவும் கும்பம், மேஷம், சிம்ம ராசிகளில் இருப்பதும்; குரு சிம்மத்தில் இருக்க புதன் செவ்வாய் சேருதல்.
துலா லக்கினம்: மேஷத்தில் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை அல்லது சனி செவ்வாய் மேஷத்தில் சேருதல்; சுக்கிரனும் செவ்வாயும் கன்னியில் இருத்தல்.
விருச்சிக லக்கினம்: சுக்கிரன் மேஷத்தில் அமர, செவ்வாயும் புதனும் ஒரே வீட்டில் இருத்தல்; செவ்வாயும் சுக்கிரனும் அலிகிரக வீட்டில் இருத்தல்.
தனுசு லக்கினம்: புதன் ரிஷபத்தில் இருக்க, சந்திரனும் குருவும் சேர்ந்து ரிஷபம், கடகம், விருச்சிகத்தில் இருத்தல்.
மகர லக்கினம்: சந்திரன் அலிகிரக வீட்டிலோ அல்லது அலிகிரகத்தின் பாதசாரம் பெற்றாலோ தடைகள் உண்டு; மிதுனம், சிம்மம், தனுசு ராசிகளில் சனி, சந்திரன் அமருதல்.
கும்ப லக்கினம்: சிம்மத்தில் சந்திரன் சுக்கிரன் அல்லது சனி செவ்வாய் சேருதல்; சூரியன் கடகத்திலிருக்க, புதனும் சனியும் சேர்ந்து இருத்தல்.
மீன லக்கினம்: கன்னியில் சந்திரன் சுக்கிரன் அல்லது சனி செவ்வாய் சேருதல்; குருவும் புதனும் சிம்மம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளில் இருத்தல்.
மேலும் ஆண் ஜாதகத்தில் 7ம் அதிபன் 6, 8, 12ல் மறைந்து அல்லது பகை சாரம் பெற்று, பாவி ஏழாம் இடத்தை பார்த்து, சுக்கிரன் கெட்டு விட்டால் திருமணத் தடை உண்டு.
லக்கினம், ராசியை பாபகிரகங்கள் பார்த்தாலோ, மற்றும் லக்கினாதிபதி, ராசியாதிபதியை பாபகிரகங்கள் பார்த்தாலோ திருமணம் தாமதமாகும்.
லக்கினத்திற்கு 7,3ல் பாபகிரகங்கள் அமர்ந்தாலோ அல்லது 7, 3ம் இடத்தை பாபகிரகங்கள் பார்த்தாலோ திருமணம் தடைபடும்.
லக்கினத்திற்கு இரண்டுக்குடையவனுடன் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் கூடினால் தாமத திருமணமே!
Wednesday, September 26, 2012
ஜாதகங்களில் யோகம் அமைய வேண்டிய நிலைகள் ஜோதிடக்குறிப்பு
1. யோகர்கள் லக்கினத்திற்கு 6, 8, 12ல் அமையக்கூடாது.
2. யோகர்கள் ஆறு பலம்(ஷட் பலம்) பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.
3. யோகர்கள் நின்ற ராசினாதன் 6, 8, 12ல் இருக்கக்கூடாது.
4. யோகர்கள் நீசமாகி நிற்கக்கூடாது.
5. யோகர்கள் அஷ்டமாதிபதி சாரம் பெற்று நிற்கக்கூடாது.
6. யோகர்களுடன் ராகு, கேது நிற்கக்கூடாது.
7. யோகர்களுடன் துர்ஸ்தானாதிபதிகள் நிற்கக்கூடாது.
8. யோகர்களின் தசா இளவயதில் வராமல், மத்திம வயதில் 25க்கு மேல் வரவேண்டும்.
9. ஒரு கோள் இன்னொரு கோளுடன் சேர்ந்து யோகம் உருவாகிறபோது, அவர்களுடைய சொந்த வீடுகளில் இருந்தால் யோக பலன் அபரீதமாக இருக்கும்.
