Friday, July 5, 2013

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Wednesday, July 3, 2013

கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு

      கலைத்துறையில் பிரகாசிக்க, கவிஞ‌ர்களாக, இசைக்கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர், நடிகையாக, கதாசிரியர்களாக, பிரகாசிக்க புதன், சுக்கிரன், சந்திரன், குருவின் பலமே பெரிதும் உதவுகின்றது.
1) ப‌லமுள்ள சுக்கிரனை, சந்திரன் பார்த்தால், தமது திறமையை எழுத்து கவிதைகள் மூலம் பேரும் புகழும் பெற்று பிரகாசிப்பர்
2) சுக்கிரன் புதன் சேர்ந்து இரண்டில் இருந்து குரு பார்த்தால் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக திகழ்வர்.
3) 1ம் இடம் 5ம் இடம் கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் நல்ல கலைஞர்களாவர்.
4) சுக்கிரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சந்திரன் இருந்தாலும் அல்லது சந்திரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சுக்கிர‌ன் இருந்தாலும் கலைத்துறையில் பிரகசிப்பர்.
5) லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 1ம் இடத்திலோ அல்லது 2ம் இடத்திலோ புதன் இருந்து, 10ம் இடத்தை குரு பார்த்தால் கலையுலகில் சிறப்புடன் பிரகாசிப்பர்.
6)சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலைத் தருகிறது.
7) கேது 1, 5, 9 ல் நவம்சத்தில் இருந்தால் புத்தக எழுத்தாளர்.
8) குரு சந்திரன் இனைந்து 5 அல்லது 9ம் இடத்தில் இருந்தாலும், சந்திரன் 5 அல்லது 9ம் இடத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் கதை, கட்டுரை எழுதுபவர்.
9) சந்திரன் இருக்கும் இடத்திற்க்கு 10ல் புதன் சனி சேர்க்கை பெற்று கெடாமல் இருந்தால், கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர்.
10) புதனும் குருவும் இனைந்து 1, 2, 5 அல்லது 9ல் பழுதுராமல் இருந்தால் சிறந்த கவிஞர், கதாசிரியராவார்.