ஜோதிட குறிப்புகள்
*********
மகர ராசிக்கார்ரகள் வீட்டின் அருகாமையிலேயே தொழில்
விருச்சிகனும், மேஷ ராசிக்காரனும் காலையில் எழுந்தவுடன் "அப்பனே முருகா" என்பர்
எந்த மதக்காரனாக, இருந்தாலும் மிதுன லக்கின, இராசிக்கார்கள் திருப்பதி பகவானை தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்
மேஷத்தோனுக்கு நெற்றியிலோ, அல்லது தலையிலோ அடிபட்ட தழும்பு இருக்கும்
திருவோணத்தோனுக்கு பேசும் போது உச்சந்தலையை சொறிவார்கள்
கன்னியில் இராகு இருந்தால் வேற்று மத ,இனத்தவருடன் காதலோ, தொடர்போ ஏற்படும்.
உபய, இராசி, லக்கினம்(மீனம், மிது, தனு, கன்னி)திருப்தியான வாழ்க்கை துணை அமையாது.
பெரும்பாலும் ஏழரை நடக்கும்போது தான் விவாஹம் நடக்கும்.
சனி, சூரி சேர்ந்து இருந்தால் தந்தைக்கும், மகனுக்கும் ஆகாது, ஆனால் தந்தை தொழிலையே மகன் செய்ய வேண்டி வரும்.
குருவை, சந்திரன் பார்த்தாலோ, சேர்ந்தாலோ அது கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம் என சொல்லுவார்கள், ஆனால் உண்மையில் இவர்கள் கோழைகளாக இருப்பர், இவர்களை பின்னால் இருந்து ஊக்கம் கொடுத்தால் மட்டுமே ஜொலிப்பார்கள்.
கும்ப லக்கினக்கார்கள், ஆரம்பத்தில் கோமாளிகளாகத்தான் இருப்பார்கள்
லக்கினாதி உச்சமாக இருப்பதை விட,ஆட்சியாக இருந்தால் நலம்
உச்சம் அவர் உழைப்பு அடுத்தவருக்காக பெரும்பாலும் பயன் படும். ஆட்சியாக இருந்தால் அவருக்கு சிறப்பு,
உச்சனை, உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான்.
நீசனை, நீசன் பார்த்தால் நினைத்தெல்லாம் முடிப்பான்
லக்கின கேந்திரம்(முதல் வீடு)
சதுர்கேந்திரம் (நான்கு)
சப்தம கேந்திரம் (ஏழு)
தசம கேந்திரம் (பத்து)
இவை நான்கும் எந்த மனிதனுக்கும் சிறப்பாக அமையாது, அமைந்ததும் இல்லை,
லக்கினத்தில் குரு இருந்தால் ஒரு காலகட்டத்தில் குடும்பத்தை விட்டு விலகி ஆன்மீக வழி செல்ல வழி ஏற்படும்.
நீர் ராசிகளில் இராகு வெளி நாட்டு பயணம் நிச்சயம்
ஏழரை சனி ஆரம்பிக்கும் போது காக்கை தலையில் கொட்டி போகவோ, எச்சத்தை கொட்டவோ செய்யும்.
No comments:
Post a Comment