Tuesday, July 16, 2019

புதஆதித்ய யோகம்

சூரியன் + புதன் கிரக சேர்க்கை....
பிறப்பு ஜாதகத்தில் இருந்தால் என்ன பலன் பார்ப்போமா நண்பர்களே.....
இது புதஆதித்ய யோகம்... என்றும் நிபுனத்துவ யோகம்.... என்றும்...... ஜோதிடத்தில் இந்த கிரக சேர்க்கைக்கு சொல்லப்பட்டுள்ளது.
இந்த சேர்க்கையில் தீய பலன்கள் எதுவும் கிடையாது.
செல்வச் சேர்க்கையும் எதுவும் கிடையாது.
(குரு சேர்ந்திருக்கும்போது மாறும்.... ஜாதக அலங்காரம் பாடல் 491 ""சன்மம் தன்னில் மதிமகன் சூரியகுருவும் மகிழ்ந்து நிற்கில்... சீறேறு தனம் படைத்து புலவன் ஆவான்""... என சொல்லப்பட்டுள்ளது.
இங்கு குரு இருப்பதால் செல்வம் எடுக்கப்படுகிறது. இதுபற்றி விரிவாக இன்னொரு பதிவில் ஆராயலாம்)
இந்த சூரியன் புதன் கிரக சேர்க்கை உள்ள ஜாதகர்..... அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதாவது நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள்.. இச்சேர்க்கை உள்ள ஜாதகரை கல்வியில் சிறந்தவராக்கும்.... மிகுந்த அறிவாற்றல் உள்ளவராகவும்.... மேலும் வெளிப்படையாக பேசக் கூடியவராக இருப்பார்..
என்னுடைய ஜோதிட அனுபவ வகையில்..... யுகேஜி படிக்கும் குழந்தை.... நான்காவது ஐந்தாவது பாட புத்தகத்தை கூட எளிதில் படித்து புரிந்துகொள்ளும் தன்மை பெற்றவராக இருக்கிறார்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் அன்றாடம் படிக்க கூடியவராகவும் எதையும் வேகமாக புரிந்து கொள்பவராகவும்..... அறிவாற்றல் மற்றும் பேறறிவு உள்ளவராக இருப்பார். கற்ற கல்விக்கான நற்பலன்களையும் அனுபவிப்பார். காதலில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வார்
நல்ல நண்பர்கள் சேர்க்கை உள்ளவராகவும்..... தொடர்ந்து படிக்கும் எண்ணம் ஏற்பட்டு அடுத்தடுத்து பட்டங்கள் வாங்குவதும் இவர்களுக்கு நடக்கும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பில்.... சூரியன் கடன் கொடுப்பவரும்... வாங்குபவருமான காரகத்துவத்தையும்....
புதன் வங்கியையும் குறிக்கும் என்பதனால்..... இவர்களுக்கு கடன் எளிதில் கிடைக்கும்.
இதை படிக்கிற பேங்க் மேனேஜர் யாராவது இருந்தீங்கன்னா.... எங்களைப் போன்ற ஜோதிடர்களை அணுகி அல்லது ஜாதகத்தை நீங்களே வாங்கி பார்த்துட்டு.... ஜாதகருக்கு கடன் கொடுக்கலாம்...
கடன் வாங்கினாலும் 100% கட்டிவிடுவார்....
அதேபோன்று (டிரேடிங்) வாங்கி விற்கும் வியாபாரம் செய்தாலும் மிகச் சிறப்பான நிலையும்.... நல்ல எதிர்காலமும் உண்டு....
சூரியன் அப்பாவையும் குறிக்கும் என்பதால்.... இவரின் ஜாதகப்படி
அப்பாவுக்கு நட்பு வட்டம் அதிகமாக இருக்கும்.. அப்பா கல்வியாளராகவும்.. அறிவாளியாகவும்.... வியாபாரத்தில் நாட்டம் உடையவராகவும்... சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகவும்.... நகைச்சுவையாளராகவும்.... சமாதான பிரியராகவும்.... இருப்பார்..
புதன் மாமா மற்றும் நண்பர்களை குறிப்பதால்.....
இவரின் மாமா மற்றும் நண்பர்கள் வெளிப்படையானவர்களாகவும்.... அவர்கள் அரசு தொடர்பில் இருப்பவர்களாகவும்... இருப்பர்.

2 comments:

Natrajan said...

அருமை

Unknown said...

சார் என் பெயர் sathishkumar k., Dob: 28-08-1988. Place: kanchipuram, time: 7.15 am. எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும், ஒரு ஜோதிடர் எனக்கு சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன் +கேது, 2இல் புதன், 11இல் சுக்ரன் இருக்கு இதில் சுக்ரன் அடுத்து ஒரு கட்டம் காலியாக இருக்கு, அடுத்த கட்டத்தில் தான் சூரியன் +கேது இருக்கு இதனால் எனக்கு சன்னியாசி யோகம் இருக்கு என்று சொன்னார்கள் இது உண்மையா?

Post a Comment