Tuesday, June 18, 2013

பஹுத்ர வ்யர்ஜன யோகம்-அதிர்ஷ்டசாலி ஜோதிடக்குறிப்பு

      லக்கினாதிபதி 2ம் இடத்திலும், 2ம் அதிபதி 11ம் இடத்திலும், 11ம் அதிபதி லக்கினத்திலும் அமைந்தால் அந்த ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலி; நன்றாக பணம் பண்ணக் கூடியவர்.
      இதில் இந்த மூன்று கிரகங்கள் ஒன்றின் இடத்தில் ஒன்று மாறி முப்பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருக்கின்றது. இந்த யோகமானது இந்த மூன்று கிரகங்களின் பலத்தைப் பொறுத்து அமையும்.

Monday, June 10, 2013

இந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 5ம் அதிபதியும் 11ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்து, சந்திரன் 5ம் இடத்தில் அமர்ந்திருந்தால் இந்திர யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள்.... மிகுந்த தைரியசாலி, மறையாத புகழ், அரசனுக்கெல்லாம் அரசன், ஆனந்தமான வாழ்க்கை, வாழ்க்கைக்காலம் 40 ஆண்டுகளுக்கு கீழ் மட்டுமே என்பதி விதி.
      இந்த மாதிரியான் அமைப்பில் ஆயுள் ஸ்தானமும் அதன் அதிபதியும் பலமாக இல்லாவிட்டால் ஆயுள் குறைவே. மற்றபடி இது ஒரு மிகச்சிறந்த யோகமாகும்.
      இதற்க்கு உதாரணங்களாக ஏசுகிறிஸ்து, ஆதிசங்கரர் மற்றும் அலெக்ஸான்டர் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். குறைவான ஆயுள் ஆனால் மறையாத புகழ் ஆகியவற்றைச் சொல்லலாம்.

Sunday, June 9, 2013

பிரம்ம யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தால் அது பிரம்ம யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள் என்பது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற முழுமையான எண்ணம், அதற்கான பொருள், ஆரோக்கியம், புகழ் ஆகியன நன்றாக அமையும். இந்த ஜாதகர் நன்றாக கல்வி கற்றவராகவும், கற்றவர்களிடம் மதிப்பு பெற்ற‌வர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மிக நல்லவராகவும், நல்லது செய்வதற்காக வளைந்து கொடுப்பவராகவும் இருப்பர் என்கிறது ஜோதிடவிதி.

      குறிப்பாக இந்த அமைப்பில் மூன்று நல்ல கிரகங்களும் ஈடுபட்டுள்ளன என்பதுடன் அனைத்து லக்கினகாரர்களுக்கும் இது அமையாது, காரணம் மேஷ லக்கின காரர்களுக்கு குருவே 9ம் அதிபதியாக வருவதால் 9ம் அதிபதிக்கு குரு கேந்திரம் என்பது சாத்தியமில்லை.
      கடக லக்கின‌ காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனே 9 மற்றும் 11ம் அதிபதியாக வருவதால் இங்கு முதல் இரண்டு விதிகள் அடிபட்டுப் போகின்றன‌
      அதேபோல் கன்னியா லக்கின காரர்களுக்கு புதனே 10ம் அதிபதியாக வருவதாலும், தனுர் லக்கினகரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனே 10 மற்றும் 11ம் அதிபதியாக வருவதாலும் மேலே சொல்லப்பட்ட விதிகள் சாத்தியமில்லை.
      ஆனால் தனுர் லக்கினகாரர்களுக்கு 10ம் அதிபதிக்கு பதிலாக விதியில் சொல்லப்பட்டபடி லக்கினாதிபதியை கணக்கில் கொள்ளலாம்.
      யோக நிலையின் விதிப்படி கடகம், கன்னி மற்றும் மேஷ லக்கினகாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் முழுவீச்சில் பலன் தரும்.
      மூன்று விதிகளும் ஒன்றாக அமைந்தால் தான் யோகம் முழுதாக பயன் கொடுக்கும் மாறக எதோ ஒன்றிரண்டு விதிகள் ஒத்து போனால் முழு யோகம் இல்லாவிட்டாலும், மிக குறைந்த அளவில் பலன் கொடுக்கலாம்.

Friday, June 7, 2013

தண்டனை! ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் ராசியிலோ அம்சத்திலோ சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் இருந்தாலோ அல்லது இருவரும் இனைந்து லக்கினத்தில் இருந்து கேந்திரத்தில் அமைந்து கெட்டிருந்தால் (இதில் வேறு கிரக இனைப்போ அல்லது வேறு கிரகங்களின் பார்வையோ, இந்த‌ இரு கிரகங்கள் ஆட்சி உச்சம் நீசம் பெறாமல் இருந்தால்)ஜாதகர் அரசின் கோபத்தால், அரச‌தண்டனை பெற்று மரணமடைவர் அல்லது கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டப்பட்டு மரணமடைவர் என்பது விதி

Thursday, June 6, 2013

பல ஆண்களுடன் தொடர்பு! ஜோதிடக்குறிப்பு

      ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியிருந்து    அந்த அமைப்பை எந்த‌ ஒரு கிரகமும் சேராமலும் அல்லது எந்த மற்ற கிரகத்தாலும் பார்க்கப்படமலும் இருந்தால் அந்த ஜாதகி பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பாள். அந்த ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தால் அவள் கணவனும் அவ்வாரே! அவளும் கணவனுக்கு தெரிந்தே அந்தத் தொடர்புகள் கொண்டிருப்பாள்.

Tuesday, June 4, 2013

பரிவர்த்தனையால் ராஜ‌யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும், 10ம் இடத்ததிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்தால் அது ஒரு ராஜயோகமாகும். இந்த பரிவர்த்தனை யோகம் ஜாதகருக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புகழ், அதிகாரம் ஆகியவற்றை வழங்கும்.