ஒரு ஜாதகத்தில் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தால் அது பிரம்ம யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள் என்பது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற முழுமையான எண்ணம், அதற்கான பொருள், ஆரோக்கியம், புகழ் ஆகியன நன்றாக அமையும். இந்த ஜாதகர் நன்றாக கல்வி கற்றவராகவும், கற்றவர்களிடம் மதிப்பு பெற்றவர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மிக நல்லவராகவும், நல்லது செய்வதற்காக வளைந்து கொடுப்பவராகவும் இருப்பர் என்கிறது ஜோதிடவிதி.
குறிப்பாக இந்த அமைப்பில் மூன்று நல்ல கிரகங்களும் ஈடுபட்டுள்ளன என்பதுடன் அனைத்து லக்கினகாரர்களுக்கும் இது அமையாது, காரணம் மேஷ லக்கின காரர்களுக்கு குருவே 9ம் அதிபதியாக வருவதால் 9ம் அதிபதிக்கு குரு கேந்திரம் என்பது சாத்தியமில்லை.
கடக லக்கின காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனே 9 மற்றும் 11ம் அதிபதியாக வருவதால் இங்கு முதல் இரண்டு விதிகள் அடிபட்டுப் போகின்றன
அதேபோல் கன்னியா லக்கின காரர்களுக்கு புதனே 10ம் அதிபதியாக வருவதாலும், தனுர் லக்கினகரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனே 10 மற்றும் 11ம் அதிபதியாக வருவதாலும் மேலே சொல்லப்பட்ட விதிகள் சாத்தியமில்லை.
ஆனால் தனுர் லக்கினகாரர்களுக்கு 10ம் அதிபதிக்கு பதிலாக விதியில் சொல்லப்பட்டபடி லக்கினாதிபதியை கணக்கில் கொள்ளலாம்.
யோக நிலையின் விதிப்படி கடகம், கன்னி மற்றும் மேஷ லக்கினகாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் முழுவீச்சில் பலன் தரும்.
மூன்று விதிகளும் ஒன்றாக அமைந்தால் தான் யோகம் முழுதாக பயன் கொடுக்கும் மாறக எதோ ஒன்றிரண்டு விதிகள் ஒத்து போனால் முழு யோகம் இல்லாவிட்டாலும், மிக குறைந்த அளவில் பலன் கொடுக்கலாம்.

2 comments:
ரிசப லக்னம் 3வது விதி மட்டும் கொஞ்சம் விலகி உள்ளது... 4 இடத்திற்க்கு பதிலாக 3மிடத்தில் உள்ளார் புதன்... பலன் எவ்வாறு ஜீ இருக்கும்
கடகலக்கினம் கொண்ட எனக்கு இந்த யோகம் உள்ளது 9 அதிபதி குரு 11 அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் 10 அதிபதி செவ்வாய் புதனுடன் மிதுனத்தில்
14-7-1968. 8.10 am Salem
Post a Comment