12ம் இடத்திற்குரியவர் சுக ஸ்தானமாகிய 4ம் இடத்தில் நின்றால் ஜாதகருக்கு சுகவிரயம் அதிகமாக இருக்கும்.
அதே போல் 12ம் இடத்தில் சுபாவ சுபர்கள் நின்றாலும், 12ம் இடத்தின் உச்ச அதிபன் 12ல் நின்றாலும் ஜாதகருக்கு சுபவிரயம் அதுகமிருக்கும். குடும்பத்தில் நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பம், உற்றார், உறவினர் என்றால் உதவத்தான் வேண்டும். ஜாதகர் புலம்பாமல் பரந்த மனப்பான்மையுடன் செலவுகள் செய்தால் சுகப்படலாம்.
3 comments:
mr.anand your ajothida tips all are very useful to me also others . thank u very much to ur work .
வணக்கம்.
தங்களின் ஜோதிட தகவல்கள் உபயோகமாக உள்ளது.
கேந்திராதிபத்திய தோஷம் பற்றிய இன்னும் சில சந்தேகங்கள்:
உதாரனமாக, ஒரு ஜாதகப்படி கன்னி லக்னம்.
ஏழாம் அதிபதி குரு - ஆறாம் வீட்டில்,
ஏழில் சுக்ரன் உச்சம்பெற்று (தனியாக) - சனி பார்வையில்,
பத்தில் செவ்வாயுடன் கூடிய சனி பார்வையில் ஏழில் சுக்ரன்
அப்படியானால், 'காரகோ பாவ நாசாய' - இந்த ஜாதகத்தின்படி கேந்திராதிபத்திய தோஷம் உள்ளது என்று கொள்ளலாமா ? ஆம் என்றால், இதன் சாதக பாதக அம்சங்கள் பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் ?
நன்றி !
அன்புடன்,
புவனேஸ்வரன்.
கேந்திராதிபதி தோஷம் என்றால் இரு கேந்திரங்களுக்கு அதிபதியாக வரும் ஒரு கிரகம்(கன்னியா லக்கினம் குரு 4, 7க்குடையவர்; மீன லக்கினம் புதன் 4, 7க்குடையவர் மற்றும் இதைப்போல்) கேந்திரத்திலேயே(4, 7, 10(1ம் இடம் கோணமும் ஆகையால் இதில் சேர்த்தியில்லை)) அமருவது, அதாவது அக்கிரகத்தால் வரும் நன்மை மிகக்குறையும்.
காரகோ பாவ நாஸ்தி என்றால் உதாரணத்திற்க்கு சுக்கிரன் 7ம் இடத்திற்க்கு காரகன்(7ம் இடத்துக்காரனாக இருக்க வேண்டும் என்பதில்லை) அவன் 7ல் அமர்ந்தால் அந்த இடத்திற்க்கான முழு நல்ல பலனைத் தரமாட்டான்.
இதைப்போல் ஒவ்வொரு இடத்திற்க்கும் காரகர்கள் தனித்தனையாக உண்டு. இடத்துக்காரர்கள், கராகர்கள், அந்த இடத்தில் அமர்ந்த கிரகம், அஷ்டவர்கபரல்கள் மற்றும் தசை ஆகியவற்றை வைத்து தான் ஜாதகபலன் கணிக்க வேண்டும்
Post a Comment