10. யோகருடன் லக்கினத்திற்கு மற்றொரு யோகர் கூடிநின்றாலும், அல்லது கேந்திர கோணாதிபதி கூடிநின்றாலும் பலன் அதன் திசா புத்திகளில் பிரமாதமாக இருக்கும்.
11. யோகனாதன் நின்று பார்கின்ற இடங்களும் பலம் பெறும், அந்த யோகர் செவ்வாய் சனியே ஆனாலும் பலன் நன்றாக இருக்கும்.
12. யோகனதர்களை சுபகிரகங்கள் பார்த்தால் பலன் நன்றாக இருக்கும்.
13. லக்கினாதிபதி நல்ல முறையில், 6, 8, 12ல் அமராமல், யோகங்களில் ஒன்றிரண்டு இருந்தால் ஜாதகரின் முன்னேற்றம் நன்றாகவே இருக்கும்.
14. பரிவர்த்தனை யோகத்தில், பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும்.
15. லக்கினாதிபதி மற்ற வீட்டதிபர்களுடன் பரிவர்த்தனை பெற்றால்(6, 8, 12 வீட்டதிபர்களைத் தவிர) அது மகாசுப பரிவர்த்தனை யோகமாகும்.
16. லக்கினாதிபதி 3ம் வீட்டதிபனுடன் பரிவர்த்தனை பெறுவது களயோகம் என்று ஜோதிடம் பெருமை படகூறுகிறது.
17. லக்கினாதிபதி 6, 8, 12ம் அதிபர்களுடன் பரிவர்த்தனை ஆவது அசுபபரிவர்த்தனை யோகம் என்று பெயர். இதன் பலன் ஒன்றை இழந்து மற்றொன்றை பெருவது ஆகும். உதாரணமாக, இதனால் சமயத்தில் சோகம், அவமரியாதை, அவப்பெயர், நன்மதிப்பு கெடலாம். திடீரென பொருள் ஈட்டுபவராகவும், பதவிசுகத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம்.
Tuesday, September 4, 2012
கொடுமனம் கொண்டவர்கள்? ஜோதிடக்குறிப்பு
ராகு இருந்த இடத்தில் இருந்து 5ல் மற்றும் 9ல் சனி, குரு இருந்தால் ஜாதகர் சண்டாளன் ஆவார்.
ராகு இருந்த இடத்துக்கு பத்தாம் அதிபதி நீச்சமடைந்து ராகுவுடன் இருப்பின், அந்த ஜாதகர் செய்யும் பாவச்செயல்கள் பெரும் பிரசித்தி அடையும்.
சனி லக்கினாதிபதியாகி 6ல் அமர, 6ம் அதிபதி 10ல் அமர்ந்து அவருக்கு இருபுறமும் பாபர்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் அடைந்தால். அந்த ஜாதகர்கள் தமக்கு யார் நன்மை செய்திருந்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு தீமையே செய்வர்.
லக்கினாதிபதியும் 5ம் அதிபதியும் நீசமடைந்திருந்தாலும் அல்லது லக்கினத்திலும் ஐந்திலும் நீசமடைந்த கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கொடுமையான சித்தம் கொண்டவர்கள்.
லக்கினாதிபதி லக்கினத்தில் அமர, அவருடன் 5, 6, 10, 11ம் அதிபதிகள் இனைந்திருந்தால், ஜாதகர் தினமும் பலரை ஏமாற்றுபவராக இருப்பார்.
லக்கினத்திற்க்கு 2ம் வீட்டில் சனியோ, சுக்கிரனோ அமர்ந்து இருந்தாலும் அல்லது 2ம் வீட்டைப் பார்த்தாலும், 5,10ம் அதிபதிகள் பகை நீசமடைந்து 2ல் இருந்தாலும், இத்தகையோர் பேசிப் பேசியே பிறரை ஏமாற்றுபவர்களாக இருப்பர்
Monday, March 12, 2012
நன்மை செய்யாத அமைப்புகள்-7 ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் போது அதற்கு 12ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
1) தவறு செய்பவர்களை கண்டிக்க தண்டிக்க முடியாத(கோபத்தை அடக்க வேண்டிய) நிலை
2) ஒரு நிலையில்லாத நிமிடத்திற்க்கு நிமிடம் மாறும் உணர்வு நிலை
3) அமைதியற்ற தண்மை
4) மனநிலை பிறள்தல்
5) வேலை செய்யும் இடத்தில் நம்முடைய வேகத்தை மதிக்காத நிலை,
அதனால் திடீரென்று வேகத்தை வெளிக்காட்டி, அதனால் தொல்லை, நிம்மதியற்ற நிலை அகியவற்றை சந்திக்க நேரலாம்.
