ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிகஅதிகமான சிந்தனை, வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்றவற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோதரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.