Monday, October 31, 2011

ஜெய யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் 6ம் இடத்து அதிபதி நீச்சம் அடைந்து, 10ம் இடத்து அதிபதி உச்சம் பெற்றால் அந்த யோகத்திற்க்கு பெயர் ஜெய யோகம் எனப்படும்.
      ஜாதகத்தில் இந்த ஜெயயோகம் உள்ள ஜாதகர், வாழ்க்கையில் நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், தோல்வி என்பதே இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வார்.
      அவர் தொடும் காரியமெல்லாம் வெற்றியிலேயே முடியும். கடன் என்பதே இருக்காது, அவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் எதிலும் தடை என்பதே இருக்காது. வெற்றி மேல் வெற்றி தான்.

Friday, October 28, 2011

துர்யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் 10ம் இடத்ததிபன் 6ம் இடம்,8ம் இடம் மற்றும் 12ம் இடத்தில் அமைந்தால் துர்யோகம் எனப்படும்.
1) வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த கடுமையான உழைப்பு தேவைப்படும். ஏனென்றால் ஒருவருக்கு 10ம் இடத்ததிபதி பலம் பெற வேண்டும் இல்லாவிட்டால் உழைப்புக்கு தகுந்த ஊதியமும், சரியான திறமைக்கேற்ற வேலையோ தொழிலோ அமையாது.
2) மற்றவர்களின் பார்வையில் மதிப்பு குறைந்தவராகவே காணப்படுவார். மேலே சொன்னபடி 10ம் அதிபதியின் மறைவால், அவர் எந்த சிறந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்.
3) மிகுந்த சுயநல வாதியாகவும், மற்றவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்பவர்களாகவும் இருப்பர்.
4) இவாறான இவர்களின் குணநலன்க‌ளால் இவர்களின் வாழ்கைக்கே இவர்கள் மிகவும் போராட வேண்டியதிருக்கும்.
5) பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால் இவர்களுக்கு நன்மை.
6) வேறு எந்த யோகமும் இவர்களின் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், நல்ல கிரகங்கள் வலுக்காதிருந்தால், வேறு நன்மையான அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், இவர்கள் கூலித்தொழிலாளியாக வாழ வேண்டியதிருக்கும்.
7) அவ்வாறு பிரகிரகங்களின் உதவியால் நல்ல நிலையில் ஜாதகர் இருந்தாலும் இவர் நிலைக்கு மற்றவர்களுக்கு(இவர் நிலையில் உள்ள) கிடைப்பதைக் காட்டிலும் சமுதய மதிப்பு என்பது இவர்களுக்கு மிகக்குறைந்ததாகவே இருக்கும்.
      இதில் 12ம் இடம் மிகவும் குறைவான பலன்களை வழங்கக்கூடிய இடமாகும். சில இடங்களில் இவர்களுக்கு மதிப்பு கிடைக்கும்.

திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால் அது திரிலோச்சண யோகம் எனப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், ஆயுள் நீளம் உடையவர்களாகவும், நல்ல வசதி படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.
      இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தாலே அந்த அமைப்பு விசேசமானதே! இவ்வாறு அமைதவர்கள் நல்ல அமைதியான‌ வாழ்க்கையை பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எந்த சக்தியாலும் தடங்கல்கள் விளைவிக்கமுடியாது

Wednesday, October 26, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-1 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சூரியனின் தசை நடக்கும் போது சூரியனுக்கு 6ல் இருக்கும் கிரகம் தன்னுடைய புக்தியில் நன்மைகள் தாரா! அதன் புக்தியில் பலன்களாவன‌.......
1) உடல் நலக்குறைவு.
2) தன்னம்பிக்கை குறைந்துபோதல்.
3) பொருளாதாரத்தில் சற்று பின் தங்குதல்.
4) கடவுள் நம்பிக்கை குறைதல்.
5) பொதுவாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள்.
6) நற்பெயருக்கு களங்கங்கள்.
7) தந்தைக்கு உடல்ந‌லக்குறைவு.

Monday, October 24, 2011

தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு

      12ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை பெற்றாலோ, 12ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12ம் வீட்டில் சுபர் அமர்ந்தாலோ, 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ, 12ம் வீட்டில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்.

வியாதியுள்ள கணவன்/மனைவி ஜோதிடக்குறிப்பு


      7ம் அதிபதி 6ம் அதிபதி அல்லது 8ம் அதிபதியுடன் இணைந்து ஜாதகத்தில் ஏதொ ஒரு இடத்தில் அமைந்து சுபர் பார்வை அல்லது சேர்க்கை இல்லாவிடில் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.
      7ம் அதிபதி 6ம் அதிபதியுடனோ அல்லது 8ம் அதிபதியுடனோ பரிவர்த்தனை பெற்றால் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.

Monday, October 3, 2011

தெய்வபலம் ஜோதிடகுறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 9ம் இடத்தில் ச‌ந்திரன், புதன், சுக்கிரன், குரு, கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும், அதனால் தெய்வ பலமும் உண்டாகும். குறிப்பாக 9ல் சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்.