நன்மை செய்யாத அமைப்புகள்6 ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் சுக்கிரனின் தசை நடை பெறும் போது அதில் சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் தன் துணைவருடன் ஒற்றுமை குறையும். ஆனால் பிரிவைத்தராது மனதளவில் அன்யோன்யத்தை குறைக்கும். இதில் சுக்கிரன் மேஷத்தில் இருந்து சந்திரன் நாலில் இருந்தால் சிக்கல் அதிகம் தான். அதே போல் ராகுவும் சுக்கிரனுக்கு நாலில் இருந்தால் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நம்முடைய நிலைபற்றிய போராட்டத்தை கொடுக்கும்
ஆனால் தாய்/தகப்பன் உணர்வை அதிகரிக்க செய்யும். அதாவது பிள்ளைகளின் மீது பொறுப்பைக் கொடுக்கும்.
Wednesday, March 7, 2012
புதன் 6ல் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் புதன் 6ல் தனித்து அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் முடிந்தவரை கடன் வாங்காமலேயே இருப்பது நல்லது அவ்வாறு வாங்கினால் அந்த ஜாதகரால் அந்த கடனை அடைப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
புதன் தனித்து 6ல் அமர்ந்திருக்கும் ஜாதகர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், எதிர்பார்ப்பு அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பர். அதனால் அவர்களுக்கு கவலை அதிகமிருக்கும். அந்த கவலையால் நரம்பு, மனம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம்.
அதே நேரம் புதன் 6ல் தனித்தோ அல்லது ஆறாம் அதிபதியுடன் இணைப்போ அல்லது தொடர்போ கொண்ட ஜாதகர்களுக்கு மருந்து அல்லது மருத்துவம் பற்றிய ஆர்வமிருக்கும், அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வர். சிறிய அளவிளாவது மருந்துகளைப் பயண்படுத்துவது பற்றி அறிந்து இருப்பர். அதனால் மருந்துகளை மருத்துவருடைய அறிவுருத்தலில்லாமல் தனக்குத் தானே எடுத்துக்கொள்வர்.
Thursday, January 19, 2012
விமலா யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் 12ம் இடத்ததிபதி 12ல் ஆட்சியாக அமைந்தால், அந்த அமைப்பிற்க்கு விமலா யோகம் எனப்படும்.
விமலா யோகம் அமையப்பெற்ற ஜாதகர், மிக நல்லவராகவும், சிக்கனமானவராகவும், அமைதியானவராகவும், ஆனந்தமானவராகவும், சுதந்திரமானவராகவும் இருப்பார். விமலா என்றால் சுத்தம் என்று பொருள்.
Wednesday, January 4, 2012
புஷ்கலா யோகம் ஜோதிடக்குறிப்பு
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரனுடன் இணைந்து கேந்திர திரிகோணத்திலோ அல்லது சந்திரனுடைய அதிநட்பு வீட்டிலோ இருந்து, அந்த சந்திரன் அமர்ந்த, ராசியாதிபதி லக்கினத்தில் அமர்ந்திருக்கும் இருக்கும் கிரகத்தை பார்ப்பது புஷ்கலா யோகம் எனப்படும்.
புஷ்கலா யோகம் அமையப் பெற்றவர்கள், சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களாகவும், செல்வம் செல்வக்க்கோடு கூடிய அந்தஸ்த்து உடையவர்களாகவும், நாட்டை ஆள்பவர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.
Subscribe to:
Posts (Atom)